மௌனத் திரைப்படயியலின் வீழ்ச்சியின்பின் மாற்றுப் படங்களின் பிரக்ஞையின்மை

பெர்க்மென், ஃபெலினி, ப்ரெஸ்ஸன், தார்க்கோவ்ஸ்கி முதல் இன்று வரையிலான அந்த பட்டியலிலுள்ள பெயர்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். கலைப் படங்கள் உருவான பிறகு சினிமா யதார்த்த வெளியை நம்பி இறங்கிய நேரத்தில் ஆங்காங்கு ஆவணப்பட திட்டங்களும் தோன்றி செயல்பட ஆரம்பித்தன. இதுதான் ஆவணப் படம் என்று தனித்து நிற்கும் அளவுக்கு அதன் பங்குகள் குறை சொல்ல முடியாதவை. அவை யதார்த்த சூழலை மட்டுமே சார்ந்தவை. அதன் பயன்பாடுகள் கருத்துச் செறிவை வெளிப்படுத்துபவையாகவும், அதிகம் சமூக தளத்துக்குள் அறியப்படாதவையாகவுமாக இருந்து வரும்.

வெயில் நதி – சிற்றிதழ் அறிமுகம்

முதல் இரண்டு இதழ்களைவிட மூன்றாவது இதழில் சிவம் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதை வாசிக்கும்போது உணர முடிகிறது. சிற்றிதழ்களுக்கே உரிய க்ளாசிக் உலக சிறுகதைகள் இடம்பெறாமல் இருந்தாலும் உள்ளடக்கத்தை ரசிக்க முடிகிறது. புதிய படைப்பாளிகளுக்கு தொடர்ந்து இடமளித்து வருவதை நியாயப்படுத்தும் வண்ணம் தேர்ந்த எழுத்தாளர்களிடமிருந்து அவர்களை சிறிதளவும் பிரித்து இனம் காண்பதற்கு இயலாத வகையில் படைப்புகள் சிறப்பாகவே பிரசுரப்படுத்தப்படுகிறது.

ஹானெக வின் அமூ(ர்)

அவரது திரைப்படங்களின் பெரிய பலம் என்று ஒன்று உண்டென்றால் அது அவர் கேமிராவை உபயோகிக்கும் விதத்தையே சொல்ல வேண்டும். பியானோவை ஒருவர் வாசித்தால் விரல்களின் மேல் காமிரா படியும். லிஃப்டின் உள்ளே ஒருவர் நிற்கும் போது எதிரிலிருக்கும் தொடர்பில்லாத மற்றொரு கதாபாத்திரத்தை கேமிரா பார்க்கும். ஒரு காட்சியில் பொதுவாக நின்று சூன்யத்தையே காமிரா சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்கும்.

மண்புழு – சிற்றிதழ் அறிமுகம்

உயிர் வாழ்வின் ஆதாரங்களில் ஒன்றானது நீர். அது மாசுறும்போது விளையும் கேடுகள் நாமறிந்தவையே. இவை, நம்முடைய தகவல் தளம் எனும் பொதுத்தளத்துக்குள் இதுவரை வந்தவை. அதை ஊடகங்களின் துணையுடனும் நாமறிவோம். ஆனால், பரவலாக பெரும்பான்மையினர் மத்தியில் பேசப்படாத அறிந்துகொள்ளப்படாத தற்போதைய சூழலில் அத்தியாவசியப்படுகின்ற ஒரு தகவலை கட்டுரையின் மையப்புள்ளியாகக் கொண்டு எழுதியமைக்காக நன்றிகூற விரும்புகிறேன்