மருத்துவத்தில் நிலைத்தவையும், அழிந்தவையும்

நாம் வாழும் இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியம் மற்றும் நோய் சம்பந்தமான ஒரு  குறிப்பைக் கூடப் பார்க்காமல், கேட்காமல்  ஒரு நாளைக் கடக்க முடியாது. தகவல் ஊடகம் சார்ந்து அல்லது தகவல் ஊடகத்தைச் சார்ந்த நமது சுற்றம் மூலம், தொடர்ந்து ஆரோக்கியம் பற்றிய ஒரு நோக்கு நம் மீது திணிக்கப்படுகிறது

ஹோமியோபதி – ஓர் எளிய அறிமுகம்

இன்னொரு முறையான ஹீயுமோரல் (Humoral theory) என்பது உடம்பில் உள்ள நான்கு ஹீயுமர் ஆன ரத்தம், மஞ்சள் பித்தம், கருப்பு பித்தம் மற்றும் சளி இவற்றின் சமநிலையில் ஏற்படும் குறைவே நோய் என்றும் நம்பப்பட்டது. இதற்குத் தீர்வாக ரத்தத்தை பல்வேறு கசாயங்கள் மூலம் சுத்தப்படுத்துவதும், அதிகப்படியான ரத்தத்தை வெளியேற்றுவதும் சிகிச்சையாக பயன்படுத்தப்பட்டது.

மனித நாகரீகத்தின் நுழைவாயிலில்

அசூர்பனிபால் (Ashurbanipal), பொ யு மு  600 களில் அசிரிய பொற்காலத்தில் வாழ்ந்த பேரரசன். இவருடைய நினிவே நூலகத்தில் இருந்து சுமார் 30000 களிமண் பலகைகள் கண்டெடுக்கப்பட்டன. இவை இவர் காலத்திற்கு முன்பிருந்து சேகரிக்கப்பட்டவை மற்றும் பிரதி எடுக்கப்பட்டவையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

3. மரணமின்மையின் முதற்துளி

நோய்களுக்கு காரணம் கடவுளர், இயற்கை போன்றவற்றிலிருந்து  உடலளவில்  நாடிகளில் ஏற்படும் சமநிலைக்குலைவு நோய்களை உருவாக்கக்கூடும் என்ற தத்துவம் எகிப்திய மருத்துவத்தில் தோன்றிவிட்டது. மேலும் நோய் வருவதற்கு முன் தற்காத்து கொள்ள வேண்டிய வழிமுறைகள், மருத்துவ அறிவை தொகுத்துக்கொள்ள பாப்பிரஸ் சுவடிகள் போன்ற வழிமுறைகளும் உருவாகிவிட்டன.

4. புனிதத்திலிருந்து அறிவை நோக்கி

அஸ்கிளெப்பியஸ், ஆறுதல் (soothing) அளிக்கும் கடவுளான Epione ஐ மணந்து குழந்தைகளைப் பெற்றான்.  சுத்தத்தின் கடவுளான ஹைஜியா (Hygeia), சர்வரோகநிவாரணி கடவுளாகிய பணசியா (Panacea),  நலத்திற்கு அசோ (Aceso) நோயிலிருந்து மீள லாசோ (Laso), ஒளி அல்லது ஆரோக்கிய உடல் அழகின் ஈக்ள் (Aegle) ஆகிய மகள்களையும், திறமையான மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை செய்யும் Machaon, Podaleirios மற்றும் நோயில் இருந்து மீண்டும் முழுமைக்கு என்ற பொருளுடைய குள்ளமான டெலஸ்போரஸ் (Telesphoros) என்று மூன்று மகன்களையும் பெற்றனர்.

அறிவு அளித்த விடுதலை

பிளேட்டோ தொடங்கி கிரேக்க ரோமானிய சிந்தனையில் ஆழ்ந்த பாதிப்பை செலுத்திய மற்றொரு சிந்தனையாக “அலையும் கருப்பை” அமைந்தது. கருப்பை என்பது ஒரு விலங்கு மற்றொரு விலங்கின் உள்ளே உள்ளதாக பார்க்கப்பட்டது (Animal inside Animal).‌ ஆணின் உடல் துணை இல்லாமல் தனித்திருக்கும் பெண்ணின் கருப்பை, அதன் இயல்பான நிலையிலிருந்து வெளியேறி உடலின் வேறு இடங்களில் அமைவதால், பெண்களுக்கு மட்டுமேயான நோய்கள் தோன்றுவதாக கருதப்பட்டது. இதன் சிகிச்சை ஒரு இளமையான ஆணுடன் உறவு கொள்வது என முன் வைக்கப்பட்டது.

6. ஞானங்களின் விளைநிலம்

இந்திய தொன்மத்தில்  சூரியக்கடவுளின் மகன்களான அஸ்வினி தேவர்கள் மருத்துவக்கடவுளாக குறிக்கப்படுகின்றனர். ஆயுர்வேதம் விஷ்ணுவிடமிருந்து பிரம்மனுக்கு, பிரம்மனிடமிருந்து தட்ச பிரஜாபதிக்கும், அவரிடமிருந்து அஸ்வினி தேவர்களுக்கும் வழங்கபட்டதாக கூறப்படுகிறது.  அஸ்வினி தேவர்களிடமிருந்து இந்திரனுக்கு கற்பிக்கப்படுகிறது.

7. மூன்றே பொருளாய் முடிந்தது

சித்த மருத்துவம் என்று குறிப்பாகவோ, இல்லை காலத்தை தெளிவாக குறிக்கக்கூடிய அகழ்வாராய்ச்சி முடிவுகளோ, இலக்கிய குறிப்புகளோ கிடைப்பதில்லை. மாறாக, சிலப்பதிகாரத்தில் இந்திரவிழவூர் விடுத்த காதையில், “ஆயுர்வேதரும் காலக்கணிதரும் பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும்” என்ற குறிப்பு காணப்படுகிறது. காவிரிபூம்பட்டினத்தில் காலத்தைக் கணிப்பவருக்கும், ஆயுர்வேத மருத்துவர்களுக்கும் தனித்தனி தெருக்கள் இருந்ததாக தெரியவருகிறது.

8. பிரபஞ்ச ஒழுங்கை வழிநடத்தல்

பண்டைய சீனாவில் மஞ்சள் ஆற்றின் நீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சேதங்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. பேரரசர் யாவோ (Yao), ஹுவாங்டி பேரரசின் இளவரசன் குன் (Gun) வசம் அணைகள் கட்டி வெள்ளத்தை தடுக்கும் பொறுப்பை அளிக்கிறார். குன் ஒன்பது ஆண்டுகள் முயன்றும் வழி கண்டுபிடிக்க முடியவில்லை. சொர்க்கத்திலிருந்து, தானே வளரக்கூடிய, சுவாசிக்கும் மண்ணை ஞானத்தின் ஆதாரமாக கருதப்படும் ஒரு ஆமை திருடி வந்து அவரிடம் தந்தது. அதைக்கொண்டு அவர் அணைகளை, தடுப்பு அரண்களை கட்டுகிறார்.

9. ஒருங்கிணைப்பின் வழியே

அஹ்ரிமான் சிலையின் நான்கு சிறகுகள், நான்கு பருவங்களின் சின்னங்களைத் தாங்கியுள்ளன. இடியின் சின்னம் அவரது மார்பில் பொறிக்கப்பட்டுள்ளது. சிலையின் அடிப்பகுதியில் தீயின் தெய்வமான  வல்கனின் (Vulgan) சுத்தியல் மற்றும் இடுக்கியும் – மெர்க்குரி தெய்வத்தின் சேவல் மற்றும் கோல் (கடுசியஸ்) உள்ளன. மெர்க்குரி வணிகம், சொல்லாற்றல், தகவல் தொடர்பு, பயணிகள், எல்லைகள், அதிர்ஷ்டம், தந்திரம் ஆகியவற்றுக்கும், ஆன்மாக்களை பாதாள உலகத்திற்கு வழிகாட்டி அழைத்தும் செல்லும் தெய்வம்

10. மீண்டெழல்

இருண்ட காலத்தில் எழுதப்பட்ட ஜியோவன்னி போக்காசியோயின் டெகாமெரான் கதைகள் மானுடத்தின் உச்ச உணர்வுகளை முன்வைத்தன. அதேசமயம் அன்றிருந்த அதிகாரங்களை பகடி செய்தன. கடவுளுக்கு எதிரானது என்றும் பாவத்தை பரப்புவது என்றும் சவர்னரோலா (Girolamo Savonarola) என்ற மதகுருவால் 1497 ஆம் ஆண்டு பொதுஇடத்தில் எரிக்கப்பட்டது.

11. அறிவின் ஒளி  

பசுவுடன் தொடர்புடைய பால்காரர்களுக்கு பெரியம்மை தொற்று ஏற்படுவதில்லை என்று கவனித்த ஜென்னர் தன் வேலைக்காரர் மகனான ஜேம்ஸ் பிப்ஸ் என்ற 10 வயது சிறுவனுக்கு மாட்டின் அம்மை (cowpox) கொப்புளத்திலிருந்து எடுத்த சீழை உட்செலுத்தினார். பின்னர் அவனுக்கு பெரியம்மை (smallpox) பொருக்குகளை உட்செலுத்தியும் பெரியம்மை நோய் அறிகுறிகள் ஏற்படவில்லை. பின்னர் தன் மகன் உட்பட பலரிடம் சோதனை செய்து நோய்த்தடுப்பூசி முறையை முன்வைத்தார். 

12. என்றென்றும் நிலைத்திருப்பது  

கார்ல் பாப்பர் எது அறிவியல் என்று வரையறை செய்தவுடன் மற்ற மருத்துவ முறைகள் பொய்ப்பித்தலின் வழியே அறிவியலை விட்டு வெளியே சென்றுவிட்டன. பொதுவாக மாற்று மருத்துவம் என்ற சொல்லாடலில் எனக்கு உவப்பு இல்லை. வேண்டுமென்றால் 18 ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஹிப்னிடிசம், ஐசோபதி, ஆண்டிபதி போன்றவற்றை அப்படி கூறலாம். மற்றபடி ஆயுர்வேதம், சித்தா, சீன மருத்துவம் போன்றவை மாற்று அல்ல. நவீன அறிவியல் கொள்கைக்கு பின் அவை வரையறைக்கு உட்படாமல் போனவை.