சீனா: பலவித இடப்பெயர்வுகள்

1986களில், கிராமங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி பருவம் சார்ந்த இடப்பெயர்வுகள் 80% வரை இருந்திருக்கிறது. மற்ற இடப்பெயர்வுகள் 47%. இரண்டு பிரிவினரையும் சேர்ந்துப் பார்த்தால் தற்காலிகமாக இடம்பெயர்ந்தோர் தான் மிக அதிகம். முறைப்படுத்தப்பட்ட இடம்பெயர்வுச் சட்டங்கள் இல்லாதிருந்ததாலும் நகரமயம் இன்னமும் சூடு பிடிக்காதிருந்ததாலும் அன்றைக்கு நகரத்திற்கு வேண்டியிருந்த தொழிலாளர்கள் குறைவு. அதனால், கிராமங்களிலிருந்து நகருக்கு இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அப்போதெல்லாம் மிகக் குறைவு. அத்துடன் அன்றெல்லாம், நகருக்கு வருவோர் நகரைவிட்டு வெளியாகிறவர்களை விட அதிக வயதுடையவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

சீனா – சவால்களும் குற்றச் செயல்களும்

பொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக சமூகவியலாளர்கள் பார்ப்பவை ஊழல், குடிமக்கள் சட்டங்களை, நிர்வாக விதிகளை அவமதிப்பது, சுற்றுச்சூழல் அழிப்பு ஆகியவை, இவை தவிர, நகரை நோக்கி அலையலையாகக் கிளம்பிப் போகும் மக்கள் கூட்டம். நகர வாசிகளுக்கு இருக்கும் விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் இம்மக்களிடம் இல்லாததால் இவர்களை நிர்வகிப்பதே மிகவும் சவாலாக இருக்கிறதாகச் சொல்பவர்கள் அரசு அதிகாரிகள்.

சீனா – கல்வியும் இடப்பெயர்வும்

சீனாவில் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒன்பது வருடக் கல்வி இலவசம் என்பதே அடிப்படை சட்டம். இருப்பினும், அவரவர் ஊரில் இருந்தால் தான் இந்தச் சலுகை கிடைக்கக் கூடியது. உள்நாட்டு மற்றும் அனைத்துலக சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு சீனா ‘இலவச’க் கல்வி கொடுப்பதாகச் சொன்னாலும் உணவு, சீருடை, போக்குவரத்து, விளையாட்டுத் திடல் பாதுகாப்பு, ஆங்கிலம் மற்றும் கணினிக்கான சிறப்புப்பாடக் கட்டணம், இதர கட்டணங்கள் என்ற பெயரில் கணிசமாக வசூலிக்கவே செய்கிறார்கள். சில அரசுப்பள்ளிகளில் நன்கொடையும் வாங்கப் படுகிறது.

சீனா- இடப்பெயர்வு வாழ்க்கையில் குடும்ப அமைப்பு

சீனாவின் நகர மற்றும் பெருநகர வாசிகளிடையே நடத்தப்பட்ட அரசுக் கணக்கெடுப்பின் முடிவில் குடிமக்கள் ‘மிக மகிழ்ச்சியாக’ இருப்பதாக அறிவித்துள்ளார்கள். அது ஒருபுறமிருக்க, இடப்பெயர்வுக் கதைகளையெல்லாம் கேட்கும் போது, பொருளாதாரத்தின் பின்னால் ஓடிக் கொண்டே இருக்கும் நவீனச் சீனத்தில் குடிமக்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா என்ற கேள்வி நமக்குள் எழத்தான் செய்கிறது. பெரும்பாலோருக்கு இக்கேள்விக்கு பதிலளிக்கும் போது ஒருவிதக் குழப்பமே மிஞ்சுகிறது.

செயற்கை கிராமங்கள்

பெரும்பணக்காரர்கள் அந்நியர்களையும் திருடர்களையும் உள்ளே விடாமல் தமது வளாகத்தையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்காக சுற்றுச்சுவரும் கிராதிக் கதவும், வேலியும் போடுகிறார்கள். ஆனால், இது போன்ற வேலிபோட்ட கிராமங்களோ இடம்பெயர்ந்து உழைக்கும் வர்க்கத்தை ‘உள்ளே’ வைக்கும் வழி. இது மனித உரிமைக்கு எதிரானதென்ற கருத்துதான் பரவலாக நிலவிவருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு “பூட்டி வைக்கப்படும் கிராமங்கள் எல்லோருக்குமே நன்மை செய்யும்”, என்றொரு பதாகை நகரில் ஆங்காகே ஒட்டப்பட்டிருந்தது.

சீனா- பாரம்பரியக் கிராமங்கள்

மிகவும் ஏழ்மையிலிருக்கும் கிராம மக்கள் பெரும்பாலும் வெளியூர்களுக்கு இடம்பெயர்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் வெளியூருக்கோ நகரத்துக்கோ போக பயணச்செலவுக்கான தொகை கூட அவர்களிடம் இருப்பதில்லை. மாதக்கணக்கில், வருடக்கணக்கில் விவசாயம், சிறு தொழில், சிறுபண்ணை போன்ற தொழில்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் பயணச்செலவுக்கானதைச் சேர்த்துக் கொண்ட பிறகோ, கடன் வாங்கிக் கொண்டோ வெளியூருக்கு வேலை வாய்ப்பும் அதிக வருவாயும் தேடிப் போவோர் தான் அதிகம்.

பகுதி 04 – பெருகிப் பிதுங்கும் நகரங்கள்

சுற்றுச் சூழல் நோக்கில் சீன நகரம் ஒன்றும் அத்தனை கவர்ச்சியாக இல்லை. எங்கு பார்த்தாலும் சிமெண்ட் வாசனையுடன் புதிதுபுதிதாக முளைக்கும் கட்டடங்களுக்கிடையில் நெரிசல் மிகுந்த அடுக்ககப் பேட்டைகளும், பொலிவிழந்து பல்லிளிக்கும் தொழிற்சாலைகளும், புகையும் தூசுமான காற்றும் நகரங்களில் ரசிக்கும்படி இல்லை என்பதே சூழியல் வல்லுனர்களின் கருத்து.

பகுதி 03 – செஞ்சீனாவின் பெரும் மாறுதல்கள்

1997ல் 12 மிலியன் பேர் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்ந்தனர். உள்ளூர் ஆசாமிகள் செய்யத் தயங்கிய/மறுத்த ஆபத்தும், கடின உழைப்பும், அழுக்கு நிறைந்ததுமான கட்டட வேலைகளையும் மற்ற பல சேவைகளையும் நகரில் இவர்கள் மேற்கொண்டனர். இதனாலேயே கட்சியும் நகரவாசிகளை ‘கிராமவாசிகளிடமிருந்து கற்றுக்கொள்ள’ச் சொன்னது.

பகுதி 02 – ஹூகோவ்: சீனாவின் வசிப்பிடப் பதிவு முறை

சொந்த நாட்டுக்குள்ளேயே வேறு ஊருக்கோ, மாநிலத்துக்கோ, குறிப்பாக சிற்றூரிலிருந்து பேரூருக்குப் போவோர் இதுபோன்ற வசிப்பு உரிமத்திற்கு விண்ணப்பித்துப் பெற்ற அடையாள அட்டையைக் கையில் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். மக்களுக்கு உணவு விநியோகம், இருப்பிட வசதிகளை அரசு தருவதற்காக இப்படிக் கணக்கு வைக்கிறது என்று ஒரு சாக்குச் சொல்ல இடம் உண்டு. அதுவல்ல மையக் காரணம். மக்களைக் கட்டுப்படுத்தல்தான் என்பது இன்றைய உண்மை.

பகுதி 01 – கூட்டுக்குள் அலையும் தேனீக் கூட்டம்

சீனர்கள் தங்கள் நாட்டுக்குள் செய்யும் இடப்பெயர்ச்சிகளை உன்னிப்பாகக் கவனித்தாலே போதும் – ஆதி மனித நாகரீகத்தின் வளர்ச்சியைக் கூட ஓரளவு புரிந்துகொள்ளலாம். சீனாவின் கிராமங்கள் நகரமயமாகிக் கொண்டிருக்கின்றன. அவர்களின் நகரங்கள், உலகமயமாகிக் கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம், குடும்ப வாழ்க்கையும் தனி மனித வாழ்க்கையும் வெறுமையாகிக் கொண்டிருக்கின்றன. சொந்த நாட்டுக்குள்ளேயே சீனர்கள் அகதிகளாக மாறி ஓடத் தொடங்கியது எப்போது? எதனால்? இதன் காரண காரியங்கள் சுவாரசியமானவை. வாருங்கள், சீனாவுக்கு!