துளிமம்

உப்பு வெண்மையிலும், மிளகு கருப்பிலும், மிளகாய் செந்நிறத்திலும் இருக்கிறது. ஏன்?  பொருட்களுக்கு தனித்த நிறங்கள் இருக்கின்றன என்பது அணுக்களின் ஒளி உமிழ்வை ஆராய்கையில் தெரிய வருகிறது.  நிறம் என்பது ஒளியின் அதிர்வெண் என்பதால், பொருட்கள் குறிப்பிட்ட சில அதிர்வெண்களிலேயே ஒளியை உமிழ்கின்றன. ஒரு பொருளை அவ்வாறு வகைப்படுத்த உதவும் அந்த சில அதிர்வெண்கள் – அதிர்வெண்களின் தொகை அப்பொருளின் நிறமாலை (Spectrum) எனப்படுகிறது. 

மரங்களின் அகன்ற வலை

தாவரங்கள் மைக்கோரைசல் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தி உணவைப் பகிர்ந்து கொள்கின்றன என்ற பரவலான நம்பிக்கை இருந்தபோதிலும், சான்றுகள் முடிவில்லாதவை. ஆய்வக மற்றும் கள சோதனைகளில், தாவரங்களுக்கு இடையில் மாற்றப்படும் கார்பன் மற்றும் பிற வளங்களின் அளவு பொதுவாக குறைவாகவே இருக்கும், பெரும்பாலும் மைக்கோரைசல் வேர்களில் இருக்கும். அதாவது பூஞ்சைகள் ஒரு தாவரத்திலிருந்து கார்பனைப் பெறுகின்றன, ஆனால் அதில் பெரும்பகுதி மற்றொரு தாவரத்திற்கு மாற்றப்படுவதற்குப் பதிலாக பூஞ்சையிலேயே இருக்கும்.

1901-2025 நோபல் பரிசுகள் பற்றிய பிரதிபலிப்புகள்

அவர் இறந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1901ஆம் ஆண்டு முதன் முதலாக இந்த பரிசுகள், அறிவியல், கலாச்சாரம் மற்றும் உலக அமைதியின் உயர்ந்த அங்கீகாரமாக மாறின. இயற்பியலுக்காக Wilhelm Conrad Röntgen, வேதியலுக்காக Jacobus H. van‘t Hoff, மருத்துவத்துக்காக Emil von Behring, இலக்கியத்துக்காக Sully Prudhomme மற்றும் அமைதிக்காக சர்வதேச redcross அமைப்பின் நிறுவனர் Henry Dunant மற்றும் அமைதி இயக்க தலைவர் Frédéric Passy ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவர்கள் சமூக தாக்கத்துடன் கூடிய புதுமைகளை கௌரவிப்பதற்கான முன்மாதிரியை உருவாக்கினர்.

வேதியியல் நோபல் பரிசு 2025

நவீன வேதியியலை ஆராய்வதற்கான புதிய அறைகள் ரிச்சர்ட் ராப்சன் (Richard Robson), ஓமர் எம். யாகி (Omar M. Yaghi), மற்றும் சுசுமு கிடகாவா (Susumu Kitagawa) என்ற மூவரின் ஆய்வுகள், பலகாலமாக கருதி வந்த “இயற்கையானது நிலைத்தன்மை காரணமாக நுண்துளைகள் கொண்ட பொருட்களை விட அடர்த்தியான பொருட்களையே “வேதியியல் நோபல் பரிசு 2025”

புள்ளிகளும் கோடுகளும் படிக கட்டமைப்புகளும்

அச்சமயத்தில், ‘படிக பொறியியல்’ சம்பந்தமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்ததால், ‘Dots, lines and crystal structures’ என்ற கண்ணோட்டத்தில், எப்படி கோலம் என்கிற தென்னிந்தியர் கலை  அணுக்கள் மற்றும் மூலகங்களால் கட்டமைக்கப்பட்ட படிகத்தின் வடிவத்தைப் புரிந்து கொள்வதற்கும், மேலும் அது இயற்கையில் காணப்படும் பல கனிமங்கள் காலநிலைக்கு தகுந்தவாறு எவ்வாறு மாறுகிறது என்பதற்கான விளக்கமும் இதில் பெற முடியும் என்பதற்கான ஒரு புதிய முயற்சி ஆகும்.

கணக்கீட்டு புரத வடிவமைப்பு மற்றும் கணிப்பு

உயிர்களின் பன்முகத்தன்மை புரதங்களின் அற்புதமான இரசாயன கருவிகளின் திறனைக் காட்டுகிறது. அவை ஒன்றாக வாழ்வின் அடிப்படையான அனைத்து இரசாயன எதிர்வினைகளையும் கட்டுப்படுத்தி இயக்குகின்றன. புரதங்கள் ஹார்மோன்கள், சமிக்ஞை பொருட்கள், ஆன்டிபாடிகள் மற்றும் பல்வேறு திசுக்களின் கட்டுமானத் தொகுதிகளாகவும் செயல்படுகின்றன. 2024 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று “கணக்கீட்டு புரத வடிவமைப்பு மற்றும் கணிப்பு”

புவிக்கோளின் கனிமவளம்

This entry is part 7 of 7 in the series பூமிக்கோள்

இந்த மூன்றாவது கோளில் (புவி ) என்ன அதிசயம்? அதன் உடன் பிறப்புகளின் வளர்ச்சிப் பாதையை விட்டு விலகி வியத்தகு முறையில் பிரிந்து செல்வது ஏன் ? தண்ணீர் தான் காரணம் என்பது உங்கள் இனிய அழகிய அனுமானம்.
நீரில்லாத கோள்களில் உருவாக முடியாத பல்வேறு புதிய கனிமங்கள் இக்கோளில் உருவாக முடிகிறது. …இங்குள்ள அபரிமிதமான கால்சியம் கார்போனேட் (கால்சைட் என்னும் கனிமம் ) பெரும்பாலும் கோளில் வாழ்ந்த உயிரினங்கள் உருவாக்கியது எனத் தோன்றுகிறது. நீங்கள் எப்போதாகிலும் உயிரினப் பயன்பாடு இல்லாத கால்சைட் உருவாதலைக் கண்டிருக்கலாம். …இவ்வளவு கால்சைட் பாறைகள் உருவாகத் தேவையான உயிரினங்களை சாத்தியமாக்கியது இங்குள்ள பெருங்கடல்களே என்று நீங்கள் அனுமானிக்கிறீர்கள்.

செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள் – பகுதி 2

This entry is part 27 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

செயற்கைச் சர்க்கரை ரசாயனத்தை நாம் உட்கொண்டால், மூளை குழம்பிவிடுகிறது. ‘ஏராளமான சர்க்கரையை உண்கிறான் இந்த மனிதன்.’ இதைச் சமாளிக்க நிறைய கணையநீரை (insulin) உற்பத்தி செய்கிறது. இப்படி உற்பத்தி செய்யப்படும் அளவுக்குக் கணையநீர் தேவையில்லை. இதனால், அநாவசியமாக உணவைக் கொழுப்பாக மாற்றுகிறது. இதனாலேயே, செயற்கைச் சர்க்கரை ரசாயனம் பயன்படுத்தும் குளிர்பானங்களை அதிகமாக அருந்துபவர்கள் பருமானாகி விடுகிறார்கள்

அறிவுடைப் புதுப்பொருள்

இந்த இரு பரிமாண மின் பகுப்பிகள் பல்வகையான கரைப்பான்களில் (solvents) தங்கள் அணுக்களைக் கரைத்துக்கொள்ளும் ஆற்றலுடையவை. வெளிப்புற நிலைகளான வெப்பம், பிஹெச் (pH-potential of Hydrogen) ஆகியவற்றைக்கொண்டு இந்தப் புதுப்பொருளின் அமைப்பு முறைகளை மாற்றமுடியும் என்பதால், குறிப்பிட்ட உடல் பகுதிக்கு மட்டுமே எடுத்துச் செல்லப்படவேண்டிய மருந்துகளை மிகத் துல்லியமாக அங்கேயே உட்செலுத்த முடியும்.

விஞ்ஞானத் திரித்தல் – ஜி.எம்.ஓ. சர்ச்சைகள்

This entry is part 25 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

இன்று உயிரினத் தொழில்நுட்பம் வளர்ந்து, அடிப்படையில் மரபணுக்கள் எல்லா உயிரனங்களுக்கும் ஒன்றுதான் என்று தெரிய வந்ததோடு அல்லாமல், அவற்றை எப்படி மாற்றியமைப்பது என்றும் புதிய உத்திகள் வந்துள்ளன. இதன் பயனாகப் பல புதிய வழிகள் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன.

குவாண்டம் உணர்தல்

‘ம்யூவான்’ என்பவை ‘கொழுத்த மின்னணுக்கள்’ என அறியப்படுபவை. இவைகளைக் காந்தப் புலத்தில் வைக்கையில், அவை சுழல்கின்றன, தள்ளாடுகின்றன. இப்படி இவை சுழல்கையில், சுற்றுச் சூழலுடன் இணைவினையாற்றுகின்றன. அந்தச் சூழலிலோ, குறைந்த ஆயுள் உள்ள துகள்கள் வெற்றிடத்திலிருந்து உள்ளே- வெளியே ஆட்டம் ஆடுகின்றன. மரபார்ந்த அறிவியலில் சொல்லப்பட்ட மதிப்பிலிருந்து இந்த ம்யூவான்களின் ஜி-2 மதிப்பு வேறுபடுவதால், குவாண்ட இயற்பியல், கணிணி, உணரிகள் ஆகியவற்றில் பெரும் செயல் திறனைக் கொண்டு வர முடியும் என ஒரு நம்பிக்கை வந்துள்ளது.