அரூ போட்டியில் அறிபுனைப் பரிசை வென்ற “ஒழிவில் காலெமெல்லாம் உடனாய் மன்னி” இத்தொகுப்பின் முக்கியமான கதைகளில் ஒன்று. அறிவியல் புனைவுகள் தமிழுக்குப் புதிய வகை எழுத்தாகும்….பொதுவாக நாம் அறியாத எதிர்கால உலகை வடிவமைத்து அதில் மனிதர்களின் சமூகக் கட்டமைப்பை சித்தரிப்பது அறிபுனையின் ஒரு வகை மாதிரி. அதே போல, எதிர்காலத்தில் மனிதர்கள் வேறு கோள்களுக்கு இடம் பெறும்போது அச்சூழல்களுக்கு ஏற்ப தங்களையும் சமூகத்தையும் தகவமைத்துக்கொள்ளும் கதைகளும் சுவாரஸ்யமானவை.
Category: இதழ்-262
மிளகு அத்தியாயம் பதின்மூன்று
உடம்பு வாகு அல்லது ஏதாவது சுரப்பி சம்பந்தப்பட்ட கோளாறாக இருக்கும் என்று நினைத்தபடி சாரதா உபசாரமாகச் சொன்னது இது – ”அந்த உயரத்துக்கு உடம்பு இன்னும் கூட கொஞ்சம் சதை போட்டிருக்கலாம். அமிக்கு என்ன கவலை? முசாபர் நல்லா கவனிச்சுப்பான். அவன் இல்லேன்னாலும் நீயே கவனிச்சுக்க மாட்டியா என்ன?”
”நானாக என்னை கவனிச்சு கவனிச்சுத்தான் இப்படி சதை போட்டுடுத்து. அதுக்கு மேலே சுரப்பி சரியா வேலை செய்யாம சாப்பிடறது எல்லாம் சதையாகிட்டிருக்கு.”
மிசோஜினி (Misogyny) எனும் ‘பெண்வெறுப்பு’!
இன்றைய 19ம், 20 ம் நூற்றாண்டு சமூகவியலாளர்கள் மிசோஜினி குறித்து வேறுபட்ட கருத்துக்களை கொண்டிருப்பதையும் காணக்கூடியதாகவே உள்ளது. இவ்வாறு காலகட்டங்களை அவதானிக்கும்போது பெண் வெறுப்பு(Misogyny) என்ற செயற்பாடு எவ்வளவு ஆழமாக புரையோடிப்போய் இருந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இந்திய தமிழ் புராண, இலக்கியங்களில் கூட பெண்வெறுப்பு கருத்துக்கள் வெளிப்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பெண்ணிய ஆய்வாளர் செல்வி திருச்சந்திரன் தமது நூலில் நாலடியாரில் வரும் பாடல் ஒன்றை குறிப்பிடுகிறார்.
கி.ரா நினைவுக் குறிப்புகள் – 31
எனக்கு எதையும் நேரடியாகச் சொல்லியே பழக்கம். இலக்கியம் மற்றும் கருத்தியல் சார்ந்த விவாதங்களை நேரடியாகச் சொல்லிவிடுவேன். அப்படிச் சொல்லிவிடுவது திறனாய்வாளனின் அடிப்படையான குணம் என்ற நம்பிக்கை எனக்கு இப்போதும் உண்டு. இந்தப் பழக்கத்தைக் கவனித்த கி.ரா., ஒருநாள், ‘ராம்சாமி.. நீங்க எதையும் பட்பட்டென்று போட்டு ஒடைக்கிறீங்க.. அப்படி ஒடைக்கிறதெ “கி.ரா நினைவுக் குறிப்புகள் – 31”
குடிபெயரும் கதைகள்
தனி மனிதச் சுதந்திரம் அதன் மோசமான எல்லையில் அரசின்மைக்கும் ஒழுக்கமின்மைக்கும் சுய அழிப்பிற்குமே இட்டுச்செல்லலாம் . குடும்பம் அதன் சாதகமான எல்லையில் ஒரு குழந்தை வளர்வதற்கான ஆகச் சரியான அமைப்பாக விளங்குகிறது. சீரான குடும்பங்கள் சீரான சமூகங்களையும் உருவாக்குகின்றன. தனிமனித விடுதலையின் சாதகமான எல்லையில் தனி மனிதன் எந்தக் கட்டுக்களும் இன்றி தன் முழுத்திறனையும் கொண்டு புதிய உச்சத்தை அடைய முடியும். குடும்பம் தனிமனிதன் எனும் இவ்விரு புள்ளிகளும் ஒன்றை ஒன்று சார்ந்திருந்தாலும் அவற்றிற்கிடையே பெருந்தூரங்கள் எளிதில் உருவாகிவிட முடியும் என்பதை இக்கதைகளிலிருந்து புரிந்துகொள்ள முடியும்.
வேணி
வசுமதி தான் வேணியைப் பற்றி விதவிதமாக எங்களுக்கு தகவல் தருவாள். ரசம் சாப்பாட்டை நிறைய நேரம் பிசைவது வேணிக்கு பிடிக்காது, படுக்கை விரிப்பு ஓரத்தில் சுருங்கி இருந்தால் கூட சரி செய்து தான் படுப்பாள், இரவு தூங்கும் முன் பாதத்தை சோப்புப்போட்டு கழுவிட்டு தான் கட்டில் மேல் கால் வைப்பாள், அதிக சத்தம் கேட்டால் காதுகளை பொத்திக்கொள்வாள் என்று நிறைய சொல்லுவாள்.
குஹாவின் கோல்வால்கர் – கோன்ராட் எல்ஸ்ட்
இந்து மதமும் அதன் கலாசாரப் போர்களும்- அத்தியாயம் -17 ஆசிரியரின் முன்குறிப்பு: முன்னணியிலுள்ள ஒரு சிந்தனையாளர், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்.)மிக்க செல்வாக்கு பெற்றவரும் அதனாலேயே தற்போது ஆட்சியிலுள்ள பாரதீய ஜனதா கட்சியின் மதிப்பிற்குரியவருமான, குரு கோல்வால்கர் எழுத்துகளை கூர்ந்து ஆய்வு செய்வதற்காக நேரம் ஒதுக்க முற்பட்டது அறிதிறன் “குஹாவின் கோல்வால்கர் – கோன்ராட் எல்ஸ்ட்”
புகையும் , புகை சார்ந்தவைகளும்
கடந்த வார உலக செய்திகளில் மிக முக்கியமாக கவனிக்கப்பட்டது நியூசிலாந்தின் அதிரடி அறிவிப்பொன்று.2008’ம் ஆண்டிற்கு பிறகு பிறந்தவர்கள் சிகரெட் மற்றும் புகை பிடிப்பதற்கான எந்த ஒரு தயாரிப்பையும் வாங்க வாழ்நாள் தடை விதித்திருக்கிறது நியூசிலாந்து. புகையிலை தொழில் வரலாற்றிலேயே இப்படியொரு அதிரடி முடிவு எந்த காலகட்டத்திலும், எந்த ஒரு நாட்டிலும் எடுக்கப்பட்டதில்லை.
இவர்கள் இல்லையேல் அத்தியாயம்-10
மாலையில், என் கணவர், ” ரவேல் சிங், அந்த பழைய மேஜையும் நாற்காலிகளும் என்னவாயின?” என்று கேட்டார். நொடியும் தாமதிக்காமல், ரவேல் சிங், அதுவா ஸாஹிப், அதை நான் வந்த வண்டியிலேயே என் வீட்டுக்கு அனுப்பி விட்டேன் இந்நேரம் போய் சேர்ந்திருக்கும். எதிர்வீட்டில் போன் செய்து என் மனைவியிடம் விசாரித்து சொல்கிறேன் என்றானே பார்க்கலாம்!
சச்சிதானந்தனின் இரு கவிதைகள்
நீ மிகவும் புத்திசாலியானால்
அரைத்தூக்கத்தில் செல்.
எது வேகமாய் இருக்கிறதோ அது வேகமாய்க் களைப்புறும்:
மெல்லச் செல், மெல்ல நிச்சலனம் போல்.
மனிதர்களின் தரிசனம்
அம்மா நிறைய நேரங்களில் அப்படி தான் பேசுவாள். முகத்தை பார்க்கமாட்டாள். பொதுவாக முன்வெளியை பார்த்தபடி பேசுவாள். ஒரு வரியை வெளியே சொல்லிவிட்டு, தொடர்ச்சி வரிகளை மனதிற்குள் சொல்லிக் கொள்வாள்.
டென்னிசனின் லோடஸ் ஈடர்ஸ்
மனிதன் மட்டும் உழைத்தே தீர வேண்டிய ஒரே உயிரினமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுப்புகிறார்கள். இயற்கையின் பிற உயிரினங்கள் அனைத்தும் ஓய்வெடுக்கவும் சும்மா இருக்கவும் முடிகிறது; ஆனால் மனிதன் மட்டும் எப்போதும் ஒரு விசனத்தில் இருந்து மற்றொன்றுக்கு சுண்டி எறியப் படுவது ஏன் என்று வாதிடுகிறார்கள். அமைதியும் சாந்தமுமே மகிழ்ச்சி அளிக்கக் கூடியவை என்று மனிதனின் அந்தராத்மா கூறினாலும், மனிதன் வாழ்நாள் முழுவதும் உழைக்கவும் அலையவும் , விதிக்கப் பட்டுள்ளான்.
தீரா விஷம்
இருபது பிடிகளின் கூட்டத்தில் கடைசியாக கூட்டத்திலிருந்து தனித்துவிடப்பட்டு வந்தது ஓர் போதகம். அதன் அன்னை தன்னை நோக்கி முட்டி முட்டி வந்த போதகத்தை துதிக்கையால் தூக்கி மறுபக்கமாக எறிந்தது. இளம் மூங்கில் குருத்தின் துதிக்கை நெளித்து முன்னால் செல்லும் அன்னையை , கூட்டத்தினை அழைத்தபடி புழுதியால் கண்திறக்க முடியாமல் பாதங்களை தேய்த்து தேய்த்து அது நடந்தது. ஒரு நொடி நின்று வானைப்பார்த்தது “ஏன்” என்றது. மேகங்களற்ற வானம் கையறுநிலையில் எதிர் நோக்க, காலம் சீக்கிரம் நகராதா என்ற ஏக்கத்தில் அதன் இதயம் படபடத்தது.
சிறுபான்மையினரின் பாடல் – நிஸ்ஸிம் இசக்கியல்
என்னறையில்
உருவில்லா விருந்தினருடன்
உரையாடுகிறேன்.
அவர்கள்
விவாதம் எதுவும் செய்வதில்லை.
நான் களைத்துப் போகும்வரை
காத்திருக்கின்றனர்.
பின்பு
உணர்வெதுவும் காட்டா
பிரதி ஜெராக்ஸ்
“கடவுளே எங்க கடைக்கு நேர்ல வந்து ஒரு வரம் கொடுத்திருக்காரு!” என ஏதோ ஒரு பெரிய ரகசியத்தை சொல்துபோல அவனிடம் அவள்மேல் ஆணையாக யாரிடமும் சொல்லக்கூடாது என சத்தியம் வாங்கிவிட்டு கண்களை அகல விரித்துக்கொண்டு ஆச்சரியமாக அதை சொன்னாள்.
புவிச் சூடேற்றம்- பகுதி 9
கடலில், நம் முந்தைய அட்டூழியங்களின் தாக்கங்கள் யாவும் வெப்பமாகத் தேக்கி வைக்கப்பட்டுள்ளன. தேக்கி வைத்த வெப்பம், முதலில் வெளி வந்தால்தான் குளிர்வதற்கு சந்தர்ப்பம் இருக்கும். கடந்த 50 ஆண்டு கால தொல்லெச்ச பொருட்களின் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டால், 2100 ஆம் ஆண்டு வரை, குளிர்வதற்கான வாய்ப்பே இல்லை. பூமி, நாம் தொல்லெச்ச பயன்பாடு எல்லாவற்றையும் நிறுத்தினாலும், தொடர்ந்து 2100 –ஆம் ஆண்டு வரை வெப்பமாகிக் கொண்டே போகும். அடுத்த 80 ஆண்டுகள் பொறுப்பாக நாம் இருந்தால், 2100 –க்குப் பிறகு, பூமி குளிர வாய்ப்பு இருக்கிறது.
ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம்
சதுரங்க ஆட்டம் விதிகளுக்கு உட்பட்டது. அதே போல் இஸ்லாமிய மதம் புத்தகத்தில் எழுதப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது. கடவுளின் பேச்சை மொகமது நூலாக மொழிகிறார். குரான் என்றால் “ஒப்பித்தல்”. இந்தப் படத்தில் குருவின் வித்தையை சீடன் எப்படி புரிந்து கொள்கிறான் என்று காண்பிக்கிறார்கள். குருவின் குருவான மாயி எனப்படும் சரஸ்வதி கடாட்சம் பெற்ற மகாமேதையின் எண்ணங்களை “பாராயணம்” செய்கிறார் சீடர்.
வெப் -3 (Web-3)
க்ரிப்டோவின் கவர்ச்சியால் ஈர்க்கப்படும் தொழில் நுட்ப வல்லுனர்களைத் தக்க வைப்பது பல பெரும் இணைய நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கிறது. அத்தகைய வல்லுனர்களை இருத்தி வைப்பதற்கும் அவர்கள் இலக்க நாணயக் குழுமங்களில் வேலை தேடிச் செல்லாமல் இருப்பதற்கும், கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை ஒவ்வொரு திங்களன்றும் தன் உதவியாளர்களான பல நிர்வாகிகளுடன் விவாதிக்கிறாராம். கூகுளின் எந்தப் பிரிவில் பணியாற்றுபவர்கள் இந்தக் கவர்ச்சிக்கு உள்ளாவார்கள் என அறிந்து அவர்களுக்கு கம்பெனியின் பங்குகள் சற்று அதிகமாக வழங்கப்படுகிறதாம்.