பிரப்பங்குடை மேல் இருந்து தண்ணீர் வடிந்தபடி இருக்க, கிருஷ்ணப்பா கீழிலிருந்து கையில் செப்புக் கிண்டியோடு வெளியே வந்து கையளவு நீரை குடைமேல் விசிறி அடிக்க, சுகமான வாசனை குளிர்ச்சி பகர்த்தி வந்து நின்றது.
”ஓ கிருஷ்ணப்பா அதென்ன அபின் கலந்த தண்ணீரா? முட்டை விற்க அபின் எதற்கு?”
பெத்ரோ கேட்க, இல்லை பிரபோ என்று அவசரமாக மறுத்தான் கிருஷ்ணப்பா.
”இது வெட்டிவேர் கலந்த தண்ணீர். ஒரு பலா இலை மடக்கு நிறைய ஏலமும் கலந்து தெளித்தேன். வெய்யிலுக்கும், வியர்வைக் கசகசப்பு குறைக்கவும் இதைவிட வேறே விமோசனம் இல்லை பிரபு”.
Author: இரா முருகன்
மிளகு – அத்தியாயம் பத்து – 1596 மிர்ஜான் கோட்டை
சின்ன முள், பெரிய முள், வினாடி முள், மணி நேரத்துக்கான அரேபிய எண்கள், மணி பார்ப்பது என்ற இரண்டே நிமிடத்தில் கற்றுக்கொண்டாள் அரசி. சங்கிலிக் கடியாரத்தை முள் முன்னே பின்னே போக வைத்து நேரம் என்ன என்று சொல்ல இன்னும் இரண்டு நிமிடம் பயிற்சியும் ஆனது.
மகாராணியிடம் கிராம்பும் ஏலமும் பச்சைக் கற்பூரமும் கலந்த வாசனையும் அதை மீறி மெல்லிய வெங்காய வாசனையும் அடித்தது கவனிக்க பெத்ரோவுக்கு ஆசுவாசமாக இருந்தது. மிளகை கொடுத்துவிட்டு சபோலா, என்றால் வெங்காயம், மற்றும் மிளகாயை இங்கே கொண்டு வர எல்லோரும் ஆர்வம் காட்டுகிறதாக அவருக்குத் தோன்றுவது சரிதான் என்று இப்போது புலப்பட்டது.
மிளகு – அத்தியாயம் ஒன்பது – 1999 லண்டன்
கமோடிட்டீஸ், ஃப்யூச்சர்ஸ், ஃபார்வேர்ட்ஸ், ஆப்ஷன்ஸ் அண்ட் ஸ்வாப்ஸ் (COMMODITY FUTURES, FORWARDS, OPTIONS & SWAPS) வர்த்தகம் அது. தானியங்களுக்கும், வாசனை திரவியங்களுக்கும், முக்கியமாக மிளகுக்கும், அபூர்வமான மலர்களுக்கும் இன்னும் ஒரு மாதத்தில் விலை என்னவாக இருக்கும் என ஊகித்து நடத்தும் வர்த்தகத்தில் வேலை நேரம் தவிர மூழ்கியிருப்பான். மிளகு விலைப் போக்கை கணித்து நடத்தும் ’ஊக கச்சவடம்’ (ஊக வர்த்தகம்) மருது செய்வது.
மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன்
நாராயண பிஷாரடி வைத்தியர் ஒரு கனவு கண்டார். பேராசிரியர் பிஷாரடி. பிஷாரடி வைத்தியர். எல்லாம் அவர் பெயர் தான். அவர் கண்டது தூசு அடர்ந்த சிறிய ஊரின் வீதிகளில் சைக்கிள் ஓட்டிப் போகும் கனவு. சைக்கிளை அதி வேகமாகப் பின் தொடர்ந்து கனைத்தபடி ஒரு செந்நாயோ, கடுவன் பூனையோ, “மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன்”
மிளகு
திலீப் ராவ்ஜிக்கு அண்டை அயலில் சிநேகிதர்கள், தூரத்து, பக்கத்து சொந்தக்காரர்கள், ஏன், பழக்கமானவர்கள் என்று பலர் உண்டு. இவர்கள் மதியச் சாப்பாட்டுக்கு உட்காரும் நேரம் அவருக்குத் துல்லியமாகத் தெரியும்.
அதற்கு ஒரு மணி நேரம் முன்பே நலம் விசாரிக்கிற தோரணையில் ராவ்ஜி எப்போதாவது அவர்களின் வீடுகளுக்கு அழைக்காமலேயே போவதுண்டு.
மிளகு – அத்தியாயம் 6
ஒரே வயசு, ஒரே மாதிரி பின்னணி. ஒரே மதம், சமணம். பக்கத்து பக்கத்து சிறு நிலப் பரப்புகளை ஆட்சி செய்யும் உரிமை. நல்ல பெயர். இரண்டு பேருக்குமே இதெல்லாம் வாய்ந்திருக்கிறது.
சென்னபைரதேவி மிளகு ராணி. அப்பக்காவுக்கு அபய ராணி என்று பெயர். அ-பய-ராணி பயமென்பதையே அறியாதவள். நாடு பிடிக்க வந்த போர்ச்சுகீஸ் பரங்கிகளை ஒன்றல்ல, பத்து முறை தோற்கடித்துத் திரும்பி ஓட வைத்தவள் அப்பக்கா.
சென்னபைரதேவி ஊர் தோறும் சமணத் தீர்த்தங்கரர் கோவில் அமைப்பது என்று செயல்படுகிறவள். கோகர்ணம் மஹாகணபதி பகவான் மேலும் அளவற்ற பிரியம் கொண்டவள் காணாபத்யம் கொண்டாடும் சென்னா.
மிளகு: அத்தியாயம் ஐந்து
புராதன மாளிகைகளும், வியாபார நிறுவனங்களும் அணிவகுத்து நிற்கும் கருங்கல் பாவிய அகலமான வீதிகளில் மிக விரிவானது அந்த ரதவீதி. அங்கே போர்த்துகீஸ் அரசப் பிரதிநிதி இம்மேனுவல் ராபர்ட்டோ பெத்ரோ Immanuel Roberto Pedro வசிக்கும் விசாலமான மாளிகை. வழக்கமான போர்த்துகீஸ் காலை உணவான சீராக வெண்ணெய் தடவி அனலில் சுட்ட டொர்ரடா (toast), மசித்த காய்கறியும், பன்றி மாமிசமும் இடையில் வைத்த ரொட்டித் துண்டுகள், ஆரஞ்சு பழக்கூழும் தேனும் நிறைத்த பாபோ செகோஸ் (bun), பால் அதிகம் சேர்த்த காப்பி என்று பசியாறிப் பயணத்துக்குச் சித்தமானார் பெத்ரோ.
மிளகு -அத்தியாயம் நான்கு
அரைக் குல்லாவை எடுத்து வா என்று மலைப் பிரதேசத்திலிருந்து வந்திருக்கும் புதுப் பணியாளனுக்கு உத்தரவு தருகிறார் பிரதானி. அவன் உள்ளே ஓடிப்போய் பளபள என்று நீலப்பட்டில் நெய்த மார்க்கச்சை ஒன்றை எடுத்து வந்து பவ்வியமாக நீட்டுகிறான்.
”இது எதுக்கு எனக்கு? கச்சை தலைக்கு மேலே போச்சுன்னா எல்லா அதிகாரமும் செல்வமும் செல்வாக்கும் அதுக்குத்தான்”.
பிரதானி சொல்ல, புரியாமல் மறுபடி உள்ளே போய் சிவப்புக் கச்சையை எடுத்து வந்து தருகிறான்.
மிளகு – மிர்ஜான் கோட்டை
”புராதன ரோம் நகரத்தில் துணிகளை வெளிரென்று சலவை செய்து தர நிறுவனங்கள் இருந்தன. அதற்கான வாயு வேண்டுமே? அந்தக் காலத்தில் ஏது? ஆகவே அந்தக் குறிப்பிட்ட வாயு நிறைந்த சிறுநீரை இந்தக் காரியத்துக்காக உபயோகப்படுத்தினார்கள். சலவைக்கடை வாசலில் பெரியதாகப் பள்ளம் தோண்டி, ’இங்கே சிறுநீர் கழிக்கவும்’ என்று அறிவிப்புப் பலகை வைத்து, நகர மக்களை வேண்டி விரும்பி அழைத்தார்கள்”.
மிளகு – அத்தியாயம் இரண்டு (1596)
விஜயநகரப் பேரரசின் சார்பில் சாம்ராஜ்ய பிரதிநிதி ஹனுமந்த ராயர் மனம் குளிர வாழ்த்தினார்.
“ஒரு குழந்தையைத் தாய் ஆசிர்வதித்து வாழ்த்துவது போல், விஜயநகரப் பேரரசின் சார்பில் வாழ்த்துகிறேன். நாடும் நீயும் எல்லாச் செல்வமும் குறைவின்றிப் பெற்று சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பில் என்றும் பத்திரமாக இருந்து எந்த இடரும் இன்றி நீடூழி வாழ்ந்து நல்லாட்சி தந்திடம்மா. அரியாகவும் அருகனாகவும் விளங்கி எங்கும் நிறை பரப்பிரம்மமான தெய்வத்தின் பேரருளும், விஜயநகரப் பேரரசர் வெங்கடபதி தேவராயரவர்களின் வழிகாட்டுதலும் பிரியமும் என்றும் உனக்கு உண்டு”.
வயதான பிரமுகரான அந்த விஜயநகரப் பிரதிநிதியின் பாதம் பணிந்து எழுந்து அவரது வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டாள் சென்னபைரதேவி.
மிளகு
சென்னபைரதேவி நாற்பத்து நான்கு வருஷங்களாக அரசாங்கம் நடத்தி வந்தாலும், ஆட்சியிலும் வாழ்க்கையிலும் சகல வெற்றியும் பெற்ற ஒரு அரசியாக இருந்தாலும், ஒரு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று விருப்பம் ஏனோ தோன்றியதில்லை. பெண்ணாகப் பிறந்தவள் பதினாறு வயதில் மண மண்டபத்தில் அக்னி வளர்த்துக் கைப்பிடிக்கக் காத்திருப்பவனோடு புது வாழ்க்கை தொடங்குவது எங்கும் வழக்கமாக இருக்க, சென்னா பதினாறு வயதில் அரசாள ஆரம்பித்து விட்டாள்.
