நேருக்கு நேர்

“வரலாறு மனித எண்ணங்கள் அனைத்தையும் வடிவமைக்கிறது” என்று அந்தப் பருவத்தின் தொடக்க விரிவுரையிலேயே வரலாற்றுப் பாட விரிவுரையாளர் வகுப்பில் கூறியிருந்தார். அந்த வரி ஒரு முழக்கவரியைப் போல ‘நச்” என்று உள்ளத்தில் ஒட்டிக்கொண்டது. அடிக்கடி என்னை யோசிக்கவும் வைத்தது. ஆம்! எந்த ஒரு நாடும் அதன் முன்னோர்களைப் பற்றிய வரலாற்றைப் படிப்பதில் நிச்சயம் பெருமிதம் கொள்ளும். இந்தோனீசியா, வியட்னாம், இந்தியா, ஜப்பான் போன்ற பல நாடுகளின் வரலாறுகளை – வரலாற்றுத்தலைவர்கள் மிகப் பலரைச் செல்வம் போலப் பெற்றிருந்த அந்த நாடுகள் சிறந்திருந்ததைப் படித்தபோதெல்லாம் எப்படியும் எனக்குள்ளும் பேருவகை பிறந்ததை நானும் உணர்ந்திருக்கிறேன்.