விஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி – 3

நம்முடைய இன்றைய பொது விஞ்ஞானப் புரிதலுக்கு 20-ஆம் நூற்றாண்டின் கடைசி 30 ஆண்டுகள் ஒரு காரணம். சந்திரனில் கால் வைத்த மனிதன், சிலிகான் சில்லு விந்தைகள், இழை ஒளியியல் (fibre optics), லேசர்கள், இணையம் மற்றும் கணினிகள் நம் வரலாற்றுப் பார்வையை மிகவும் மழுங்கடிக்கும் தொழில்நுட்பங்கள். இவை அனைத்திற்கும் பின்னுள்ள பெளதிகம், குவாண்டம் இயக்கவியல்தான். அது ஏற்கப்பட்ட அறிவாகி 60 ஆண்டுகள் கழித்துத்தான் மேற்படிப் பயன்பாடுகள், தொழில்நுட்பங்கள் எல்லாம் உருவாயின என்பதை மறந்துவிடக் கூடாது.

விஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2

இன்றும் ஒரு அமெரிக்கருக்கு எடிசனைத் (Thomas Alva Edison) தெரியும்; ஆனால் ஃபைன்மேனைத் (Richard Feynman) தெரியாது. எடிசன் எல்லோருக்கும் தேவையான மின்குமிழ் (electric bulb) மற்றும் மின் உற்பத்தி போன்ற விஷயங்களில் ஈடுபட்டவர். ஆனால், ஃபைன்மேன் அப்படி ஒன்றும் சாதாரண வாழ்க்கைக்கு உபயோகமான பொருளை உருவாக்கவில்லை. இன்றுவரை, விஞ்ஞானி (scientist), மற்றும் கண்டுபிடிப்பாளர் (inventor) என இருவேறாகப் பிரித்துப் பார்ப்பது பொது அறிவாக எழவில்லை. இது 19-ஆம் நூற்றாண்டின் தாக்கம் என்றே சொல்லலாம். இந்தியர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம் – சி.வி. ராமன் பெரிய விஞ்ஞானி என்பதோடு நின்று விடுவார்கள். பலருக்கு அப்துல் கலாமுக்கும் (Dr. A.P.J. Abdul Kalam) விண் இயற்பியலாளர் சந்திரசேகருக்கும் (Dr. S. Chandrashekar) உள்ள வித்தியாசம் என்னவென்று தெரியாது.

நெடுங்காலமாகத் தொடரும் அரண் – ராபர்ட்டோ பொலானோ

ராபர்ட்டோ பொலானோவைப் பொறுத்தவரை கவிஞர்களது உலகம் என்பது ஒரு உயிருள்ள மிருகம் போன்றது. ஆயிரம் கைகளும், பல்லாயிரம் சிந்தனைகளும் ஒன்றாக இயங்கி ஒரே இலக்கை நோக்கி பயணம் செய்யும் இயந்திரம். கவிதையின் உள்ளடக்கமும் உருவமும் அதில் மட்டும் முடிவதில்லை. கவிஞனின் உலகத்துள்ளும் ரசனையின் மிச்சங்கள் அடங்கியுள்ளன.

மண்புழு – சிற்றிதழ் அறிமுகம்

உயிர் வாழ்வின் ஆதாரங்களில் ஒன்றானது நீர். அது மாசுறும்போது விளையும் கேடுகள் நாமறிந்தவையே. இவை, நம்முடைய தகவல் தளம் எனும் பொதுத்தளத்துக்குள் இதுவரை வந்தவை. அதை ஊடகங்களின் துணையுடனும் நாமறிவோம். ஆனால், பரவலாக பெரும்பான்மையினர் மத்தியில் பேசப்படாத அறிந்துகொள்ளப்படாத தற்போதைய சூழலில் அத்தியாவசியப்படுகின்ற ஒரு தகவலை கட்டுரையின் மையப்புள்ளியாகக் கொண்டு எழுதியமைக்காக நன்றிகூற விரும்புகிறேன்

ஏபெல் பரிசு பெற்ற பியேர் டெலின்

பெற்றோர்களின் பொதுவான எண்ணம் தங்களால் அடைய முடியாத லட்சியங்களை தங்கள் குழந்தைகள் மூலம் நிறைவேற்றிக் கொள்ள முயற்சித்தல் அல்லது ஒரு முன்முடிவுடன் பொறியாளர், மருத்துவர், வக்கீல் போன்ற ஏதாவது ஒரு தொழிற்கல்வி அளித்து, பொருளாதார பாதுகாப்புடனான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது என்ற வகையில் மட்டுமே இருக்கிறது. இதில் பெரிய தவறில்லை என்றாலும், குழந்தைகளின் விருப்ப பாடத்தை படிக்க விடுவது அவர்களின் வெற்றிக்கு பெரிய அளவில் வழி வகுக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு பியேர் டெலின் (Pierre Deligne)

மருத்துவர் இல. மகாதேவன் – பிஷக் உத்தமன் (மருத்துவர்களில் தேர்ந்தவன்)

நவீன உடற்கூறியல், உடலியங்கியல், நோயறிதல் போன்ற அறிவியல் துறைகளில் அபார திறமை கொண்ட அதே வேளையில் பாரம்பரியமான ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவ முறைகளிலும் அபார தேர்ச்சி கொண்ட ஆளுமைகள் இன்று இந்திய அளவில் வெகு சிலரே இருக்கக்கூடும். பெரும்பாலான நவீன மருத்துவர்களிடத்தில் பாரம்பரிய மருத்துவம் பற்றி மிகப் பிழையான கற்பிதங்கள் மட்டுமே இருக்கின்றன. இப்பக்கத்தில் ஆண்டிசெப்டிக் லோஷன் கொண்டு கை கழுவுவதுகூட ஆயுர்வேதத்தை அழித்துவிடும் எனக் கருதும் தூயவாதிகள். எவ்வகையிலான எளிய தர்க்கத்துக்கும்கூட ஆயுர்வேதம் உட்படுத்தப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை.

ஒரு புதுவகை அறிவியல்

கணிதத்தின் இந்த 300 வருட பெரும் வெற்றியை கடவுள் கணக்கு வாத்தியாராகத்தான் இருக்கவேண்டும் என்று விஞ்ஞானிகள் கொண்டாடினர். இப்போது காலம் மாறிவிட்டது. அவர் ஏன் ஒரு சாஃப்ட்வேர் எஞ்சினியராக இருக்கக்கூடாது?

முப்பரிமாண நகலி – எதிர்காலத்தின் ஊடறுக்கும் தொழில்நுட்பம்

நம்மை சுற்றிக் காணப்படும் எல்லா பொருட்களும் ஏதோ ஒரு தனி வடிவமைப்பாளரின் அல்லது வடிவமைப்புக் குழுவின் கற்பனையில்தான் முதலில் உருவாக்கப்பட்டவை. இயந்திர வழி உற்பத்தியின் காலத்திற்கு முன்னால் வடிவமைப்பாளனே ஒரு பொருளை உருவாக்கினான். இயந்திர உற்பத்தியின் அறிமுகத்திற்கு பின் வடிவமைப்பாளனின் பொறுப்பு மாதிரிகளை உருவாக்குவதில்தான் கோரப்பட்டது.

சமயங்கள், சமயமற்ற இந்துக்கள், சமயசார்பற்ற அரசுகள்

சமூக விஞ்ஞானியாகவும், சுதந்திரச் சிந்தனையாளராகவும், பண்பாட்டு ஆய்வாளராகவும் வகைமைப்படுத்தி நான் அறிந்திருந்த பாலகங்காதராவின் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது அவரை இந்துத்துவ சார்புச் சிந்தனையாளராகவும் நினைத்திருந்தேன். ஆனால் அப்படியெல்லாம் எதுவுமில்லை, அவர் செமிட்டிய சமயங்களையும் காலனியாதிக்கத்தையும் எதிர்மறை விமரிசனத்துக்கு உட்படுத்துக்கிறார் என்ற அளவில் அவரது சிந்தனைகள் இந்திய சிந்தனையை நவீன காலத்தோடு உரையாடும் சுதந்திர சிந்தனையாக மீட்டெடுக்க விரும்புவோருக்கு உதவலாம். மேற்குலகின் சமூக ஆய்வுத் துறைகளின் அணுகல்களின் அடிப்படைகள் பல நிலப்பகுதிகளின் சிந்தனையாளர்களாலும், மக்களாலும் விமர்சனம் செய்யப்பட்ட பின்னும், மறுபரிசீலனை செய்யப்படாது,‘உண்மைகளாக’க் கருதப்பட்டுப் பயன்படுத்தப்படும் முறைமையைக் கண்டனம் செய்வது கொஞ்சம் சாதகமான விஷயமாக இருக்கலாம். ஆனால் உலகின் அதுவரை சமயமற்றிருந்த பிற மக்கள் அனைவரையும் வெவ்வேறு சமயங்களாக செமிட்டியமும் அதன் வெளிப்பாடான காலனியாதிக்கமும்தான் திரட்டின என்று அவர் சொல்வது நிச்சயம் இந்துத்துவர்களுக்கோ, இந்திய சிந்தனையைப் புனருத்தாரணம் செய்ய விரும்புவோருக்கோ உதவாது. அதே சமயம், கருத்துலகில் முரணியக்கத்தை பாலகங்காதரா நிராகரிப்பது எதிர்பாராத ஒரு கொடையாக இருக்கலாம்.

பெருவெடிப்பும் பிரபஞ்ச நுண்ணலை பின்புல கதிர்வீச்சும்

ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் அணுக்கரு துகள்களும் எலக்ட்ரான்களும் இணைந்து அணுக்கள் உருவாகின. அதன் பிறகு இந்தப் பிரபஞ்சம் ஒளி ஊடுருவிச் செல்லும் வெளியாக ஆனது. அதற்கு முன் ஒளி மீண்டும் மீண்டும் (பருப்பொருள்) துகள்களினால் சிதறக்கடிக்கப்பட்டது. அவை துகள்களுடன் பிணைக்கப்பட்டிருந்தது போன்ற ஒரு நிலை. பெருவெடிப்பில் இருந்து 380000 வருடங்கள் வரை பிரபஞ்சம் இந்த நிலையில் இருந்தது. எந்தப் புள்ளிகளிலிருந்து ஒளி வெளியை சுதந்திரமாக ஊடுருவ ஆரம்பித்ததோ அந்தப் புள்ளிகளை இறுதி ஓளிச்சிதறல் பரப்பு என்று கூறலாம். இந்தப் பரப்பிலிருந்து வெளியை ஊடுருவ ஆரம்பித்த ஆதி ஒளித்துகள்கள்தான் இன்று வெளியெங்கும் பரவியுள்ளது.

காலமே உனைஓத நீவந்து காட்டினாய்!

காலம் போல உலகமும் தொன்மையானது. தொல்லுலகம் என அழைக்கப்படுகிறது. முதுமை, தொன்மை, பழமை எல்லாவற்றிற்கும் ஒரு தொடக்கம் இருக்க வேண்டுமே. பிரபஞ்சத் தோற்றத்தில் காலதத்துவமே முதலில் தோன்றியது என்பர். இந்த உலகமும் காலமும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியுடையனவாக இருந்துள்ளன; அவருக்கும் பல்லாயிரமாண்டுகளுக்கு முற்பட்டவர்களுடையதாவும் இருந்துள்ளன.