லூயீஸ் எர்ட்ரிக் – கதை அறிமுகம்

பெண்குழந்தை, ஊனமானது, வாழப்போவதில்லை என்பது ஒதுக்கி வைக்கப்படுகிறது. இதற்கு நேர்மாறான ஆண், ஊனமற்றது, வாழக் கூடியது தேர்வு செய்யப் படுகிறது.
கழித்துக் கட்டப்பட வேண்டிய உயிரிடம் தருவதற்கு இருக்கிறது. வாழ்வுக்கு உகந்ததென்று தேர்ந்து வளர்க்கப்பட்டதிடம் அதை வாங்குவதற்குக் கூட திராணி இல்லை.

என் பிறப்பின் ஆண்டுகள்

நான் பேச இயலாமல் உறைந்து போய் ஊமையாய் நின்றேன். பெட்டி கடுமையாக அழத் தொடங்கினாள். முழங்கையால் தன் முகத்தை துடைத்துக் கொண்டாள். நான் உடைந்த துகள்களை பெருக்கச் சென்றபோது, உடைந்த குரலில் என்னைப் போகச் சொன்னாள். நான் ஷெரிலைத் தேடிச் சென்றேன். அவள் வழக்கமாக ஒளிந்து கொள்ளும் தூரத்துக் கோழிப் பண்ணையில் இருந்தாள். என் மீது ஏன் பழி சுமத்தினாய் என்று கேட்டதற்கு, என்னை வன்மத்துடன் ஒரு கூர்மையான பார்வை பார்த்துவிட்டு, “ஏனென்றால் நீ வெள்ளையாக இருக்கிறாய்,” என்றாள்.