ஆயிரம் தெய்வங்கள் – 8

“மெஸப்பட்டேமியா” என்பது பல நாடுகளைக் குறிக்கும். அதில் சுமேரியாவும் அடக்கம். சுமர் திரிந்து சுமேரியாவாயிற்று. எரக் பின்னர் ஈராக் ஆனது எரிது, லகாஷ், உர் ஆகியவை சுமேரிய நகரங்கள். இந்த நகரங்களில் தொழப்பட்ட தெய்வங்கள் வேளாண்மைக்கும், நீர் மேலாண்மைக்கும் எடுத்துக்காட்டுகள். சுமேரியாவின் தனிச்சிறப்பு. உலகிலேயே முதல் விவசாயப் பண்பாடு என்று வரலாற்று அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட பெருமையாகும்.

ஆயிரம் தெய்வங்கள் – 7

ஈரானிய புராண மரபுப்படி மித்ரா ஒரு அவதாரம். மீண்டும் உலகைப் புத்துயிர் பெறச் செய்யவே கடவுளுக்குக் காவலனாயிருந்த காளையை கடவுள் விருப்பப்படி கொன்றதாக மரபு. சிரோஷீடனும், இறப்பின் தெய்வமான ரஷ்ணுவுடனும் கூட்டாட்சி செய்த மித்ரா, அங்கும் ஒளியின் கடவுள். பகல் தெய்வம். இந்திய சூரியனைப்போல் வெள்ளைக் குதிரை ரதத்தில் பவனி வருபவர். போர் தெய்வமும் மித்ரனே. அகுராவுடன் சேர்த்து உயர்நிலையில் பூஜிக்கப்பட்ட மித்ரா சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவன். பொய்மையை எதிர்த்துப் போராடுபவன்.

ஆயிரம் தெய்வங்கள் – 6

பாரசீக ஈரானிய தெய்வக்கதைகளை நுணுகி ஆராய்வோமெனில் தமிழ்நாட்டில் எவற்றையெல்லாம், யாரையெல்லாம் ஆரியம் என்றும் ஆரியர் என்றும் அறியப்பட்டுள்ளதோ அவை அனைத்துமே தவறு என்று எண்ணத்தோன்றும். பண்டைய உலக வரலாற்றின்படி ஆரியர்களின் தளமாயிருந்தது பாரசீகம். பாரசீகப் பேரரசர்கள் டரீயஸ், செர்சஸ் காலத்தில் இந்தியாவின் வடமேற்குப்பகுதி பாரசீக ஆட்சிக்கு உட்பட்டிருக்கலாம்.

ஆயிரம் தெய்வங்கள் – 5

அன்று இலக்கியவாதியாக வாழ்ந்தேன். வரலாறை நேசித்தேன். மக்களை அறிய பூகோளமும் வரலாறும் அறிவது நன்று என்று அவற்றையும் கற்றேன். இன்று இயற்கை விவசாயியாக வாழ்கிறேன். இயற்கை விவசாயத்தில் பள்ளிக்கூடம் கூட நடத்துகிறேன். ”வேதம்” என்ற சொல்லை அடிக்கடி நான் பயன்படுத்துவதைக் கண்டு இயற்கை விவசாயத்தில் என்னை குருவாக ஏற்றுக்கொண்ட ஒரு வேளாள சிஷ்யர், திடீரென்று ”ஐயா நீங்கள் பிராமணரா?” என்று கேட்டார், அதன் பின்னர், ”பட்டையா, நெட்டையா” என்றார்.

ஆயிரம் தெய்வங்கள் – 4

சூரியனைச் சுற்றியுள்ள எகிப்தியக் கதைகளில் எவ்வாறு தாய்தெய்வமாகிய ஐசிஸ் ஒளிபெற்றால் என்ற விவரம் சூரியனின் சுழற்சியை அறிவுப் பூர்வமாகச் சிந்திக்கும் உருவகமாகத் தோன்றுகிறது. ஐசிஸ் மூவுலகிலும் சக்தி நிரம்பிய தாய்தெய்வம். மாய-மந்திரங்களில் வல்லவள் என்றாலும் ரி, அதாவது சூரியனின் ரகசியத்தை அறியாமலிருந்தாள். ரி ரகசியம் தெரிந்துவிட்டால் அவள் சக்தி மேலும் உயரும். ஒரு புதிய சக்தி பிறக்கவும் வழி ஏற்படும்.

ஆயிரம் தெய்வங்கள் – பகுதி 2

சொர்க்க லோகத்தைக் கண்டுபிடித்த எகிப்திய மதமாகட்டும், கிரேக்க மதமாகட்டும் மன்னர்களுக்கு மட்டுமே சொர்க்கவாசல் தருகிறது. கடவுள் மன்னனை தண்டிப்பதில்லை. மன்னனே கடவுள். இப்படிப்பட்ட அகங்காரத்தைத் தட்டிக்கேட்டதால் தகராறு வந்தது. தவறு செய்தால் மன்னனுக்கும் தண்டனை உண்டு. ஆண்டவனின் ராஜ்ஜியத்தில் ஏழை பணக்காரன் இல்லை. இப்படியெல்லாம் பேசியதால் ஏசுவுக்கு தண்டனை கிடைத்தது.

ஆயிரம் தெய்வங்கள்

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் சொர்க்கம் – நரகம் என்ற கருத்துகள் வந்தன. இக்கருத்து எல்லா நாகரிகங்களுக்கும் பொது. இறப்பை ஏற்காதவர்கள் இன்றும் உள்ளனர். அன்றும் உள்ளனர். பனிக்கட்டிக்காலத்தில் மதத்தின் மூலவேர் லாஸ்கோ ஓவியத்தில் தென்பட்டது. மிருக வழிபாட்டின் தொடக்கம்.
வேதகால ஆரியர்கள் கடாவெட்டி யாகம் செய்தார்கள். தானியங்களை அக்னிக்கு அதாவது தீயிலிட்டார்கள். இதெல்லாம் ஏன்?

பாரம்பரியங்களும், பகுத்தறிவும்

ஒரு ஆலயத்திற்குள் இன்று தடுமாறும் தட்ப வெப்பத்திற்குரிய அருமருந்தென்று உணரப்பட்ட நந்தவனங்கள், திருவருட்சோலை போன்ற வடிவங்களை கவனிக்கலாம். பழங்காலத்து ஆலயங்கள் மிகப்பெரியவை. கல்விக்கூட வளாகத்தைப் போல் வடிவமைக்கப்பட்டு வைதீக ஆகமங்களும், தேவாரமும், திவ்யபிரபந்தங்களும் கற்பிக்கப்பட்டன. இது ஒரு பகுதி. மண்ணில் வாழும் சகல ஜீவராசிகளம், ஊர்வன, பறப்பன, நடப்பன என்று சிலைகளாகவோ, சித்திரங்களாகவோ ஆலயங்களில் காணலாம். உதாரணமாகப் பசு காமதேனுவானது. காளை நந்தியானது.

இறந்து கொண்டிருக்கும் இயற்கையின் அற்புதங்கள்

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி என்று சங்காலத்தமிழன் இலக்கணம் சொன்னான். மலையைப் பார்த்த ஒரு அமைச்சரின் புதல்வன் நினைப்பது வேறு. குறிஞ்சியாவது உறிஞ்சியாவது இம்மலையை வெடிவைத்துத் தகர்த்தால் எவ்வளவு கல் அறுக்கலாம்? அறுத்த கற்களை ஏற்றுமதி செய்தால் எத்தனை தேறும்? மலை மீது சந்தனம் உண்டு. தேக்கு உண்டு. தான்றி உண்டு. வெட்டி விற்றால் எவ்வளவு லட்சம் தேறும்? நேரிடையாகத் தான் சம்பந்தப்படாமல் மரக்கடையுடன் ஒரு பேரமே முடிந்து விடுகிறது.

எல்லோரும் சந்தன மரத்தைக் கடத்த முடியாது. வேலா மரத்தை வெட்டி விற்றால் கூட சில ஆயிரங்கள் உண்டு. விறகு விலை ஒரு டன் 3000 ரூபாய். மண்ணாசைக்கு மேல் மர ஆசையும் வந்துவிட்டதே. இறைவா?

மண்ணை வளர்த்த மாமனிதர்கள்

மண்ணை வளப்படுத்துவதுதான் நலவாழ்வு விவசாயம். ரசாயனம் இட்டு மண்ணைச் சுரண்டுவது நோய் விவசாயம். மண் என்பது வெறும் ரசாயனங்கள் மட்டும் நிரம்பிய பொருள் அல்ல. அது உயிருள்ள, மேலும் உயிரினங்கள் நிரம்பிய ஒரு பொருள். அதை வெறும் ரசாயனச் சத்துகளால் நலமாக வைத்திருக்க முடியாது. அதில் வாழும் உயிரினங்கள் நலமாக இருந்தாலே மண் ஆரோக்கியமாக இருக்கும்.

டாக்டர் ஜோ. நிக்கல்ஸின் ஞானோதயம்

ரசாயன உரமிட்டதால் இவரது பயிர்கள் நல்ல கரும்பச்சை தட்டியது. அவ்வளவுதான். பூச்சித்தாக்குதல் தொடங்கின. பயிர்களுக்கு ஏராளமான நோய்கள் வந்தன. மளமளவென்று மேலே ஏறி விண்ணைத் தொட எண்ணியவர் நிற்கமுடியாமல் நிலை குலைந்து மண்ணில் சாய்ந்தார். அந்த அளவுக்கு நஷ்டம். நாலாவது நிக்கோலசின் புதல்வர்தான் நமது கதாநாயகர். அவர்தான் டாக்டர் ஜோ.நிக்கோல்ஸ்.

தாவரங்களுடன் பேசிய அற்புத விஞ்ஞானி – கார்வர்

ஒரு தோட்டக்கலை நிபுணராக அமர்ந்து கார்வர் யோசித்தபோது மிகவும் வளம் இழந்த மண்ணுக்கு ஏற்ற பயிர் என்ற வகையில் வேர்க்கடலையே அவர் கண்முன் நின்றது. ‘என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் பிறநாட்டில்?’ என்று எம்.ஜி.ஆர் பாடியது போல் இந்தக் கார்வரும் ‘என்ன வளம் இல்லை இந்த வேர்க்கடலையில், ஏன் செய்ய வேண்டும் பருத்தியை சாகுபடி?’ பாட்டுப்படித்தார். ஷூட்டிங் முடிந்தவுடன் எம்.ஜி.ஆர். தூங்கியிருப்பார். கார்வர் கையில் கடலையை வைத்துக்கொண்டு ஏழு இரவுகள் ஏழு பகல்கள் தூங்காமல் ஆய்வு ஆய்வு ஆய்வு என்று ஆராய்ந்தார்.

மண்விழுதில் நுண்ணுயிரிகள்

ஆனால் ஒரு தாவரத்துடன் எந்த இனவகையிலும் பொருந்தாத ஒரு பூஞ்சையை, ஒரு கிருமியை அதன் பாரம்பர்ய குணக்கூறை மலடாக்கிவிட்டு அதைச் செலுத்துவது மரபியல் ஒழுக்கமா? இப்படி ஒரு ஒழுக்கங்கெட்ட விதைதான் மரபணு மாற்ற விதை. தமிழ்நாட்டில் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர், மாலிக்யுலர் பயாலஜி கற்றவர் – பிட்டி கத்தரிக்காய் விஷமில்லை என்று கூறியதற்கு சந்திராயன் மயில்சாமி அண்ணாத்துறை ஒத்து ஊதியுள்ளார். மயில் சாமிக்குச் சந்திரனைப் பற்றித் தெரிந்த அளவு, பூமியைப் பற்றி எதுவும் தெரியாது என்று புரிகிறது. பூமியைப் பற்றி அவர் ஏன் கவலைப்பட வேண்டும்? சந்திரனில் தங்க இடம் ஒதுக்கிவிட்டாரோ!

விதைகளின் கதைகள்

இந்தியாவின் பாரம்பர்ய நெல் விதைகளை அந்நிய சக்திகளுக்கு வழங்கியது உண்மையானால் அது போற்றக்கூடிய விஷயமாகத் தெரியவில்லை. அவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட இந்திய நெல்ரகங்கள் in Situ-வாகக் காப்பாற்றப்பட்டு உலகில் எந்த நாட்டிலாவது சாகுபடி செய்யப்பட்டிருந்தால், அதைப் பாராட்டலாம். யாருக்கும் பயனில்லாமல் அமெரிக்க விதை வங்கிகளில் உகந்த குளிர்சாதன வசதியுடன் நைட்ரஜன் நீர்ம ஆவிக்குள் முடங்கிக் கிடந்தால் யாருக்கு என்ன லாபம்? ஒரு காலனி நாடாக இருந்த இந்தியாவிலிருந்து இந்தியச் செல்வங்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்குக் கொள்ளை போனது சரி. 20-ம் நூற்றாண்டில் இந்திய விடுதலைக்குப்பின் நிகழ்ந்த விதைக்கொள்ளைக்கு என்ன சொல்லித்திட்டுவது?

வேளாண்மை உயில்: ருஷியாவில் மண்ணுயிர் ஆய்வு

பூச்சிகளையும் நோய்களையும் கட்டுப்படுத்த ஸ்பேரயர் கொண்டு காடுகளில் ‘மருந்து’ அடிப்பதில்லை. காடுகளில் உள்ள விலங்குகளும் தாவரங்களுக்கும் நோய் வருவதுண்டு. ஆனால் மருத்துவ உதவியின்றி அவை குணமாகின்றன. விலங்குகளும் தாவரங்களும் பூச்சி பூசணங்களிலிருந்து தாமாகவே காப்பாற்றிக் கொள்கின்றனவே. எவ்வாறு? இழந்துவரும் மண்வளம் மீட்கப்படவேண்டும். நவீன விவசாயத்தில் மண்வளம் இழப்பது மட்டுமல்ல. மண்ணில் மக்குப் பொருள் இல்லாததால் மண்ணே அரிப்புகளுக்கு பலியாகிப் பாலையாகிவிடுகிறது.