இவரது வர்ணனைகளில் மெல்லிய கேலி, கிண்டல்கள் விரவி இருக்கின்றன. ‘எழுத்தை எழுதிவிட்டு அதைக்கொடியில் காயப்போடுவதுதான் சமஸ்கிருதம் என்று கனகசுந்தரி கேலியாகச் சொல்வாள்’ [கனகசுந்தரி] என்பது ஓர் எடுத்துக்காட்டு. வெறும் கேலியாக மட்டும் இல்லாமல், ‘இலங்கை தேசியகீதத்தை நானும் சாவித்திரியும் சேர்ந்து பாடுவதாகத் திட்டமிட்டு ‘மன்மத ராசா மன்மத ராசா’ என்று முதல் இரண்டு வரிகளைப்பாடினோம். நிறைய அகதிகளை ஏற்றுமதி செய்யும் ஒரு நாட்டின் தேசியகீதத்தைப் போலவே அது ஒலித்தது. ஒருவருமே கண்டுபிடிக்கவில்லை ஆனால் கைதட்டினார்கள்’ [மூளையால் யோசி] என்று ஒரு கசப்பான உண்மையைக் கேலியாக வெளிப்படுத்தும் அம்சமும் அதில் இருக்கிறது..
Author: சிவானந்தம் நீலகண்டன்
தாழ்த்தப்பட்டவர்களுக்குள்ளேயே இருந்த தீண்டாமை
தோல் 2012ல் சாஹித்ய அகடமி விருதுபெற்ற நாவல். திண்டுக்கல்லில் தோல்ஷாப்பு எனப்படும் தோல் பதனிடும் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் வாழ்வும், அதன் நெருக்கடிகளால் தொழிற்சங்கம் எப்படி உருவாகிவந்தது என்பதும்தான் கதை. நாவல் தொடங்குமுன் கதா மாந்தர்கள் என்ற தலைப்பில் 117 பாத்திரங்கள், அவர்களது பெயர்கள்-தொழில்கள் என்ற அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆசிரியர் டி.செல்வராஜ் அவரது முன்னுரையில்,’ இந்த நாவலில் இடம்பெற்றுள்ள கதைமாந்தர்கள் தமிழகத்தின் சரித்திர கதியில் ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த மாந்தர்களின் பிரதிபிம்பங்களே’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த அளவில் வரலாற்றை நெருக்கமாகப் பிரதிபலிக்கும் நாவல்
ஷோபாசக்தியுடன் ஒரு மாலை
வெகு இயல்பாக உரையாட ஆரம்பித்த சக்தியின் கண்கள் அலைபாய்ந்தபடியே இருந்தன. கைகளில் தேநீர் கிளாசை எடுப்பதும் உறிஞ்சுவதும்கூட ஒரு பதட்டத்திலேயே நடந்ததுபோலத்தான் எனக்குத்தெரிந்தது. அது அவரது புலிவாழ்க்கையின் எச்சமாக இருக்கக்கூடும் என்பது என் ஊகம். இங்கு தேநீர் மட்டும்தான் கிடைக்கும் என்று எம்கே குமார் சொன்னபோது புரிந்துகொண்டவர் தான் பகலில் குடிப்பதில்லை என்றார். ஹேங் ஓவருக்காக அடுத்தநாள் காலையில் கொஞ்சம் குடிப்பது கணக்கில்வராது என்பது அவர் கருத்து. அதை எங்க ஊரில் ‘தெளிதண்ணி’ என்போம் என்றேன் நான். கேட்டு சிரித்துக்கொண்டார்.
எனக்கும் ஒரு கனவிருந்தது- வெர்கீஸ் குரியனின் சுயவரலாற்றுப் புத்தகம் பற்றி
நம்மாட்கள் என்றில்லை, வெளிநாட்டவர்களையும் பாரபட்சம் பார்க்காமல் வாங்குவாங்கென்று வாங்கித்தான் அனுப்புகிறார். இந்தியா பால்தூள் ஏற்றுமதியை ஆரம்பித்ததும் நியூஸிலாந்து உயராணையர் இவரது அறைக்கு வந்து ‘எங்கள் மார்க்கெட்டில் கை வைக்கும் வேலை வேண்டாம்’ என்று எச்சரிக்க, குரியன் கடுப்பாகி ஆனால் பெண் என்பதால் சற்று மென்மையாக ‘இவ்வுலக மார்க்கெட் உங்கள் தனிப்பட்டசொத்து என்பதை நானறியவில்லை. நன்றி போய்வாருங்கள்’ என்று கதவைக்காட்டியிருக்கிறார். அவரோ மீண்டும்மீண்டும் அதையே பேசி மேலும் எரிச்சலூட்ட, குரியன் ‘இந்தியர்கள் ஒன்றுசேர்ந்து காறியுமிழ்ந்தால் நியூஸிலாந்து மூழ்கிவிடும் ஜாக்கிரதை’ என்று பொரிந்துள்ளார்.
காந்தியின் கருத்துலகு – சில பரிமாணங்கள்
…காந்தியைக் குறித்து இரண்டு விஷயங்கள் புரிகின்றன: ஒன்று, அவரின் தெளிவான சிந்தனை. மிகுந்த சிந்தனைக்கும் ஆராய்ச்சிக்கும் பிறகு காந்தி பரிந்துரைக்கும் ஒரு வழியை எந்த வித சிந்தனை முயற்சியுமில்லாமல் பெரும்பாலோர் பின்பற்ற முன்வந்து கஷ்டப்பட்டிருக்கிறார்கள். ….இரண்டாவது, அவரின் பகுத்தறிவு. … காந்தி சொன்னார் என்பதற்காக செய்யாமல் – ஏன் எதற்கு என்று கேள்விகேட்டுப் புரிந்துகொண்டு உங்களுக்கும் முழுச்சம்மதம் என்றால் மட்டுமே செய்யவேண்டும் என்கிறார்… ஒரேயொருவரிகூட தேவையில்லாமல் எழுதியிருப்பதாக உணரமுடியாதது காந்தியின் விவர துல்லியத்தோடு கூடிய எழுத்துநடை. எதையும் எளிமையாக யாரும் அளந்துகொள்ளும் வகையில் செய்துவிடுவதில் காந்தி அதிசமர்த்தர்.
கொற்கை – புத்தக அனுபவம்
ஒரு குறிப்பிட்ட பாத்திரத்திற்கு வலு ஏற்றிக் கொண்டே போகாததாலோ என்னவோ கதைத் தன்மை குறைவாகவும் ஆவணத் தன்மை மிகுந்தும் காணப்படுவதுபோல் தோன்றினாலும் இடையில் வரும் ஒரு கடற்கொள்ளைச் சம்பவம் நம்மை மீண்டும் கனவுலகுக்கு இட்டுச் செல்கிறது. பிலிப் பாத்திரம் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு. ஆரம்பத்தில் வீட்டைவிட்டு ஓடிவரும் சிறுவனாக அறிமுகமாகி, உழைப்பால் திறமை மிக்க தண்டலாகிக் கடைசி வரியில் நொய்ந்த கிழவனாக உயிர் துறக்கிறது. வருடங்களை மனதிற்கொண்டு சம்பவங்களுக்கிடையில் வாசிப்புத் தொடர்பை ஏற்படுத்த இயலாதவர்களுக்கு பிலிப் தண்டல் பாத்திரம் ஒரு reference line-ம் கூட.
சஞ்சாரம் – நாவல் விமர்சனம்
800 வருடங்களுக்கு முன் மாலிக்கஃபூர் படையெடுத்து வந்தபோது அரட்டானம் என்ற கரிசல் கிராமத்தில் கோவிலைக் கொள்ளையடிக்கப் படைகளுடன் நுழைகிறான். ஊரே காலிசெய்து ஓடிவிட நாயனக்காரர் லட்சய்யா மட்டும் கோவிலில் நாதஸ்வரத்தை மெய்மறந்து வாசித்தபடி இருக்கிறார். தன் வாழ்நாளில் கேட்டறியாத அந்த இசை மாலிக்கஃபூரை மூச்சடைக்க வைக்கிறது. அவர் வாசிப்பில் கல்லால் செய்யப்பட்ட யானைச்சிலையும் காதை அசைப்பதைப் பார்த்து பிரமிக்கிறான். அவரைத் தன் எஜமான் அலா-உத்-தின் கில்ஜிக்குப் பரிசாக அளிக்க டெல்லிக்கு அழைத்துச் சென்றுவிடுகிறான். … நாவலில் வாசிக்கையில் எது வரலாறு எது புனைவு என்று பிரித்தறிவது கடினம். அசோகமித்திரன் சொன்னதுபோல் புனைவுகள் அரை நிஜங்களைக் கொண்டது. அரை நிஜங்கள் நிஜங்களாகாது. ஆனால் அவைகளே புனைவுகளுக்கு உயிரூட்டுகின்றன.
எல்ஈடி- ஓர் ஒளிப் புரட்சி
ஒருசாதாரண வேலை நாளின் காலையில் படுக்கையிலிருந்து எழுவதற்கு முன் கையால் தடவி எடுத்து முதற்கண் நோக்கும் கைப்பேசியின் திரை, பிறகெழுந்து சோம்பல் முறித்து ஸ்விட்ச் ஆன் செய்யப்படும் மின்விளக்கு, பிறகு ஏறிச்செல்லும் காரின் முன்விளக்கு முதல் பின்விளக்கு வரை, வழியில் போக்குவரத்தை நெறிப்படுத்தும் பச்சை, மஞ்சள், சிவப்பு விளக்குகள், “எல்ஈடி- ஓர் ஒளிப் புரட்சி”
லீ குவான் இயூவுக்கு அஞ்சலி
சிங்கப்பூரில் அப்போது எவருமே அதிகபட்சம் சில தலைமுறைகளாகத்தான் அங்கே வசித்துவருகின்றனர். அதுவும் இன்றைய மலேசியாவோடு சேர்ந்த மலாயாவின் ஒரு பகுதியாக இருப்பதை நம்பித்தான். இவர்கள் அல்லது இவர்களது முன்னோர்கள் ஆயிரமாயிரமாண்டுகள் வரலாறுள்ள தங்கள் தோற்றுவாய் நாடுகளைக் கைவிட்டு இங்கு இடம்பெயரக்காரணம் தாங்களாகப் பெரும்பொருளீட்டிவிடும் ஆசையினாலோ அல்லது பிரிட்டிஷார் கொடுத்த (பொய்யான) உத்தரவாதத்தின் பேரிலோதான். ஒருவேளை குறுகியகாலத்தில் சிங்கப்பூர் சொந்தக்காலில் நின்று சமாளித்துப் பொருளாதார ரீதியில் வளரத்தொடங்காவிட்டால் இவர்கள் நேரத்தை வீணடிக்காமல் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டு புறப்பட்ட இடங்களுக்கே போய்ச்சேர …