04. உலகப் புகழ் பெற்ற பிரதேஸ் இசை நிகழ்ச்சி

யுத்தத்துக்குப் பின் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தும் ஸ்பெயினைப் பற்றிக் கவலைப்படவில்லை. இசை நிகழ்ச்சிக்கு தலைமைத் தாங்குமாறு அழைத்த ஐ.நா சபையிடம் தன் கொள்கையைப் பற்றி கசல்ஸ் விளக்கினார். அதையே ஒரு பேட்டியாக டைம்ஸ் பத்திரிக்கைக்குக் கொடுத்து உலக மக்களின் கவனத்தை ஈர்த்தார். தன இன மக்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு ஃபிராங்கோ மன்னிப்பு கேட்கும் அதேநேரத்தில் உடனடியாக மக்களாட்சியை காடலோனியாவில் அமுலாக்க வேண்டும் என்பது அவரது கோரிக்கை.

வரலாற்றின் துணையோடு ஒரு பயணம்

பண்டைய இந்தியாவில் புதியவர்களைச் சந்திக்கும்போது `தாங்கள் எந்த நதியுடன் தொடர்புடையவர்?’ எனக் கேட்கும் வழக்கம் இருந்ததாம். தண்ணீரை வணிகமாக மாற்றியதில் அரசுக்கும், பல நாட்டு தொழிற்சாலைக்கும் இருக்கும் தொடர்பை விளக்குகிறார். பல தகவல்களுக்கு நடுவே தினம் 6,350 லட்ச லிட்டர் கங்கை நீர் தொழிற்சாலைகளுக்கு திருப்பப்படுகிறது எனும் தீற்றல் செய்தி திடுக்கடைய வைக்கிறது.

03. செல்லோ நடனம்

பாக் இயற்றிய ஆறு செல்லோ தொகுப்புகளும் நடன இசை வகையைச் சார்ந்தவை. இசையை மையமாகக் கொண்ட படங்களில் பிரபலமாக இருந்த பால் ரூம் நடனத்துக்கு நெருக்கனமானவை. கசல்ஸ் அறிமுகம் செய்யும் வரை இவை மேடையில் இசைக்கப்படாமல், சில தனிப்பட்ட இசைக்கலைஞர்களின் ஞாபகத்தில் தேங்கி இருந்தது.

02. மீண்டெழுந்த நாட்டுப்புற இசை

செல்லோவை இசைக்கும் முறையும் மிக வித்தியாசமானதுதான். இரண்டு கால்களுக்கு நடுவே வயலினைத் தலைகீழாகப் பிடிப்பது போல் பிடிக்க வேண்டும். செல்லோவைப் பிடிப்பது மட்டுமல்ல இசைப்பதும் ஆரம்பகட்ட ரசிகர்களுக்குச் சிக்கலானதுதான். கிட்டத்தட்ட நம் முகமிருக்கும் உயரத்துக்கு எந்தவித பிடிமானமும் இல்லாமல் இடது கை அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும். தந்தியை இசைக்கத் தொடங்கினால் முழு கையை அங்குமிங்கும் ஓடிப் பிடிப்பது போல் தோற்றமளிக்கும். ஒரு ஸ்டைலான வாத்தியக்கருவியைப் போல் பார்த்தவுடன் நம்மை ஈர்க்காதது என்னவோ உண்மைதான்!

01. பாப்லோ கசல்ஸ் – இசையாளுமை

யார் மறந்தாலும் மறைத்தாலும் கலைப் படைப்புகள் தகுதியுடையவர்கள் கையில் என்றாவது ஒரு நாள் கிடைக்கும் என்பது உண்மைதான் போலும். நாதமுனிகள் நாலாயிரப்பிரபந்தத்தைத் தொகுத்தது போல், இச்சிறுவன் தன் கையில் கிடைத்த இக்குறிப்புகளை ஒருங்கிணைக்கத் துவங்கினான். பதிமூன்று வயதில் இக்குறிப்புகளை கொண்டு தன் பயிற்சியைத் தொடங்கினான். அடுத்த பன்னிரண்டு வருடங்களுக்கு வேறெந்த எண்ணமும் குறிக்கிடாமல் செல்லோ பகுதிகளை மனப்பாடமாக இசைக்கக் கற்றுக்கொண்டான்.

இந்திய இசையில் முதல் சிம்பொனி?

சிறுகதை ஆசிரியன் நாவல் எழுத முயற்சிக்கும்போது சந்திக்கும் தடைகளுடன் இதை ஒப்பிடலாம். மற்ற இசை வடிவங்களை விட சிம்பொனிக்கு விரிவான மற்றும் ஆழமான படைப்புத் திறமை தேவை. இசைக்கோவைகள் எழுதுவதால் மட்டும் சிம்பொனி படைத்துவிட முடியாது. பல கருவிகளைப் பற்றிய அறிவு, அவற்றில் உண்டாகும் ஒலி அமைப்புகள், வாத்தியக்கருவிகள் ஒன்றாக ஒலிக்கும்போது உண்டாகும் ஒத்திசைவு, அரங்கின் ஒலிக்கட்டுப்பாடு (Hall acoustics) என பல்துறை பற்றிய விரிவான அறிவு அவசியமாகிறது. இது தொழில்நுட்பம் சார்ந்த சவால்.

அரபு இலக்கியம் – அரசியலும், அகவெளியும்

கனவும், நடைமுறை வாழ்வில் இருக்கும் கட்டுக்கோப்பான சமூக அமைப்பின் தடைகளையும் பிரித்துப் பார்க்க இயலாத புனைவுகளே அரபு இலக்கியத்தின் பிரதான கருவாக வெளிவருகின்றன. சொல்லப்படும் கதைகளும் தனியொரு மனிதனின் போராட்டங்களை மையமாக கொண்டுள்ளன. பெண்களுக்கான அதீதக் கட்டுப்பாடுகள், சமூகத்தில் உலவும் சர்வாதிகார ஆண்கள்/ஆட்சியாளர்கள், மதத்தின் பெயரால் அடையாளங்கள் உருவாக்கி தனிப்பட்ட மனிதனிடம் திணிக்கும் மதவாதிகள் சர்வசாதாரணமாக வலம் வருகின்றனர். மேலும் சமூக ஏற்றத்தாழ்வு, மதப்பற்று, பெண்களின் ஊமைக்காயங்கள் ஆழமான விவரணைகளால் வெளிப்படுகின்றன.

டேவிட் அட்டன்பரோ – இயற்கையின் குரல்

பறவைகள் தொடர்ந்து மலைகளைக் கடப்பதற்குத் தடையாக உயரமான மலைகளின் குறைந்த காற்றழுத்தம் இருக்கும். மேலும், பறவைகள் புலம்பெயரும் பருவத்தில், அவற்றை வேட்டையாட வல்லூறுகள் காத்திருக்கும். குறிப்பாக நடுவானத்தில் சிறு நாரைகளை மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வல்லூறு துரத்தி பிடிக்கும் காட்சி மிக அற்புதமாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. நாரைகளின் கனத்தை தாங்க முடியாமல், வல்லூறுகள் அவற்றை வாயில் கவ்வியபடி நிலத்தை நோக்கி விழுகின்றன.

’How to name it’ – இருபதாண்டுகளாகத் தொடரும் மெளனப்புரட்சி

அசோகமித்திரனின் ‘காலக்கண்ணாடி’ கட்டுரைத் தொகுப்பில் இருக்கும் ஒரு கட்டுரை ஓரளவு இந்நிகழ்வை நமக்காகப் பாதுகாத்திருக்கிறது. அழைப்பு விடுத்திருந்த கர்நாடக இசைக் கலைஞர்கள் யாருமே அந்த வெளியீட்டுக்கு வரவில்லை என மேடையில் வருத்தத்துடன் இளையராஜா தெரிவித்ததாக இந்தக் கட்டுரையில் உள்ளது. இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்துப் பாடல்களும் கர்நாடக சங்கீத ராகங்களை அடிப்படையாக கொண்டவை என்றாலும், கர்நாடக இசைக் கலைஞர்கள் இதைக் கண்டுகொள்ளவேயில்லை என்பதையும் இளையராஜா பின்னர் கூறியுள்ளார்.

நவீன ஓவியங்களில் பழைய குறியீடுகள்

நவீன ஓவியங்கள் கூறும் விஷயத்தைப் புரிந்து கொள்வதே தனிக்கலை. ஓவியத்தின் வரலாறு நாம் பேசும் மொழியைவிட பழமையானது. கணக்கில்லா மாற்றங்களை தன்னுள் அடக்கிய ஆழமான ஆற்றின் குறியீடாக இதைப் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் நவீன ஓவியங்களை அனுபவிக்க நம் அழகியல் நோக்கில் பல மாற்றங்களைக் கொண்டுவருவது அவசியம்.ஒரு ஓவியத்தின் வண்ணம், வடிவம், அலங்காரம் என நமக்குத் தெரிந்த பலவகையான விவரங்களை நம்மால் ரசிக்க முடியும்.

ஆகஸ்ட் மாதப் பேய்கள்

அந்த மாளிகைக்கு ஒரு வயதான பாட்டி சரியான வழியைக் காட்டினாள். மாளிகையில் அன்று இரவைக் கழிக்கும் எண்ணமுண்டா என அந்தப் பாட்டி கேட்டாள். அங்கே மதிய உணவுக்கு மட்டும் செல்வதே எங்கள் நோக்கமெனக் கூறி பாட்டிக்கு விடைகொடுத்தோம். `அப்படியென்றால் சரி. ஏனென்றால் அது ஒரு பேய் வீடு` என பயங்காட்டினாள் பாட்டி.

எல்லை மீறும் கம்பிகள் – ராகசாகா

அறிவியலிலும் சரி, கலை வடிவங்களிலும் சரி திறந்த மனநிலையே பல புதிய சாத்தியங்களுக்கு இட்டுச் செல்லும். இந்தத் தொகுப்பைக் கேட்கும் அனைவரையும், சங்கம இசை வடிவம் மற்றும் ஒலிகள், அடுத்த கட்ட ரசிகனாக மாற்றும் என்பதில் சந்தேகமேயில்லை. ராகசாகா கர்நாடக சங்கீதத்தை மட்டுமல்லாது ரசிகனின் ரசனையையும் மேம்படுத்தி இசைத் தேடல்களுக்குத் திறவுகோலாக இருக்கும் என நம்பலாம்

ஜான் சிபேலியஸ் – இயற்கையின் ஊடாக இசை நிகழ்வுகள் – பகுதி 2

‘நான் அன்று பார்த்த பறவைகள் என் நினைப்பில் தங்கிவிட்டன. என் வாழ்வின் ஜீவாதாரமே அவர்கள் தான். இந்த உலகத்தில் இசை, கலை, இலக்கியம் போன்ற எதுவுமே எனக்கு முக்கியமில்லை. இந்த பறவைகள் காண்பித்த காட்சி, அதன் சத்தம் மட்டுமே போதும்’

ஜான் சிபேலியஸ் – இயற்கையின் ஊடாக இசை நிகழ்வுகள் – பகுதி 1

1914 ஆம் ஆண்டு சிபேலியஸ் தன் இரண்டாம் ஒத்திசைவை அமெரிக்காவின் மேடைகளின் ஒலிக்கவிட்டார். தனக்கு முன்னாலேயே தன் புகழ் அமெரிக்க மண்ணை மிதித்திருந்ததைக் கண்டு சந்தோஷம் அடைந்தார். ஆனால் அடுத்த பதினைந்து ஆண்டுகளில் மக்களும், இசை விமர்சனங்களும் தன்னை மறந்துவிடுமென அவர் நினைத்து பார்த்திருக்கமாட்டார்.