கோடைக் கவிதைகள்

மோனத் திரையினை
நெய்கின்றன பறவைக் கீச்சுகள்.
மெல்ல விழும் சருகுகள்,
சலசலக்கும் நீரோடை,
மறைவில் தோன்றும் கீச்சொலிகள்,
மினுமினுக்கும் ஒளிக்கீற்றுகள், –
அமைதியின் கணம் ஒன்று
நிகழ்கிறது.
மனம் இருக்கும் இடத்தில்,
நேரம் காத்து நிற்கிறது.
எப்போதும் பின்தொடரும்
வனதேவதையைப் போல.
மனம் நிற்கும் இடத்திலே,
நேரம் காத்து நிற்கிறது.
செல்லும் வழியெங்கும்
இக்கணமாய்.


இக்கணம்,
விழுகிறான் சூரியன்.
பெரிய சிவப்பு உருண்டை.
பகல் கனிந்த இனிப்புடன்,
மென்காற்றின் இதத்துடன்.
மெதுவாக, மிக மிக மெதுவாக
புழுதி கிளம்பும் நகருக்குள்
அலை நுரைக்கும் கடலுக்குள்
பார்ப்பவரின் கண்களிலிருந்து
பார்க்காதவரின் சிந்தைக்குள்,
இக்கணம் மறைகிறான்.
இரவு, – அது
வேறொரு உலகம்.

அடுத்தவை


Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026

Subscribe to get the latest posts sent to your email.

3 Replies to “கோடைக் கவிதைகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.