வருக்கத்தொகையும் பின்னபாகாரமும்

கணக்கு என்பது எண்களும் எண்கள் சார்ந்தவையும் என்று நினைப்பது செல்பேசி என்பது நண்பருடன் பேசுவதற்கானது மட்டுமே என்று நம்புவதைப் போல், இந்த நம்பிக்கை முட்டாள்தனமானது. செல்பேசியில் மற்றவரை அழைக்கலாம்; உரையாடலாம். அதில் விளையாடவும் செய்யலாம். கூடவே, மின்னஞ்சல் அனுப்பலாம்; பாட்டு கேட்கலாம். அதே போல் கணிதம் என்பது எண்களை வைத்து கணக்குப் போடுவதற்கும் பயன்படும்; ஆனால், அது தவிர நூற்றுக்கணக்கான மற்ற விஷயங்களையும் கொண்டிருக்கிறது.

மிதுனம்: பண்பாடு – பன்னாடு – பெற்றோர்

மனதிற்கு நெருக்கமான கதை அமைந்திருப்பது நேர்மையான காரணமாக இருக்கும். என்னுடையப் பெற்றோரை இந்தப் படத்தில் பார்த்து இருப்பதால் பிடித்து இருக்கும். அல்லது எங்களையே, இன்னும் சில பத்தாண்டுகள் கழித்து இப்படி பார்ப்பதால் கூட இருக்கலாம். இந்தியாவில் தன்னந்தனியே விடப்பட்டிருக்கும் அனாதைப் பெற்றோருக்கு ஐந்து குழந்தைகள். அந்த மகன்/ள்கள் ஐவரும், சௌக்கியமாக அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், இன்ன பிற பரதேசங்களிலும் குடிபுகுந்து விட்டார்கள். அப்பாதாஸ் என்னும் தந்தையாக எஸ்.பி.பி. புச்சி லஷ்மி என்னும் தாயாராக லஷ்மி. இந்த இருவரும் சேர்ந்து மிதுனம்.

எமர்ஜென்சியின் கருப்பு தினங்களை நினைவுகூறல்

“இந்திராகாந்தி செய்த ஒப்பந்தத்தினால் ரூ.11 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது வாதத்துக்காக அதை உண்மை என்றே வைத்துக்கொண்டாலும், அந்த 11 கோடியை இந்திரா தன் வீட்டுக்கா எடுத்துச் சென்று விட்டார்? தற்போதைய அரசாங்கம் எடுத்த ஒரு முடிவினால் (மதுவிலக்கு) அரசாங்கத்துக்கு பல நூறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதே, அதற்காக தற்போதைய பிரதமரைக் குற்றவாளி என்று கூறலாமா?” இந்திரா காந்தி சார்பில் ஆஜரான பிராங்க் அந்தோணி இவ்வாறு கேட்டார்.

பிட்காயின் 101

பிட்-காயினால் எதை வேண்டுமானாலும் வாங்க இயலும். ஒரு துண்டு பீட்ஸா முதல் அதிஆடம்பரமான விலையுயர்ந்த மாட மாளிகை வரை என்ன பொருள் வேண்டுமோ, அதை நீங்கள் பிட்காயினை (bitcoin) விலையாகக் கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம். பிட்காயினின் மதிப்பு ஒரு சில டாலரில் துவங்கி ஆயிரக்கணக்கான ரூபாய் வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கும். சில சமயம் பிட்காயின் பற்றிய தகவல்கள் துப்பறியும் நாவல் போல் இருக்கும்; பல சமயங்களில் பிட்காயின் பற்றிய சாத்தியங்களை அறியும்போது மின்சாரத்தைக் கண்டுபிடித்தபோது ஏற்படும் அதிசயம் உண்டாகும். ’தூணிலும் இருப்பான்! துரும்பிலும் இருப்பான்!!’ என இறைவரைச் சொல்வது போல், எங்கெங்கு காணினும் பிட்காயின் என…

நேரத்தில் – In Time: காலமும் காரல் மார்க்சும்

எல்லோரும் என்றென்றும் வாழ முடியாது. பல்லாயிரக் கோடிப் பேர்களை எங்கே வைத்துக் கொள்வோம்? எதற்காக தடைக்கற்கள் போட்டு ஏழெட்டு அடுக்கு தாண்டி இருக்கும் தூரத்து ஊர்களை உண்டாக்கி அங்கே தங்கி இருக்கோம்? அனுதினமும் சேரியில் வாடகையும் அத்தியாவசியப் பொருளும் விலை உயர்ந்து கொண்டே போகிறதே… ஏன்? யாருமே பட்டினியலோ பற்றாக்குறையினாலோ சாக வேண்டாம். என்னிடம் இருக்கும் இத்தனை ஆண்டுக்காலம் என்னும் அரியபொருள், உன்னிடம் இருந்தால், நீ என்ன செய்வாய்?

ஐ.பி.எம். – ஒரு யானை எலி ஆகிறதா?

தன் மீது தனக்கே நம்பிக்கை இல்லாத நிறுவனங்களும், பங்குதாரரை சுண்டி இழுக்கும் கவர்ச்சியாக பணத்தைத் தூண்டில் போடும் நிறுவனங்களும், பாரம்பரியமான அந்தக் கால பழக்கவழக்கங்களைக் கொண்ட வட்டி போடும் நிதி நிறுவனங்களும் காலாண்டு தோறும் ஈவுத்தொகை கொடுக்கிறது. அந்த வர்க்கத்தில், தொழில் நுட்பம் போன்ற நொடிக்கு நொடிக்கு புது அரிதாரம் கோரும் துறையில் இயங்கும் ஐ.பி.எம். அங்கம் வகிப்பது ஆச்சரியமளிக்கும் விஷயம். ஆண்டுக்கணக்காக, இவ்வாறு கணக்குப்பதிவில் ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு, மாட்டைத் தூக்கி மந்தையில் போட்டு ஒருவாறாக இலாபக் கணக்கைப் பதிந்தாலும், தொலைநோக்கில் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த செய்முறைகள் அவநம்பிக்கையை உருவாக்கியது.

ஏ ஆர் ரெஹ்மானின் 'மில்லியன் டாலர் புஜம்'

தமிழ்ப்பாடல் இடம் பெற்ற படம் என்பதை விட; இந்தியர்களின் சாதனை குறித்த படம் என்பதை விட; கஷ்டப்பட்டு முன்னேறிய திறமைசாலிகளின் படம் என்பதை விட – இந்தப் படத்தை ஏ ஆர் ரஹ்மானின் இசையில் வித்தியாசப்பட்டு நிற்கும் படம் என்றும் பார்க்கலாம். திரைப்பட இசை என்பது சத்தமாக ஒலிக்க வேண்டும் என்பது அந்தக் காலம். அதன் பின் அடக்கி வாசித்து, திரையில் நடக்கும் விஷயங்களை காட்சிப்படுத்துவதை தூக்கலாகக் காண்பிப்பது சமீபத்திய காலம். வருங்காலத்தில் திரை இசை எப்படி இருக்கும்? ’மில்லியன் டாலர் ஆர்ம்’ திரையிசை போல் இருக்கும்.

பந்தமின்றி பரம்பரையின்றி பெண் சி.யீ.ஓ.

என்டர்பிரைஸ் கார் நிறுவனம், முழுக்க முழுக்க தனியார் நிறுவனம். இது வரை குடும்பப் பொறுப்பில் மட்டுமே இயங்கிய நிறுவனம். தாத்தா, பையன், பேரன் என தலைமை பீடத்தில் உட்கார்த்தி வைக்கும் நிறுவனம். அந்த மாதிரி அமைப்பில் நிறுவனரின் குடும்பத்திற்கும் தனக்கும் ஸ்னான ப்ராப்தி கூட இல்லாத ஒருவர் எவ்வாறு முதன்மைப் பொறுப்பை அடைய முடிகிறது?

மேற்கத்திய பெண் ஓவியர்கள்

வார்த்தைகளால் சொல்லி விட முடியுமென்றால், வரைவதற்கான அவசியமே இருக்காதே! – எட்வர்டு ஹாப்பர் [1882-1967] இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் பெண் கலைஞர்கள் என்று தனித்து அறிமுகம் செய்ய வேண்டுமா? தற்கால விஷயங்களை மகளிர் எவ்வாறு கையாளுகிறார்கள்? மில்லியன்கள் புரளும் ஓவியச் சந்தையில் ஆண் ஓவியர்களோடு ஒப்பிட்டால், பெண் ஓவியர்களின் “மேற்கத்திய பெண் ஓவியர்கள்”

தூரயியங்கி – டிரோன்களின் வருங்காலம்

இணையம் வந்த புதிதில் பலரும் கேட்ட கேள்வி. ‘இன்டெர்நெட்டினால் என்ன பயன்? தினசரி இரண்டு ஜோக் மடல் அனுப்பலாம்… அதைத் தவிர என்ன மாறப் போகிறது!’ தூரயியங்கி இன்னும் விடலைப் பருவத்தில் இருக்கும் இந்தக் காலத்திலும் இதே கேள்வி புழக்கத்தில் இருக்கிறது. ‘டிரோன்களினால் என்ன உபயோகம்? அடுத்த வீட்டை எட்டிப் பார்க்கலாம்… சாலையில் கார் ஓட்ட வயதிற்கு வராத பாலகர்கள் வேண்டுமானால் கூரையேறாமல் கோழி பிடிக்கலாம்!’ என்கிறார்கள். நிஜத்தை சொல்லப் போனால், தூரயியங்கிகளால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதன் சாத்தியக்கூறுகளுக்கான ஆராய்ச்சிகளையும் அதன் முழுமையான பயன்களையும் நாம் இன்னும் துவங்கக் கூட இல்லை.

தூரயியங்கி – பொழுதுபோக்கும் போராட்டங்களும்

பெங்களூரூவிற்கு அருகில் இருக்கும் சித்ரதுர்காவில் தூரயியங்கி கட்டுப்பாடு மையம் அமைந்திருக்கிறது. காஷ்மீர், அருணாச்சல் பிரதேசம் போன்ற பிரச்சினைக்குரிய எல்லைப் பிரதேசங்களில் பாகிஸ்தானின் அத்துமீறலையும் சீனாவின் நடவடிக்கைகளையும் கண்காணிக்க இவற்றை இந்தியா உபயோகிக்கிறது. அது தவிர கடற்படையில் மீனவர்களைப் பாதுகாக்கவும் கடத்தல்களை வேவு பார்க்கவும் கேரளா, குஜராத் போன்ற எல்லை மாநிலங்களும் தூரயியங்கியை புழக்கத்தில் வைத்திருக்கின்றன.

தூரயியங்கி – எமக்குத் தொழில் அழித்தொழிப்பது

ஆளில்லா டிரோன்களில் உயிர்ச்சேதம் கிடையவே கிடையாது. அதாவது, தாக்குபவர், தாக்கப்படுவார் என்பதற்கு இடமே கிடையாது. தரைக்கு ஐந்து மைல் மேலே நின்று கொண்டிருக்கும் டிரோன்களை கண்டுகொள்வது வெகு துர்லபம். அதே சமயம் ஒரே இடத்தில் ஸ்திரமாக இருபத்து நான்கு மணி நேரம் கூட நிற்கும் திறமை கொண்டது. மனிதரைப் போல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும், காலைக்கடன் கழிக்க வேண்டும் போன்ற உடல் உபாதைகளும் பசியும் கிடையாது.

மைன்கிராஃப்ட்: கற்பனைக்கலையா, கணினி விளையாட்டா?

மார்கஸ் பன்னிரெண்டாம் வகுப்பு முடியும் போது அவருடைய பள்ளி ஆலோசகரிடம் செல்கிறார். அவருடைய ஆலோசகரும், “கல்லூரியில் என்ன படிக்கப் போகிறாய்? என்னவாகப் போகிறாய்?” என வினவுகிறார். இவரோ, “எனக்கு கணினி விளையாட்டு ரொம்பப் பிடிக்கும்! எனவே அவற்றை எழுதப் போகிறேன்!” என சொல்கிறார். பள்ளி ஆச்சாரியரும் அவருக்குத் தெரிந்த நல்ல வார்த்தையெல்லாம் சொல்லி அந்த வழியில் சென்றால் உருப்பட மாட்டாய் என உபதேசித்து அனுப்பியிருக்கிறார்.

இணையத்தில் கதை படிக்கும் கலை

நான் எதையும் ஒன்பது கேள்வியாக வைத்து பார்ப்பவன். இந்தத் தகவல் தொகுப்புக் கட்டுரையிலும் எனக்கு விடை தெரியாத சந்தேகங்களையும் உங்களிடம் கேட்க விரும்பும் கேள்விகளையும் கேட்டு வைக்கிறேன்:

1. அமெரிக்காவில்/இங்கிலாந்தில் இருந்து எழுதும் ஆங்கிலத்தில் நிலைமை எவ்வாறு மாறுபட்டு இருக்கிறது? சன்மானத்தை விட்டுவிடுங்கள்; தரத்திலும், பதிப்பாசிரியரின் வெட்டுதல்களிலும், புனைவின் பல்சுவைகளிலும் ஆங்கிலச் சிறுகதைகளுக்கும் தமிழ்க்கதைகளுக்கும் வலையுலகில் என்ன வித்தியாசம்?

கூகுள் காப்பியடிக்கிறதா? ஓரக்கிள் வழக்கு

அதாவது தற்காப்புக் கவசம் போல் ஜாவா மொழியைப் பாதுகாக்கப் பயன்படுகிறது. அதாவது, ரஜினி பெயரை வைத்து, அவரின் முகமொழியை வைத்து சௌந்தர்யா ரஜினிகாந்த் மட்டுமே “கோச்சடையான்” எடுக்க முடியும். அது எவ்வளவு கேவலமாக இருந்தாலும், அந்த உரிமையை ரஜினி மட்டுமே தன்னுடையப் பிரியப்பட்டோருக்குத் தர இயலும். நானோ, அல்லது கமல்ஹாசனோ ரஜினியை வில்லனாக சித்தரித்து காமெடியனாக்க உரிமை கிடையாது. இதன் மூலம், மைக்ரோசாஃப்ட் போன்ற ஜாவா நசுக்கல் சக்திகளிடமிருந்து மொழியைக் காப்பாற்ற இயலும்.

தமிழ்க்கவிதைகளுக்கான ஆங்கிலப் பாலம்

கிட்டத்தட்ட ஆங்கிலம் மட்டுமே புழக்கத்தில் உள்ள நோபல் பரிசு சமூகத்தில் வாழ்கிறேன். அலுவல் விருந்துகளில் சம்பிரதாயமான விசாரிப்புகளில் வைக்கப்படும் கேள்வி: “உங்க ஹாபி என்ன? டென்னிஸ் ஆடுவிங்களா? தோட்டம் பயிரிடுவீங்களா?”. பதிலாக – “அதெல்லாம் உண்டுதான் என்றாலும், என் தாய் மொழியில் மொழிபெயர்ப்பதும், அது சம்பந்தமாக வாசிப்பதும்” எனன கொக்கி போடுவேன். இப்பொழுது அவர்களுக்கு தமிழ் இலக்கியத்தையும் அதன் கவிஞர்களின் வீச்சையும் ஒரு அண்டா சோற்றுக்கு ஒரு அன்னம் பதமாக எடுத்துப் பார்ப்பது போல் இந்தப் புத்தகம் உதவும். சமகாலத்தில் உலாவும் 78 கவிஞர்களின் ஆக்கங்களை இந்த நூலில், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

தாக்கல் சொல்லும் தான்தோன்றித்தனம்

இது தேர்தல் காலம். எழுபதுகளிலும் எண்பதுகளிலும் வேட்பாளர்களளைப் பார்க்க கூட்டத்திற்கு செல்ல வேண்டும். அங்கே விடிய விடிய எல்லோர் பேசுவதையும் கேட்பார்கள். துண்டு சீட்டில் விளம்பரம் அடித்து ஒட்டுவார்கள். சுவரெங்கும் ஓவியம் வரைந்தார்கள். இணையம் வந்த பிறகு இந்த முறை மாறுகிறது. வேட்பாளரை ட்விட்டரில் சந்திக்கலாம். ஃபேஸ்புக் மூலமாக வினா எழுப்பலாம். ஷங்கரின் ‘முதல்வன்’ திரைப்படத்தில் ஒரே ஒரு பேட்டியில், அதுவும் சில மணித்துளிகளே நீடிக்கக் கூடிய நேர்காணலில், நிருபர் ஒருவர், தமிழக முதல்வரை கேள்விகளால் துளைப்பார்….

அணிகலன் அணிவகுப்பு

என்னுடைய மகள் பிறந்த சமயத்தில் இரவெல்லாம் எனக்கு சரியாகவே உறக்கம் வராது. அவள் நன்றாக குறட்டை விடாமலே உறங்குவாள். நானோ ஒரு மணி நேரத்திற்கொருமுறை அருகே சென்று நாடி பிடித்து, அது கிடைக்காமல், நெஞ்சில் காது வைத்து, அதுவும் கேட்காமல், கிள்ளி எழுப்பி அழ வைத்து நிம்மதி கொள்வேன். இப்பொழுதோ இண்டெல் நிறுவனம், குழந்தைக்கு பீதாம்பரத்தை மாட்டிவிடுகிறார்கள்.

ரெட் படப்பெட்டி – எண்ணியல் படக்கருவி

சாதாரணமாகப் படக்கருவிகளைக் கையாள ரத கஜ துராதிபதிகள் தேவை. ஒளிப்பதிவு இயக்குநர் கோணங்களை கவனிப்பார். அவருக்கு உதவியாக கேமிராவை இயக்க இருவர் இருப்பார்கள். கூடவே டிராலி தள்ள நாலைந்து பேர் வேண்டும். இவ்வளவு பெரிய படை எல்லாம் ரெட் கருவிக்கு தேவையில்லை. ஒருவர் போதுமானது. அஷ்டே!

எந்தக் காரிலும் இல்லாத ஒன்று…

மற்ற கார்களைப் போல் டெஸ்லாவில் எந்தவிதமான திருகல்களும் ரேடியோ பொத்தான்களும் குளிரூட்டுவதற்கான விசைகளும் கிடையாது. உங்கள் கணித்திரை போல் பதினேழு இன்ச்சில் பெரிய வெள்ளித்திரை. அதோடு ஐபோன் சிரி போல் பேசலாம். “தேவா இசையில் ஹரிஹரன் பாடிய பாடல்களைப் போடு” எனலாம். ”எழுபத்திரண்டு டிகிரி வை” என கட்டளை இடலாம். “போலீஸ் மாமா ரேடாரில் வேவு பார்க்கிறார்” என்பதை அறிந்து பம்மலாம்.

ஒரு மாதத்திலேயே குழந்தை பிறக்க வைப்பது எப்படி?

ஆனால், ஒபாமா நலத்திட்ட வெளியீட்டில் இலக்கு தெள்ளத்தெளிவாக இருந்தது. அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் எல்லோரும் பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். டிசம்பர் பதினந்து முதல் இன்னும் பல வசதிகள் வேண்டும். மார்ச்சில் மொத்தமும் முடித்திருக்க வேண்டும். கால தேச வர்த்தமானப்படி சொவ்வறை செயலாளர்கள் சௌகரியத்திற்காகத் திருத்தியமைக்கக் கூடிய உரிமையில்லா கெடு வைக்கப்பட்ட திட்டம். கழுத்திற்கு மேல் கத்தி தொங்கும் கம்பி மேல் நடக்கும் திட்டம்.

ஸ்னோடென் அறியாத ரகசியம்

உங்களின் கடவுச் சொல் உங்களுக்கு மட்டும்தான் தெரியும். யாஹுவிடம் அந்தக் கடவுச்சொல் 84bd1c27b26f7be85b2742817bb8d43b என்பது போல் விநோதமாக உறைந்திருக்கும். அந்த மந்திரச் சொல்லும், மந்திரச் சொல்லை மறைத்து வைத்திருக்கும் வினைச்சரத்தின் மூலமும் யாஹூ-வோ, ஜிமெயில்.காம்-ஓ தெரிவிக்காவிட்டால், உங்கள் அடையாளத்தில் கூடு விட்டு கூடு பாய்ந்து உள்ளே நுழைய முடியாது. உங்கள் அடையாளத்தில் நீங்களாக நுழைந்து, நீங்கள் சொன்னது போலவே, உங்கள் தோழர்களிடம் பொய்த்தகவலை அனுப்பி, நிஜ விஷயங்களைக் கறக்க மைரோசாஃப்ட் ஹாட்மெயில், ஸ்கைப் உதவ வேண்டும்.

இயந்திர தற்கற்றல்: சொல்லித் தெரிவதில்லை பிழைக்கும் கலை

பாலில் இருந்து தண்ணீரைப் பிரித்தெடுத்த அன்னப்பறவை போல் கூகுள் மின்னஞ்சலுக்கு எது முக்கியமான மடல், எது என்னால் படிக்க விரும்பாத மடல் என்று பிரித்துக் கொடுக்க தெரிந்திருக்கிறது. மின்னஞ்சல் வந்தவுடன் நான் திறக்கும் அஞ்சலின் அனுப்புநர், வார்த்தைகள் போன்றவற்றை வைத்து தானியங்கியாக அவசியமானவை, அவசியமில்லாதவை என இரண்டாக வகுத்து விடுகிறது.

எக்ஸ் பாக்ஸ் ஒன் – மைக்ரோசாஃப்டின் புதிய பாதை

விளையாட்டு மட்டுமில்லை எக்ஸ் பாக்ஸ். இப்பொழுது அதன் மூலமாகத்தான் என் மொத்த தொலைக்காட்சியும் உயிர் பெறுகிறது. ஆயிரங்கோடி திரைப்படங்கள் நிறைந்த நெட்ஃப்ளிக்ஸ் வாயில் மூலமாக ஹாலிவுட்டும் பாலிவுட்டும் கோலிவுட்டும் டிவியில் கிடைக்கிறது. சில காலம் முன்பு வரை இணையத்தைப் பார்க்க ஒரு கணினி, தமிழ்க் கன்னல்கள் பார்க்க இன்னொரு பொட்டி, அதெல்லாம் இணைக்க இன்னொரு பொட்டி, என்று டிவியைச் சுற்றி இடைதடை ஓட்டப் பந்தயத் தடங்கல்களாக இருந்த கம்பிகளும் டப்பாக்களும் கழன்று அவற்றுக்கெல்லாம் ஒரேயொரு நிவாரணியாக எக்ஸ் பாக்ஸ் இருந்தது. அதை புதிய எக்ஸ் பாக்ச் ஒன் மேலும் விரிவாக்குகிறது.

ப்ரூஸ் ஸ்டெர்லிங்க் – ஒரு பேட்டி

ப்ரூஸ் ஸ்டெர்லிங் அமெரிக்காவில் டெக்ஸஸ் மாநிலத்தில் ஆஸ்டின் என்கிற நகரில் 1954 ஆம் வருடம் பிறந்தவர். அறிவியல் நவீனங்கள் எழுதிப் புகழ் பெற்றவரானார். அறிவியல் நவீனங்களில் ‘சைபர் பங்க்’ என்கிற ஒரு கிளைப் பிரிவைத் தோற்றுவித்த சிலரில் இவர் ஒருவர் என்று அறியப்பட்டவர். சமீப காலத்தில் இவர் வலையுலகின் விமர்சகர்களில் ஒருவராகவும், சைபர் உலகின் கருத்தாளராகவும் அறியப்பட்டு, யூரோபியன் உயர்கல்வி நிலையம் ஒன்றில் விரிவுரையாளராகச் செயலாற்றுகிறார். அது இவர் செய்யும் பல வகைத் தொழில்களில் ஒன்று.

அளிப்பான் அந்தரங்கம்: எப்பொருள் – மெய்ப்பொருள் – உட்பொருள்

எனக்கு தேவதர்ஷினி நாயகியாகக் கொண்ட சீரியல் பிடிக்கும். கே பாலச்சந்தர் இயக்கினால் நல்லது. ஜெயமோகனின் காடு நாவலை கதையாகக் கொண்டிருக்க வேண்டும்; ஆனால், அவரின் வசனம் இயல்பாக இருக்காது; பா ராகவனை வசனம் எழுத வையுங்கள். என்னால் இந்த வாரம் மட்டும்தான் பார்க்க முடியும். என்னிடம் கேபிள் கிடையாது. எனவே, ஐந்து நாளைக்கு மட்டும் தூர்தர்ஷனில் ஒளிபரப்புங்கள் என்று கேட்பது போல் எதை வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும், எப்பொழுது தேவையோ அப்பொழுது வாங்கிக் கொள்ள விழைகிறீர்களா – கிளவுடுக்கு வாங்க.

வியத்தலும் உண்டே: அ.முத்துலிங்கத்துடன் ஒரு தினம்

முத்துலிங்கத்துடன் எனக்குப் பிரச்சினை ஏற்பட்டது. அவர் எழுதிய கதைகள் புரிந்தன. ‘பூமிக்கு பாதி வயது’ என்று எழுதிய ‘உண்மை (மட்டுமே) கலந்த நாட்குறிப்புகள்’ சம்பவங்களில் உள்ளடி, காட்டமான கருத்து என்று எதுவும் கிடைக்கவில்லை.

குளிரூட்டப்பட்ட அறையில் நிலவும் தன்மைக்கும் மின்விசிறி மட்டும் இயங்கும் இடத்துக்கும் உள்ள வித்தியாசம் போல் இருந்தது. மின்விசிறி சத்தம் போடும்; வேகமாக சுழலும்; பக்கங்களைப் பறக்கடிக்கும்; காற்றடித்து மேலே பலமாக உரசும்; எனினும் வெப்பத்தைக் குறைக்காமல் வெறும் ஓசையாக மட்டுமே வியர்க்கும். ஏர் கண்டிஷனரோ அமைதியாக இயங்கி சாந்தமாக்கி, சமநிலைக்குக் கொணர்ந்து வெளி வெயில் நிலையை மறக்கடித்து, புதுச்சூழலுக்கு இட்டுச் செல்லும். முத்துலிங்கம் எழுத்து ஏசி எழுத்து.

அமெரிக்காவில் ஜெயமோகன்

அரிதான இன்னொரு ரகத்தை சேர்ந்தவர் ஜெயமோகன். எடுக்கிறார். முதற் பக்கத்தை நின்று கொண்டே படிக்கிறார். கவனிக்க: வரிக்கு வரி படிக்கிறார். நான் அனேகமாக அமேசானில் கூட ஒரு வரி படித்தால், இரு வரி விட்டு, அடுத்த வரிக்குத் தாவித் தாவி வாசிப்பேன். பொறுமையைப் பார்த்தால் பொறாமையாக இருந்தது. மூன்று பக்கமாவது முழுமையாகப் படிக்கிறார். அதன் பிறகு, வாங்கலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்கிறார். நான் மூன்று மணி நேரம் திட்டமிட்டிருந்த புத்தக நிலைய சுற்றுலா, ஒன்பது மணி நேரம் ஆனபிறகும், ஜெமோ அசராமால், அலசிக் கொண்டிருந்தார்.