ஈகை

வலி பொறுக்கமுடியாமல் என்னைக் கொன்றுவிடுமாறு மருத்துவரிடம் சொல்கையில் அவர் ஒரு தீர்வு சொன்னார்.
“என்னப்பா, பேயடிச்ச மாரி இருக்க, டாக்டர் என்னதான் சொன்னாரு?” என் அம்மா இரகசியமாகக் கேட்டார்.
‘இப்போதைக்கு தானம் கடைக்காதாம்.யாரும் உறவுக்காரங்க கொடுத்தா பொழைச்சுக்கலாமாம் ‘என்றேன்.
“நா வயசாளி, உம் பொண்டாட்டி சீக்காளி. கை அறுந்தாக் கூட சுண்ணாம்பு தராதப் பசங்க உம் உடம்பொறப்புங்க. என்ன செய்யப் போற? “என்றாள்
‘ரோசிக்கணும்’
“என்னா ரோசன, மூத்த பொண்ணக் கேளு “
‘ஆத்தா,என்ன பேச்சு சொல்லுறவ.அது பாவம் இளசு ‘

இதழ் 201 பதிப்புக் குறிப்பு

ஜூன் இறுதியில் வரவிருக்கும் சொல்வனத்தின் 204-ஆம் இதழை, நினைவுத்திறனின் போதாமைகளையும் மானுட வரலாற்றில் இடையறாது தொடரும் அழிவைப் பற்றியும் அண்மைக் காலத்தில் வேறெந்த எழுத்தாளரையும் விட நுணுக்கமாக எழுதிய சேபால்டை மையப்படுத்தும் சிறப்பிதழாகக் கொண்டுவரலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம்.

வங்கக்கடலின் அலைகள்

வாழ்க்கையின் அடிகளால் மனம் விழும் போது, எங்கோ ஒரு மனமும் கையும் சேர்ந்து எழுதிய இலக்கியங்கள், தோளில் தட்டி தலையில் கைவைத்து என்னன்னாலும் இந்த ஜீவிதம் இனிது என்று தூக்கிவிடுகிறது. படைப்பாளன் என்ற சொல் எத்தனை பொருத்தமான சொல்.

வாகனப்ரியன்

இரு தினங்களுக்குப்
பிறகு நான் ஊருக்கு வந்தேன். வீட்டில் வந்து அம்மாவிடம் எனக்கு மெரைன் கோர்ஸில் இடம்
கிடைத்த விஷயத்தை மகிழ்ச்சியுடன் சொன்னேன். தாத்தாவிடம் சொல்வதற்காக அம்மாவிடம்,
“தாத்தா வீட்டில இருப்பாரா?” என்று கேட்டேன்.
அம்மாவின் முகத்தில்
லேசான சோகம் படர்ந்தது, “தாத்தாக்க கார நாரோயில வச்சி யாரோ கெளவாண்டுட்டு போய்ட்டானாம்..
மனுஷன் வெப்புறாளாம் தாங்காம நெஞ்சி வலி வந்து, இங்க சந்திரசேகரன் ஆஸ்பத்திரியில கெடக்கேரு..
பயப்படத்துக்கு ஒண்ணும் இல்ல.. ஆனா காரு காருன்னு பொலம்பிகிட்டே இருக்கேரு..” என்றாள்.

மதுமலர்த்தார் வாங்கி நீ வா..

“பயில்” என்றால் கற்பது என்பது நாம் அறிந்ததே. தூதுப் பாட்டின் பொருளை கற்றுத் தரும் வண்ணம் ஏற்றப்பட்ட கலிவெண்பாவினாலே…என்ற நேர் பொருள் நாம் கொண்டாலும், இன்னொரு அர்த்தமும் நம்மால் உண்டாக்க இயலும். “பயில்” என்பதற்கு “சைகை செய்வது” என்ற பொருளும் உண்டு. தூதின் உட்பொருளை சைகை செய்யும் வண்ணம் ஏற்றப்பட்ட கலிவெண்பாவினாலே…என்று சொன்னால் இன்னும் நயம் கூடுகிறது அன்றோ?

கலி வெண்பா என்பதை ஏன் களி வெண்பா என்று பெயரிடாமல் விட்டார்கள் என்றெண்ணும் அளவு உற்சாகம் ஊட்டும் வாசிப்பு எழில் கொண்டது இன்னிசை கலிவெண்பாவும் நேரிசை கலிவெண்பாவும்.

மீட்சி

நம்பாடுவான் எனும் பாணன் தன நாள் கடன் செய்ய, இருளைத்தன் தலைசூடி இலைகளாக்கிய அடர்வனத்து வழியொழுகினான். சுரு நாற்றமொடு உடலெல்லாம் நிணமொழுக புழுக்கள் நெளியும் வாயுடன் அருவுருவொன்று அவன் வழிமறித்தது. கள்வரோ எனப் பயந்துபோன பாணன், அஞ்சி கைப்பொருள் ஏதுமில்லை வறிய பாணன் நான் என்று இந்தளப்பண் சாகையில் கதறலுற்றான். பிலாக்கணத்தை பாடலென்று எண்ணிய முட்டாள் பூதம் உள்ளங்கையை தாடைக்கு அணைகொடுத்து உட்கார்ந்தது. நெருப்புமிழும் கண்களை நிமிர்ந்து நோக்கிய பாணன் யார்நீ என்றான், அந்தக்கேள்வியால் திடுக்கிட்ட பூதத்துக்குள்ளிருந்து வேறோர் குரல் எழுந்தது, நெறிபிழைத்த வேதியன் நான், பிழையீடாக இவ்வரக்க உருவில் உழல்கிறேன், என்பசி தீர்க்க எதையும் உண்ணத்தக்கவனாவேன். இன்று நீ என் உணவாவாய் என்றது. ஓர் பூதம் இன்னொன்றை உண்ணுமா என்றான் பாணன், இல்லை என பதில் வந்தது. அவ்வாறாயின் நான் எனது நெறிப்படி பண்ணிசைத்து வந்தபின் என்னைப்புசி என்றான் பாணன்.

சுபத்ரா-கவிதைகள்

திடீரென உங்கள் பாய்மரப் படகை
செலுத்திக் கொண்டிருக்கும்
ஒரு ஜாக் ஸ்பேரோ மீது
நீங்கள் மையல் கொள்கிறீர்கள்
அப்போது உங்கள் உடலெங்கும்
ஒரு சிலந்தியின் கால்கள் ஊர்கின்றன

உச்சத்தில் விழித்தெழும் நீங்கள்
புனர்வாச வலையில் சிக்கியதை உணரும் போது
மீண்டும் ஒரு தந்தி அச்சிடப்படுகிறது.

லாவண்யா- கவிதைகள்

வட்டம் போட கவராயமில்லை
துளைக்க ஓர் தமரூசியில்லை
அளவு பார்க்க ஒரு நாடா இல்லை
தன் சுற்றளவுக்குச் சரியளவாய்
மூங்கிலில் ஓட்டை போடுகிறது குளவி.
இப்படிப்பட்ட உலகில் நானுமிருக்கிறேன்.
நினைத்தால் தலைகுனிவாயிருக்கிறது.

வான்மதி செந்தில்வாணன் – கவிதைகள்

வீட்டிற்குப் போனதும் முதல்வேளையாக
கதவடைத்துக்கொண்டு
சத்தமாகச் சிரிக்கவேண்டுமென எண்ணமிட்டவாறே
பேருந்து விட்டிறங்கினேன்.
எதையும் தாங்கவியலாத
இம் மூத்திர வாழ்வுபோல் ,
வீடடையும் முன்பே அடக்கமாட்டாமல்
அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு
பலமாகக் கனைத்தபடி சிரிக்க ஆரம்பித்துவிட்டேன்.

பொன். தனசேகரன் – கவிதைகள்

நேற்று இருந்த நேரம்
நேற்றே செலவழிந்தது
இன்றும் அப்படித்தான்.
நாளும் பொழுதும்
கைச்செலவு போக
எதுவும் மிச்சமில்லை.
நேரத்துக்கும் அகோர பசி.
என் எதிரே
எனக்குக்
கொஞ்சம்கூட
மிச்சம் வைக்காமல்
சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
சாப்பிட்டு முடிந்ததும்
நேரம் இருந்தது.

நான் இல்லை.

தனிக் கவிதைகள்- பூராம், கு.அழகர்சாமி, நித்யா எஸ்.

என்று இன்னொரு முறை பொற்குதிரை ஏறி வரும் கள்ளழகர்
தந்தையின் தோளேறிக் கண்டேன் நான் இன்றளவும்
தீராத அந்த ஏக்கம்
தீர?

200-அம்பை சிறப்பிதழுக்குச் சில மறுவினைகள்

வண்ணநிலவன் சொன்னது போல அம்பை என்கிற பெயரைக் கேட்டவுடன் அந்தச் சிறு வயதில் எனக்கு அது அம்பாசமுத்திரமாகத்தான் தோன்றியது. அதுவும் ‘அம்மா ஒருகொலை செய்தாள்’ படித்த போது ‘என்ன இருந்தாலும் நம்ம ஊருல்லா! அதான் இவ்வளவு அளகா எளுதுதாங்க’ என்று தோன்றியிருக்கிறது. பின்னால் எழுத்தாளர் அம்பை என்கிற லட்சுமியைப் பற்றி அறிய நேர்ந்த போது “ச்சே! நம்ம ஊர் இல்லையாமே’ என்கிற வருத்தம் இல்லாமல் அவரது எழுத்து குறித்த மதிப்பை அந்த சமயத்தில் சற்றே வளர்ந்திருந்த எனது வாசக அனுபவம் தந்தது.

பெட்டகம்- வாசக மறுவினை

குட்டி ரேவதியின் ‘உடலே இல்லாத வெளியில் மிதந்து கொண்டிருந்த’ அருமையான நேர்காணலுக்கு மிகுந்த நன்றிகள். உடலையும், அதன் பட்டுணர்வையும் சொல்லும் அம்பையின் பார்வை மிகச் சரியாக வெளிப்பட்டிருக்கிறது. ஆண்வழி நோக்கில் உள்ள சமுதாயத்தில் பெண்ணின் உடல் கூட அவளுடையது என்ற எண்ணம் அற்றுப் போனதுதான் மிகப் பெரிய குரூரம் என அம்பை தெளிவாகச் சொல்கிறார்.

ஆட்டத்தின் 5 விதிகள் – இரண்டாம் விதி

நண்பரின் அப்பாவிடம் நீங்கள் பேச ஆரம்பிக்கிறீர்கள் என்றால் உங்கள் கைப்பேசியில் நேரத்தை நொடிக்கணக்கில் எண்ணத் தொடங்குங்கள். 30 நொடிகளுக்குள் நண்பரின் அப்பா உங்களுக்கான அறிவுரைப் பேச்சிற்குள் நுழைந்து விட்டிருப்பார். சரி, நம் நன்மைக்குத்தானே சொல்கிறார் என்று நினைத்தீர்களானால் பேரன் பேத்திகளை வளர்ப்பது எப்படி எனும் அறிவுரையை பள்ளி, கல்லூரி மாணவர்களிடத்தில் ஒன்றரை மணிநேரத்திற்கு சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வீர்கள்?

கன்னிமாரா அரசு அருங்காட்சியகம்- சென்னை

திருஞானசம்பந்தர் மட்டுமல்ல அங்கிருந்த பெரும்பாலான சிலைகள் மெலிந்த தேகம் ஒற்றை உடை பிச்சை பாத்திரம் தலையில் சுருள் முடி வடிவம் கொண்டவையாக இருக்கிறது, இந்திய துணைக்கண்டண்டத்தின் இதுவரையிலான தொல்லியல் அகழ்வு முடிவுகளெல்லாம் நமக்கு ஒன்றை சொல்லியிருக்கின்றன சமணமும் பௌத்தமும் தான் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பிருந்தே வழிபாட்டுக்கட்டிடம், உருவம் வரைதல், புடைப்பு சிற்பம், சிலை ஆக்குதலில் தற்போதைய இந்துமத உருவவழிபட்டு, சிலையாக்க கலாச்சாரங்களுக்கு முன்னோடி.

மரத்தில் மறைந்த மாமத யானை

அல்கசாண்டர் கிரஹாம் பெல் தொலைபேசி காப்புரிமைக்கு விண்ணப்பிச்ச வெறும் ரெண்டு மணி நேர இடைவெளில அவருக்கு சம்பந்தமே இல்லாத எலிஷா கிரே அப்படீங்கறவரும் இதே கண்டு பிடிப்புக்காக விண்ணப்பிச்சாரு… இதுல இன்னொன்னு இருக்கு,.. ஒருவர் கண்டு பிடிப்பு குறித்து எந்த தகவலும் இல்லாம இன்னொரு நாட்டுல, அதே ஆராய்ச்சி செஞ்சு அதே கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி தஙகளோட உழைப்பை நேரத்தை வீணடித்தவர்களும் உண்டு… அதே சிந்தனை எப்படி பலருக்கும் தோணுது அப்படீங்கறது ஒரு புதிர்.. மனித வளர்ச்சிக்கு புதிய கண்டுப்பிடிப்புகள் தேவை… அந்த கண்டுபிடிப்புக்கான ஆற்றல் ஜீன் மூலமா மனிதனுக்கு தலைமுறையாக கடத்தப்படுது…