புதுமைப்பித்தன் எனும் அறிவன்

புதுமைப்பித்தன் இறந்து சரியாக முக்கால் நூற்றாண்டு ஆகிவிட்டது என்ற அடிப்படையில் புதுமைப்பித்தனும் ஒரு ‘வரலாறு’ (அவர் தன்னைப்பற்றி ‘வாழ்ந்துகெட்ட வரலாறு’ என்று சொல்வாராயிருக்கும்) என்று கொள்ளத்தக்கவரே. புதுமைப்பித்தன் குறித்து இலக்கிய விமர்சகன் அல்லது எழுத்தாளன் என்ற அடிப்படையில் அவரை அழகியல் ரீதியாக மதிப்பிடுவதுதான் என் வேலையாக இருக்க முடியும். அவர் எழுதியவற்றில் இன்றும் எஞ்சுவது எது என்பதைப் பார்க்க வேண்டியதே சமகாலத்தவர்களாக நம்முடைய முதன்மையான நோக்கம். ஆனால் இலக்கியம் என்பது சமூகத்துடனும் தொடர்புடைய கலையாக இருக்கிறது. எல்லை கடந்து இலக்கியம் ‘சமூகத்துக்குப் பயன்தர வேண்டும்’ என்றெல்லாம் கூட சொல்லப்பட்டது. ஆனால் இலக்கியம் முதன்மையாக வாசகருக்கு ஒரு அனுபவத்தை வழங்குவதன் வழியாக அவருக்குள் விழுந்திருக்கும் சில முடிச்சுகளை அவிழ்க்கிறது. அவர் போதத்தை இன்னும் சற்று கூர்மைப்படுத்துகிறது.

சி சு செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு – நிறைவுப் பகுதி.

வேடிக்கையாகத் தான் இருக்கிறது. இன்று செல்லப்பா காலமாகி பத்து பதினைந்து வருடங்களுக்குப் பிறகு, அவரைப் பற்றி நினைப்பவர்கள் – நினைப்பவர்கள் இருக்க மாட்டார்களா என்ன? எட்டு கோடி தமிழரில் அவரிடம் பழகிய அவருக்கு பத்திருபது வயது இளையவர்கள், அந்த தலைமுறையில் அவர் பெயரைக் கேள்விப்பட்டவர்கள் சிலராவது இருக்க மாட்டார்களா என்ன? இருப்பார்கள் தான் – அவர்கள் முதலில் அவரை விமர்சகராகத் தான் நினைவு கூறுவார்கள். அவர் சுதந்திரப் போராட்ட உணர்வு கொண்டதும் சிறை சென்றதும் கடைசி வரை காந்தி பக்தராகவே இருந்ததும் தவிர அவர் வாழ நினைத்தது ஒரு எழுத்தாளராக. எழுத்தாளராக வாழ்வது சாத்தியமாகத்தான் அவர் சென்னைக்கு வந்ததும். அவர் பழகியதும் உடன் ஒரே இடத்தில் சேர்ந்து வாழ்ந்ததும் எழுத்தாளர்களோடு தான். சிறு கதைகள் அவர் மனத்தை ஆக்கிரமித்திருந்தன. க.நா.சு. அந்த காலகட்டத்தில் விமர்சனத்தின் தேவையை வலியுறுத்திப் பேசி வந்த காலத்தில் எல்லாம் அவர் பிச்ச மூர்த்தி போல், இன்னும் மற்ற சக எழுத்தாளர்கள் போல் அதை ஏற்க மறுத்தே வந்திருக்கிறார். க.நா.சு. குளவியாகக் கொட்டிக் கொட்டித் தான் செல்லப்பாவும் குளவியானார்.

ஆயிரம் பிறை கண்ட அரிமா! – ஜெயகாந்தன்

“ஞானம் என்றால் என்ன தெரியுமா என்று கேட்டுவிட்டு, சுகமாய் இருப்பதுதான் ஞானம் என்று சொன்னார். சுற்றி இருந்த 20 பேரில் ஒருவர், இது பற்றி யோசித்துவிட்டு, கொஞ்ச நேரம் கழித்து, “ஆமாம் ஜே.கே. நல்லவனா இருப்பதுதான் ஞானம்” என்று சொன்னார். ஜே. கே உடனே “ நல்லவனா இருப்பது அல்ல, சுகமா இருப்பதுதான் ஞானம்” என்று அவரைத் திருத்தினார்.

அசோகமித்திரன் தந்த கதைப் புத்தங்களின் கதை

நான் அசோகமித்திரனை முதலில் சந்தித்தது வரலாற்று ஆசிரியர்களால் அடிக்கடி நினைவு கூறப்படக்கூடிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாக இல்லாவிட்டாலும் என்னுடைய எழுத்து இலக்கிய ஜாதகத்தில் மாற்றம் எற்பட்ட காரணமாயிற்று. தமிழில் நான் எழுதியதை முதலில் அவர்தான் பிரசுரித்தார். என்னை எழுதும்படி ஊக்குவித்தார். ஊக்குவித்துக் கொண்டே இருக்கிறார்.

துயரத்தில் முடிந்த சுந்தரராமசாமியின் காவியம்

சென்றமாத அம்ருதாவில் லட்சுமி மணிவண்ணன் எழுதிய தொடர் பத்தியைப் பிடிக்க நேர்ந்தது. அதில் கமலா அம்மா, ‘நீங்கள் எல்லாம் அவரிடமிருந்து விலகிப்போகாமல் இருந்திருந்தால் இன்னும் சிலகாலம் வாழ்ந்திருப்பார்’ என்று சொன்னதாக எழுதியிருந்தார். என் மனம் கலங்கிவிட்டது. அப்படிப் பிரிய நேர்ந்ததும் இயல்பானதுதான் என்றும் எழுதியிருந்தார். கமலா அம்மாவிற்கு என்னை நினைவிருக்குமானால் – எனக்கு அச்சு அசலாக நினைவிருக்கிறது. அந்த அன்னமிட்ட இதயத்தை நோக்கி ஒன்றை சொல்லிவிடு வேணு என்று என் அந்தராத்மா துடிக்கிறது. அம்மா, சுந்தர ராமசாமி போல இலக்கியக் களத்தில் நான் தனித்துவமாக வளர்ந்திருக்கிறேன். அப்படி வளர்வதைத் தான் அவரின் கட்டுரைகளும், படைப்புகளும் உணர்த்தின என்று மட்டும் இவ்விடத்தில் சொல்லிக்கொள்கிறேன். இந்தத் தமிழ்நாட்டில்தான் தன் சக படைப்பாளிகளை, இளம் படைப்பாளிகளை ரொம்ப கண்ணியத்துடன் வரவேற்றார். நிரம்ப அக்கறையுடன் அவர்களிடம் உரையாடினார். காது கொடுத்துக் கேட்டார். தன் தரப்புப் பார்வையைத் தெளிவாக முன்வைத்தார். கடிதங்கள் எழுதினார். அதற்கெல்லாம் மேலாக மிகுந்த அன்புடன் உபசரித்தார். இது தமிழ்ச்சூழலில் அபூர்வமானது. ஆனந்தமானது. இந்த இலக்கிய ஆனந்தத்தைத் தந்ததில் கமலா அம்மாவிற்கு அதிகப் பங்குண்டு. அவர் புன்னகையுடன் விலகிநின்று செய்தார். சு.ரா.விற்கு இருந்த பிடிவாதத்தைப் போன்றே அவரிடம் இலக்கியம் கற்று எழுதவந்த இளம் படைப்பாளிகளுக்கும் சில நியாயமான பிடிவாதங்கள் ஏற்பட்டன. எப்படியாயினும் சுந்தர ராமசாமி தமிழ் இலக்கியச் சூழலில் ஜென்டில்மேன்தான். அந்தப் பேறு இன்னொருவருக்கு இப்போதைக்கு இல்லை.

போகிற போக்கில் மகத்துவங்களை உண்டாக்கியவர்- தி. ஜானகிராமன்

தமிழ்ச் சிறுகதைத் துறைக்குப் பெரும் பங்காற்றியவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஒரு நூற்றாண்டுக் காலத்தில் இவ்விலக்கிய வகைமைக்குப் பங்காற்றியவர்கள் நூறு பேருக்குள்ளாகத்தான் இருப்பர். அதில் ஆளுமையுள்ளவர்களாக புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன், ஆ. மாதவன் ஆகிய நால்வரை மட்டுமே குறிப்பிட முடியும். அசோகமித்திரனிடம் படைப்பெழுச்சி மிக்க தருணங்கள் இல்லை. மன நெருக்கடியில் விளைந்த அனுபவசாரம் அதிகக் கதைகளில் இருப்பதால் இவரை முக்கியமான சிறுகதையாளர் ஆக்குகிறது. இளம் எழுத்தாளர்களில் இரண்டுபேரை மட்டுமே சொல்ல முடியும். கறாரான இத்தன்மையில் தி. ஜானகிராமன் நிராகரிக்க முடியாத ஒரு படைப்பாளியாக இருக்கிறார். தமிழன் துரதிருஷ்டம் அவரின் நாவல்கள் பேசப்பட்ட அளவு சிறுகதைகள் பேசப்படவில்லை. அதிலும் ஒரு பாதகம் தி. ஜானகிராமன் நாவல் கலையின் உச்சத்தைத் தொட்டவரல்ல. அவருடைய அபரிமிதமான சாதனை சிறுகதைத் துறையிலேயே நிகழ்ந்திருக்கிறது.

ஐம்பதுகளில் எழுதப்பட்ட சிறுகதைகளை வைத்துப் பார்க்கும்போது தி. ஜானகிராமனிடம் வெளிப்பட்ட கலையின் மகாசக்தியான உற்றுநோக்கல் திறன் வேறொருவரிடமும் வெளிப்படவில்லை. சுந்தர ராமசாமியும் ஜெயகாந்தனும் புதுமைப்பித்தன் பாணியைக் கைக்கொண்டனர். கருத்துலகு மீதான விமர்சனம்தான் மார்க்சியம் என்ற சித்தாந்தத்தின் பொதுத்தன்மைகளை…

கு.ப.ரா.வின் ‘சிறிது வெளிச்சம்’ – ஒரு குறிப்பு

நமது அன்றாட அனுபவத்தை மீறிய ஒரு கணம் கண்டடைய முடிவதே புனைவை விசேசமாக்குகிறது. அதில் நாம் அறிந்ததைத் தாண்டிய ஒரு அறிதல் இருக்கிறது. நம் தின வாழ்வில் சல்லிசாகத் தெரிகிற முடிவுகள் அங்கு புது அர்த்தத்தை அளிக்கும். அப்படி ஒரு முடிவை ஒருவர் எடுக்க நேர்ந்தால் அவரை விட மூடன் யாருமில்லை என நாம் சொல்லக்கூடும். ஆனால் மொழியும், புனைவு தருக்கமும் நம்முன் திறக்கும் உண்மையைவிட அக்கணத்தில் எதுவும் அழகு கிடையாது. அதை நாம் அறியும்போது வேறொரு அனுபவமாக மாற்றி நம்முடையது என சொந்தம் கொண்டாடத் தொடங்குகிறோம்.

முறுக்குக்கம்பிகளும் ஷாம்புக்களும் கோ ஸ்பான்ஸர்ட் பை தருணங்களும் – கவிஞர் இசையின் கவிதை குறித்து.

கவிதையாக்கம் குறித்து நமக்கிருக்கும் மயக்கங்களைத் தாண்டி கவிஞர் இசையின் வரிகளைப் பார்க்க வேண்டியுள்ளது. இவை வார்த்தைகளின் வரிசை மீதும், கவிதை இலக்கணம் மீதும் மதிப்புள்ள கவிதைகள அல்ல. இயல்புக்கும் கற்பனைக்கும இடையே சஞ்சரிக்கும் வேடிக்கை உலகத்தைப் பற்றிப்பேசுபன. மரபு வழி மனது கொண்டவர் என்றாலும் அதை மறுதலித்து சற்றேனும் தளர்த்திக்கொள் என எதிர் தரப்பிலிருந்து தன் கவிதை உலகை அமைத்துக்கொள்பவராகக் கவிஞர் தெரிகிறார். அவர் மனம் இயங்கும் முறை அப்படி இருக்க வேண்டும், இல்லாவிட்டால் ஏதேனும் ஒரு சொல்லேனும் நீ எங்கள் உலகவாசி அல்ல எனத் தள்ளிவிட்டுவிடக்கூடும்.

அம்பையின் சிறுகதைகள்

‘அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு’ தொகுப்பில் இந்த ஆணாதிக்க எதிர்ப்பு, ரசனையற்ற ஆண்களைச் சித்தரித்து உவகை கொள்ளும் போக்கிலிருந்து முற்றிலும் விடுபட்டு,பாம்பு தன் சட்டையை உரிப்பது போல் உரித்துக் கொண்டு வெளியே வந்துவிடுகிறார் அம்பை.பொதுவாக எந்த எழுத்தாளரும் செல்ல விரும்பாத பகுதி இது. ஒரே மாதிரி எழுதினால் தான் ‘இமேஜ்’ அடிபடாமல் இருக்கும், சுந்தர ராமசாமி,எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற வெகு சிலரே தங்களை அடிக்கடிச் சட்டையுரித்துக் கொள்பவர்கள். இந்தச் சட்டையுரிப்பில், தனது பழைய இமேஜைப் பற்றிக் கவலைப்படாமல்,அம்பையும் இறங்கியுள்ளது பாராட்டுதலுக்குரியது. ‘அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு’ கதைகள் எல்லாமே …

உரக்க ஒலித்த பெண் குரல்

1953இல் ராஜம் கிருஷ்ணன் அவர் பெண் குரல் நாவலுக்கு கலைமகள் பத்திரிகையின் நாராயணசாமி ஐயர் விருது பெற்றபோது எனக்கு ஒன்பது வயது ஆகியிருக்கவில்லை. கி.வா.ஜ. என்று அறியப்பட்ட கி.வா. ஜகந்நாதனை ஆசிரியராகக்கொண்ட கலைமகள் பத்திரிகை இலக்கியப் பத்திரிகையாக கருதப்பட்டது. எங்கள் வீட்டில் மாதாமாதம் கலைமகள் வந்துவிடும். காரணம் என் “உரக்க ஒலித்த பெண் குரல்”

மகிமை

இன்றைய பிளவுபட்ட நோக்குகள் பெருகி பேருருவமெடுத்து நிற்கும் உலகில் இச்சா போன்ற அடிப்படை மானுட விழுமியங்களை, அனைத்து வேற்றுமைகளுக்கு நடுவிலும் அடையப்படக்கூடிய ஒற்றுமைகளை பற்றி பேசும் நாவல் நமக்கு இன்றியமையாத தேவை என்றே நான் நினைக்கிறேன்.

தமிழ் நாவல்களுக்கு புலிட்சர் அல்ல புளிப்பு மிட்டாய்கள் கூட கொடுக்கப்படுவதில்லை. ஆயினும் புலிட்சர்வாங்கிய நாவலுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாத, பல இடங்களில் அதனினும் மேம்பட்ட தரத்தில் எழுதுபட்டநாவல் இச்சா என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

கமலதேவி: மூன்றாவது தாெகுப்புக் கதைகள்

சொல்வனம் இதழில் கடந்த ஐந்தாண்டுகளாக எழுதி வரும் கமல தேவியின் மூன்றாவது தொகுப்பு வெளியாகி இருக்கிறது. சொல்வனம் சார்பாக எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது பயணத்தில் சிறு பங்கினை ஆற்றிய சொல்வனம் பெருமை கொள்ளும் தருணம் இது! மந்திரப்பெட்டியின் உரிமையாளர் கமலதேவி நோய்மை அனுபவங்களை சித்தரிப்பதற்காகவே “அற்புத உலகில் “கமலதேவி: மூன்றாவது தாெகுப்புக் கதைகள்”

தந்தைக்கு என்றும் நன்றியுடன்

கிட்டப்பா, அச்சிந்திலு காதல் அனுபவங்கள். வீட்டுப் பெரியவர்களின், மாலை நேர திண்ணைப் பேச்சின் சுவாரசியத்துடன், கிராமிய மக்கள் வழக்கில், துள்ளிப்பாயும் நடையில் கோபல்ல கிராமம் நமக்கு அறிமுகமாகியது. கிட்டப்பன் அச்சிந்திலு தவிர, கோவிந்தப்ப நாயக்கர், காரவீட்டு லச்சுமண நாயக்கர், கோவப்ப நாயக்கர், ராசப்ப நாயக்கர் என புலம்பெயர்ந்த கம்மாள நாயக்கர்களைப் பற்றிய அழுத்தமான சித்திரத்தை கூட்டிக் காண்பித்தது கோபல்லபுர கிராமம். இன்னமும் பல பத்தாண்டுகள் நின்று பேசப்படும் ஓர் இலக்கிய படைப்பாக, பலரின் வாசிப்பின் வழியே அச்சிறு கிராமம் பரந்து விரிந்த பெருநிலமாக உருவாகியிருக்கிறது. சிறிய பாதத்தைக் கொண்டு உலகை அளந்த திரிவிக்கிரமன் போல, கிரா-வால் இந்த ரசவாதத்தை நிகழ்த்தி காட்ட முடிந்திருக்கிறது.

முடிவுறாத போலிப் பிரதிகள் – ராஸ லீலா நாவல் விமர்சனம்

ஜீரோ டிகிரியைப் போல ராச லீலா நாவலை முதலில் படிக்கும் வாசகர்களுக்கு அதன் பல்குரல்களைப் பின் தொடர்வதினால் கதையோட்டத்தைத் தொடர முடியாமல் போய்விடும். பொதுவாக இருவேறு அடையாளங்களின் கண்ணோட்டத்தின் வழியாகக் கதை சொல்லப்படுவதைத் தெளிவுபடுத்திக்கொண்டால் நாவல் காட்டும் உலகை எளிதில் புரிந்துகொண்டுவிடலாம். பெருமாள் பாத்திரமாக சாருவே கதைக்குள் புகுந்து “முடிவுறாத போலிப் பிரதிகள் – ராஸ லீலா நாவல் விமர்சனம்”

நோயுற்ற சுயத்தின் அரற்றல் – மௌனியின் படைப்புகளை முன்வைத்து

ஆனால் மௌனியின் மீது புதுமைப்பித்தனுக்கு பெரிய மரியாதை இருந்தது என்பதை இக்கூற்று இடம்பெற்ற சிறுகதை மறுமலர்ச்சி காலம்  என்ற கட்டுரையை (1946ல் வெளியானது) முழுதாக வாசித்தாலே உணர்ந்து கொண்டு விட முடியும். அக்கட்டுரையில் அதுவரை தமிழில் வெளிவந்த சிறுகதைகளில் மௌனியின்  ‘எங்கிருந்தோ வந்தான்’, தன்னுடைய  ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ உள்ளிட்ட நான்கு கதைகளை தமிழின் ஒப்பற்ற கதைகள் என்று  புதுமைப்பித்தன் சொல்கிறார். புதுமைப்பித்தனின் சமகாலத்தவரான கநாசுவுக்கு மௌனியின் கதைகள் மீது பெரும் மயக்கமே இருந்திருக்கிறது. சி.சு.செல்லப்பா எழுதிய விரிவான கட்டுரையிலும் (மௌனியின் மனக்கோலம்) மௌனியின் கதைகள் குறித்த தீவிரமான பற்று வெளிப்படுவதை பார்க்கலாம்.

கு. அழகிரிசாமி நூற்றாண்டு (23/9/1923 – 5/7/1970) – ஓர் எளிய மலர்ச்செண்டு

நாம் எப்போதும் இலக்குடனும், பெருமளவு இலக்கின்றியும் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டும், பதிந்து கொண்டும் இருக்கிறோம். அதில் கு. அழகிரிசாமி போன்ற தேர்ந்த எழுத்தாளர் அதன் எல்லா அம்சங்களையும் கூர்ந்து நோக்குகிறார். வாசகரோடு பகிர்கிறார். இதயத்தை நொறுங்க வைக்கும் தாங்கொணாத் துயரையும், நிராசையையும், சாமான்ய மனிதர்களுக்கு நிகழும் சாமான்ய சம்பவங்கள் மூலம் வாழ்வின் சாரத்தையும், அர்த்தத்தையும், அனர்த்தத்தையும், தினசரி வாழ்வில் தானாய் நிகழும் நகைச்சுவையையும் இவரது கதைகளில் நாம் காண்கிறோம்.