- ஜப்பானியப் பழங்குறுநூறு
- துயரிலும் குன்றா அன்பு
- உனக்காக உறைபனியில்
- நீ காத்திருக்கப் பொறுக்கிலேன்
- கடவுளும் காணா அதிசயம்
- கனவிலேனும் வாராயோ?
- எத்தனை காலம்தான் தனித்திருப்பேனோ?
- உயிரையும் தருவேன் உனைக்காண
- நீ வருவாயென!
- மலைவளி வீழ்த்து தருக்கள்!
- துயர் கூட்டும் நிலவு
- செவ்விழையினும் உயர்ந்த செவ்விலை
- ஊற்றுநீர் அன்ன தூய இதயம்
- குளிரில் தனிமை கொடிது
- வெண்பனியா வெண்மலரா?
- பிரிவினும் உளதோ பிரிதொன்று?
- நிலவு ஒரு பனியாகி
- மலையாற்றின் இலையணை
- சக்குராவின் சலனம்
- நீண்ட வாழ்வே சாபமோ?
- மனித மனமும் மலர் மணமும்
- கோடைநிலா எங்கே?
- புல்நுனியில் பனிமுத்து
- கொடிவழிச் செய்தி
- இறை நின்று கொல்லுமோ?
- காணும் பேறைத் தாரீரோ?
- சொல்லாத காதல் எல்லாம்
- காதல் மறைத்தாலும் மறையாதது
- காற்றினும் கடியது அலர்
- மறவேன் பிரியேன் என்றவளே!
- காதல்வலி விதைக்கும் வெறுப்பு
- தேடலும் மறத்தலும்
- ஜப்பானிய பழங்குறுநூறு 47-50
- வலிவிடு தூது
- வாள்போல் வைகறை
- நெஞ்சம் மறப்பதில்லை
- நிலவினும் நெடிது!
- இடம் மாறினும் மணம் மாறுமா?
- காவலும் தாண்டுவது காதல்
- பனிவிலகலில் அக்கரை வெண்மை
- எனக்கெனவே மலர்ந்தாயோ?
- விழியிலிருந்து நினைவுக்கு
- உள்ளும் புறத்தும் தனிமையே!
- காதல்மொழிகள் கடலலை போலே!
- கேட்டதும் கிடைத்ததும்
- துள்ளிவரும் வெள்ளலையே!
- இடம்பெயரும் புள்ளினங்காள்!
- மைக்குழற் செறிவன்ன காதல்
- துயரறுத்தலே துயரமோ?
- உள்ளத்தில் உள்ளேனா?
- தூவானமும் வெண்வானமும்
- ரகசியமானது காதல்
- உடைகளும் சுமையடி தனிமையிலே!
- காலமென்ற தேரே, ஓடிடாமல் நில்லு!
- துன்பம் போக்குவதே தூயப்பணி
- எரிதழல் உள்ளம்
- துயர்சூழ் உலகில் தனிமை

மூலப்பாடம்:
கான்ஜி எழுத்துருக்களில்
やすらはで
寝なましものを
さ夜更けて
かたぶくまでの
月を見しかな
கனா எழுத்துருக்களில்
やすらはで
ねなましものを
さよふけて
かたぶくまでの
つきをみしかな
ஆசிரியர் குறிப்பு:
பெயர்: சேடிப்பெண் எமோன்
காலம்: கி.பி. 960-1041.
பேரரசர் இச்சிஜோவின் மனைவி ஷோஷியின் அந்தரங்க உதவியாளராக இருந்தார். இத்தொடரின் 56, 57வது பாடல்களை இயற்றிய புலவர்கள் முறையே இசூமி ஷிக்கிபு, முராசாகி ஷிக்கிபு ஆகியோரின் சமகாலத்தவர். இவரைப்பற்றி முராசாகி தனது நாட்குறிப்பு இலக்கியத்தில் குறிப்பிட்டிருக்கிறார். எய்காவின் கதைகள் என்ற புதினத்தின் ஆசிரியராகவோ அல்லது இணையாசிரியராகவோ இருக்கலாம் எனக் கருதப்படுகிறார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 93 பாடல்களும் ஒரு தனிப்பாடல் திரட்டும் இடம்பெற்றிருக்கின்றன. காலத்தால் அழியாத புலவர்களின் பிற்காலப் பட்டியலிலும் பெண்பாற்புலவர்கள் பட்டியலிலும் இடம்பெற்றவர்.
பாடுபொருள்: காதலருக்காகக் காத்திருந்த ஏமாற்றம்.
பாடலின் பொருள்: மாலையில் கீழ்த்திசையில் நிலவு உதித்தபோது தொடங்கிய என் காத்திருப்பு காலையில் மேற்றிசையில் மலைக்குப் பின்னால் மறைந்தபின்னும் தீராது என்றறிந்திருந்தால் அப்போதே உறங்கியிருப்பேன்.
இத்தொடரின் 21, 53ம் பாடல்களைப் போல இதுவும் இரவு முழுதும் காதலர் வருவாரெனக் காத்திருந்து ஏமாந்து போனதை உரைக்கும் எளிய பாடல்தான்.
ஜப்பானிய இடைக்கால வரலாற்றில் அரசகுடும்பங்களில் பலதாரமணமே நிலவியது என்று முந்தைய பாடல்களில் பார்த்தோம். மனைவியின் வீட்டுக்குக் கணவன் இரவில் மட்டும் வந்து செல்வது வழக்கமாக இருந்த காலத்தில் ஒவ்வொரு இரவும் கணவன் தம் வீட்டுக்கு வருவாரா அல்லது வேறொரு மனைவியின் வீட்டுக்குச் சென்றுவிடுவாரா எனப் பெண்கள் தவித்திருப்பார்கள். கணவன் வரும்போது கொண்டுவரும் பரிசுப்பொருட்கள் அப்பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருப்பவை. வளமான வாழ்வுக்குக் கணவனின் வருகை மிக அவசியம்.
வெண்பா:
மாலையில் வந்ததும் உன்முகம் தோன்றிடக்
காலையில் தேய்ந்துமே காணாது – மாலையும்
வாடிடக் காத்திருந்தே தூங்கா இரவோ
நிலவை விடவும் நெடிது
தனிவழியில் கவிப்பயணம்
மூலப்பாடம்:
கான்ஜி எழுத்துருக்களில்
大江山
いく野の道の
遠ければ
まだふみも見ず
天の橋立
கனா எழுத்துருக்களில்
おほえやま
いくののみちの
とほければ
まだふみもみず
あまのはしだて
ஆசிரியர் குறிப்பு:
பெயர்: புலவர் கொஷிக்கிபு
காலம்: கி.பி. 997-1025.
இத்தொடரின் 56வது பாடலை இயற்றிய புலவர் இசூமி ஷிக்கிபுவின் மகள் இவர். இவரைப் பற்றிய சில குறிப்புகளை 56வது பாடலிலேயே பார்த்திருக்கிறோம். பேரரசர் இச்சிஜோவின் அரண்மனையில் 1009 முதல் தாயாருடன் சேர்ந்து பணிபுரிகிறார். சில ஆண்டுகளிலேயே இவரது தாயார் யசுமாசா என்பவரை மணந்துகொண்டு தாங்கோ மாகாணத்துக்குக் குடிபெயர்ந்து விடுகிறார். பின்னர் கிமினாரி என்பவரை மணந்துகொண்டு ஒரு பெண்குழந்தைக்கும் தாயாகிறார். ஏதோ காரணத்தால் 28 வயதிலேயே இறந்துவிடுகிறார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 4 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் நான்கே பாடல்களில் காலத்தால் அழியாத 36 பெண்பாற்கவிஞர்கள் வரிசையில் இடம்பிடித்துவிடுகிறார்.
பாடுபொருள்: தனிமைப் பயணம்.
பாடலின் பொருள்: ஓயே மலைக்குச் செல்லும் இக்குனோ பாதை மிக நீண்டு இருப்பதால் இன்னும் அமானோஹஷியைக்கூடக் காண இயலவில்லை.
பயணவழிப் பாடலான இதன் பின்புலத்தில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது. மேம்போக்காகப் பாடலைப் படித்தால் பயணத்தைப் பற்றியதாகத் தோன்றும். ஆனால் பாடலின் பின்புலத்தையும் விளக்கும் விதமாக சிலேடையாக அமைந்துள்ளது.
இப்புலவருக்கு அவரது தாயார் பாடல்கள் எழுதித் தருகிறார் என்ற கருத்து நிலவிவந்தது. ஒருமுறை அரசவையில் கவிதைப்போட்டி நடைபெற்றது. அப்போது ஒரு போட்டிக் கவிஞர் இவரை மட்டம் தட்டும் விதமாகத் தாங்கோ மாகாணத்திலிருக்கும் உங்கள் தாயாரிடமிருந்து கவிதை வந்துவிட்டதா எனக் கேட்டிருக்கிறார். அவருக்குப் பதிலளிக்கும் விதமாகத் தலைநகர் கியோத்தோவிலிருந்து தாங்கோ மாகாணத்துக்குச் செல்லும் வழியிலுள்ள மூன்று இடங்களைக் குறிப்பிட்டு இப்பாடலை இயற்றியிருக்கிறார். இதில் தாயாரிடமிருந்து கடிதம் எதுவும் வரவில்லை என்ற பொருளும் மறைந்து நிற்கிறது.
இப்பாடலின் 4வது அடியிலிருக்கும் ஃபுமி என்ற சொல்லுக்கு அடியெடுத்து வைத்தல் என்றொரு பொருளும் கடிதம் கிடைத்தல் என்றொரு பொருளும் உள்ளதால் அதை வைத்துச் சொல்விளையாட்டு விளையாடியிருக்கிறார். நான் நீண்டதூரம் தனியாக நடந்து வந்திருக்கிறேன். ஆனால் இன்னும் அமானோஹஷியில் அடியெடுத்து வைக்கவில்லை. இன்னொரு பொருளானது நான் தனியாகத்தான் நீண்ட நாட்களாகப் பாடல் இயற்றிக்கொண்டிருக்கிறேன். தாயிடமிருந்து கடிதம் எதுவும் வருவதில்லை என்பதாகும்.
வெண்பா:
மெய்ப்பொருள் காண்டல் அறிவுடைமை ஆதலின்
பொய்செய்தல் ஆன்றோர் பழித்திடச் – செய்குன்றம்
தாண்டியும் செய்யுட்சொல் கோத்து நடப்பேன்
தனியாக நீண்ட தொலைவு
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
