கிணற்றிலிருந்து வெளிவரும் உண்மை

This entry is part 1 of 14 in the series குடாகாயம்

அவருடைய ஓவியங்கள் academicism என்று சொல்லப்படும் பயில்முறையைச் சார்ந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கத்தியக் கலையுலகில் பயில்முறைக் கலைகள் கோலோச்சிக் கொண்டிருந்ததன. இது ஓவியம், சிற்பம், இசை போன்று பலவற்றுக்கும் பொருந்தும். இவ்வழிக் கலைஞர்கள் பல வருடங்கள் – அதாவது பத்து ஆண்டுகளுக்கும் மேலாக – தங்கள் கலையைப் பயிற்சிக்கூடங்களில் ஆழ்ந்து கற்றார்கள்

இமானுவல் கன்ட்டின் அழகியல் தத்துவம்

This entry is part 2 of 14 in the series குடாகாயம்

ஊஞ்சலையும், கதைமாந்தர்களையும், ரோஜாச்செடியையும், கயிறுகளையும், கூபிட்-ஐயும், குரைக்கும் நாயையும், விலகும் வெளிர்சிவப்பு ஆடையையும், கிளர்வூட்டும் கால்களையும், ஏங்கித் தவிக்கும் இளைஞனின் கண்களையும் தனித்தனியே காண்கிறோம். இவற்றை ஒருசேரப் பொருத்தி நம் மனம் நமக்கு ஒரு கதை சொல்கிறது.

இமானுவல் கன்ட்டின்  உணர்வோங்குப் பெருநிலை

This entry is part 3 of 14 in the series குடாகாயம்

தமிழில் உன்னதத்திலிருந்து வேறுபடுத்திக்காட்ட நான் இறையுணர்வு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன்.  பேரழகின் ஊடாக இணைந்திருக்கும் முடிவின்மையை அதன் முக்கிய வரையறையாகக் கொள்ளலாம். ஊடாக, அது எழுப்பும் அச்சம், இயலாமை, விந்தை எனப் பல்வேறு உணர்வுகளையும் ஒட்டுமொத்தமாகக் கொண்டது இறையுணர்வு.

கிரேக்கத்து ஸிஸிபஸும் கேரளத்துப் ப்ராந்தனும் – அல்பேர் கமூவின் அபத்தவாதம்

This entry is part 4 of 14 in the series குடாகாயம்

ஸிஸிபஸின் தண்டனையைப் பலரும் ஓவியமாக வடித்திருக்கிறார்கள்.  இவைகளுக்குள்ளே முன் பொதுயுகம் 530-ல் சுட்ட களிமண் பானையில் வரையப்பட்டதே நமக்குக் கிடைத்தவற்றில் மிகப் பழமையானது.   பொதுயுகம் 1549-ல் இத்தாலியஓவிய மேதை டிஷியன் என்பவரால் திரைச்சீலையில் தைலவண்ணம் கொண்டு வரையப்பட்ட ஸிஸிபஸ் ஓவியங்களுக்குளே மிகச் சிறப்பானதாக அறியப்படுகிறது.

சபலங்களைக் கடத்தல்

This entry is part 5 of 14 in the series குடாகாயம்

சித்தார்த்தரை சலனப்படுத்தும் அவன் முயற்சிகள் ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் தீட்டப்பட்டிருக்கின்றன.  இவற்றுள் பழமையானவை அஜந்தா குகைகளில் இருக்கின்றன.  புத்தரின் துறவறத்தின் இந்தக் கட்டத்தை மிக நேர்த்தியாக வடித்த சிற்பம் காந்தாரத்தில் (தற்பொழுதைய ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான்) கண்டெடுக்கப்பட்டன. காந்தாரச் சிற்பங்களில் இந்து, பௌத்த மதங்களின் கதையாடல்கள் கிரேக்கத்து சிற்ப நுட்பங்களுடனும், உடற்கூறு துல்லியங்களுடன் செதுக்கப்பட்டன

எங்கிருந்து வந்தோம்? நாம் யார்? நாம் எங்கு செல்கிறோம்?

This entry is part 6 of 14 in the series குடாகாயம்

2019-க் கனடாவின் தலைநகர் ஆட்டவா-வில்  “இளம் தஹித்தியப் பெண்ணுடன் அவருடைய தொடர்பு” என்று தலைப்பிட்ட ஓவியம்”13-14 வயது தஹித்திய சிறுமியுடன் அவர் தொடர்பு” என்று வெளிப்படையாக மாற்றித் தலைப்பிடப்பட்டது.  தொடர்ந்து அவருடைய ஓவிய மேதைமைக்கு அப்பால், ஒரு காலணியாதிக்க வெள்ளையராக அவருக்கு இருந்த அதிகார நிலையை அவர் தன்னுடைய சுயதேவைகளுக்காக எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார் என்பதையும் சேர்த்தே சொல்லவேண்டும் என்கிறார்கள். 

எதற்காக உயிரைத் துறக்கலாம்? – 1

This entry is part 7 of 14 in the series குடாகாயம்

படத்திலிருக்கும் பெண்களைக் கவனித்தால் அவர்கள் முற்றிலும் வேறுபட்ட உணர்ச்சி நிலையில் இருக்கிறார்கள்.  ஒருவர்மீது ஒருவர் சாய்ந்திருக்கும் இரண்டு இளம் பெண்களில் ஒருவர் சகோதரி, மற்றவர் அவளுடைய கொழுந்தியாள்.  இவர்கள் கனவனையோ, காதலனையோ (அல்லது இருவரையுமோ) இழக்கப்போகிறார்கள்.  பின்னாலிருக்கும் முதியவள் தன் இரண்டு பேரப்பிள்ளைகளைத் தழுவி ஆறுதல் அளிக்கிறாள்.  அவர்களுக்கான உடை வெளிர் நிறங்களில் இருக்கின்றன, அவர்களது சோகத்தை மேலிட்டுக் காட்டுகின்றன

எதற்காக உயிரைத் துறக்கலாம்? – 2

This entry is part 8 of 14 in the series குடாகாயம்

உன்னதமான வாழ்வை வாழ்வது எப்படி என்று சிந்திக்கத் தூண்டியவர்.  சந்தேகம் – அதனுடன் கூடவே வரும் சங்கடம் மற்றும் குழப்பம் – இவையே உன்னதத்தை நாம் கண்டடைய முக்கிய வினையூக்கிகள் என்று உணர்த்தினார்.  நம்மை வசதியாக உட்கார்ந்துகொண்டிருக்கும் குகைகளை விட்டு வந்து, பரந்த வெளியையும் கண்கூசும் சூரியனையும் காண, அதன்மூலம் உலகைப் புரிந்துகொள்ளச் சொன்னவர்.  அவர் வாழ்ந்த நாட்களில் இவை பெரும் குற்றங்களாகக் கருதப்பட்டன, அதற்கான மரண தண்டனையையும் அவர் ஏற்கவேண்டியிருந்தது. 

பாவம், மரணம், நரகம்

This entry is part 9 of 14 in the series குடாகாயம்

இடப்பகுதி ஒருவித தெய்வீகத் தன்மை கொண்டதாகவும், கருமை நிறத்தில் வலப்புறம் ஒருவித நரகம் போலவும், நடுப்பட்ட பெரும்பகுதி சுவர்க்கம்-நரகம் போன்றவற்றின் கலவையாகவும் தோன்றுகின்றன.  அவற்றைப் புரிந்துகொள்ள நாம் பகுதிகளைத் தனித்தனியே பார்த்தாக வேண்டும்.  முதலில் இடப்புறம்,  இது ஈடன் தோட்டத்தின் வடிவம்.  நம் கவனத்தை முதலில் ஈர்ப்பது கீழ்ப்பகுதி, இங்கே கர்த்தர் ஏவாளையும் ஆதமையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்,

கானலின் நீரோ, காட்சிப்பிழையோ?

This entry is part 10 of 14 in the series குடாகாயம்

பார்வையாளனின் மூளை படைப்பை எப்படி உள்வாங்கிக் கொள்ள வேண்டும், அதை எப்படி அவருக்குக் கடத்துவது எனத் தனக்கென விதிகளை உருவாக்கிக்கொள்வதனால் நவீன ஓவியர் ஒரு தேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி (Neuroscientist) போலச் சிந்திக்கிறார்.  எதை வரைவது, எதை விடுப்பது அல்லது சிதைப்பது என்று அவர்  கருதும் பொழுது, அந்த விடுதலும் சிதைத்தலும் எப்படிப் பார்வையாளானின் மூளையால் இட்டு நிரப்பப்படும் அல்லது சரிகட்டப்படும் என்று அவர் தீர்மானித்தாக வேண்டும். 

இருளையும் ஒளியையும் வென்றவன்

This entry is part 11 of 14 in the series குடாகாயம்

கரவாஜியோ இறந்து இப்பொழுது நானூறு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இன்றும் செவ்வியல் முறையின் முக்கிய மாமேதை என்றும் இருளையும் ஒளியையும் ஓவியத்தில் எப்படிப் பயன்படுத்துவது என்று நமக்குக் கற்றுக்கொடுத்த வித்தகர் என்றும் புகழப்படுகிறார். கரவாஜியோவின் ஓவியங்கள் பரோக் (Baroque) என்ற மாபெரும் வகைப்பாட்டை ஓவியங்களில் துவக்கிவைத்தது

கண்டுணரும் நொடிப்பொழுதின் காட்சி

This entry is part 12 of 14 in the series குடாகாயம்

இந்தப் பின்புலமெல்லாம் தெரியாமல் இதைப் பார்த்தாலும் இது மிகச் சிறந்த ஓவியம் என்று பெரும்பாலானவர்கள் ஒத்துக்கொள்வார்கள். பார்த்தவுடனேயே இந்த மனிதர் உயிருடன் இல்லை என்பது தெளிவு.  மார்பின் காயம், இரத்தம், குருதி படிந்த கத்தி, தொய்ந்த முகம், தளர்ந்த கை போன்றவை மரணத்தைத் துல்லியமாக வரையறுக்கின்றன.  கிட்டத்தட்ட சிலுவையில் அறையப்பட்ட ஏசுவைப் போல இந்த மனிதர் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.

ஒழுங்கின்மையின் உன்னதம்

This entry is part 13 of 14 in the series குடாகாயம்

உண்மையிலேயே அவர் புரட்சியால் உருவாகக்கூடும் நல்லிணக்க சமுதாயத்தைத்தான் சொல்கிறாரா அல்லது நாம் அப்படியாகக் கற்பனை செய்து உன்னதப்படுத்துகிறோமா என்று கேட்பவர்களுக்கான  தடயமும் இருக்கிறது.  ஓவியத்தின் கீழ் வலப்பகுதியில் இருக்கும் சேவல், பிரெஞ்சு அரசியலில் அராஜகவாதிகளின் அடையாளச் சின்னம்.  புகழ்பெற்ற நிலவியல் வல்லுநரும், அராஜகவாதச் சிந்தனையாளருமான ழாக் எலிஸே ரெக்லு (Jacques Élisée Reclus), “சண்டைக்கோழி இறுதிவரை போராடும்;  வெற்றி பெறும் அல்லது உயிரைத் துறக்கும்” என்று சொன்னார்.  ஓவியம் வரையப்படுவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னால் பாரீஸில் கீழ்த்தட்டு மக்களின் புரட்சி வெடித்தது.

காலம் எரித்ததும், கணினி மீட்டதும்

This entry is part 14 of 14 in the series குடாகாயம்

அரசியலுக்கு வருவதற்கு முன்னால் ஹிட்லரின் முதல் ஆர்வம் ஓவியம்தான்.  இரண்டு முறை முயன்றும் அவருக்கு வியென்னா ஓவியப் பள்ளியில் இடம் கிடைக்கவில்லை.  பிறகு அவர் ஜெர்மனியின் வேந்தராகி, மில்லியன்களில் யூதர்களையும், இன்னபிற ‘உன்னதமற்ற’ மக்களையும் தீவிரமாக கொன்று குவித்துக் கொண்டிருந்த பொழுதும் இடையிடையே காட்சிகளுக்கு வந்து ஓவியங்களில் திளைப்பதைக் கைவிடவில்லை.  அவருடைய ஓவிய ரசனை செவ்வியல் சார்ந்தது