வளர்ந்து வரும் பத்து சிறந்த தொழில் நுட்பங்கள் – 2020

கடந்த இருபது ஆண்டுகளாக, முன்னுதாரணங்கள் சொல்ல இயலாத வகையில், தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள், கணினியில், செயற்கை நுண்ணறிவியலில், உயிரியல் சார்ந்த துறைகளில் காட்டும் வேகம் அளப்பரியது. உலகளாவிய சவால்களை எதிர் கொண்டு ஏற்புடைய தீர்வுகளை அளிக்கும் சாத்தியங்கள் உள்ள இந்த நுட்பங்கள், தவறாகப் பயன்படுத்தப்படுமாயின் என்ன கேட்டினைக் கொண்டு வருமென்றும் சிந்திக்க வேண்டும்.

வலிதரா நுண் ஊசிகள்

வளர்ந்து வரும் பத்து தொழில் நுட்பங்கள்-2020 என்ற அறிமுகக் கட்டுரையைச் சென்ற இதழில் பார்த்தோம். ஒவ்வொன்றாக அவற்றை விரிவாக இப்போது பார்க்கலாம். திரைப்படங்களில் தந்தையின் அன்பைக் காட்டும் விதமாக ஒரு காட்சி இடம் பெறும். அவரது குழந்தைக்கு மருத்துவர் ஊசி போடுவார்; இவர் கண்களில் நீர் திரளும். இன்றும் “வலிதரா நுண் ஊசிகள்”

சூர்ய சக்தி வேதியியல்

மனித நலத்திற்கும் அவனது சுகத்திற்கும் தேவையான வேதிப் பொருட்களை உற்பத்தி செய்கையில், தொல்லெச்ச எரிபொருள் பயன்படுத்தப்படுவதால், பிரித்தெடுக்கும் செயல்முறைகளும் கரி உமிழ்வும் சூழல் கேடுகளும் ஏற்படுகின்றன. வீணாகும் கரிவளியை, சூர்ய சக்தியை உபயோகித்துத் தேவையான வேதிப் பொருட்களை உருவாக்கும் ஒரு புதிய அறிவியல் முறை கண்டறியப்பட்டுள்ளது.

மெய்நிகர் நோயாளிகள்

கணினிகள், மருத்துவர்களின் சிறப்பிடத்தைப் பெற்றுவிடும் என்று கூறப்பட்டிருப்பதை மெய்ப்பிப்பதுபோல் ஒவ்வொரு நாளும் புது கணினிச் செயல்முறைகள் வெளிவந்து மிகத் துல்லியமாக நோயையும் அதன் வீரியத்தையும் அதற்கான சரியான தீர்வுகளையும் கண்டறிந்து கையாள உதவுகின்றன.

இடவெளிக் கணினி

அவர் தன் படுக்கை அறையிலிருந்து சமையல்கூடத்திற்குச் செல்கையில் சுற்றுப்புற வெப்பநிலை சீராக்கப்பட்டு, விளக்குகளும் ஒளிர்கின்றன. அவர் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டி, பாதையில் குறுக்கிடுகையில் சக்கர நாற்காலியின் வேகம் குறைகிறது. அவர் சமையல் அறைக்கு வந்தவுடன் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து உணவினை எடுத்துக்கொள்ளவும் அடுப்பினை இயக்கத் தகுந்தாற்போலவும், உணவு உண்ண வசதியாகவும் மேஜை இயங்குகிறது.

இலக்க முறை நல ஆய்வும் மருத்துவமும்

உங்கள் மருத்துவர் வருங்காலங்களில் தரப்போகும் மருந்துச் சீட்டு ஒரு மருத்துவப் பயன்பாட்டுச் செயலியாக இருக்கலாம். தற்சமயம் பயன்பாட்டில் உள்ள அல்லது கட்டமைக்கப்பட்டு வருகின்ற பல நூறு செயலிகள், உடல் நலம், மன நலம் மற்றும் நோயினைத் தானாகக் கண்டறிந்து, அதைக் கண்காணிப்பதோ, மருந்துகளைப் பரிந்துரைப்பதோ செய்யும் வண்ணம் உருப்பெற்று வருகின்றன.

மின்சக்தி விமானங்கள்

ஏறத்தாழ உலகில் பறக்கும் விமானங்களில் பாதி விமானங்கள், 800 கி.மீ.க்கும் குறைவான போக்குவரத்தில்தான் பயன்படுத்தப்படுகின்றன. மின்கலன்கள் 2025க்குள் இந்த ஆற்றலை அடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிமென்டும் கரி உமிழ்வும் தீர்வும்

உண்ண உணவு, உடுக்க உடை, வசிக்க இடம் என்பவை அடிப்படைத் தேவைகளே. இவை அனைத்திலும் நாம் செயற்கை முறைகளைப் பெரும்பாலும் பின்பற்றி வருகிறோம். காங்க்ரிட் கட்டடங்கள் நம்முடைய வசிப்பிடத்தின், அலுவலகங்களின் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.

குவாண்டம் உணர்தல்

‘ம்யூவான்’ என்பவை ‘கொழுத்த மின்னணுக்கள்’ என அறியப்படுபவை. இவைகளைக் காந்தப் புலத்தில் வைக்கையில், அவை சுழல்கின்றன, தள்ளாடுகின்றன. இப்படி இவை சுழல்கையில், சுற்றுச் சூழலுடன் இணைவினையாற்றுகின்றன. அந்தச் சூழலிலோ, குறைந்த ஆயுள் உள்ள துகள்கள் வெற்றிடத்திலிருந்து உள்ளே- வெளியே ஆட்டம் ஆடுகின்றன. மரபார்ந்த அறிவியலில் சொல்லப்பட்ட மதிப்பிலிருந்து இந்த ம்யூவான்களின் ஜி-2 மதிப்பு வேறுபடுவதால், குவாண்ட இயற்பியல், கணிணி, உணரிகள் ஆகியவற்றில் பெரும் செயல் திறனைக் கொண்டு வர முடியும் என ஒரு நம்பிக்கை வந்துள்ளது.

பசும் நீர்வாயு (Green Hydrogen)

புவியின் வளி மண்டலத்தில் கரிவளி 0.04% மட்டுமே. அந்த 0.04%-லிலும், 95% இயற்கையாக வருவதே. அதாவது எரிமலைகளால், மற்றும் உள்ளிருக்கும் கரிப் படுக்கைகள் தங்கள் வெப்பத்தைத் தக்க வைத்துக் கொண்டு எரிவதால் வெளியேறும் கரிவளி போன்றவை இயற்கை நிகழ்வுகள். ஆஸ்திரேலியாவின் எரியும் மலையை நினைவில் கொள்ளுங்கள். தாவரங்களுக்கு, நுண்ணிய விதத்தில் இந்தக் கரிவளி, ஒளி சக்தியை, வேதிய சக்தியாக மாற்றி ஒளிச்சேர்க்கைக்கு உதவுவதால் தாவர உணவு கிட்டுகிறது.

முழு மரபணு சேர்க்கைத் தொகுப்பு (Whole-Genome Synthesis)

கோவிட்-19-ன் ஆரம்பக் காலக் கட்டங்களில் சீன விஞ்ஞானிகள், அந்தக் கிருமியின் மரபணுத் தொடர்ச்சிகளை, மரபணுத் தரவுகளில் சேர்த்தார்கள். சுவிஸ் நாட்டில் இத்துறையைச் சேர்ந்தவர்கள், அத் தரவுகளைக் கொண்டு அந்தக் கிருமியின் முழு மரபணுவையும் செயற்கையாக அமைத்து அதை உற்பத்தி செய்தார்கள். இதில் கவனிக்க வேண்டிய ஒன்று என்ன வென்றால், “முழு மரபணு சேர்க்கைத் தொகுப்பு (Whole-Genome Synthesis)”