அத்யாயம் 25 இந்த சமயத்தில் பல்வேறு சபாக்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும் வழங்கும் விருதுகளைப் பற்றியும் பரிசுகளைப் பற்றியும் சொல்ல வேண்டும். மாணவர்கள் குறிப்பிட்ட ராகங்களில் நன்கு தயார் செய்து கொண்டு வருவார்கள். அந்த ராகங்களிலேயே அவர்களைக் கேள்விகள் நிகழ்ச்சியின் நடுவர்களாகிய வித்வான்கள் கேட்கும்படியான ஏற்பாடு அவர்களுக்குள் உண்டு போலும் “தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – பாகம் 8”
Category: இதழ்-186
எம். எல். – அத்தியாயம் 16
அன்று கட்சி ஆஃபீஸை நாராயணன் தான் பூட்டினான். ஆஃபீஸ் செக்ரட்டரி கனகசபை, சுப்பிரமணியபுரத்தில் யாரோ தோழரைச் சந்திக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு, நாலு மணிக்கே சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டார். கட்சி அலுவலகத்தை விட்டுப் புறப்படும் போது நாராயணனிடம், “நீ பொறப்பட நேரமாகுமா?” என்று கேட்டார். “பிரஸ்லே இருந்து “எம். எல். – அத்தியாயம் 16”
இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – பின்னணி
மேலை நாடுகளில், மென்பொருள் துறையில், தனியார் முயற்சிகளில் இரண்டு வகையுண்டு. முதல் வகை, மைக்ரோசாஃப்ட், ஆரகிள் மற்றும் அடோபி போன்ற பெரு நிறுவனங்களை எதிர்த்துக் கிளம்பிய திறமூல மென்பொருள் இயக்கம் (open software initiative). இன்னொன்று, மென்பொருளை விற்று பணம் பண்ணுவதை அறவே விட்டு, வசீகரமான இலவச இணைய “இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – பின்னணி”
காடு – சூழியல் சிற்றிதழ் அறிமுகம்
ஏ.சண்முகானந்தம் ஆசிரியராக அமைந்திருக்கும் இந்த சிற்றிதழில் சூழலியல் பற்றி தொடர்ந்து தமிழில் கவனத்தை ஏற்படுத்தும் சு.தியடோர் பாஸ்கரன், ச.முகமது அலி, முனைவர் வே.தட்சிணாமூர்த்தி, முனைவர் ஆ.குமரகுரு, சு.பாரதிதாசன் போன்றோர் ஆலோசகர்களாக உள்ளனர். இதழின் ஒவ்வொரு வார்த்தையையும் சூழலியலின் முக்கியத்துவம் உணர்ந்த ஆர்வலர்கள் மட்டுமே எழுதுவது ஆத்மார்த்தமான வெளியீட்டுக்கு உறுதியாக அமைகிறது.
மறைந்து கொண்டிருக்கும் நீ
அலெக்ஸாண்ட்ரா க்ளீமான் / குவெர்னிகா பத்திரிகை/ 15 செப்டம்பர் 2014 இன்று காலை கீழ்த்தளத்துக்கு நான் இறங்கிப் போனபோது, குக்கியைக் காணவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். காணாமல் போகிறவற்றுக்கான இலாகாவை ஃபோனில் கூப்பிட்டு அத்தனை தகவல்களையும் கொடுக்க வேண்டும் என்பது அதிகார பூர்வமான எமர்ஜென்ஸிக்கான வழிமுறை “மறைந்து கொண்டிருக்கும் நீ”
குளக்கரை
லூசியைப் போல இன்னமும் எலும்புக் கூடாகாமல் பாதுகாக்கப்படும் இன்னொரு உடல் ரஷ்யாவில் உண்டு. அதை வைத்துக் கொண்டு ரஷ்யர் நடத்தும் அரசியல் சூதாட்டங்கள் பல என்றாலும், யூரோப்பியத்துக்குத் தெண்டனிட்டுப் பழகிய பல ஆயிரம் பேர் உலகெங்கும் பற்பல நாடுகளிலும் உண்டு. அவர்கள் இந்த உடலின் முன்னாள் உயிராகவிருந்த ஒரு கொடுங்கோலரின் நாமஜெபம் செய்து கொண்டு இன்னமும் அரசியல் நடத்துகிறார்கள்.இந்த உடலில் சுமார் 65 ஆண்டுகள் முன்பு வரை உயிரோடு உலவிய மனிதரின் பெயர் ஜோஸஃப் ஸ்டாலின்.
நெருப்பும் பனியும்
சங்கரன் நேற்று அதையேதான் யோசித்துக் கொண்டிருந்தான். வருகிறவர் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் வந்திருக்கிறார். அவருக்கு டீ போட அரை மணி, உள்ளூர் கோயில்கள் இருக்கும் இடத்தை ஆராய்ச்சி செய்ய அரை மணி என்று நேரம் வீணாச்சே என்று. ஆனால் வேறென்ன, எப்படி பேசுவது என்றும் யோசித்தபடி “நெருப்பும் பனியும்”
ஜார்ஜ் பெரெக்கின் நாவல்கள் – அல்லது இருட்டுக்கடை அல்வாவில் பார்த் (பகுதி 1)
மேற்கோளுக்கு உரியவர் யாரென்று சொல்லாமல், அதை எழுதியது யார் என்பதை நீங்கள் ஊகித்திருப்பது அரிது. திரு. கே. மார்க்ஸ் என்ற ஒருவர்தான் அது. இரண்டு நாவல்கள் கொண்ட இந்தப் புத்தகத்தின் ஒரு பகுதியை அந்த மேற்கோள் முடிவுக்குக் கொண்டு வரும் போல் தெரிகிறது (பழைய புத்தகக் கடையில் வாங்கிய ஹார்வில் பிரஸ் பதிப்பு இது என்பது ஒரு உபதகவல்). ‘திங்க்ஸ்’ மற்றும் அடுத்த பக்கத்தில் துவங்கவிருக்கும் ‘தி மேன் அஸ்லீப்’ (‘Things’ and ‘The Man Asleep’) ஆகிய இரண்டுக்கும் இடையில் புரிந்து கொள்ளப்படக் காத்திருக்கும் குறி போல் அந்த மேற்கோள் காற்றில் மிதந்து கொண்டிருக்கிறது.
மகரந்தம்
ஒரு துகளையும் அதன் குணத்தையும் இரு வேறு நிகழ்தகவுகளாக மாற்ற முடியுமா? இருவேறு பாதை பிரியும் இடத்தில் நிற்கும் ஒருவன் ஒரு வழியையும் அவனது குணங்ங்கள் மற்றொரு வழியையும் தேர்ந்தெடுக்க முடியுமா? துகள்கள் அப்படி செய்ய முடியும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அப்படி ஹிக்ஸ் துகளின் அடிப்படை குணத்தை மாற்றியமைத்து அதிகடத்தியை (super conductor) உருவாக்க முடியுமா
மழையில் மறைந்து பெய்யும் மழை
வீடு
மூழ்கும்
வெள்ளத்தில் மூழ்கிய இருளில்.
ஈரம்
”காத்தால சமையல் உள்ள போய் லைட்டப் போடும் போதே, கால்ல ஏதோ விறுவிறுன்னு ஊறின மாதிரி இருந்தது. பாத்தா, மேடையில, தண்ணிப் பாத்திரத்தை சுத்தி, பழைய சாதம் வெச்ச பாத்திரத்தை சுத்தின்னு, ஏகப்பட்ட எறும்புக மொச்சுண்டு இருந்தது, பகீல்னுது. இருந்த எறும்புப் பொடியத் தூவிட்டு, எங்கிருந்து வந்துருக்குன்னு பாக்கப் போனா, இதோ இங்கேருந்துதான்,” என்று புழக்கடையில் கிணறு இருந்த இடத்தைக் காட்டினார். அங்கேதான், அந்த இடத்துக்கு அருகில்தான், அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.மெதுவாக நானும் சேர்ந்து கொண்டு குனிந்து பார்த்தேன். அந்த இடத்தில், கிணற்றை மூடிய இடத்தில், ஒரு சின்ன பிளவு இருந்தது
பொருளாதாரத் துறையும் அற விழுமியங்களும்
நவீன பொருளாதார நிபுணர்கள் தங்கள் பொருளாதார கொள்கை குறித்த ஆய்வுகளில் விழுமியங்கள் குறித்த மதிப்பீடுகளின் பாதிப்பு இல்லாத வகையில் பார்த்துக் கொள்ள முயற்சி செய்கின்றனர். வருமானம், அதன் பகிர்வு போன்ற மாறுபடும் பொருளாதார அலகுகள் மீது எப்படிப்பட்ட தாக்கம் இருக்கக்கூடும், இந்த மாற்றங்கள் ஒட்டுமொத்த பொதுநலன் மீது எப்படிப்பட்ட பாதிப்பு செலுத்தும், என்பனவற்றைக் கொண்டு பொருளாதார கொள்கைகள் மதிப்பிடப்படுகின்றன.
லெ கிளேஸியொவின் ‘குற்ற விசாரணை’யில் நுண்பொருள் கோட்பாட்டியல்
குற்ற விசாரணை நாவல் ஒரு சுவாரஸ்யமான நாவல், வித்தியாசமான நாவல்.சுவாரஸ்யம் ஏனெனில், இதில் கதை என்று எதுவும் கிடையாது. 250 பக்க நாவல். இது தரக்கூடிய அனுபவம்தான் சுவாரஸ்யம். இதனுடைய மொழிநடைதான் வித்தியாசம். இந்த நாவலை நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கலாம். அதனால் எந்தக் குழப்பமும் ஏற்படாது. 4ஆவது அத்தியாயத்திலே தொடங்கலாம். அங்கிருந்து 7 அல்லது 10 அல்லது நீங்கள் விரும்புகிற எந்த அத்தியாயத்திற்கும் செல்லலாம் – கடைசி அத்தியாயத்தைத் தவிர. கடைசி அத்தியாயத்தில்தான் முந்தைய அத்தியாயங்களில் ஏற்படுகிற சிறுசிறு அயர்ச்சிகளுக்கு ஓரளவு புரிதல் கிடைக்கிறது.
பின்னிரவின் நிலா
ஹென்னூர் மெயின் ரோட்டோரமாக உடைந்துகிடந்த பாதசாரிகளின் நடைபாதையில் கால் தடுமாறி நடந்தார் அவர். செருப்புத் தைக்கிறவனும், பிளாஸ்டிக் சாமான் விற்பவனும் அங்கும் இங்குமாகக் கடைபோட்டிருக்க, பெட்டிக்கடை ஒன்று நடைபாதையில் துருத்திக்கொண்டு நின்றது. கொஞ்சதூரம் நடந்து வலதுபுறமாகத் திரும்பி வினாயகர் கோவில் முன் வந்து, வாசலில் இருந்தே ஒரு கும்பிடு போட்டார். பக்கத்து சந்தில் நுழைந்து இடதுபுறம் திரும்ப, வரிசையாக இருந்த கட்டிடங்கள் ஒன்றில் இண்டியாபோஸ்ட்டின் சிவப்பு மஞ்சள் லோகோவுடன் போர்டு தொங்கிக்கொண்டிருந்தது. உள்ளே இருந்த தபால்பெட்டியில் கடிதத்தைப்போட்டுவிட்டு வெளியே வந்தார்.
அனுமனும் உணர்வு ஆளுமையும்
“ சேட்டர்ஜீ அவசரப்பட்டுட்டார்” என்றார் வாசன். “கணேஷ்-ன் குற்றம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாதது. ஆனால், சாட்டர்ஜீ, சீனியர். அவருக்கு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும், பிறருக்கு உணர்ச்சிகளைத் தூண்டாமலும் இருக்கத் தெரிய வேண்டும். சஸ்பென்ஷன் கொஞ்சம் அதிகம்தான்”
மேலை தத்துவம் பகுத்தறிந்த கடவுள்
கடவுள் இருப்புக்கான வெவ்வேறு வகையில் வெளிப்பட்டாலும் அடிப்படையில் இவ்வாதங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. இருப்பியல்வாதம்(ontological argument), பிரபஞ்சவியல்வாதம்(cosmological argument), இலக்கியல்வாதம்(teleological argument. இருப்பியல்வாதம் கடவுளின் வரையறையைக் கொண்டு கடவுள் இருப்புக்கு வாதங்களை முன் வைக்கும் முறை. இரண்டாவது இயற்கையின் பொது அம்சங்களைக் கொண்டு கடவுளை அதன் அவசிய காரணமாக முன் வைக்கும் முறை. இதன் பெயர் பிரபஞ்சவியல்வாதம். மூன்றாவது இயற்கையின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தைக் கொண்டு கடவுளின் இருப்புக்கான வாதத்தை முன் வைப்பது இலக்கியல்வாதம்.
சத்யஜித் ராய் என்றொரு பெரும் கலைஞன்
கிளாசிக் பட வரிசையில் “நாயக்” 1966ஆம் ஆண்டு சத்தியஜித் ராய் அவர்களால் வங்க மொழியில் இயக்கப்பட்டு வெளிவந்த கருப்பு வெள்ளை படம். அரிந்தம் முகர்ஜி என்ற மிகப் பிரபலமான வெகுஜன நடிகனின் உள்மனப் போராட்டங்களின் தொகுப்புதான் இந்தப் படம். வங்க மொழியைச் சேர்ந்த உத்தம் குமார் அந்த நடிகர் “சத்யஜித் ராய் என்றொரு பெரும் கலைஞன்”