சகுந்தலாவுடன் ஒரு மதியப்பொழுது

வனஜ்யோதனா காட்டுச் செடிகள்; ஹரினா –அந்த மான், என் தோழிகள் அனசூயா, பிரியம்வதா ; இவர்களோடு நாட்கள் கடந்தன. கௌதமியின் தாய் போன்ற கவனிப்பு; தந்தையான கன்வரிஷியின் அன்பு. எல்லாம் துஷ்யந்தன் வரும்வரை
அவன் வந்தான்.
ஊடுருவ முடியாத தன்மைக்கு ஆளானேன். இருவந்திகை,என் தோழிகள் தாய் போலான கௌவுதமி, தந்தை ஸ்தான கன்வரிஷி எல்லோரும் மின்னொளியாக மறைந்து விட்டனர்.அது மட்டுமில்லை. நானும்கூட காற்றில் மறைந்து போனேன் தோழி !உன்னால் அதை நம்ப முடிகிறதா?காதலுணர்வை எடுத்துச் சொல்லும் தைரியம் எனக்கில்லை. அது பொதுவான உணர்வில்லை, எல்லா விளக்கமும் அதை பலம் குறைந்ததாக்கி விடும்.

அவனி

பின் எப்போதோ விழிப்பு வந்தபோது கடிகாரம் நின்றுபோயிருந்தது. வெளிச்சம் அதிகம் என்று தூங்கும் முன்பு மூடிய ஜன்னலைத் திறந்து பார்க்கையில் அங்கு இருட்டி இருந்தது. முன்பு இருட்டாய் இருந்த எதிர்பக்க ஜன்னலிலிருந்து இளம் வெய்யிலின் இழைகள் தெரிந்தன. ‘இந்த சூரியனுக்கு வேறே என்ன வேலை – இந்தப் பக்கத்திலிருந்து அந்தப்பக்கம் அந்தப் பக்கத்திலிருந்து இந்தப்பக்கம் அல்லாடுவதைத்தவிர,’ என்று முணுமுணுத்துக்கொண்டே கட்டிலை விட்டு கீழே இறங்கக் காலை நீட்டினாள். தரை எட்டவில்லை.