புத்தகக் கண்காட்சியில் பை நிறைய கதைகள்

போரையும் இனப்படுகொலையையும் பின்னணியாகக் கொண்டிருக்கும் புத்தகங்களை விமர்சிப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. குருதி தோய்ந்த அதன் பக்கங்களை எப்போதுமே சொகுசாக வாழ்ந்துகொண்டிருக்கும் நாம், என்ன அழகியல் நுணுக்கங்களைக் கொண்டு நொட்டுவது என்ற தார்மிகச் சிக்கல். இந்தத் தயக்கத்தையும் மீறி சில படைப்புகள் அவற்றின் கழிவிரக்கத்தைத் தவிர்த்து கொடூரங்கள் விரவியிருக்கும் சூழலையும் அதில் சிக்குண்டிருக்கும் சாமான்யர்களின் அவலத்தையும், நிரந்தரத் துக்கத்தையும், தோல்வி நிச்சயமென்றாலும் செயலாற்ற வேண்டிய கட்டாயத்தையும், அக்கட்டாயத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் அறச் சிக்கல்களையும் உடனடித் தன்மையுடன் கவித்துவத்துமாகக் கைப்பற்றும் விதத்தால் அவற்றின் அழகியலைப் பற்றியும் சிந்திக்க வைக்கின்றன. மாபெரும் தாய் கதைத் தொகுப்பு அம்மாதிரிப் படைப்புகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.