காருகுறிச்சியைத் தேடி…

This entry is part 1 of 11 in the series காருகுறிச்சி

“ஏழாம் திருநாளைக்கு…”, என்று சொல்ல ஆரம்பித்துப் பேசமுடியாமல் திக்கி நிறுத்தினார் அந்தப் பெரியவர். அவர் வாயிலிருந்து வார்த்தை வராமல் நின்றதும் அவர் உடலில் ஓர் அலை எழுந்தது. வயிற்றிலிருந்து எழுந்த அந்த அலை, மார்பில் படர்ந்து, கழுத்தில் ஏறி, அவர் தலையைச் சிலுப்பி இறுதியாய் அவர் கைகள் இரண்டையும் உதறச் செய்யவைத்து அடங்கியது.

காருகுறிச்சியைத் தேடி… (2)

This entry is part 2 of 11 in the series காருகுறிச்சி

காருகுறிச்சியார் வளர்ந்து வரும் காலத்தில் அவரை ஆடி அமாவசைக்கு வாசிக்க ஏற்பாடு செய்துள்ளனர். அவர் தன் நாட்குறிப்பில் தவறாக ஆனி மாதத்தில் குறித்துக் கொண்டு ஒரு மாதம் முன்பே ஏரலுக்குச் செல்கிறார். சென்றபின்தான் நடந்த குளறுபடி தெரிய வருகிறது. ஆடி அமாவாசைக்கோ வேறு ஓர் இடத்தில் வாசிக்கக் காருகுறிச்சியார் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், “கவலைப்படாதீர்கள். நான் பொறுப்பெடுத்து சிறப்பான மாற்றுக் கச்சேரியை ஏற்பாடு செய்து தருகிறேன்,” என்று வாக்களிக்கிறார். சொன்னபடி தன் குருநாதர் டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் கச்சேரியை ஏற்படுத்திக் கொடுக்கிறார். அப்போது ஏற்பட்டப் பழக்கம் …

காருகுறிச்சியைத் தேடி… (3)

This entry is part 3 of 11 in the series காருகுறிச்சி

செவல்ல நடந்த கல்யாணக் கச்சேரி நினைவுக்கு வருது. அண்ணாச்சி கல்யாணத்துல வாசிக்கறாங்கன்னா முதல்லையே அதை நடத்தறவங்ககிட்ட கேட்டுக்குவாங்க. தூரத்துல இருந்து வரவங்களுக்கு சாப்பாடு போட முடியுமா-னு தெரிஞ்சுகிட்டு, முடியாத சூழல்ல அவாளே ஏற்பாடு பண்ணிடுவாங்க. செவல்ல நடந்த கல்யாணத்துல, “அதெல்லாம் யாரு வந்தாலும் பார்த்துக்கலாம்”-னு கல்யாண வீட்டுக்காரங்க சொல்லி இருக்காங்க. கச்சேரி முடிஞ்சதும் அவங்க சொன்ன மாதிரி நடந்துக்கலை. ரசிகர்களைக் கொஞ்சம் மரியாதைக் குறைவா நடத்திட்டாங்க. அண்ணாச்சிக்கு அதைப் பார்த்துட்டு சரியான கோவம். உடனே சந்திர விலாஸுக்குச் சொல்லி அத்தனை பேருக்கும் தன் செலவுல சாப்பாடு ஏற்பாடு செஞ்சாங்க. அப்புறம் எவ்வளவு கெஞ்சியும் கல்யாண வீட்டுல சாப்பிட மறுத்துட்டாங்க.

இசைக்கும் புத்தகம்

This entry is part 4 of 11 in the series காருகுறிச்சி

காருகுறிச்சியார் துரிதமான சஞ்சாரங்கள் வாசிக்கும் போது, அதனுடன் ஒலிக்கும் ‘துரித கம்பிதங்கள்’ முரணின்றி மிளிர்பவை. இதை மட்டும் சொல்லிவிட்டால் போதுமா? ரக்தியைப் பற்றி சொல்ல வேண்டாமா? ஒரு சீரான போக்கில் சலனத்தை ஏற்படுத்திப் பாருங்கள். ரக்தி வரும். ராகத்தில் பிரயோகங்கள் எல்லாம் சக்கரம் மாதிரி. சுழன்று கொண்டிருக்கும். ஒரு உராய்வை ஏற்படுத்த வேண்டும். அப்போது வெளிப்படும் தீப்பொறிதான் ராகப் பிரயோகங்களுக்கு உள்ளே பொதிந்திருக்கும் விசையை கேட்பவர்களையும் உணர்ந்து கொள்ள வைக்கும்

அருங்குணச் செல்வன் காருகுறிச்சி

This entry is part 5 of 11 in the series காருகுறிச்சி

அருணாசலம் நாகஸ்வரம் வாசிப்பது போலவே வாய்ப்பாட்டும் அற்புதமாகப் பாடுவார். பாடும்போது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாட்டையோ, ராகத்தையோ நிறுத்தி, “இந்த இடத்தில் எங்கள் வாத்தியார் அற்புதமாக வாசிப்பார். அவர் வாசித்துக் கேட்க வேண்டும்” என்று பரவசத்தோடும், பக்தியோடும் சொல்வார். ஒரு ராகத்தைப் பாடி முடிக்கும் முன் ஐந்தாறு தடவைகள் இவ்வாறு கூறிக் குருவின் மேதாவிலாசத்துக்குப் புகழ்மாலை சூட்டி வணங்குவார். குருவே அருணாசலத்துக்கு உயிரும், தெய்வமும் என்று சொல்லி விடலாம்.

அளவுமீறா அமுதப் பெருக்கு

This entry is part 6 of 11 in the series காருகுறிச்சி

கையாளுவதற்கு கடினமான கருவிகளில் நாகஸ்வரமும் ஒன்று. வாசிக்கப் படும் சூழல், வாத்தியத்தின் எல்லை, வாசிப்பவரின் திறன் என்ற விஷயங்களைப் பற்றிய பிரக்ஞை எல்லாம் மறைந்து வாசிக்கப்படும் ராகம் மட்டுமே வாசிப்பவரையும், கேட்பவரையும் ஆட்கொண்டு வெளிப்படுத்திக் கொள்ளும் தருணங்களை நாகஸ்வர கச்சேரிகளிலேயே அதிகம் காண முடியும். அப்படி பல மணி நேரங்களுக்கு தொடர்ந்து வாசிக்கும் போது அவ்வப்போது வாசிப்பில் பிசுறுகள் தோன்றுவதுண்டு. காருகுறிச்சியாரின் வாசிப்பில் நமக்குக் கிடைக்கும் பதிவுகளில், வற்றாது பெருகியோடும் கற்பனைப் பெருக்கில் எத்தனை நுட்பமான சங்கதியை வாசித்த போதும், அவர் மனம் நினைத்ததை ஸுஸ்வரமாய் அவர் வாத்தியம் வெளிப்படுத்தியுள்ளதை உணர்ந்துகொள்ள முடியும்.

உசைனி

This entry is part 7 of 11 in the series காருகுறிச்சி

“காருகுறிச்சியாரை மாதிரி உசைனிய வாசிக்க இனி யாரு வரப்போறா? நானே அஞ்சாறு தடவை நேரில கேட்டு இருக்கேன். கோயில்பட்டியில ஒரு கோயில் கச்சேரி. அன்னைக்கு உசேனியை எடுத்துட்டார். மணி போனதே தெரியலை. காருகுறிச்சியார் ஒவ்வொரு தடவை ஷட்ஜத்துக்கு வரும்போதும் ஒரு சுழிப்பு சுழிச்சு ஷட்ஜத்தைத் தொடுவார் பார்த்து இருக்கியா? அதுக்கு என்னென்னமோ ஸ்வரமெல்லாம் சொல்றாங்க, என்னைக் கேட்டா அதை உசைனி ஷட்ஜம்-னு சொல்லுவேன்.

காரு குறிச்சி

This entry is part 8 of 11 in the series காருகுறிச்சி

நண்பர் காருகுறிச்சி அருணாசலம் சிறுவயதிலேயே எங்கள் ஊரில் கல்யாணம் செய்துகொண்டவர். எங்கள் ஊர் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டதிலிருந்தே அவருக்கு ‘யோகம்’ தொடங்கிவிட்டதாக இங்கே பேசிக்கொள்வார்கள். ஒருநாள் காலை 7 மணி இருக்கும். நான் வெளிக்குப் போய்விட்டு, குச்சியால் பல் தேய்த்துக்கொண்டே கரை வழியாக ஊருக்குள் வந்தேன். காளியம்மன் “காரு குறிச்சி”

நேனெந்து வெதுகுதுரா

This entry is part 9 of 11 in the series காருகுறிச்சி

அருணாசலத்துக்கு வேம்புவின்மேல் இருந்த அபிமானத்தால் சம்பாவனையே இல்லாமல் கச்சேரி செய்வான். ஆனால் கச்சேரி நடக்க இன்னும் எத்தனையோ செலவுகள் உண்டே. மேடை போட வேண்டும். ஜனங்கள் உட்கார்ந்து கேட்க பந்தல் போட வேண்டும். ஒலிப்பெருக்கிகளுக்குச் சொல்லவேண்டும்.

ரசனையைக் களித்தலும் நுட்பத்தை வியத்தலும்

This entry is part 10 of 11 in the series காருகுறிச்சி

அவர் தனக்கு தெரியாத எதையும் எழுதுவதில்லை.  இது எழுத்தாளனின் முக்கிய அம்சம்.  இவர் அடிப்படையில் ஒரு தொழில்நுட்பம் தெரிந்த பொறியாளர்.  ஆனால் கூகிள், தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றை மட்டுமே முழுதாக நம்பி இறங்காதவர். களத்தரவுகளை நம்புபவர்.  இதுவே படைப்பின் ஆன்மா ஆகையால், அவர் காருக்குறிச்சியைத் தேடி நேரில் சென்று அனுபவத்தை பெற்று நமக்கு கடத்தியிருக்கிறார்.

சால கல்லலாடு

This entry is part 11 of 11 in the series காருகுறிச்சி

ரத்தினம் பிள்ளை வருகிறார் என்றாலே உள்ளூர் நாயனக்காரர்கள் ஊரைக் காலி பண்ணாத குறைதான். அவர்களுள் யார் இவருக்கு ரெண்டாவது நாயனம் வாசிக்க வருவார்கள். அதிலும் அவர் வாசித்த இடைபாரி நாயனத்தை அந்தக் காலத்தில் வேறு யாரும் வாசித்ததில்லை.