பண்பாட்டு விமர்சனம்: வெ.சா.வை சாக்காக வைத்து சில சிந்தனைகள்

இங்கே சமூக விமர்சனம் என்பது சாதி விமர்சனம் என்ற அளவிலேயே குறுகிப் போனதுதான். சாதி விமர்சனம் என்பது அந்தந்த சாதியைச் சார்ந்த அறிவுஜீவிகளாலேயே செய்யப்படும்போது அதன் நம்பகத்தன்மை அதிகமாகும். உண்மையில் வெ.சா. ‘வசனம்’ எழுதிய ‘அக்கிரகாரத்தில் கழுதை’ சம்ஸ்காராவை விட வீச்சு அதிகம் கொண்டது. ஆனால் நாடகமா, திரைக்கதை வசனமா, புனைகதையா என்ற உருவத்தெளிவு இல்லாததாலும், வெ.சா.வுக்கே அப்படைப்புக் குறித்துப் பெருமிதம் இல்லாமலிருந்ததாலும் அது வெகுமக்கள் தளத்திற்கு போய்ச்சேரவில்லை. பெரியாரின் தத்துவவெளி சிறிதாக இருந்தாலும் அவரது தீவிரமான பிரச்சாரம் மூலமும், விசுவாசமான தொண்டர்கள் மூலமும் மக்களை வேகமாகச் சென்றடைந்தார் என்பதை கவனிக்க வேண்டும். இதில் இன்னும் சில விஷயங்கள் இருக்கின்றன. மொழி இங்கே அரசியல்வாதிகளின் கைப்பாவையாக இருக்கிறது. இரண்டாவது பொதுவெளி அறிவுஜீவிகளுக்கும், கல்விப்புல அறிவு ஜீவிகளுக்கும் இடையே காணப்படும் மிகப்பெரிய இடைவெளி.

வரலாற்றில் அடியோட்டம் தேடும் பழமலய்

பண்பாட்டுக்கலகங்களை தனி வாழ்க்கையில் மட்டுமல்லாமல் இலக்கியத்திலும் கேட்கிறார்கள்.அந்த வாழ்க்கை நோக்கும், அந்த மொழிநடையும் தான் செல்வாக்கில் இருக்கின்றன. அது வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கிறது. இது இங்கே மட்டுமில்லை. உலகமெங்கிலும் தென்படுகிற சமாச்சாரம் தான். நமது வாழ்க்கையே பின்நவீனத்துவமாகத்தானே மாறிப்போறிப்போயிருக்கிறது? இது பழமலய்க்குப்புரியாது. புரியாமலிருப்பதே பழமலய்யின் பலம்.