கெட்ட வார்த்தை பேசுவோம்

“கெட்ட வார்த்தை பேசுவோம்” – தொகுப்பில் “ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு, உறுப்புகள் புணரும்போது பொருள்படும் வழக்கிலுள்ள ஒற்றைச் சொல்லின் பெயர்கள்” எனப் பல சொற்களையும் – கூத்துக்கலை முதற்கொண்டு, சங்க இலக்கியத்தில் அச்சொற்களின் பயன்பாடுகள் என்று நுட்பமாக அணுகிச் சமூக யதார்த்தத்தில் அதன் பயன்பாடுகள் மற்றும் மதிப்பீடுகள் குறித்த கேள்வியை எழுப்புகிறார் பெருமாள்முருகன்.

அறுபடலின் துயரம் – பூக்குழி

This entry is part 38 of 48 in the series நூறு நூல்கள்

“பூக்குழி” போன்ற இலக்கிய ஆக்கங்களும், “ஃபேன்ட்றி” போன்ற கலைப் படங்களுமே அந்தந்த காலத்தின் அவலங்களைக் கண்முன் நிறுத்தும் சாட்சியங்களாக விளங்குகின்றன. தர்மபுரி அரசு கல்லூரி ஒன்றில் தற்காலப் பணிமாற்றதில் சென்றிருந்த பொழுது, உயர் சாதி சமூகத்தில் பிறந்த பெண்ணைக் காதல் திருமணம் புரிந்த தலித் இளைஞரான தர்மபுரி இளவரசனின் மரணம் சம்பவித்த பொழுது – “கல்கி” இதழில் தொடராக இந்த நாவலை பெருமாள்முருகன் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. இளவரசனின் மரணமே இத்தொடரை எழுதுவதற்குக் காரணமாக அமைந்ததாகவும் தனது முன்னுரையில் பெருமாள்முருகன் குறிப்பிட்டிருக்கிறார்.

இழந்த பின்னும் இருக்கும் உலகம்

‘சிறப்பு கணிதத் தேர்வு’ பற்றிய சுற்றறிக்கை வருகிறது. அடுத்த பள்ளி நாளில், கணித வகுப்பு நடக்கும்போது மாணவர்களில் சிலர் பாக்ஸ் இல்லாததால் முட்டி போடுகிறார்கள். இந்தத் தண்டனையில் இருக்கும் பொழுது தங்கசாமியையும், உடன் முட்டி போட்டுக்கொண்டிருக்கும் இன்னொரு பையனையும் சமூகவியல் ஆசிரியர் அழைப்பதாக ஒரு மாணவன் வந்து கணித ஆசிரியரிடம் முறையிடுகிறான். இருவரும் சமூக ஆசிரியர் வகுப்பெடுக்கும் இடத்திற்குச் செல்கிறார்கள். “டேய் பசங்களா… உங்க டெஸ்ட் பேப்பர நான் திருத்திட்டேன். சாயந்தரமா வீட்டுக்கு வந்து மத்தவங்களோட பேப்பர திருத்திடுங்கடா…” என்கிறார்.

யட்சி – குறும்பட அறிமுகம்

ஒரு பெரிய பாலைவனத்தில் ரெண்டே ரெண்டு ஒட்டகம் மட்டும் வாழ்ந்து கொண்டிருந்ததாம். ஒண்ணு பெரிய ஒட்டகம், இன்னொன்னு அதன் குட்டி ஒட்டகம். திடீரென அங்கு வெப்பம் அதிகமானதால், இரண்டு ஒட்டகமும் சேர்ந்து வேறு இடத்திற்கு இடம்பெயர முடிவெடுக்கின்றன. பெரிய ஒட்டகத்திற்கு காலில் அதிகமான காயங்கள் இருந்ததால் வேகமாக முன்னேறி நடக்க முடியவில்லை. ஆகவே சின்ன ஒட்டகத்திடம் “நீ மட்டும் தனியா போயிடு” –ன்னு சொல்லுச்சாம்.

பாதரசம் என்னும் உயிர்க்கொல்லி

குழந்தைப் பருவம் மட்டுமே வாழ்வின் அற்புதங்கள் நிரம்பிய காலம். அதில் சேட்டைகளும், சுறுசுறுப்பும், குறும்புகளும் தான் பிரதானம். எல்லா பிள்ளைகளுமே இந்தத் தன்மைகளுடன் பிறந்து, தன்முனைப்புடன் வளர்ந்து விடுவதில்லை. சில பிள்ளைகள் ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர் (ASD) என்ற குறைபாட்டுடன் பிறக்கின்றன. அதற்கான தெளிவான காரணங்களும் கண்டறியப் படாமலே இருக்கின்றன. இதுபோன்ற குழந்தைகளை வளர்ப்பதும், பராமரிப்பதும் சவால் நிறைந்த பணி. ஏறக்குறைய 90 பள்ளிகள் இதற்கெனத் தமிழகம் முழுவதும் செயல்பட்டாலும், அரசு நடத்தும் சிறப்புப் பள்ளிகள் ஒன்றோ இரண்டோ தான். மற்ற எல்லாத் தனியார் பள்ளிகளும் மிகுந்த சிரமத்திற்கு இடையில்தான் நடத்தப்படுகின்றன. வறுமைக் கோட்டில் வாழும் மனிதர்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் இதுபோன்ற சிறப்புக் குழந்தைகள் இருந்தால் முறையான வழியில் பயிற்சி கொடுத்துப் பராமரிப்பது சிரமத்திலும் சிரமம் தான்…..
…தன்முனைப்புக் குறைபாட்டுடன் ஒரு குழந்தை பிறக்கிறது எனில் அதற்கு இதுதான் காரணம் என்று உறுதியாகக் கூற முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் குழம்பித் தவிக்கிறார்கள். என்றாலும் சில வேதிப் பொருட்களின் நச்சுத்தன்மை தான் மூளைக் குறைபாடு மற்றும் நரம்பியல் பிரச்சனைகளுக்கு மூல காரணமாக இருக்கலாம் என்ற வாதத்தையும் முன்வைக்கிறார்கள்.

உப்பு நாய்கள் – லக்ஷ்மி சரவணகுமார்

சென்னை வாழ் நடுத்தர மக்களின் இருப்பு சார்ந்த பிரச்சனைகளையும், உளவியல் சிக்கல்களையும் ஆழமாக அலசி முன்வைக்கப்பட்ட ஏராளமான படைப்புகள் நம்மிடம் இருக்கின்றன. என்றாலும், அடித்தட்டு மக்களின் அகச்சிக்கல் மற்றும் அறியாமை சார்ந்து பொலிவிழந்த முகங்களை முன்வைத்த பதிவுகள் மிகக் குறைவுதான். அந்த வகையில் “உப்பு நாய்கள்” நாவலானது மனதாலும், உடலாலும், இருப்பாலும் வாழ்வின் சுழலில் வதைபடும் எளிய மனிதர்களைப் பற்றி நிறையவே பேசுகிறது.

பலாத்கார விளையாட்டு

ஒருபுறம் குழந்தைகள் விளையாடும் குரூர விளையாட்டுக்கள், மற்றொரு புறம் அவர்களே வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் விளையாடக் கூடிய ஆபாச விளையாட்டுக்கள். இதன் இணைகோடு போல, சக மாணவியிடம் தோழமையுடன் பேசுவதையே கள்ளத்தனமாக யாரும் பார்க்காதபோது செய்ய வேண்டிய நிர்பந்தம், என சிறுவர்களையும் இளைஞர்களையும் சிக்கலுக்கு உள்ளாக்குகிறோம். இந்தியாவில் மட்டும் வருடத்தில் ஏறக்குறைய இரண்டரை லட்சம் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் என புள்ளிவிவரம் தருகிறார்கள். கணக்கில் வராமல் இதுபோன்ற பத்து மடங்கு அதிக அளவில் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு மன உளைச்சலில் வாழ்வார்கள் என்பதுதான் நிதர்சனம். இதோ சென்ற வாரம் டெல்லியில் நடந்த பலாத்காரத்தை இந்தியாவே கூர்ந்து கவனிக்கிறது. ஜனாதிபதி மாளிகை முன்பு பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக நீதிகேட்டு போராட்டம் நடத்துகிறார்கள். அந்த சகோதரியைப் பற்றிய தற்போதைய நிலவரங்களை நாளேடுகளும் தொடர்ந்து பிரசுரம் செய்து வருகின்றன.

மை விலேஜ் இஸ் பம்பை – விவரணப்படம்

பெருநகரங்களில் வசிப்பவரா நீங்கள்? அரக்கப் பறக்க வேலைக்குச் செல்பவரா? நெரிசல் ஏற்படுத்தும் கூட்டத்துடன் பேருந்துகளிலும், ரயிலிலும் பயணம் செய்பவரா? சுற்றிப் பார்க்க மட்டுமே ஓரிரு தினங்கள் வருபவராக இருந்தாலும் பரவாயில்லை. நிச்சயம் இதுபோன்ற விளம்பரங்கள் உங்களின் கவனத்திற்கு வந்திருக்கும். ஒரு மின்னல் பார்வையில் அந்த கருப்பு வெள்ளை விளம்பர ஒட்டிகளை கடந்து சென்றிருப்பீர்கள்!

புனர்ஜனி – ஆவணப்படம் (மலையாளம்)

பெருக்கெடுத்து ஓடிய நதி, கிராம மக்களின் அபரிமிதமான இயற்கை சுரண்டலால் 1990–களின் இறுதியில் முற்றிலும் உலர்ந்து வறண்டிருக்கிறது. அதனால் பல வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சந்தித்த கிராம மக்களின் கூட்டு முயற்சியால், ஏறக்குறைய இறந்துவிட்ட நதிக்கு 25 ஆண்டுகள் கழித்து உயிர் கொடுத்திருக்கிறார்கள். அதைத்தான் மது எரவன்கரா ‘புனர்ஜனி’ என்ற ஆவணப்படமாக எடுத்திருக்கிறார். ‘புனர்’ என்றால் மறுபடியும், ‘ஜனி’ என்றால் பிறப்பு – ஆகவே இறந்த நதியின் மீள்பிறப்பு ஆவணமே புனர்ஜனி .

டி. எம் கிருஷ்ணா – கேணி சந்திப்பு

விசேஷமாக கவனித்து ரசிக்கக் கூடிய, தஞ்சாவூர் பாணியில் வாசிக்கப்படும் மிருதங்கம், மராட்டியர்களின் ‘மிருதங்’ என்ற பாணியில் இருந்து வந்ததுதான். புதுக்கோட்டை மிருதங்க வாசிப்பு முறை தவிலிலிருந்து வந்திருக்கிறது. இதில் ரசிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் மொழியாலும், கலாச்சாரத்தாலும் வேறுபட்டிருந்தாலும் இசையால் அனைவரும் சங்கமித்திருக்கிறார்கள் என்பதுதான். ‘Fusion’ என்பதே இன்றுதான் வந்ததுபோல மிகைபடுத்திப் பேசிக்கொள்கிறோம். வரலாறை கூர்ந்து நோக்கினாலே மரபில் கலப்பிசை இருப்பது தெரிகிறது.

மாலதி மைத்ரி – கேணி சந்திப்பு

மீனாட்சி, பூரணி, திரிசடை போன்ற பெண் படைப்பாளிகள் தொண்ணூறுளுக்கு முன்பே நவீன கவிதைப் படைப்புகளில் பங்களிப்பு செய்திருந்தாலும், தொண்ணூறுகளுக்கு பின் வந்த பெண் படைப்பாளிகளால் தான் பெண்ணிய சிந்தனைகள் வளரத் தொடங்கியது. பெண்ணியம் சார்ந்த கவிதைகள் குறைந்த அளவே வெளிவந்தாலும் பரவலான சலசலப்பிற்கும் கவனத்திற்கும் உள்ளாயின. அவைகள் பெண்ணிய உரிமையைப் பெற்றுத் தரும் அடையாளக் குரலாக ஒலித்தன. ஒலித்த கவிக்குயில்களில் மாலதி மைத்ரி குறிப்பிடத்தக்க முக்கியமான கவிஞர்.