நடந்து முடிந்திருந்த இறுதிச் சடங்குகள் அங்கிருந்த எல்லாரையுமே அசதிக்கு ஆளாக்கி இருந்தன. அந்த வீட்டிலிருந்த மிகவும் வயது குறைவான பெண்ணும் கூட சீக்கிரம் தூங்கப் போகலாமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் படுக்கையில் படுத்திருந்தபடி நல்ல முழு விழிப்போடு இருந்த லெண்டினாவோ, தான் செய்ய வேண்டிய அடுத்த காரியத்தைப் பற்றித் திட்டமிட்டுக் கொண்டிருந்தாள். புதைகுழிக்காகத் தேர்ந்தெடுத்த இடத்தில் ஒரு கொன்றை மரத்தை நடவேண்டுமென்று அவள் ஆசைப்பட்டாள்.
Tag: டெம்சுலா ஆவ்
ஒரு கடிதம் – டெம்சுலா ஆவ்
சம்பள நாளன்று மாலையிலேயே முகம் தெரியாத சில தலைமறைவு மனிதர்கள் கிராமத்திற்குள் நுழைந்தார்கள். தங்களை கிராமத்தலைவரின் வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி மக்களை மிரட்டினார்கள். ….தாங்கள் பாடுபட்டுச் சம்பாதித்த பணத்துக்குப் போட்டு வைத்திருந்த திட்டமெல்லாம் வீணாகத்தான் போகப்போகிறது என்பதைக் கிராம மக்கள் உடனே புரிந்துகொண்டனர். ’காட்டிலிருந்து வந்திருக்கும் முரட்டுத் தோற்றம் கொண்ட அந்த மனிதர்கள், இரவு நேரத்தில் கிராமத்திற்கு வந்திருப்பது ஒரே ஒரு நோக்கத்துடன் மட்டும்தான். தலைமறைவு அரசாங்கத்தின் பெயரால் தங்களிடமிருந்து திருடுவதுதான் அது.அவர்களை எதிர்த்துப் போராடுவதில் பயன் ஏதுமில்லை. அவர்கள் துப்பாக்கிகளை ஏந்தியிருந்தார்கள்.
விமான தளத்தை விற்ற சிறுவன்
டெம்சுலா ஆவ்- இந்தியாவின் வடகிழக்குப் பகுதியான ஷில்லாங்கைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற ஆங்கிலப்பேராசிரியர். பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் இவர், சாகித்திய அகாடமியின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தவர். வடகிழக்கு மாநிலங்களுக்கே {அஸ்ஸாம்,நாகாலாந்த், மேகாலயா போன்றவை}உரிய வித்தியாசமான தனிப்பட்ட பிரச்சினைகளில் பெரும்பாலும் கவனம் செலுத்துபவை இவரது படைப்புக்கள். சாகித்திய அகாடமி பரிசு பெற்ற இவரது ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பிலிருந்து [LABURNUM FOR MY HEAD] தமிழில் மொழியாக்கம் …
