வைரத் தீவு: ஆல்கட்ராஸ்

“ஆல்கட்ராஸ், வெள்ளை மனிதன் இட்ட பெயர். நம்முடைய மக்களுக்கும், அவர்களின் தொன்மங்களிலும் அதை ஆலிஸ்டி டி-டானின்-மிஜி [வானவில் பாறை] வைரத் தீவு என்றே அறிந்துள்ளோம். நம் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் அருமருந்தை அத்தீவினில் போய் தேடுமாறு இரட்டை எலி சகோதரர்களுக்கு பழங்காலத்தில் சொல்லப்பட்டது என நமது கதைகள் கூறுகின்றன. இட்-ஆ-ஜூமா [பிட் நதி]யின் இறுதி வரை சென்று அவர்கள் தேட வேண்டியிருந்தது. அதைக் கண்டடைந்து, எடுத்து வந்தார்கள். அந்த ‘வைரம்’ எல்லா இடங்களில் வாழும் நம் மக்கள் அனைவருக்கும் நன்மை அளிக்கும் என சொல்லப்பட்டது. உப்பு நீர் நிலையின் அருகில் உள்ள தீவில் ஒரு “வைரம்” இருப்பதாக எங்களுக்கு எப்போதும் சொல்லப்பட்டது. ஒரு சிந்தனை அல்லது உண்மையே அந்த “வைரம்” என்றும் கூறப்பட்டது.