அவள் அவரிடம் “நீர் இலக்கியம், இலக்கணம் அனைத்திலும் மிகத் தேர்ச்சி பெற்றவர். ஆனால் என்னிடம் வைத்துள்ள பிரேமையில் ஆயிரத்திலொரு பங்கு அந்தக் கிருஷ்ணனிடம் வைத்தால் கூடப் போதுமே! உம் வாழ்க்கையின் பொருளை உணர்ந்து பலனை அடைய,’ என்கிறாள்
Tag: ஸ்ரீ அரவிந்தர்
7. விருந்தாளி
தாங்கள் இறந்துபோகும் மனிதர்களாகிய எங்களுக்கு அளித்துள்ள பரிசுகள் எங்கள் எண்ணற்ற தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. இருப்பினும் நாங்கள் குறைவின்றி உங்களிடம் திரும்பத் திரும்ப யாசித்து வருகிறோம்.
6. மறைக்கப்பட்ட திட்டம்
இந்த அணுவின் அமைப்பு நடராஜப் பெருமானின் நடனத்தோடு ஒப்பிடப்படுகிறது. அவனுடைய ஒழுங்கான நடன அமைப்பின் காரணமாகவே இந்த அண்டம் இயங்குகிறது எனலாம். ஆடும் அவன் கையில் தீ, காலில் மண், தலையில் நீர், கையில் உள்ள உடுக்கையில் காற்று, ஆடுமிடம் ஆகாயம் எனப் பஞ்ச பூதங்களும் அவனாகவே நின்று, அனைத்தையும் படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் தான் அனைத்துள்ளும் நின்று ஆடுகிறான். இதுவே அணுத்தாண்டவம்.
5. இரவுநேர யாத்திரிகன்
இறப்பைத் தன் காதலியாகக் கண்டு, அவளுடனான சந்திப்பிற்குத் தயாராவதனை வியக்கத்தக்க நுட்பங்களுடன் எழுத்தில் வடித்துள்ளார். இரவு என அவர் கூறுவது வாழ்க்கையின் இறுதியில் நாம் செல்லும் இடம். அதனை எவ்வாறு தைரியமாக எதிர்கொள்வது என அழகாக உண்மையான விளக்கங்களை அளிப்பது இக்கவிதை.
4. தெய்வீகப் பணியாளன்
பல திக்குகளிலிருந்தும் எதிர்பாராமல் வரும் சவால்களை சந்தித்து வாழ்வதற்கு மனிதப் பிரயத்தனத்தால் இயலாது. எந்த மானுட சக்தியுமே இதனை எதிர்கொள்ளும் வலுவற்றது. ஆத்மாவின் நிரந்தரமான மகிழ்ச்சி தெய்வத்தின் புன்னகை ஒன்றினாலேயே கிடைப்பது. அது அனைவரையும் இன்பம் கொள்ளச்செய்தும் உண்மையின் வடிவாகவும் திகழ்கிறது.
3. சரணடைதல்
எது மனிதனை அசக்தனாக்கி, எதுவோ ஒன்றில் சரணடைய வைக்கிறது? இயலாமையா? நம்பிக்கையா? இல்லை வேறு ஏதோவா? ஒன்று மட்டும் நன்கு விளங்குகிறது. நன்மையிலும் தீமையிலும் நாம் நக்குத் துணையாக வேறு ஒன்றில் இணைந்திருக்க விரும்புகிறோம்; அது நம்மை மீறிய ஒரு சக்தியாக இருக்க வேண்டும்; நம்மை அரவணைக்க வேண்டும்; நமக்குத் துணையாக, பலமாக இருக்க வேண்டும்.
ஒளி! பேரொளி!!
மாணவப் பருவத்தில் அருமையான ஒரு கருத்தை, அது டார்வினின் கோட்பாடாகவோ, ஒரு செய்யுளை பதம் பிரித்துப் பொருள் காண முடிந்ததாகவோ இருந்தாலும், அந்தக் கருத்து அறிவிற்குப் பிடிபட்டதும் ஒரு வெப்பமான அலை உடலில் எழுந்து தலையில் பாயும், தலையில் ஒரு ஒளிவட்டம் சில நொடிகளுக்கு இருக்கும்; பின் நாளெல்லாம் உள்ளம் களிப்பில் துள்ளும். இதுதான் உடலில் ஒளி செய்யும் விந்தை; மாயம். எல்லா அறிதலும், எல்லாப் புரிதலும் இதற்குட்பட்டதுதான். ஒளிமயமானதுதான்.
மாறாத பேரானந்தம்
புரூரவஸ் எனில் நீர் கொண்ட மேகம், அதிக முழக்கம் செய்வது. நீர் ஆவியாகி மேகங்களாகும்போது மழையின் அறிகுறியாக இடிமுழக்கம் எழும். ஊர்வசி எனும் பெயர் மின்சாரம் பாய்வது போன்ற மின்னல் எனவும் பொருள்படும். ரிக்வேதத்தில் கூறப்பட்டுள்ள பாடலின்படி ஊர்வசி என்பது இடையிடையே தோன்றிமறையும் மின்னல் எனப் பொருள் கொள்ளப்படும்.
புரூரவஸ் செய்த பாவம் – அழகு, காதல்
புரூரவஸும் அதுபோன்றே ஊர்வசியைத் திரும்ப அடைவதையே தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு காடு, மலை, நாடு, நகரம், நதி எனச் சுற்றியலைகிறான். அவளுடன் கழித்த இன்ப வாழ்வின் எண்ணங்கள் திரும்பத் திரும்ப வந்து அவனை அலைக்கழிக்கின்றன. ஒரு உயர்ந்த பதவியை அடைவதும், கல்வியிலோ, கலையிலோ சாதனைகள் செய்வதும், தான் விரும்பிய பெண்ணுடன் இன்பமாக வாழ்வதும் சமமாகவே நோக்கப்பட வேண்டும். இதைப் பெரும்பாலானவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
அதிர்ஷ்டம் வாய்ந்த சுவர்க்கத்தின் துரதிர்ஷ்டம்!
இடையில் இங்கு ‘அதிர்ஷ்டம் வாய்ந்த சுவர்க்கத்தின் துரதிர்ஷ்டம்!’ எனும் முரண்தொடையான (oxymoronic) ஒரு பிரயோகத்தை அரவிந்தர் அறிமுகப்படுத்துகிறார். தெய்வங்களுக்குமே அழகின் உச்சமான ஒரு பொருள் – இங்கு ஊர்வசி – அவர்களது பேரதிர்ஷ்டமாகக் கொள்ளப்படுகிறது! அதனால் அவளுடைய பிரிவை, இனிமேலும் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவள் சுவர்க்கத்தில் இல்லாத நாட்கள் துரதிர்ஷ்டம் வாய்ந்தவை என் உணர்கின்றனர் சுவர்க்கவாசிகள்!
‘ஊர்வசியின் களிப்பு- புரூரவஸின் சலிப்பு’
இரு காதலர்களின் பிரிவு அவர்கள் உள்ளங்களிலும் வாழ்விலும் ஏற்படுத்தும் வெறுமை, தனிமை, வாழ்க்கையின் மீதான வெறுப்பு, சலிப்பு, பற்றின்மை என அனைத்தும் இத்தனை நுட்பமாக, பொறுமையாக வேறெந்தக் கவிஞனாலும் விவரிக்கப்பட்டுள்ளதா என நான் அறியேன். முன்பே கூறியபடி, கம்பன் அழகாக சீதை, இராமன் இவர்களின் தாபத்தையும், சேக்கிழார் பெருமான்
‘ஊர்வசி – விக்ரமோர்வசீயம்’
காளிதாசனின் விக்ரமோர்வசீயம் எனும் படைப்பு புரூரவஸ்- ஊர்வசி ஆகியோரது காதல்கதையைக் கூறுவதாக அமைந்தது. அதற்கு ஏன் காளிதாசன் விக்ரம- ஊர்வசீயம் எனப் பெயரிட்டான் என்பதற்குக் காரணங்கள் கூறப்படுகின்றன. அது இங்கே இப்போது நமக்குத் தேவையில்லை. விக்ரமன் என்பது புரூரவஸின் மற்றொரு பெயர் எனும் கூற்றை மட்டும் நினைவில் கொள்ளலாம். “‘ஊர்வசி – விக்ரமோர்வசீயம்’”
ஊர்வசி – அரவிந்தரின் பார்வையில்
தேவலோகத்தில் நடைபெற்ற ஒரு நாட்டிய நிகழ்ச்சியில் ஊர்வசி ‘லக்ஷ்மி’யின் வேடத்தை ஏற்று நடனமாடுகிறாள். அவளுடைய எண்ணமெல்லாம் புரூரவஸைப் பற்றியே இருந்தது. அதனால் ‘புருஷோத்தமா’ (விஷ்ணு) எனக் கூறுவதற்குப் பதிலாக புரூரவஸ் என அழைக்கிறாள். இதனால் அவளுடைய நாட்டிய குருவான பரதமுனிவர் சினமடைந்து அவளைச் சபிக்கிறார். “நீ யாரை நினைத்துக் கொண்டிருக்கிறாயோ, அவனுடன் வாழக் கடவாய். உனக்கு ஒரு மகன் பிறப்பான். தந்தையும் மகனும் சந்தித்துக் கொள்ளும்போது நீ அவர்களிருவரையும் விட்டு விலகி தேவலோகத்திற்குத் திரும்ப வேண்டும்.”
ஸ்ரீ அரவிந்தரின் நெருப்புப் பறவை – ஒரு பார்வை
பறவை என்பது ஆத்மாவின் அடையாளம் அன்றி வேறொன்றல்ல! பெரும்பான்மையான பொழுதுகளில் இவை மனோ-சக்தியையும் ஆத்ம சக்தியையும் குறிக்கின்றன. இங்கிவை ஸ்ரீ அரவிந்தரின் எழுச்சியடைந்த ஆன்மீக அறிவை வெள்ளிய நீலநிறம் கொண்ட தீயினால் உருவகித்து உலகிற்கு உணர்த்துகின்றன. அது ஒரு மரத்திலமர்ந்துள்ள பறவை போன்றது; சந்திரனிலிருந்து ஒழுகும் சோமரசம் குளிப்பாட்டும் சோமா எனும் செடி; அலைகளுடன் கொந்தளிக்கும் கடல்; அபரிமிதமான பலம்கொண்டவனும், தான் செய்யும் காரியங்களில் வெகு சாமர்த்தியமானவனுமான ஒருவன் தனது வாயில் நெருப்பை ஏந்திக்கொண்டு வேகமாகச் செல்வது போன்றதாம். வேறு உவமைகள் இன்னும் தேவையா? பிரமிக்கிறோம்.
சாவித்ரி- ஓர் இசை
ராகம் சாவித்ரி, ஓர் அதிசயமான அபூர்வ ராகம்…. அதன் மாயமான ராக அலைகள் இழையிழையாக வேகத்துடனும், உறுதியுடனும் பெருகிப் பிரவகிக்கும்போது, நாம் காண்பது சூரிய பகவானால் ஆசிர்வதிக்கப்பட்ட இளம்குழந்தை சாவித்ரியை; அவள் யாகத்தீயினின்று வெளிப்படும்போது, உலகின் அனைத்து நற்குணங்களும் பொருந்திய ஒரு முழுமையான சிறு பெண் வடிவத்தை உணர்ந்து மெய்சிலிர்க்கிறோம். சாவித்ரியின் சுஸ்வரங்கள் உள்ளத்தை நிறைக்கின்றன. குழந்தை குதூகலமாக வளர்கிறாள்.
