பெரிய அக்கா (லதா மங்கேஷ்கர்)பெடர் ரோட்டில் குடியேறிய புதிதில், அவரிடமும் யாரோ ஒரு பிருஹன்னளையை வேலைக்கு அனுப்பி வைத்ததாகச் சொன்னது எனக்கு நினைவு வந்தது. ” பத்மா, அவன் மிகவும் விசுவாசமானவன். நான் ரெக்கார்டிங் முடிந்து வரும்வரை எனக்காக உறங்காமல் காத்திருப்பான். உடை மாற்றிக்கொள்ள துணிகளை தந்துவிட்டு, சாப்பாட்டை சூடு செய்து பரிமாறுவான். வேலையிலிருந்து திரும்பும் கணவனிடம், மனைவி, அந்த நாள் முழுவதும் நடந்த நிகழ்ச்சிகளை ஒன்றுவிடாமல் பகிர்ந்து கொள்வதைப் போல, வீட்டில் நடந்த எல்லாவற்றையும் என்னோடு பகிர்ந்து கொள்வான்.
ஆசிரியர்: பத்மா ஸச்தேவ்
இவர்கள் இல்லையேல் அத்தியாயம்-11
ஒரு முறை, அவளுடைய தம்பி, ” நீ என் உண்மையான சகோதரியாக இருந்தால், எனக்கு ஒரு சைக்கிள் வாங்கி அனுப்பு. என் அக்கா எனக்கு சைக்கிள் வாங்கி தந்தி ருக்கிறாள் பாருங்கள் என்று நான் இங்கு எல்லோரிடமும் பெருமையடித்து க்கொள்ள முடியும்” என்று எழுதினான். மரியத்துக்கு இதைக்கேட்டு, சந்தோஷத்தில் சிரித்து மாளவில்லை. அவளுடைய பெற்றோரும் “உன் பெயரில் பசு வாங்குகிறோம். ஐநூறு ரூபாய் அனுப்பு”என்று கட்டளை இடுவார்கள். ..எத்தனையோ அக்காக்கள், தங்கைகள் மற்றும் அத்தைகள் தங்கள் சகோதர சகோதரிகளுக்காகவும், மருமகள்/ மருமகன் களுக்காகவும், உயிரைக்கூட கொடுக்கத் தயாராக இருக்கிறார்க.ள்ஆனால், பதிலுக்கு அவர்களுக்கு என்ன கிடைக்கிறது?
இவர்கள் இல்லையேல் அத்தியாயம்-10
மாலையில், என் கணவர், ” ரவேல் சிங், அந்த பழைய மேஜையும் நாற்காலிகளும் என்னவாயின?” என்று கேட்டார். நொடியும் தாமதிக்காமல், ரவேல் சிங், அதுவா ஸாஹிப், அதை நான் வந்த வண்டியிலேயே என் வீட்டுக்கு அனுப்பி விட்டேன் இந்நேரம் போய் சேர்ந்திருக்கும். எதிர்வீட்டில் போன் செய்து என் மனைவியிடம் விசாரித்து சொல்கிறேன் என்றானே பார்க்கலாம்!
இவர்கள் இல்லையேல்
1984க்கு பிறகு தான் எனக்கு ஃபூலோவுடன் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் அப்போதுதான் மும்பையிலிருந்து திரும்பி இருந்தோம். சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகளை வரலாறு அறியும். அந்த துயர நினைவுகளை நான் நினைத்துப் பார்த்து, காயங்களை புதிதாக்கிக் கொள்ள விரும்பவில்லை. அந்நாட்களில் ஃபூலோ எங்கள் வீட்டில் வேலை செய்து வந்தாள். “வேலைக்காரர்களிடம் சொல்லி, வீட்டு வாசலில் மாட்டியிருக்கும்ஸாஹிபின் பெயர் பலகையை கழற்றி விடுங்கள் பீஜி. சர்தார்களுக்கு இப்போது நேரம் சரியில்லை” என்பாள்.
மீண்டும் சீனா
என் மனம் முழுவதுமாக உடைந்து விட்டிருந்தது. பெண்ணின் பல பரிமாணங்களை நான் கண்டிருக்கிறேன். அவளுக்கு தன் வீடு தான் எல்லாவற்றையும் விட உயர்ந்ததாகத் தெரிகிறது. எந்த விலை கொடுத்தேனும், பெண், எப்போதும் தன் வீட்டை காப்பாற்றிக் கொள்ளவே நினைக்கிறாள். வீட்டைச் சிதற விடாமல் பிடித்து வைத்துக் கொள்ள படுகிற பாட்டில், அவள் எத்தனை எத்தனை முறை உடைந்து போகிறாள்! வெட்கமோ, மானமோ, குற்ற உணர்வோ,எதுவுமே அவளது இம்முயற்சியின் ஊடே, நுழைய முடிவதில்லை! அவளது தேவை ஒரு வீடு: தலையை மறைத்துக் கொள்ள ஒரு கூரை!
ராம் பிரசாதின் உலகம்
அதற்கு அவன், ’நீங்கள் மணி அடித்தது, என்னைத் தேடியது எல்லாமே எனக்கு நன்றாகத் தெரியும். நான் தான் இருக்கட்டும் என்று உறங்கி விட்டேன். நீங்களும் எப்போதாவது கையை காலை அசைத்து வேலை செய்ய வேண்டாமா? அது உங்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது என்றுதான் மௌனமாக இருந்தேன்’ என்றான். நான் டீக்கடையில் வேலை செய்யும் போதும் இப்படி பகலில் தூங்குவது வழக்கம். வேண்டுமானால், அந்த டீக்கடைக்காரனைப் போல, நீங்களும் என்னை அடித்து விடுங்கள். நான் கட்டாயம் மூன்றிலிருந்து ஐந்து மணிவரை ஓய்வெடுப்பேன். அது என் உரிமை’ என்றான்.
சமேலி, சுந்தரி, சீனா
சமேலிக்கு திருமணமாகி, அவள் தன் சிறு சாம்ராஜ்யத்தை நிர்வாகிக்கச் சென்றபிறகு வந்தவள் சுந்தரி. பெயருக்கேற்ற அழகி. அம்மன் சிலை போல கருப்பாக இருந்தாலும், வாட்ட சாட்டமான உடல் வாகு கொண்ட அழகி. …தேர்தல் சமயத்தில், ராஜேஷ் கன்னா வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரித்த போது, இவளது கணவன், நீ வெளியே போகக்கூடாது என்று இவளிடம் சத்தியம் வாங்கிக்கொண்டானாம். எங்காவது ராஜேஷ் கன்னா என்னை பம்பாய் அழைத்துக்கொண்டு போய்விட்டால், தானும் குழந்தைகளும் என்ன செய்வது என்கிற பயம்தான் பீஜி என்றாள் சிரித்தவாறு.
மைலோ – இவர்கள் இல்லையேல்
அந்நாட்களில், மைலோ என்கிற பெண்மணி, வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்ய வருவாள். மாநிறம். மிகவும் சுறுசுறுப்பானவள். புகையிலை போடுவது அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஃபினாயில் மணத்தோடு கலந்த புகையிலையின் மனம், அவள் போகுமிடமெல்லாம் அவளைத் தொடர்ந்து போகும். விட்டுத் தொலையேன் இந்த பழக்கத்தை என்றால், புகையிலை போடாமல் என்னால் வேலை செய்ய முடிவதில்லை என்பாள்
இவர்கள் இல்லையேல் – 3-4
. இத்தகைய பாத்திரங்களை, கடவுள் கூட, மிகுந்த யோசனைக்குப் பிறகே, தயாரித்துக் கீழே அனுப்பி இருக்கக்கூடும். அவனைப் பார்த்தால் நீங்கள் அவனை ‘சித்தம் கலங்கியவன்’ என்று நினைத்துக் கொள்வீர்கள். உண்மையில் நிக்கூ தான் எங்கள் அனைவரின் சித்தத்தையும் கலக்கிக் கொண்டிருந்தான். அவன் அடிக்கடி வீட்டுக்கு வருவான். வீட்டிலுள்ளவர்கள் அவன் பின்னாடியே ‘நிக்கூ, நிக்கூ,’ என்றழைழைத்தவாறே சூழ்ந்து கொள்வார்கள் .வேலை செய்யாமல், அவன் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட குடிக்க மாட்டான். நான்கு பாத்திரங்களையேனும் கழுவி வைத்துவிட்டுத்தான், என் மாமியார் தருகிற ரொட்டித் துண்டுகளை காய்கறியுடன் சாப்பிடுவான். வேலை செய்யாமல் சாப்பிடுவதையும், கூலி பெற்றுக் கொள்வதையும் பாவம் என்று சொல்லுவான்.
இவர்கள் இல்லையேல் – ராம்லால்
அதே சமயம், உள்ளே நுழைந்த தந்தை, எரிகிற கொள்ளியில், தன் பங்குக்கு, இன்னும் கொஞ்சம் எண்ணையை ஊற்றினார். “ராம் வாலின் அம்மா, இந்த மாதிரி ஒரு கேடுகெட்ட மகனைப் பெற்றெடுத்திருக்கிறாயே, நான் என்ன சொல்ல? என் முன்னோர்கள் எவரும் பகலில் மனைவியின் முகத்தை கூட பார்த்ததில்லை. மனைவியிடம் பேசுவது என்பதெல்லாம் கற்பனையில் கூட யோசித்துப் பார்க்க முடியாத விஷயம். இந்த மகாராஜாவைப் பார். மனைவிக்கு கடிதம் எழுதுகிறாராம் – என் பிரியமான மனைவியே – வெட்கங்கெட்டவன். கிராமம் முழுவதும் வெளியில் தலை காட்ட முடியாமல் பெயர் கெட்டு போனது தான் மிச்சம்,” என்றார்.
இவர்கள் இல்லையேல்
உடல் ஒத்துழைத்தவரை, அம்மா தன் கடைசி மகனை கூட்டிக்கொண்டு ராம்வன் சென்று, அங்கு சில நாட்கள் தங்கியிருந்துவிட்டுவருவார். திரும்பி வந்ததும் மிகவும் சந்தோஷமாக சொல்வார் – பாவம், இந்த பைத்தியக்காரனின் தலையெழுத்தில் நல்ல சாப்பாடு என்பது எழுதப்படவேயில்லை.