- ஜப்பானியப் பழங்குறுநூறு
- துயரிலும் குன்றா அன்பு
- உனக்காக உறைபனியில்
- நீ காத்திருக்கப் பொறுக்கிலேன்
- கடவுளும் காணா அதிசயம்
- கனவிலேனும் வாராயோ?
- எத்தனை காலம்தான் தனித்திருப்பேனோ?
- உயிரையும் தருவேன் உனைக்காண
- நீ வருவாயென!
- மலைவளி வீழ்த்து தருக்கள்!
- துயர் கூட்டும் நிலவு
- செவ்விழையினும் உயர்ந்த செவ்விலை
- ஊற்றுநீர் அன்ன தூய இதயம்
- குளிரில் தனிமை கொடிது
- வெண்பனியா வெண்மலரா?
- பிரிவினும் உளதோ பிரிதொன்று?
- நிலவு ஒரு பனியாகி
- மலையாற்றின் இலையணை
- சக்குராவின் சலனம்
- நீண்ட வாழ்வே சாபமோ?
- மனித மனமும் மலர் மணமும்
- கோடைநிலா எங்கே?
- புல்நுனியில் பனிமுத்து
- கொடிவழிச் செய்தி
- இறை நின்று கொல்லுமோ?
- காணும் பேறைத் தாரீரோ?
- சொல்லாத காதல் எல்லாம்
- காதல் மறைத்தாலும் மறையாதது
- காற்றினும் கடியது அலர்
- மறவேன் பிரியேன் என்றவளே!
- காதல்வலி விதைக்கும் வெறுப்பு
- தேடலும் மறத்தலும்
- ஜப்பானிய பழங்குறுநூறு 47-50
- வலிவிடு தூது
- வாள்போல் வைகறை
- நெஞ்சம் மறப்பதில்லை
- நிலவினும் நெடிது!
- இடம் மாறினும் மணம் மாறுமா?
- காவலும் தாண்டுவது காதல்
- பனிவிலகலில் அக்கரை வெண்மை
- எனக்கெனவே மலர்ந்தாயோ?
- விழியிலிருந்து நினைவுக்கு
- உள்ளும் புறத்தும் தனிமையே!
- காதல்மொழிகள் கடலலை போலே!
- கேட்டதும் கிடைத்ததும்
- துள்ளிவரும் வெள்ளலையே!
- இடம்பெயரும் புள்ளினங்காள்!
- மைக்குழற் செறிவன்ன காதல்
- துயரறுத்தலே துயரமோ?
- உள்ளத்தில் உள்ளேனா?
- தூவானமும் வெண்வானமும்
- ரகசியமானது காதல்
- உடைகளும் சுமையடி தனிமையிலே!
- காலமென்ற தேரே, ஓடிடாமல் நில்லு!
- துன்பம் போக்குவதே தூயப்பணி
- எரிதழல் உள்ளம்
- துயர்சூழ் உலகில் தனிமை
மூலப்பாடம்:
கான்ஜி எழுத்துருக்களில்
夜もすがら
物思ふころは
明けやらで
閨のひまさへ
つれなかりけり
கனா எழுத்துருக்களில்
よもすがら
ものおもふころは
あけやらで
ねやのひまさへ
つれなかりけり
ஆசிரியர் குறிப்பு:
பெயர்: மதகுரு ஷுன்யே
காலம்: பிறப்பு: கி.பி 1113. இறப்பு தெரியவில்லை.
இத்தொடரின் 74வது பாடலின் (கேட்டதும் கிடைத்ததும்) ஆசிரியர் தொஷியோரியின் மகனும் 71வது பாடலின் (நெல்வழிசெல் இசை!) பாடலின் ஆசிரியர் ட்சுனேனொபுவின் பேரனும் ஆவார். 3 தலைமுறைகளைச் சேர்ந்த கவிஞர்களின் செய்யுள்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றிருப்பது இவர்களது குடும்பத்திடமிருந்து மட்டுமே. கியோத்தோவுக்கு முன்னர் தலைநகராக இருந்த நராவில் உள்ள புகழ்பெற்ற தோதாய்ஜி புத்தர் கோயிலில் மதகுருவாக இருந்த இவர் கியோத்தோவில் கரின்யென் என்றொரு கோயிலையும் நிர்வகித்து வந்தார். அது பல்வேறு புலவர்கள் கூடித் தங்கள் பாடல்களை அரங்கேற்றம் செய்யும் இடமாகவும் விளங்கியது. ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 83 பாடல்களும் ஒரு தனிப்பாடல் திரட்டும் இடம்பெற்றிருக்கின்றன. காலத்தால் அழியாத 36 பிற்காலப் புலவர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
பாடுபொருள்: காத்திருத்தல் தரும் வலி

பாடலின் பொருள்: ஒவ்வோர் இரவும் உன் நினைவிலேயே நீண்டு கழிகிறது. உன் உள்ளத்தில் நான் இருக்கிறேனா என்பதை நீ காட்ட மறுப்பது போலவே என் வீட்டின் சாளரமும் விடியலின் வெளிச்சத்தைக் காட்ட மறுக்கிறது.
ஒருதலைக் காதலின் வலியைக் கூறும் ஓர் எளிய பாடல். ஜப்பானிய இலக்கியங்களில் இரவு முழுக்கக் காத்திருத்தல் என்பது பெண்டிர் தம் கணவரின் வருகைக்காகக் காத்திருப்பதாகவே பெரும்பாலும் இருக்கும். ஆனால் இப்பாடல் காதலியின் மனதில் தாம் இருக்கிறோமா என்று தெரியாமல் உழலும் மனதைக் கூறுகிறது.
வெண்பா:
இரவுகள் நீண்டிட எண்ணமும் சோர்ந்து
துரத்திட ஏங்கியே நிற்கக் – கரத்தலும்
செய்தே முகமது காட்டாது நில்லுமுன்
உள்ளத்தில் உள்ளதா அன்பு?
கரத்தல் – மறைத்தல்
அழச்சொன்னாயோ நிலவே?
மூலப்பாடம்:
கான்ஜி எழுத்துருக்களில்
嘆けとて
月やは物を
思はする
かこち顔なる
わが涙かな
கனா எழுத்துருக்களில்
なげけとて
つきやはものを
おもはする
かこちがほなる
わがなみだかな
ஆசிரியர் குறிப்பு:
பெயர்: மதகுரு சாய்க்யோ
காலம்: கி.பி 1118 – 1190.
பேரரசர் சுதொகுவின் இடங்கைப் பிரிவு மெய்க்காவல் படையில் அதிகாரியாக இருந்த இவர் துறவறம் பூண்டதற்குப் பின்னால் ஒரு சுவையான நிகழ்வு உண்டு. ஒருநாள் பேரரசருடன் நந்தவனத்தில் உலா வந்தபோது ஒரு பறவை அங்குமிங்கும் பறந்தபடி அங்கிருந்த செர்ரிப்பூக்களின் இதழ்களைச் சிதறடித்துக்கொண்டிருந்தது. அதைக்கண்டு கோபமுற்ற பேரரசர் இவரிடம் பறவையை விரட்டச் சொன்னார். இவர் தனது கைவிசிறியால் குறிபார்த்து அடித்துப் பறவையை வீழ்த்தினார். பின்னர் வீட்டுக்குத் திரும்பியதும் இவரது மனைவி தான் ஒரு கெட்டகனவைக் கண்டதாகவும் கனவில் தான் ஒரு பறவையாக மாறியதாகவும் அதை அவர் கொன்றுவிட்டதாகவும் கூறினார். இதைக்கேட்டுத் துயருற்று அப்போதே (22ம் வயதில்) குடும்பத்தையும் மனைவியையும் விட்டுவிட்டுத் துறவறம் மேற்கொண்டுவிட்டார்.
துறவியாக இருந்தாலும் பல காதல் கவிதைகளை இயற்றினார். நிலவும் பூக்களும் இவரது விருப்பமான கருக்கள். பல இடங்களுக்குப் பயணம் செய்து ஆங்காங்கே காணும் காட்சிகளை வைத்துக் கவிதைகளை இயற்றித் தொகுத்தார். அதில் குறிப்பிடத்தக்கது மலையகக் கவிதைகள் எனப்படும் சான்கஷூ தொகுப்பாகும். பின்னாளில் வந்த மட்சுவோ பாஷோ போன்ற கவிஞர்கள் இவரை முன்மாதிரியாகக் கொண்டுதான் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்து கவிதைகளை இயற்றினர்.
இத்தொடரின் 83வது பாடலின் (துயரறுத்தலே துயரமோ?) ஆசிரியர் தொஷினாரியின் நண்பர். ஆனால் தொஷினாரி நடுவராக இருந்து தீர்ப்பளித்த பல பாடல்கள் சிறந்தவை என்பதில் இவருக்கு உடன்பாடில்லை. எனவே, இவரே கற்பனையில் கவிதைப்போட்டிகளை நடத்தி, தொஷினாரி சிறந்ததாகத் தேர்ந்தெடுத்த ஒவ்வொரு பாடலுக்கும் எதிர்ப்பாடல் ஒன்றை இயற்றி “மிமோசுசோ நதிக்கரைக் கவிதைகள்” என்ற பெயரில் அவற்றைத் தொகுத்தார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 266 பாடல்களும் மலையகக் கவிதைகள் என்ற தனிப்பாடல் திரட்டும் இடம்பெற்றிருக்கின்றன.
பாடுபொருள்: உள்ளத்தின் வலியை நிலவு அதிகரித்தல்
பாடலின் பொருள்: வானத்தில் வட்டநிலா என்னை அழச்சொல்கிறது. இல்லையில்லை. அழவைப்பது என் உள்ளத்தின் நினைவுகளே. கண்ணீர் பெருக்கெடுப்பதற்கு நிலவைக் குறை கூறுவானேன்?
வடகிழக்கு ஜப்பானின் செந்தாய் நகரின் மியாகினோ எனும் இடத்துக்குச் சென்றபோது இயற்றிய பாடல் இது. இப்பாடலைத் தனது தொகுப்பில் காதல் பாடல்கள் வரிசையில் வகைப்படுத்தியிருக்கிறார். ஆனால் காதல் என்ற பார்வையில் இல்லாவிட்டாலும் வாழ்வின் எல்லாத் துக்கங்களுக்கும் பொருந்துவதாக இருக்கிறது இப்பாடல். முழுநிலவு உணர்வுகளைத் தூண்டக்கூடியது என்ற கருதுகோள் ஜப்பானிய இலக்கியங்களிலும் இருப்பதாக உரையாசிரியர்கள் கூறுகிறார்கள்.
வெண்பா:
உள்ளமும் தேம்பிடத் தேம்பிடத் தோய்ந்திடும்
தெள்ளிய நீருடைக் கண்களின் – வெள்ளமும்
நில்லாது பொங்கிடப் பொங்கிட வைக்கும்
நிலவல்ல எந்தன் நினைவு
(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
