சற்றே இனிக்கும் கரும்புகள்

பேசாமல் நிற்க நிற்க அவள் என்னை உரசி உரசி வெட்டுவது போல உடல் முழுவதும் எரிய ஆரம்பித்தது. மீண்டும் அவள் அழ ஆரம்பித்தாள். மூர்ச்சை ஆவது போல விக்கித் திணறினாள். பதற்றத்துடன் அதை பார்த்துக்கொண்டிருந்தேன். சொந்த வீட்டை அப்பாவின் குடியால் விற்றுவிட்டு பிச்சைக்காரியைப்போல இறங்கிய அம்மாவின் முகம் அழுது முடித்ததும் அவளுக்கு வந்துவிட்டிருந்தது. அல்லது அதை அவளாகவே தருவித்துக்கொண்டாள். நானாகவே அந்த பெண்ணின் அப்பாவிற்கு போன் செய்தேன். அம்மா பதறி என் கையிலிருந்து போனை பிடுங்கும் முன். அவர் எடுத்திருந்தார். 

விதைக்குள்ளும் இருப்பது

கொஞ்சம் ஆழமாக யோசித்துப்பார்த்தால் அந்த பத்து வயதிற்குள்ளிருக்கும் காட்சனுடன் நேற்றிரவு செய்ததை நான் துளியும் விரும்பவில்லை என்பதும் அவன் உந்துதலும் நம்பிக்கையும் அதற்கு தூண்டுதலாக இருந்ததையும் உணரமுடிகிறது. அதிகாலை மூன்று மணிக்கு நிலவற்ற , இருள் கருமேகங்கள் சூழ்ந்து கிடக்கும் இந்த நீண்ட நெடிய வானை ஜன்னல் வழி பார்த்தபடி கட்டிலில் எழுந்து அமர்ந்திருக்கிறேன். தெருவிளக்கின் ஒளி ஜன்னல் கம்பியின் நிழலாக என்னை துண்டு துண்டாக பிரித்திருந்தது.

தண்ணிப்பாம்பு

கோலப்பன் பேசுவதற்கென்று எதும் இருக்கவில்லை. உடல் தளர்ந்து மனம் ஆற்றலற்று பிழிந்து போட்ட கரும்பு சக்கையாக கிடந்தது. “யம்மா, மானமா ஒரு வேலைக்கி போறேன். பொங்கதுக்கு வழியிருக்கும். இந்த கட யாவாரம்லா வேண்டாம்மா. எனக்கு முடியல்ல.”
“சீ…வாயமூடுல..அறுதப்பயல…நல்ல அப்பனுக்குத்தான் பொறந்தியா. ஆம்பளையா பொறந்தா மட்டும் காணாது கேட்டியா,” என்று வேகமாக அவனிடம் வந்தவள் “கடைக்கு போயி யாவாரத்த பாரு. பிள்ளன்னு பொறந்துருக்கு பாரு சவம்…சவம்….

குல தெய்வம்

கோவிலின் பீடத்திலிருந்து எழுந்த சாமியாடி சுடுகாடு நோக்கி கடிவாளமற்ற காட்டு குதிரையென மயான கொள்ளை சடங்கிற்கு இருளில் பறந்தோடும் மின்மினியென ஓட ஆரம்பித்தான். அடக்குவார் யாருமில்லாத அவனை பின் தொடர்ந்து ஓடிய கூட்டத்தில் தானில்லை என்பது சோகமான மனநிலையை சுந்தரத்திற்கு கொடுத்தது. அம்மையின் காதுகளில் மெல்ல பூச்சையைப்போல நக்கி “அம்மா , நானும் போறம்மா , பயக்க எல்லாவனும் என்ன பயந்தோணி பக்கடா பண்ணிப்பீய நக்குடான்னு சொல்லுவானுங்க நாளைக்கி. இன்னைக்கு ஒரு நாள் மட்டும்மா. கூட்டத்தோட போயிட்டு கூட்டாத்தோட வந்துருவேம்மா” என்று அவளை மேலும் நெருங்கி அணைத்துகொண்டான்.

தீரா விஷம்

இருபது பிடிகளின் கூட்டத்தில் கடைசியாக கூட்டத்திலிருந்து தனித்துவிடப்பட்டு வந்தது ஓர் போதகம். அதன் அன்னை தன்னை நோக்கி முட்டி முட்டி வந்த போதகத்தை துதிக்கையால் தூக்கி மறுபக்கமாக எறிந்தது. இளம் மூங்கில் குருத்தின் துதிக்கை நெளித்து முன்னால் செல்லும் அன்னையை , கூட்டத்தினை அழைத்தபடி புழுதியால் கண்திறக்க முடியாமல் பாதங்களை தேய்த்து தேய்த்து அது நடந்தது. ஒரு நொடி நின்று வானைப்பார்த்தது “ஏன்” என்றது. மேகங்களற்ற வானம் கையறுநிலையில் எதிர் நோக்க, காலம் சீக்கிரம் நகராதா என்ற ஏக்கத்தில் அதன் இதயம் படபடத்தது.

கிறுக்கு

“அது வளரும் யானதண்டிக்கு. இதொண்ண மட்டும் உங்க தாத்த வெட்ட விடல. மத்தத எல்லாம் வெட்டி வெட்டி செரியான ஒசரத்துல வச்சிருப்போம் பொதரு மாதிரி. இதொண்ணு மட்டும் அம்பது அடிக்கு வளந்து நிக்குது. கெளம்பி போக நேரத்துல அத இந்த மேட்டுலருந்து நிண்ணு கண்ணடைக்காம அவரு பாக்கத நான் பாத்துருக்கேன். கடைசியா உனக்க அப்பாக்கிட்ட எஸ்டேட்ட கொடுத்துட்டு போகும்போ அத மட்டும் எதும் செய்யக்கூடாதுண்ணு சத்தம் போட்டாரு….

மழையில் நனையும் அலைகள்

அப்பா “நான் இல்லாட்டா என்ன செய்வீங்க” என்றார். அவர் முகம் பட்டினியால் வெளுத்ததை போலிருந்தது.

“அம்மா , அக்கா இருக்காங்கல்ல” என்றவன் சிரித்தது அப்பாவிற்கு நிம்மதியைக்கொடுத்ததா என அவனால் புரிந்துகொள்ளமுடியாமல் “நான் அழுவேன்” என்றான்.

“அம்மா , அக்கா என்னப்பத்தி என்ன சொல்றாங்க ?”

“அம்மாக்கு உன்ன புடிக்கல. அக்கா உன்னப்பத்தி பேசுனதேயில்லயே”

புனித வெள்ளி

“இன்று நான் இறந்த நாள். இன்னும் மூன்று நாட்களில் இன்னோரிடத்தில் பிறந்து மீண்டும் ஓர் வெள்ளிக்கிழமை சாக வேண்டும். நான் செத்த உடலுடன் அப்படியே பிறப்பதாக இந்த மக்கள் நினைத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு எப்படிச்சொல்லி புரியவைப்பது. எதற்கு, இருப்பது அப்படியே இருக்கட்டும். அப்பனே என்னை ஏன் இப்படி செய்கிறாய் முதல் தடவை கொன்றாய், அப்படியே என் பிறப்பறுத்திருக்கலாமே. மீண்டும் மீண்டும் சவக்குழியில் இறக்கி பிண நாற்றத்துடம் வெளிக்கொண்டு வந்து ஏன் விளையாடுகிறீர்,”