“ சேட்டர்ஜீ அவசரப்பட்டுட்டார்” என்றார் வாசன். “கணேஷ்-ன் குற்றம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாதது. ஆனால், சாட்டர்ஜீ, சீனியர். அவருக்கு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும், பிறருக்கு உணர்ச்சிகளைத் தூண்டாமலும் இருக்கத் தெரிய வேண்டும். சஸ்பென்ஷன் கொஞ்சம் அதிகம்தான்”
Author: க. சுதாகர்
ஒரு நொடிச் சிந்தனை
இந்த எச்சரிக்கை உணர்வு, முதலில் தயக்கமாக உள்ளிருந்தது. தகவல்களை உள்வாங்கும்போது அவை வெளிவராது, ‘ஏதோ சரியில்லை’ என்ற உணர்வாக உள்ளே பரிணமித்து, பய உணர்வாகவே நின்றிருக்கும். தகவல்கள் அவற்றிற்குச் சாதகமாக இருப்பினும், அதிக உறுதியுடன் முடிவெடுக்க முனையாதிருக்கும். தருக்க நிலையில் வெளிக்காட்டப்படாத உணர்வு பூர்வமான அசொளகரிய நிலையாகவே இருப்பதால், பொதுவெளியில் தங்களது பய உணர்வைப் பகிர்ந்துகொள்ள மக்கள் தயங்குகிறார்கள்.
தேறேன் யானினி
அதிர்ச்சியின் அடுத்த நிலை , தற்காப்பிற்காக தாக்குதல், அல்லது தப்பியோடுதல். இரண்டும் கிடைக்காத நிலையில் , மூளை தடுமாற, அது அமிக்டெலாவின் ஆளுமையிலேயே இருப்பதால், இயலாமை, மற்றொரு உணர்வின் வடிவெடுக்கிறது. கோபம். “எனக்கு ஏன் இந்த நிலை?” என்ற கோபம், வேலையை விட்டுப் போகச் சொல்லப்பட்ட இளைஞனை, “இப்படி முடிவெடுத்த அந்த மேனேஜரை… மவனே, போட்டுத் தள்ளணும்” என்றோ “ போர்க்கொடி பிடிக்கிறேன்” என்றோ பேசவும் இயங்கவும் செய்ய வைக்கிறது. அதன் விளைவுகள் எப்படியிருப்பினும், தோற்றுவாய் கோபம் , அதன் முன்னான அதிர்ச்சி. சங்கரி “அந்தக் கடவுளுக்கு ஈவு இரக்கமே கிடையாதா?” என்கிறாள். இந்த உணர்வுக் கொந்தளிப்பு நிலை 20 நிமிடங்கள் நீடிக்கலாம். பெரும்பாலும் 10 நிமிடங்களில் மூளையின் தருக்கப்பகுதி தன் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கிவிடும். அமிக்டெலா, கொந்தளிக்க வைத்து, கற்கால மனிதனை ஓட வைத்த நிம்மதியில், அடங்கிவிடும்.
புதியதோர் வானொலி உலகம்
மோடி அரசில், ஆல் இந்திய ரேடியோ , டி.ஆர்.எம் தொழில்நுட்பத்தை, மாறி வரும் சமுதாயத்தின் தேவையாகக் கண்டு, தீவிரமாக அதனை சோதனை செய்து, செயல்படுத்த முயன்று வருகிறது. 2017ல் , டி.ஆர்.எம் தொழில் நுட்பத்தை ஆல் இந்திய ரேடியோ முழுதுமாக செயல்படுத்தும். தற்போது பழக்கத்தில் இருக்கும் அனலாக் முறை ஒலிபரப்பும் தொடர்ந்து செயல்படும். சென்னை, தில்லி வானொலி நிலையங்கள், டி.ஆர்.எம் சேவைக்கெனவே குறிப்பிட்ட அலைவரிசைகளை வைத்திருக்கின்றன. இவை தவிர 23 வானொலி நிலையங்களில் டி.ஆர்.எம் சேவை, சோதனைக் கட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.
விடுதலையின் பின் வாழ்க்கை
கோபால் ஜோஷி, தன் குடும்பம் வறுமையில் வாடுவதற்கு காரணம் தொழிற்சாலைகள் அமைக்கப்பட ஆன கால தாமதம், திடீரென்று வந்த சமூக சீர்திருத்தங்கள் என்றே கருதியிருக்கவேண்டும். அவர் அடிக்கடி சொன்ன வரிகள் “ வெள்ளைக்காரன் போனான். இப்ப நம்ம நிறத்துல இருக்கறவன் சுரண்டறான்.” எளிமையான அதிகம் சிந்திக்க முயற்சிக்காத மக்கள், தங்கள் உடைமைகளையும், உடலுழைப்பையும் எதிர்காலத்தைப் பற்றிய சில கனவுகளுடன் விடுதலைப் போரில் ஈடுபட்டு, கசப்புடன் இறந்துபோனது காலத்தின் கோலம். ஆனால் இந்த தடுமாற்றங்கள் தவிர்க்க இயலாதவை.
வட்டம்
“எளவு அந்தூருக்கு எவம் போவான்?” என்றார் சலிப்புடன். “லே, அவன் இருக்கற ஊர்ல, அக்கினி நட்சத்திரத்துலயும் இழுத்து மூடி கிடக்க வேண்டியிருக்கு. நமக்கு குளிர்காலம்னா பனியன் போடணும், கோடை வந்திச்சின்னா, அதக் கழட்டணும், இதுதான் உடுப்பு. அங்க்கிட்டு, எல்லாம் போட்டுட்டு ஒரு மாசம் இருந்தேன், இருப்பு கொள்ளல. வந்துட்டேன். கடை சும்மா அடைச்சு கிடந்துச்சின்னா, எலி வந்துரும் பாத்துக்க.” .. .. .. “இப்படி கடை கிடக்கறதுக்கு, எலி தின்னா என்னா அண்ணாச்சி ? இனிமே என்ன சம்பாரிக்க வேண்டியிருக்கு? இப்பத்தான் பெங்களூர் வந்துட்டாம்லா? பையன் கிட்ட இரிங்க.” .. .. .. அண்ணாச்சி அருகில் வருமாறு சைகை செய்தார் “ ஏலா” என்றார் அன்பாக.
கம்பனும் சேல்ஸ் மீட்டிங்கும்
குழுக்கள் சிந்தித்து முடிவெடுப்பது வேறு, குழுமச்சிந்தனை முடிவெடுப்பது வேறு. முன்னதில், தனிமனிதர்கள் ஒரே நிகழ்வை வேறு கோணங்களில் சிந்தித்து, தருக்கத்து, நடைமுறைக்கு இணங்கி முடிவெடுக்கும் திட்டம் அடித்தளமாக இருக்கிறது. இரண்டாவது, முன்னதன் மயக்கத்தில் வரும் போலி முடிவுகள். குழுக்களில் மக்கள் உரையாடியிருப்பார்கள். ஆனால், ஒரே கருத்திற்கு முன்முடிவுடனே ஒத்துப் போயிருப்பார்கள். தனியே கேட்டால் ’சொல்லணும்னு நினைச்சேன்.. சரி, எதுக்கு வம்புன்னு விட்டுட்டேன்,’ என்பார்கள். “
படிவமும் மனமும்
படிவம் – ஸ்கீமா என்பதை முன் அனுபவமென, முன் உணர்வு, முன் கற்றதின் கூட்டமைவு என்றே தத்துவஞானி இம்மானுவல் காண்ட் கருதினார். படிவத்தை டானியல் கோல்மன் தனது Vital Lies and Simple Truth என்ற புத்தகத்தில் விரிவாகக் கையாளுகிறார். எல்லாப் படிவமும் சம தளத்தில் மட்டும் இயங்குவதில்லை. ஒரு படிவத்தை ஆளும் மேலடுக்குத் தளத்தில் இருக்கும் படிவமும் தானாக இயங்கும் அல்லது இயக்கப்படும். ”கோபப்படு” என்று ஒரு படிவம் ஒரு எதிர்வினையை தன்வழியே வழுகி வர வைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். எந்த விதமான கோபம்? எப்படிப்பட்ட எதிர்வினை? கையா, வாயா? வாய் என்றால் நையாண்டியா, கண்டிப்பான சொற்களா அல்லது கெட்ட வார்த்தைகளா? இதனை முடிவு செய்வது மற்றொரு படிவக் கூட்டும், நினைவு ஆளுமை, உணர்வுப்பகுதி (awareness). சீதை அசோகவனத்தில், அனுமனுக்குச் சொல்கிறாள். எப்போதோ இவர்களை சுட்டெரித்து என்னால் வந்திருக்க முடியும். ஆனால் …
பொன்முட்டை
இரண்டு முறை அதே தெருவில் வீட்டைத் தேடி தவறவிட்டாகிவிட்டது. செல்போனில் அழைத்தால் “ பச்சை பெயிண்ட் அடிச்ச கேட் சார்.. சின்னதா இருக்கும். இப்ப தெருக்கோடியில குப்பை லாரி தெரியுதா? அதுலேர்ந்து நாலாவது வீடு” நான் தெருக்கோடியில் திரும்பவதற்குள் குப்பை லாரி போய்விட்டிருந்தது. மீண்டும் “பச்சை கேட்” என “பொன்முட்டை”
செத்தும் கொடுக்க வைக்கும் சீரிய தொழில்நுட்பம்
ஒரு நாளைக்கு முன்னூறு எரியூட்டுதல்கள் நிகழும் வாரணாசியில் வேண்டிய அளவுக்கு தீவிர எரியூட்டு நிலையங்கள் இல்லாததாலும், ஒரு உடல் எரிய ஏழு எட்டு மணி நேரம் ஆவதாலும், அவசரமாக உடலங்கள் கங்கையில் இழுத்துவிடப்படுகின்றன.
உடல் எரியும் நிலைகளை சற்று நிதானமாகப் பார்ப்போம். உடலில் வெளிப்புறப்பாகங்கள், சில உள்ளுறுப்புகள் 700 டிகிரி செண்டிகிரேடில் எரிந்துவிடுகின்றன.ஆனால், சில பகுதிகள், நீர் , கொழுப்பு நிறைந்தவை எரிய அதிக வெப்பம் தேவை. அவை பகுதி வெந்து, நச்சுப் பொருட்களை 700 டிகிரியில் வெளியிடுகின்றன.எனவே, இருமடங்கு வெப்பநிலையில் உடல் எரிக்கப்படவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இது, கட்டைகளால் எரிக்கப்படும் முறையில் அதிக வெப்பநிலை ,எரிபொருட்களால் பல படிகளில் ஏற்படுத்தப்பட்டுவிடுகிறது. எனவேதான், திறந்தநிலை எரியூட்டுநிலையங்களில் உடல்களின் எரிதல் முழுமையாகிறது. மின்எரியூட்டகங்கள் முதலில் சற்றே தோல்வியடைந்தது இந்த வெப்பநிலைத் தகறாரில்தான்.
கவனத்தைக் கட்டும் கயிறு
சிந்தனைக் குவியத்தைக் கூர்மையாக்குவது எப்படி? என்றோ, சிந்தனை சிதறாமல் இருக்க பத்து முறைகள் என்றோ அவர் இதை அணுகவில்லை. மாறாக , மருத்துவம், மூளை, நரம்பு மண்டலம், நாளமில்லாச் சுரப்பிகளின் இயக்கம், மூளையில் சில வேதிப்பொருள்களின் இயக்கம், நாம் நடைமுறையில் செய்யக்கூடிய செய்முறைகள் அவற்றின் அறிவியல் காரணங்கள், பயன்கள் என எடுத்துக்காட்டுகளுடன் காட்டிச் செல்கிறார். “இதுல பத்து செயல்முறைகள் இருக்கு. அதன்படி செஞ்சீங்கன்னா, ஒரு மாசத்துல மனம் குவித்தலில் பெரும் வெற்றி பெருவீர்கள்” என்றெல்லாம் அலட்டாத, யதார்த்தமான, அறிவியல் கூறுகள், ஆக்கக்கூறுகள் நிறைந்த ஒரு புத்தகம் இது.
பங்களாதேஷ் பயணம் – 2
ஏப்ரலில் நான் மீண்டும் டாக்காவும் சிட்டகாங்-கும் போக தீர்மானமாயிருந்தது. தற்போது நடக்கும் வன்முறைகளால், பயணத்தைத் தள்ளிப்போட்டுவிட்டேன். சிட்டகாங் போய் அங்கிருந்து காக்ஸ் பஜார் என்ற கடற்கரை நகரில் விற்பனைத்துறையின் கூட்டம் நடத்த முடிவாயிருந்தது. உலகின் மிக நீளமான, தொடர்ந்து நீண்டிருக்கும் கடற்கரை என்று புகழ் பெற்றது காக்ஸ்பஜார் 120 கிமீ நீளத்திற்கு அழகிய மணல் பரப்பும், பொன்னான சூரியோதய, அஸ்தமன காட்சிகள், அருமையான மக்கள் என்று டாக்காவில் விளம்பரப்படுத்தியிருந்தார்கள். Beautiful Bangladesh என்ற அடைமொழியுடன் அரசு எப்படியும் அதனை தாய்லாந்தின் பட்டாயா, இலங்கையின் கால்லெ போல சுற்றுலா வரும் வெளிநாட்டவர் குவியும் இடமாக்க வேண்டுமென நினைக்கிறது.
பங்களாதேஷ் பயணம்
இந்த அனுபவங்கள், பங்களாதேஷ் குறித்தான என் முன்முடிவுகளை மாற்றியது. கற்றவர்கள், திறமையாளர்கள் என்ற ஒரு தட்டில் போட்டி கடுமையாக இருக்கிறது. ஆனால் திறமைக்கு , பாலின வேறுபாட்டைவிட, மதத்தைவிட மதிப்பிருக்கிறது. ஒருவேளை உலகளாவிய போட்டியை சந்திக்கும் நிறுவனங்கள், வெளிநாடுகளிலிருந்து வந்து பணிபுரியும் மேலாளர்கள் கொண்டு வந்த நல்ல நிர்வாகப் பழக்கங்கள் காரணமாக இவ்விளைவுகள் இருக்கலாம். இதே ஆரோக்கியமான சூழல் மத்திய ரகத் தட்டில், கீழ்த்தட்டில் இருக்குமா என்று தெரியவில்லை.
கருத்தடை தொழில்நுட்பமும், சந்தைகளும்
விந்து உயிரி வெளிவரும் வாஸ் டிஃபரென்ஸ் எனப்படும் குழாயை , தற்போது புழக்கத்தில் இருக்கும் அறுவை சிகிக்சை முறையில், சிறிய அளவில் வெட்டிவிடுகிறார்கள். இதனால் விந்துஉயிரி வெளியேறாத நிலையில் ஆணின் விந்துப் பையிலேயே அழிந்துவிடுகிறது. மீண்டும் கருத்தரிக்க வேண்டினால், அந்த ஆணின் விந்துக்குழாயை ஒட்ட வைக்க வேண்டும். இதில் சில மருத்துவ சிக்கல்களும், உளவியல் சிக்கல்களும் இருக்கின்றன.
எபோலா பரவுதல் தடுக்கக்கூடியதா?
எபோலா காய்ச்சல் என்ற உயிர்க்கொல்லி நோய்க்கு கினியா, சியர்ரா லியோன், லைபீரியா நாடுகளில் இதுவரை 900 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். நைஜீரியாவில் இது பரவிய செய்தி ஒரு பீதியை ஏற்படுத்தியபின்னரே உலகம் மெல்ல விழித்துக் கொண்டிருக்கிறது. இந்த பீதிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் எபோலாவைக் குறித்து கொஞ்சம் அறியலாம்.
அறியாமையின் விலை
அப்படி என்னதான் பெரிதாகச் செய்து விட்டார்? “சொற்களின்றி, வெறும் ஒலிகளின் அடிப்படையாக, ஓடும் உணர்வுகள் மூலம் மனித மூளை விவரத்தை வெகு விரைவாக – இரு நொடிகள் அளவில் புரிந்து கொண்டு விடுகிறது” என்பது அவரது கோட்பாடு. அதனை பல உரையாடல்களின் சிறு சிறு துண்டுகள் மூலம் நிரூபித்தார். இரு மனிதர்களின் உரையாடல் நாடாவில் பதிவு செய்யப்படுகிறது. அதில் வரும் சொற்களின் அதிர்வுகளை ஒரு அதிர்வு வடிகட்டி (Frequency filter) மூலம் பிரித்து எடுத்துவிடுகிறார் நளினி. எஞ்சி இருப்பது வெறும் ஒலிகள் மாத்திரம் – சில அடிக்குரலில், சில உச்சஸ்தாயியில்…
ஏற்கெனவே எப்போதும்
ஆதி உணர்வு அச்சம். எங்க நாம தாக்கப்பட்டுறுவமோன்னு ஒரு பயம். இதுதான் உலகத்தில் எந்த உயிருக்கும். மனிதன் சமூக விலங்கு. அவனும் முதலில் வெளிச் சமூகத்தை அச்சத்துடனே பார்க்கிறான். பின்னர் எப்படியாவது அதில் சேர்ந்து தனது தனித்தளத்தைக் கைவிட்டுக் கரைந்து விடப்பார்க்கிறான். கரைவதில் அவனுக்கு அபாயம் குறைவு.