சுடோகுயி – பாகம் 2

“சுடோகு விளையாட்டில் வருபவை அனைத்துமே வெறும் வரிகள் அல்ல, கதைகள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்வரை குறுங்கதை எனும் ஏழு வரிகளில் எழுதப்படும் கதை ரோம் மக்களிடையே புழக்கத்தில் இருந்தது. ரோமின் இரண்டாவது இருண்டகாலத்தின்போதும் சிறு குழுக்களுக்குள் பரிமாறிக்கொள்ளப்பட்டு வாசிக்கப்பட்டது. அக்கதைகளுள் சில புலனாய்வுத்துறையின் கணினிகளின் பொருள்கூட்டுகளையும் தாண்டி சங்கேத குறியீடுகள் கொண்டிருந்ததால், புலனாய்வு அதிகாரிகள் தங்களால் புரிந்துகொள்ள முடியாத செய்திகளின் ரகசிய பட்டியலில் நெடுங்காலம் வைத்திருந்தார்கள்.

சுடோகுயி

”வீ வாண்ட் சுடோகுயி!

வாசகங்கள் ஒளிரும் மின்பலகைகளை உயர்த்தி ஆட்டியபடி பலர் உரக்க கத்திக்கொண்டிருந்தார்கள்.

பிரதமரை நோக்கி ஓடிவர முயன்றவர்களை ரோபோக்களின் சைகையை கவனித்து ஸ்டாமினாக்கள் தடுத்து நிறுத்தின.