காந்தா பாடலும் கல்லிடைக்குறிச்சி ஐயர்களும்

பக்திங்கிறது நாம பாடற விதத்தில் வரணும். ராமரைப் பத்திப் பாடும் போது கேட்கறவாளுக்கு என்ன பக்தி வரதோ அதே பக்தி நான் டேபிள் சேரைப் பத்திப் பாடினா வரணும். அதுதான் சங்கீதம்ன்னு சொன்னா. அதுதான் சரிங்கறேன். பக்தி சங்கீதத்தில் இருக்கணும்

தீக்ஷிதர் 250!

ஒரு மனிதர். அவரின் பல பரிமாணங்களைப் பற்றிப் பேச முப்பது செயல்முறை விளக்கங்கள். ஒருவரைப் பற்றி முப்பது பேர் பேசப் போகிறார்கள். திரும்பத் திரும்ப அரைத்த மாவையேதான் அரைத்திருப்பார்கள் என்று நினைத்தால் அதுதான் இல்லை. முப்பது பேரும் முப்பது விதமாக அவரை அலசி ஆராய்ந்தார்கள். ஒருவருக்குக் கூட அவர்கள் தலைப்பில் கொடுத்த நேரத்தில் பேசி முடிக்க முடியவில்லை. அவ்வளவு விஷயங்களைக் கொட்டித் தீர்த்தார்கள்.

இசைப் பயணம் – சங்கீத யாத்திரை

ஆதிசங்கர பகவத்பாதரின் மாத்ருகா பஞ்சகத்தை அவர் அழகுற விளக்கியபோது உள்ளம் நெகிழ்ந்துபோயிற்று! சகோதரிகள் பாடியதும் மிகமிக அருமை! திரௌபதி – கிருஷ்ணன் இவர்களுக்கிடையேயான நட்பு பற்றிய விளக்கங்களும் வெகு அருமை! ‘பாரோ கிருஷ்ணைய்ய’ எனும் அருமையான கனகதாசரின் பாடல் நட்பின் வெவ்வேறு நிலைகளைச் சுட்டிக்காட்டியது. சகோதரிகள் இதனைப் பாடியவிதமும் கண்களில் ஈரம் கசிய வைத்தது.

தந்தையைப் போல் தனயன் – இசைப் பாரம்பரியம் பற்றி

ஸ்வாமிகளுக்கு அவர் தந்தையே ஸ்ரீ ராம நாமத்தை உபதேசம் செய்திருக்கவும் வாய்ப்பு உள்ளதென்பதை மறுக்க முடியாது.  ஸ்ரீ ராம ப்ரஹ்மம் ஸ்வாமிகளின் சிறு வயதிலிருந்தே அவருக்கு ராம நாமத்தின் ருசியை உணர வைத்து விட்டார் என்பது நமக்கு நன்றாக புலனாகிறது. ஸ்வாமிகள் இந்த உண்மையை தன்னுடைய முதல் கீர்த்தனத்திலேயே சூசகமாகவும் தெரிவித்துள்ளார். 

கரிசல் பூமியின் இசைத் தெய்வம் – விளாத்திகுளம் சுவாமிகள்

நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளைக்கு சுவாமிகள் மீது மிகுந்த மரியாதை உண்டு.கடம்பூரில் ஆண்டுதோறும் நடக்கும் பத்திரகாளி அம்மன் திருவிழாவில் நாதஸ்வர சக்கரவர்த்தியின் கச்சேரி கண்டிப்பாக இருக்கும். விழா கமிட்டியாளர்கள் எப்படியாவது விளாத்திகுளம் சுவாமிகளையும் அழைத்து வந்து விடுவார்கள்.சுவாமிகள் எதிரில் அமர்ந்தால் பிள்ளையின் வாசிப்பு தனி தினுசாக இருக்குமாம். திருவாவடுதுறை என்னும் பூட்டைத் திறக்க விளாத்திக்குளம் என்கிற சாவி தேவைப்படுகிறது! எனக் கி.ரா.சுவைப்படச்  சொல்கிறார்.

ஆடும் சுருண்ட கேசக்குழல்கள்!

முனிவர் இராமனின் நிலையைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்து புளகாங்கிதம் அடைந்தது அந்தப் பரப்பிரம்மத்திற்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் இராமனுக்கும் கூடத் தெரியுமோ என்னவோ! ஆக, அப்படியொரு நிலையைத் தனது மனக்கண்ணில் காண்கிறார் தியாகராஜர். ஏனென்றால் அவர் தனது ஒவ்வொரு சுவாசத்திலும் இராமனையே சுவாசிப்பவர். காண்பதெல்லாம் இராமன். அவனுடைய சரித்திரத்தின் ஒவ்வொரு நொடியும் நிகழ்வும் இவருடைய அதீதமான கற்பனையின் உச்சம்தான்.

அங்கமாலி ஜோஸ்: தில்ருபாவில் கர்நாடக இசை

This entry is part 22 of 22 in the series இசைவாணர்

கச்சேரி தொடங்கிய சில நிமிடங்களுக்குள்ளாகவே என் முன்முடிவுகள் எல்லாம் தகர்ந்து விழுந்தன. இத்தனைக்கும் சிம்மேந்திரமத்யமத்தை அத்தனை ‘கர்நாடக’ ராகமென்று வகைப்படுத்த முடியாது. ஆரோகண/அவரோகண ஸ்வரங்களைப் பிரதானமாகக் கொண்டு வாசிக்கக்கூடிய ராகம்தான். இருப்பினும் ஜோஸ் வாசித்த ஆலாபனையின் ஒவ்வொரு பிடியிலும் கர்நாடகத்தன்மை தன்னிச்சையாய் சொட்டியது.

நீலாம்பரி ராகம் உனக்காகவே நீலா

கச்சேரியின் நடுவில், எம்எஸ் அம்மா “தொல்லுயி…” என்று தொடங்கும் அன்னமாச்சார்யா கீர்த்தனையைப் பாடத் தொடங்கினார். எனது நண்பன் “ஆஹா நீலாம்பரி ராகம், சபாஷ்” என்று உற்சாகமானான். “மாதவ மாமனு” கேட்டிருக்கியோ என்றவன், என்னை ஒருமாதிரியாக பார்த்துவிட்டு சிறிது நேரத்தில் தொடங்கிய ராக ஆலோபனையில் தன்னை மறந்து விட்டான். நான் அருகில்  நடைபெறும் கிசுகிசுக்களில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.‌

கர்நாடக சங்கீத உரையாடல்: விதுஷி சீதா நாராயணன்

This entry is part 8 of 22 in the series இசைவாணர்

பெரம்பூரில் வளர்ந்த எனக்கு விதுஷி சீதா நாராயணனைக் கேட்க இளமையில் நிறைய வாய்ப்புகள் இருந்திருந்தாலும் அதை நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அப்போது எனக்கு கர்நாடக இசையில் பெரிய ஈடுபாடு இல்லை. எனக்கு ஈடுபாடு வந்ததும் நான் துரத்தித் துரத்திக் கேட்டவர்களில் அவர் இல்லை. 2014-ல்தான் அவரை நான் கேட்க “கர்நாடக சங்கீத உரையாடல்: விதுஷி சீதா நாராயணன்”

இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம்- நேர்காணல்

This entry is part 7 of 22 in the series இசைவாணர்

பிறந்து வளர்ந்ததெல்லாம் திருவாரூரில். திருவாரூர் இசையும், குறிப்பாக லயமும் என்னைச் சுற்றி எப்போதும் முயங்கிய அற்புதமான ஊர். கண் விழித்ததிலிருந்து உறங்கச் செல்வது வரை வெவ்வேறு வகையான தாளங்கள் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். தியாகராஜர் உற்சவ மூர்த்தியாய் வலம் வரும் போது ஆடப்படும் அஜபா நடத்திற்கொரு லயம்; சிவன் மயானம் நோக்கி செல்கையில் ‘மசான பத்திரம்’ என்று வேறொரு லயம்; ஊர்வலங்களில் வாசிக்கப்படும் வெவ்வேறு வகையான மேள வாசிப்புகள், இறப்பின் போது கேட்கும் பறை, காளி கோயிலில் கேட்கும் உடுக்கை என வெவ்வேறு தாளங்கள் என்னைச் சுற்றிக் கேட்டுக்கொண்டே இருக்கும்.

மதராஸ்: கர்னாடக – சாஸ்திரீய சங்கீதத்தின் மையம்

சென்னை என்னும் மெட்ராஸ், எவ்வாறு கர்நாடக இசையின் மையமாக இருந்தது, இருக்கிறது என்பது குறித்த வி ஸ்ரீராமின் பேச்சு:

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – பாகம்-12

குருநாதர்கள் எல்லோரும் தியாகராஜ ஸ்வாமிகள் என்று தம்மைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தியாகராஜ ஸ்வாமி லோகாயதமாகப் பணம் சம்பாதிக்காமல் உஞ்சவிருத்தி எடுத்து ஜீவனம் செய்து வந்தவர். சரபோஜி மகாராஜா தனம் சமர்ப்பித்துச் சபையில் வந்து பாட அழைத்த போது ‘நிதி சால சுகமா’ என்று பாடியவர். இவருடைய மேன்மையை இன்றிருக்கும் குருநாதர்களுடன் எந்த வகையில் ஒப்பிட முடியும்? மனமெல்லாம் பணம் புகழ் செல்வாக்கு; வாயில் மட்டும் ஆன்மீகம் தெய்வீகம்! ஜானகி ராமன் எழுதுவாரே ‘நடன் விடன் காயகன்’ என்று அது போல் தான் பெரும்பாலானவர்கள் நடந்து கொள்கிறார்கள். இதனால் தானோ என்னவோ காந்தர்வ வேதம் என்று புகழப் பட்டாலும் சங்கீதத்தை வேத அத்யயனத்துக்கு ஒரு படி தாழ்த்தித் தான் வைத்திருக்கிறார்கள்.