எமர்ஜென்சி நாட்குறிப்புகள் – பி.என்.டாண்டன்

பிஷன் நாராயண் டாண்டன் எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தி அலுவலகத்தில் துணை செயலாளராகப் பணியாற்றியவர். அக்காலகட்டத்தில் பிரதமரின் செயலாளர் குழு (Prime Minister’s Secretariat (PMS)) எனும் அமைப்பாக இது இயங்கி வந்தது. அக்குழுவின் துணை செயலாளராகக் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் அரசியல் துறையில் ஈடுபட்டு வந்தார் டாண்டன். ஆகஸ்ட் 16, 1975 முதல் ஜூலை 24, 1976 வரை கிட்டத்தட்ட அன்றாடம் நாட்குறிப்பு எழுதி வந்திருக்கிறார்.

பீமாயணம் – தீண்டாமையின் அனுபவங்கள்

ரயில் பாம்பாகிறது. அச்சுறுத்தும் கோட்டை சிங்கமாகிறது. பாபா சாஹேப் அம்பேத்கரை வரவேற்கும் மக்களுடைய மகிழ்ச்சியானது சிரிக்கும் முகங்களாக அல்லாமல் நடனமாடும் மயிலாக இருக்கின்றன. ஒரு தலித், ஒரு கிணற்றைத் தோண்டியதற்காக கொலை செய்யப்பட்டதும், இரண்டு பசுக்கள் சாட்சியாக இருக்க அவன் பயன்படுத்திய புல்டோசர் அழுகிறது. வீடு வாசலற்ற அம்பேத்கர் பரோடாவின் தோட்டத்தில் தன் தலைவிதியை ஆழ்ந்து யோசித்துக்கொண்டிருக்கையயில் அவர் தோட்டமாக ஆகிவிடுகிறார்.

'அருந்தவப்பன்றி' – சுப்பிரமணிய பாரதி

1896ஆம் ஆண்டு எட்டையபுர சமஸ்தானத்தின் ஆசுகவியாக இருந்த பாரதி தனது பதவியிலிருந்து விலக நேர்கிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் என்றாலும், சின்ன சங்கரன் கதையில் பாரதியே விளக்குவதுபோல, ஜமீனின் சின்னத்தனமான வாழ்வின் மீதான ஒவ்வாத்தன்மையே அவரை அங்கிருந்து துரத்தியிருக்கிறது. சரசப் பாட்டுகளும், விடலை துணுக்குகளும், சித்தம் கலங்கச் செய்யும் லேகியங்களும் தன்னை கீழ்மையை நோக்கித்தள்ளுவதை பாரதி உணர்ந்திருக்கிறார். தேச விடுதலை, மனித சமத்துவம், பெண்ணுரிமை எனும் உயரிய சிந்தனைகளைப் பேணுவதற்கு ஜமீன் சரியான இடமல்ல என்பதால் நிரந்தர ஊதியத்துக்கு உத்தரவில்லாத ஆசிரியர் பணியை ஏற்றுக்கொண்டார். தனது முழுமையை அங்கும் அவர் அடையவில்லை என்பதனால் மனவிரக்தியுடன் காசிக்குச் சென்றார்.

சுமித்ரா – அந்தம் இல் மனம்

சுமித்ரா தனது வாழ்வைப் பற்றி ஒரு கதையோ கடிதமோ எழுதியிருந்தால் அது “மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்” போலத்தான் இருக்கும் எனவும் தோன்றியது. சுமித்ராவை விட சற்று கறாரான தர்க்கப் பார்வை கொண்டவள் மறியா. மற்றபடி சுமித்ரா தனது வாழ்வின் பக்கங்களை எழுதப்புகுந்தால் அது மறியாவின் அக உலகோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும். மறியா கலிஃபோர்னியாவில் வேறுவித சமூக யதார்த்தத்தோடு வாழ்வதால் தன்முனைப்போடு அவளது உலகோடு போராடுகிறாள். சுந்தர ராமசாமியும் தீவிரமான தர்க்கத்தோடு அதை ஆராய்கிறார். ஈரம் மிகுந்த வயநாட்டுப்பகுதியில் வாழும் சுமித்ராவுக்கு தடைகள் சமூக யதார்த்தத்தளத்தைச் சார்ந்தவை. கல்பட்டா நாராயணன் அதை கதை நெடுக உணர்த்திச் செல்கிறார். சுமித்ரா மற்றும் மறியாவின் அகப்போராட்டங்களை கவனிக்கும்போது பெண்களின் கருணையும் கனிவும் காலத்தையும் இடத்தையும் மீறிச் சென்று எல்லையற்ற அந்தரங்க உலத்தைத் தம்முள் கொள்ளும் சக்தி படைத்தனவாகத் தெரிகின்றன.

பி.கே.எஸ். ஐயங்காரின் அதிமானுட யோகா முறைகள்

யோகா பயிற்சிகளை அமெரிக்காவுக்கு ஏற்றவாறு மாற்றினார். “குரு ஒரு மாணாக்கருக்கு பல வருடங்கள் சொல்லிக்கொடுக்கும் பயிற்சியாக இருந்ததை ஒரு வகுப்பின் பல மாணவர்களுக்கு ஒரே சமயத்தில் சொல்லிக்கொடுக்கும் பயிற்சி மையமாக மாற்றியவர் ஐயங்கார்”, என்றார் ஷுமாக்கர். வளைய சிரமப்பட்ட மாணவர்களுக்கென நவீன முறை பயில் சாதனங்களாக பட்டா, தட்டைகட்டை, கயிறுகள், கற்கள், சின்ன மரத்துண்டுகள் போன்றவற்றைக் கொண்டு சுலபமாக்கினார். ஹிப்பிக்கள் நிரம்பிய 1970களில் கூட அவர் பொது ஜனங்களுக்கான பயிற்சிகளை மட்டுமே சொல்லிக்கொடுத்தார்.

குட்டி ரேவதி சந்திப்பு – பிரிவினை கோஷங்களும் முற்போக்கு அரசியலும்

லண்டன், பெர்லின் போன்ற இடங்களில் வாழும் தமிழர்கள் இந்திய மூலப்பண்பாடு பற்றிய அவதூறு கோஷங்களை மட்டுமே எழுப்பும் இப்படிப்பட்ட கூட்டங்களினால் குழம்பிப்போகிறார்கள். ஐரோப்பிய நாகரிகத்தையும் தழுவிக்கொள்ள முடியாது எனும் நிதர்சனம் ஒரு புறம், சொந்தப் பண்பாடு பற்றி அறிவிலிக் கருத்துரைகள் மறுபுறம் என கொஞ்சம் கலை இலக்கிய ஆர்வம் இருப்பவர்களையும் இப்படிப்பட்ட கூட்டங்கள் துரத்திவிடுகின்றன.

நடீன் கோர்டிமர் [1923 – 2014]

காலனியாதிக்கத்தின் கோரப்பிடிப்பிலிருந்து விடுபட்ட கருப்பின மக்களின் சிக்கல்களைப் பேசுவதாகட்டும், ஆப்பிரிக்க நாட்டுப் பிரஜைகளிடம் எஞ்சியிருந்த பழக்கங்களையும் திரிபுகளையும் எதிர்கொண்ட நவீன மனிதனின் பார்வையைச் சித்தரிப்பதாகட்டும், காலனியச் சிறையில் தமது இறக்கைகளை இழந்த நவீன பெண்களின் நிலையை விவரிப்பதாகட்டும் நடீன் கோர்டிமர் ஒவ்வொரு வகையான வாழ்வைப் பற்றியும் மிக விரிவாகப் பதிந்துள்ளார்.

லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் நேர்காணல்

ஒரு புத்தகத்தை மட்டும் படித்துவிட்டு மொழியாக்கம் செய்வதில் எனக்கு விருப்பமில்லை. மூல ஆசிரியரின் சொற்சித்திரங்கள் எனக்குப் பழக வேண்டியது மிக அவசியம். எல்லாவிதமான படைப்புகளையும் ஆங்கிலத்து மொழிமாற்றம் செய்கிறேன் என்றாலும், மெளனியின் படைப்பு அமைதிக்கும், அம்பையின் படைப்பு ஆழத்துக்கும் வித்தியாசம் இருக்குதானே? ஆங்கிலத்தில் படிக்கும்போது இந்த வித்தியாசத்தை வாசகரிடம் கடத்த வேண்டியது அவசியம்.

நார்வே பயணம் – 2

ஐரோப்பாவின் ஒவ்வொரு ஊருக்குச் செல்லும்போது சரித்திரத்தின் நிழல் எந்தளவு நீண்டுள்ளது எனத் தெரிகிறது. கால்களுக்குக் கீழே நகரும் பூமித்தட்டுகள் போல ஒவ்வொரு மனித வளர்ச்சி யுகமும் பலவற்றை நினைவில் வைத்திருக்கும் அதே நேரத்தில் சிலதை மறக்க முயல்கிறது. ஆனால் மீண்டும் மீண்டும் நகரங்கள் புத்துயிர்ப்பு பெற்று எழும்போது, நமது ஞாபகங்கள் நம்மை ஏமாற்றுகின்றன என்றே தோன்றுகிறது. கண்ணுக்குள்ளே இருக்கும் குருட்டுப்புள்ளியைப் போல சில காட்சிகளை நம் நினைவு ஓரங்கட்டிவிடுகிறது போலும்.

நீலப்பனியைத் தேடி – 1

பக்கத்து வீடு ஐம்பது மைல்கள் என்பதைப் போல அருகில் மலைகளைத் தவிர எதுவும் இல்லை. அரைவிழிப்பு நிலையில் சத்தம் வந்த திசையைக் கண்டுபிடிக்கச் சிறிது நேரம் ஆனது. தூரத்தில் தெரிந்த மலையிலிருந்து கார் அளவிலான பனிப்பாளங்கள் உடைந்து விழுந்தபடி இருந்தன. நாங்கள் சென்றிருந்த பருவம் அப்படி. எங்குத் திரும்பினாலும் மண் நிறத்திலான மலைகள் பனிப்போர்வையை உதறியபடி இருந்தன.

ஷேமஸ் ஹீனி (Seamus Heaney:1939-2013) – மண் கரைசலின் வாசம்

அயர்லாந்து நாட்டுக் கவிஞர் ஷேமஸ் ஹீனி தனது சிறுவயது அனுபவங்களைப் பற்றி சொல்லும்போது, ` இக்காலகட்டத்து நவீன உலகுக்கு என்னுடைய சிறு ஊரின் அனுபவங்கள் பழசானவை, தேவையற்றவை என நினைத்திருந்தேன். நான் எழுதத்தொடங்கியபோது சிற்றூர்களின் அனுபவ அறிவு கவிதை உலகுக்குள் நுழையத் தொடங்கிய காலம். டெட் ஹ்யூஸ், ராபர்ட் ஃப்ராஸ்ட் ஆகியோரின் கவிதைகளிலிருந்து இந்த நம்பிக்கையை நான் பெற்றிருந்தேன். அந்த அனுபவங்கள் அளவிடமுடியாத சொத்து என்பதை பின்னர் உணர்ந்தேன், ` என்கிறார்.

கனவுகள் மீதூரும் பாதை

நாடகம் நடந்துகொண்டிருக்க என் மனம் மீண்டும் மீண்டும் அரங்கின் வடிவை வியந்தபடி இருந்தது. சுற்றிலும் பிரம்மாண்ட சுவர்கள் கிடையாது, தடுப்புகளும், விளம்பர பட்டிகளும், ஒலிப்பெருக்கிகளும் இல்லை. மலை உச்சியிலிருந்து கடலைப் பார்ப்பது போல நாங்கள் எல்லாரும் உட்கார்ந்திருக்கிறோம். மலையைச் சற்றே கவிழ்த்தால் போதும் நாங்கள் உருண்டு கடலில் கலந்துவிடுவோம். அப்படி வழித்தெடுக்கப்பட்ட இடத்தில் அரைவட்ட வடிவில் ஒரு அரங்கை அமைக்க ரொவீனாவுக்கு எப்படி எண்ணம் வந்தது?

தந்தியிசையில் புதிய பாய்ச்சல் – வி.எஸ்.நரசிம்மனுடன் ஓர் உரையாடல்

என்னைப் பொருத்தவரை, பல மேதைகள் உருவாக்கிய நமது கர்நாடக இசையின் அழகை நான் அப்படியே பின்பற்றுகிறேன். பாடல்களின் பாவத்திலோ, வரிகளின் அர்த்தத்திலோ நான் எதையும் மாற்றுவதில்லை. நமது இசையின் அழகை மெருகூட்டுவதற்காக அதே உணர்வுகளை மேம்படுத்தக்கூடிய வகையில் மேற்கிசைக் கூறுகளை இணைக்கிறேன். இதனால் நமது இசையின் அழகு கூடுகிறதே தவிர குறைவதில்லை.

நெடுங்காலமாகத் தொடரும் அரண் – ராபர்ட்டோ பொலானோ

ராபர்ட்டோ பொலானோவைப் பொறுத்தவரை கவிஞர்களது உலகம் என்பது ஒரு உயிருள்ள மிருகம் போன்றது. ஆயிரம் கைகளும், பல்லாயிரம் சிந்தனைகளும் ஒன்றாக இயங்கி ஒரே இலக்கை நோக்கி பயணம் செய்யும் இயந்திரம். கவிதையின் உள்ளடக்கமும் உருவமும் அதில் மட்டும் முடிவதில்லை. கவிஞனின் உலகத்துள்ளும் ரசனையின் மிச்சங்கள் அடங்கியுள்ளன.

நந்தாதேவி

அங்கு ஒரு ஓநாய் என்னையே வெறித்துப் பார்த்திருந்தது. சேற்றில் மூழ்கி எழுந்தது போல உடல் முழுவதும் சடை சடையாக அடர்ந்த கரிய முடி. முழுவதுமாக மூடாத வாய். பற்களிலிருந்து கோழை வழிந்தது. தலையில் அடிபட்டது போல உறைந்த ரத்தச் சிகப்புக் கட்டிகள். எனது கால்கள் பின்வாங்கத் தொடங்கின. உடனடியாக திரும்பி ஓடிவிடக்கூடாது. உயிர் தப்பாது. ஓநாய்க்கு ஆபத்தில்லை எனும்படியாக எனது ஒவ்வொரு உடலசைவும் இருந்தாக வேண்டும்.

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்

இன்று காலை அவரது எண்பத்து இரண்டாவது வயதில் P.B.ஸ்ரீனிவாஸ் இறந்துவிட்டார் எனும் செய்தியை இணையத்தில் பார்த்து அறிந்துகொண்டேன். பலவிதமான நினைவுகள். யூடியூப்பைத் திறந்துவைத்து அவரது எந்தப் பாடலைக் கேட்கலாம் என குழம்பியபடி ஒரு நிமிடம் உட்கார்ந்திருந்தேன். நெடுங்காலம் பல அற்புதமானப் பாடல்களைப் பாடியிருந்தாலும், பாடல் வரிகளைத் தாண்டி அவரது குரல் இன்றும் மறக்க முடியாததாக இருக்கிறது.

சகல கலா ஆசார்யர் – வித்வான் எஸ்.ராஜம் ஆவணப்படம்

எஸ்.ராஜம் கர்னாடக சங்கீதத்தின் ஒப்பற்ற கலைஞர், ஓவியர், சங்கீதக் களஞ்சியம் என பல முகங்கள் கொண்டவர் என்றாலும், நமது பாரம்பரியக் கலையின் கடைசி ஆன்மா என அவரது ஆவணப் படத்தைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது. கலையின் அணையாத கங்கு கலைஞர்களின் ஆத்மார்த்தமான ஈடுபாட்டில் அடங்கியுள்ளது. அது என்றும் நீடித்திருக்கும் பெரும் தீ. காலகாலத்துக்கும் கலையின் எண்ணிலடங்கா முகங்களை உயிர்ப்போடு வைத்திருப்பது கலைஞர்களால் மட்டுமே சாத்தியம்.

பொங்கும் புதுவெள்ளம் – க.நா.சு.வின் பொய்த்தேவு ஒரு பார்வை

இன்றைக்குப் பொய்த் தேவு நாவலை வாசிப்பவர்களுக்கு க.நா.சு தேர்ந்தெடுத்த உணர்ச்சியற்ற நடை வித்தியாசமாகத் தோன்றலாம். மிகவும் உணர்வு பூர்வமான வாழ்க்கை நிகழ்வுகளைப் போகிற போக்கில் சொல்லிச் சென்றிருக்கிறார். ஒட்டுமொத்த நாவலையும் படித்துப் பார்க்கும்போது வாழ்வின் சுழிப்புகளையும் ஜார்ஜ் எலியட் குறிப்பிடும் அன்றாட நிகழ்வுகளையும் மூன்றாம் மனிதரின் பார்வை போலக் குறிப்பிட்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஒரு தருணத்தை உணர்ச்சிகரமாகப் படைத்துவிட்டு மற்ற கணங்களை மேலோட்டமாகக் குறிப்பிட்டால் அசாதாரண நிகழ்வுகள் வாழ்வை செழுமையாக்குகின்றன என்பது போன்ற தோற்றத்தைத் தந்துவிடும் அபாயம் உள்ளது.

வரலாற்றோடு ஒரு ஒப்பந்தம்: வாக்னரும் நானும்

இசை வரலாறை வாக்னருக்கு முன் வாக்னருக்குப் பின் எனப் பிரித்ததில் பீத்தாவன் போல முதன்மையான சிம்மாசனத்தில் இசை உலகம் அவரை வைத்துள்ளது. அதே சமயம், இஸ்ரேல் நாட்டில் அவரது இசையை ஒளிபரப்புவதற்கு தடை உள்ளது. சொல்லப்போனால் யூத இனத்தினர் அனைவருக்கும் வாக்னர் மிகப் பெரிய எதிரி. அவரது இசையை வீட்டில் கேட்பதற்கு கூட பல யூத குடும்பங்கள் அனுமதிப்பதில்லை. அதிகமாக ரசிக்கப்படும் இசையைக் கொடுத்த அவரை அதே அளவு மக்கள் வெறுக்கக் காரணம் என்ன?

திறப்பு

சுருதி சுத்தத்தை கவனிக்கப் பழக்கப்பட்ட ஜெயந்திக்கு பாடுபவரே இசையாக மாறிய விந்தையை நம்ப முடியவில்லை. பக்தி பாவத்தை உணரப் பிரயத்தனப்பட்ட அவளது பயிற்சிகள் தன் முன் சிதறுவதைக் கண்டாள். பக்தியையும் தாண்டி அவரது பாடல் வேறெங்கோ சஞ்சாரிப்பதை உணர்ந்தாள். பாடலைக் கொண்டு நிறுத்தியிருந்த நிலையில் ஒவ்வொரு ஸ்வரமும் தனி இசைவெளியாக ஒலிக்கத் தொடங்கியது. எத்தனை அன்பையும், உணர்ச்சியையும் ஒவ்வொரு ஸ்வரத்திலும் பாடகர் செலுத்தியிருக்க வேண்டும் என நினைக்க நினைக்க ஜெயந்தியின் கண்களில் அவளறியாமல் கண்ணீர் சுரந்தது.

தர்ப்பை

குழாயைத் திறந்து இரு கைகளையும் சேர்த்து பரபரவெனத் தேய்த்தான். எவ்வளவு முறைத் தேய்த்தும் கையில் இருந்த சிகப்பு தீற்றல் போகவில்லை. தர்ப்பை போல வேண்டிய நேரத்தில் எடுத்து மாட்டி வேண்டாதபோது தூக்கி எறியும்படி எல்லாமே இருந்தால் எவ்வளவு நன்னா இருக்கும் என நினைத்துக்கொண்டான்.

நடந்தாய் வாழி காவேரி – காவேரியே ஒரு சங்கீதக் கச்சேரி

எந்த பயணத்துக்கும் இருக்கும் கிளைப் பயணங்கள் போல், இவர்களது பயணம் காவிரியின் பல தாத்பரியங்களை பூவிதழ் போல் விரித்துக் காட்டுகிறது. காட்டாறு போல் பாறையைப் பிளந்து விரையும் தலைக்காவிரி, சிவசமுத்திர பகுதியாகட்டும்,வறண்டுப் போன தமிழ்நாட்டுப் பகுதிகளாகட்டும் நதியின் போக்கை மட்டும் இவர்கள் ரசிப்பதில்லை. பயணத்தின் பல முகங்களாக நதிக்கரை ஓரம் வாழும் மக்களின் வாழ்க்கை, அவர்களது நம்பிக்கைகள், கன்னடம் மற்றும் தமிழ் மொழிப் பிரயோகங்கள், இயற்கை வளங்கள், காவிரியின் செழிப்பு என எல்லாவற்றையும் ரசித்திருக்கிறார்கள். அவற்றை பயணக்கட்டுரைகளில் மிக விரிவாகப் பதிந்திருக்கிறார்கள்.

சிலிக்கான் கடவுள் – அறிவியல் எழுத்துக்கான திறவுகோல்

அறிவியல் முறைமையும் எளிமையான விவரணைகளும் இரு தண்டவாளங்கள் போன்றவை; ஒன்றாகப் பயணம் செய்ய முடியாதவை எனும் கோட்பாட்டை சர்வ சாதாரணமாக ராமன் ராஜா தாண்டியுள்ளார். அறிவுசார் முறைமைகளை விளக்கும்போது அத்துறை சார்த்த மொழிக் களஞ்சியம் கைகூட வேண்டும். மேலும் மிகவும் தட்டையான பாடப் புஸ்தக நடையில் இல்லாமல், நம் சிந்தனைக்குச் சவால் விடும் விதத்தில் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்க வேண்டும். இவை இரண்டும் இக்கட்டுரைகளில் மிகச் சிறப்பாக கையாளப்பட்டிருக்கின்றன.

04. உலகப் புகழ் பெற்ற பிரதேஸ் இசை நிகழ்ச்சி

யுத்தத்துக்குப் பின் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தும் ஸ்பெயினைப் பற்றிக் கவலைப்படவில்லை. இசை நிகழ்ச்சிக்கு தலைமைத் தாங்குமாறு அழைத்த ஐ.நா சபையிடம் தன் கொள்கையைப் பற்றி கசல்ஸ் விளக்கினார். அதையே ஒரு பேட்டியாக டைம்ஸ் பத்திரிக்கைக்குக் கொடுத்து உலக மக்களின் கவனத்தை ஈர்த்தார். தன இன மக்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு ஃபிராங்கோ மன்னிப்பு கேட்கும் அதேநேரத்தில் உடனடியாக மக்களாட்சியை காடலோனியாவில் அமுலாக்க வேண்டும் என்பது அவரது கோரிக்கை.

வரலாற்றின் துணையோடு ஒரு பயணம்

பண்டைய இந்தியாவில் புதியவர்களைச் சந்திக்கும்போது `தாங்கள் எந்த நதியுடன் தொடர்புடையவர்?’ எனக் கேட்கும் வழக்கம் இருந்ததாம். தண்ணீரை வணிகமாக மாற்றியதில் அரசுக்கும், பல நாட்டு தொழிற்சாலைக்கும் இருக்கும் தொடர்பை விளக்குகிறார். பல தகவல்களுக்கு நடுவே தினம் 6,350 லட்ச லிட்டர் கங்கை நீர் தொழிற்சாலைகளுக்கு திருப்பப்படுகிறது எனும் தீற்றல் செய்தி திடுக்கடைய வைக்கிறது.

03. செல்லோ நடனம்

பாக் இயற்றிய ஆறு செல்லோ தொகுப்புகளும் நடன இசை வகையைச் சார்ந்தவை. இசையை மையமாகக் கொண்ட படங்களில் பிரபலமாக இருந்த பால் ரூம் நடனத்துக்கு நெருக்கனமானவை. கசல்ஸ் அறிமுகம் செய்யும் வரை இவை மேடையில் இசைக்கப்படாமல், சில தனிப்பட்ட இசைக்கலைஞர்களின் ஞாபகத்தில் தேங்கி இருந்தது.

02. மீண்டெழுந்த நாட்டுப்புற இசை

செல்லோவை இசைக்கும் முறையும் மிக வித்தியாசமானதுதான். இரண்டு கால்களுக்கு நடுவே வயலினைத் தலைகீழாகப் பிடிப்பது போல் பிடிக்க வேண்டும். செல்லோவைப் பிடிப்பது மட்டுமல்ல இசைப்பதும் ஆரம்பகட்ட ரசிகர்களுக்குச் சிக்கலானதுதான். கிட்டத்தட்ட நம் முகமிருக்கும் உயரத்துக்கு எந்தவித பிடிமானமும் இல்லாமல் இடது கை அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும். தந்தியை இசைக்கத் தொடங்கினால் முழு கையை அங்குமிங்கும் ஓடிப் பிடிப்பது போல் தோற்றமளிக்கும். ஒரு ஸ்டைலான வாத்தியக்கருவியைப் போல் பார்த்தவுடன் நம்மை ஈர்க்காதது என்னவோ உண்மைதான்!

01. பாப்லோ கசல்ஸ் – இசையாளுமை

யார் மறந்தாலும் மறைத்தாலும் கலைப் படைப்புகள் தகுதியுடையவர்கள் கையில் என்றாவது ஒரு நாள் கிடைக்கும் என்பது உண்மைதான் போலும். நாதமுனிகள் நாலாயிரப்பிரபந்தத்தைத் தொகுத்தது போல், இச்சிறுவன் தன் கையில் கிடைத்த இக்குறிப்புகளை ஒருங்கிணைக்கத் துவங்கினான். பதிமூன்று வயதில் இக்குறிப்புகளை கொண்டு தன் பயிற்சியைத் தொடங்கினான். அடுத்த பன்னிரண்டு வருடங்களுக்கு வேறெந்த எண்ணமும் குறிக்கிடாமல் செல்லோ பகுதிகளை மனப்பாடமாக இசைக்கக் கற்றுக்கொண்டான்.

இந்திய இசையில் முதல் சிம்பொனி?

சிறுகதை ஆசிரியன் நாவல் எழுத முயற்சிக்கும்போது சந்திக்கும் தடைகளுடன் இதை ஒப்பிடலாம். மற்ற இசை வடிவங்களை விட சிம்பொனிக்கு விரிவான மற்றும் ஆழமான படைப்புத் திறமை தேவை. இசைக்கோவைகள் எழுதுவதால் மட்டும் சிம்பொனி படைத்துவிட முடியாது. பல கருவிகளைப் பற்றிய அறிவு, அவற்றில் உண்டாகும் ஒலி அமைப்புகள், வாத்தியக்கருவிகள் ஒன்றாக ஒலிக்கும்போது உண்டாகும் ஒத்திசைவு, அரங்கின் ஒலிக்கட்டுப்பாடு (Hall acoustics) என பல்துறை பற்றிய விரிவான அறிவு அவசியமாகிறது. இது தொழில்நுட்பம் சார்ந்த சவால்.

அரபு இலக்கியம் – அரசியலும், அகவெளியும்

கனவும், நடைமுறை வாழ்வில் இருக்கும் கட்டுக்கோப்பான சமூக அமைப்பின் தடைகளையும் பிரித்துப் பார்க்க இயலாத புனைவுகளே அரபு இலக்கியத்தின் பிரதான கருவாக வெளிவருகின்றன. சொல்லப்படும் கதைகளும் தனியொரு மனிதனின் போராட்டங்களை மையமாக கொண்டுள்ளன. பெண்களுக்கான அதீதக் கட்டுப்பாடுகள், சமூகத்தில் உலவும் சர்வாதிகார ஆண்கள்/ஆட்சியாளர்கள், மதத்தின் பெயரால் அடையாளங்கள் உருவாக்கி தனிப்பட்ட மனிதனிடம் திணிக்கும் மதவாதிகள் சர்வசாதாரணமாக வலம் வருகின்றனர். மேலும் சமூக ஏற்றத்தாழ்வு, மதப்பற்று, பெண்களின் ஊமைக்காயங்கள் ஆழமான விவரணைகளால் வெளிப்படுகின்றன.

டேவிட் அட்டன்பரோ – இயற்கையின் குரல்

பறவைகள் தொடர்ந்து மலைகளைக் கடப்பதற்குத் தடையாக உயரமான மலைகளின் குறைந்த காற்றழுத்தம் இருக்கும். மேலும், பறவைகள் புலம்பெயரும் பருவத்தில், அவற்றை வேட்டையாட வல்லூறுகள் காத்திருக்கும். குறிப்பாக நடுவானத்தில் சிறு நாரைகளை மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வல்லூறு துரத்தி பிடிக்கும் காட்சி மிக அற்புதமாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. நாரைகளின் கனத்தை தாங்க முடியாமல், வல்லூறுகள் அவற்றை வாயில் கவ்வியபடி நிலத்தை நோக்கி விழுகின்றன.

’How to name it’ – இருபதாண்டுகளாகத் தொடரும் மெளனப்புரட்சி

அசோகமித்திரனின் ‘காலக்கண்ணாடி’ கட்டுரைத் தொகுப்பில் இருக்கும் ஒரு கட்டுரை ஓரளவு இந்நிகழ்வை நமக்காகப் பாதுகாத்திருக்கிறது. அழைப்பு விடுத்திருந்த கர்நாடக இசைக் கலைஞர்கள் யாருமே அந்த வெளியீட்டுக்கு வரவில்லை என மேடையில் வருத்தத்துடன் இளையராஜா தெரிவித்ததாக இந்தக் கட்டுரையில் உள்ளது. இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்துப் பாடல்களும் கர்நாடக சங்கீத ராகங்களை அடிப்படையாக கொண்டவை என்றாலும், கர்நாடக இசைக் கலைஞர்கள் இதைக் கண்டுகொள்ளவேயில்லை என்பதையும் இளையராஜா பின்னர் கூறியுள்ளார்.

நவீன ஓவியங்களில் பழைய குறியீடுகள்

நவீன ஓவியங்கள் கூறும் விஷயத்தைப் புரிந்து கொள்வதே தனிக்கலை. ஓவியத்தின் வரலாறு நாம் பேசும் மொழியைவிட பழமையானது. கணக்கில்லா மாற்றங்களை தன்னுள் அடக்கிய ஆழமான ஆற்றின் குறியீடாக இதைப் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் நவீன ஓவியங்களை அனுபவிக்க நம் அழகியல் நோக்கில் பல மாற்றங்களைக் கொண்டுவருவது அவசியம்.ஒரு ஓவியத்தின் வண்ணம், வடிவம், அலங்காரம் என நமக்குத் தெரிந்த பலவகையான விவரங்களை நம்மால் ரசிக்க முடியும்.

ஆகஸ்ட் மாதப் பேய்கள்

அந்த மாளிகைக்கு ஒரு வயதான பாட்டி சரியான வழியைக் காட்டினாள். மாளிகையில் அன்று இரவைக் கழிக்கும் எண்ணமுண்டா என அந்தப் பாட்டி கேட்டாள். அங்கே மதிய உணவுக்கு மட்டும் செல்வதே எங்கள் நோக்கமெனக் கூறி பாட்டிக்கு விடைகொடுத்தோம். `அப்படியென்றால் சரி. ஏனென்றால் அது ஒரு பேய் வீடு` என பயங்காட்டினாள் பாட்டி.

எல்லை மீறும் கம்பிகள் – ராகசாகா

அறிவியலிலும் சரி, கலை வடிவங்களிலும் சரி திறந்த மனநிலையே பல புதிய சாத்தியங்களுக்கு இட்டுச் செல்லும். இந்தத் தொகுப்பைக் கேட்கும் அனைவரையும், சங்கம இசை வடிவம் மற்றும் ஒலிகள், அடுத்த கட்ட ரசிகனாக மாற்றும் என்பதில் சந்தேகமேயில்லை. ராகசாகா கர்நாடக சங்கீதத்தை மட்டுமல்லாது ரசிகனின் ரசனையையும் மேம்படுத்தி இசைத் தேடல்களுக்குத் திறவுகோலாக இருக்கும் என நம்பலாம்

ஜான் சிபேலியஸ் – இயற்கையின் ஊடாக இசை நிகழ்வுகள் – பகுதி 2

‘நான் அன்று பார்த்த பறவைகள் என் நினைப்பில் தங்கிவிட்டன. என் வாழ்வின் ஜீவாதாரமே அவர்கள் தான். இந்த உலகத்தில் இசை, கலை, இலக்கியம் போன்ற எதுவுமே எனக்கு முக்கியமில்லை. இந்த பறவைகள் காண்பித்த காட்சி, அதன் சத்தம் மட்டுமே போதும்’

ஜான் சிபேலியஸ் – இயற்கையின் ஊடாக இசை நிகழ்வுகள் – பகுதி 1

1914 ஆம் ஆண்டு சிபேலியஸ் தன் இரண்டாம் ஒத்திசைவை அமெரிக்காவின் மேடைகளின் ஒலிக்கவிட்டார். தனக்கு முன்னாலேயே தன் புகழ் அமெரிக்க மண்ணை மிதித்திருந்ததைக் கண்டு சந்தோஷம் அடைந்தார். ஆனால் அடுத்த பதினைந்து ஆண்டுகளில் மக்களும், இசை விமர்சனங்களும் தன்னை மறந்துவிடுமென அவர் நினைத்து பார்த்திருக்கமாட்டார்.