என்று தணியும் இந்த எண்ணை தாகம்?

மாற்று சக்தி ஐடியாக்களை கடந்த 40 வருடங்களாக நம் சமூகங்கள் ஒரு சந்தேகத்துடனே பார்த்து வருகின்றன. ஏனென்றால், இவை மாணவ தொழில்நுட்ப முயற்சிகள், அல்லது நடைமுறைக்கு வராத செய்திகளாக வலம் வருகின்றன. எப்படியோ அரசாங்கங்கள், எண்ணைய் நிறுவனங்கள் இம்முயற்சிகளை செயலிழக்கச் செய்துவிடுகின்றன.

பணமற்ற எதிர்காலமா அல்லது எதிர்காலமற்ற பணமா? – இறுதிப் பகுதி

க்ரெடிட் கார்டுகள் கண்டதுக்கெல்லாம் கட்டணம் வசூலித்து வந்தார்கள். ஆரம்பத்தில் இதற்கு அவர்கள் சொன்ன காரணம், உயர்தர பாதுகாப்பான வலையமைப்பு செலவுகளை மீட்பதற்கே என்பது. இன்று வலையமைப்பு செலவு குறைந்து கொண்டே வருகிறது. கிரெடிட் கார்டு கம்பெனிகள், இடை கம்பெனிகளான processors எல்லோரும் இணைய புரட்சியால் முன்னைப் போல கட்டணம் வசூலிக்க முடியாது என்பதை உணரத் தொடங்கியுள்ளார்கள்.

பணமற்ற எதிர்காலமா அல்லது எதிர்காலமற்ற பணமா? – இரண்டாம் பகுதி

அமெரிக்காவில் நவம்பர் மாதத்தில் ஒரு வெள்ளியன்று தள்ளுபடி விற்பனை திருவிழா போல வருடம்தோறும் நாடெங்கும் நடைபெறும். இதை கருப்பு வெள்ளி (black Friday) என்கிறார்கள். சமீப காலமாக, வெள்ளியுடன் கருப்பு திங்களும் (black Monday) உண்டு. திங்களன்று இணையம் மூலம் மட்டுமே தள்ளுபடி விற்பனை. சில்லரை வியாபாரிகள் கருப்பு திங்கள் வியாபாரம் வளர்ந்து வருவதை கவனித்து வருகிறார்கள். அடித்து பிடித்துக் கொண்டு வரிசையில் குளிரில் அல்லல்படுவதைவிட க்ளிக்கினால் அடுத்த வாரம் குறைந்த விலையில் ஆசைப்பட்ட பொருளை வாங்கி விடலாம்.

பணமற்ற எதிர்காலமா அல்லது எதிர்காலமற்ற பணமா?

கனடாவின் ஒரு பகுதியான யூகான் மாகாணத்தில், ஒரு பழங்குடித் தலைவர் பேட்டி ஒன்றில் அவர்களது மொழி பற்றி சி.பி.சி. க்கு அளித்த பேட்டியில், “எங்கள் மொழியில் பனி சம்பந்தப்பட்ட வார்த்தைகள் கிட்டத்தட்ட 80. ஏனென்றால் எங்களின் மையம் இயற்கை. அதோடு ஒட்டி வாழ்கிறோம். உங்கள் ஆங்கிலத்தில் ‘பணம்’ என்ற விஷயத்துக்கு ஏறக்குறைய 80 வார்தைகள் இருக்கின்றன. ஏனென்றால், உங்கள் மையம் அது!”

மின் புத்தகப் புழுக்கள்

விருந்தினர்கள் வீட்டிற்கு வரும் பொழுது, சமீபத்தில் படித்த புத்தகம் ஒன்றை மேற்கோள் காட்டி அப்படியே தன்னுடைய புத்தக அறைக்கு சென்று அந்த புத்தகத்தில் சரியாக எந்த பக்கத்தில் அப்படி சொல்லியிருக்கிறது என்று சுட்டிக் காட்டுவதன் பெருமையே/சுகமே தனி. சிறிய மின் புத்தகக் கருவியை இயக்கி, அதில் மிக எளிதில் புத்தகங்களில் தேடி இதைக் காட்டும் பொழுது, ஏதோ எலக்ட்ரானிக் தில்லாலங்கடி செய்வது போல பிசு பிசுத்து விடுகிறது!

இலவச இணையம் – எப்படி சாத்தியம்? – இறுதி பாகம்

ஃபேஸ்புக் சமீபத்தில் அதன் profiles ஐ மாற்றியது. ஒருவரின் வாழ்க்கை வரலாற்றையே இதன் மூலம் எழுதிவிடலாம். சமூக வலையமைப்புக்கு நாங்கள் வழிவகுக்கிறோம் என்று பறை சாற்றும் ஃபேஸ்புக், எத்தனை பேரை கேட்டு இதைச் செய்தது? அதே போல, பல தருணங்களில் ஃபேஸ்புக், அதன் நுகர்வோரின் அந்தரங்கம் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. நுகர்வோர் சொல்வதையே செய்கிறோம் என்று சொல்லி வரும் கூகிள், வேவ் (wave) என்ற ஜிமெயில் சேவையை தொடங்கி நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டது.

இலவச இணையம் – எப்படி சாத்தியம்? – 2

மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg), இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது உருவாக்கிய அமைப்பு ஃபேஸ்புக். இதன் பின்னணியில் ஒரு தமாஷான விஷயம். பல ஓவியங்களைப் பற்றி அலச வேண்டிய ஒரு பணி இருந்ததாம். மார்க் தனக்கு தெரிந்த சில ஓவியங்களைப் பற்றி கருத்துக்களை ஃபேஸ்புக்கின் சுவர் பக்கத்தில் எழுதினாராம். அதைப் பார்த்த அவருடைய நண்பர்கள், ’இது சரியில்லை, இதைப் பற்றி மேலும் சில விஷயங்களை விட்டு விட்டீர்கள்’ என்று எழுதித் தள்ளினார்கள். மார்க்கின் சமர்ப்பிப்பைப் பார்த்து அசந்து விட்டாராம் அவரது பேராசிரியர்.

இலவச இணையம் – எப்படி சாத்தியம்?

முதலில் ஹாட்மெயில், பிறகு யாஹூ மற்றும் ஜிமெயில் மின்னஞ்சல் வந்து இன்று பல கோடி மக்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் வியாபார சம்மந்தப்பட்ட செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பல கோடி மக்களின் மின்னஞ்சல் மற்றும் புகைப்படங்களை சேகரிப்பதற்கு ராட்சச வழங்கி கணினி வயல்கள் (server farms) தேவை. அவற்றைப் பராமரிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. எதற்காக இலவசமாக இவர்கள் இந்தச் சேவையைக் கொடுக்கிறார்கள்? இவர்களுக்கு வருமானம் எப்படிக் கிடைக்கிறது?

உள்ளம் கவர்ந்த உள்வேலை

இந்த ஊழலின் விளைவுகளை இன்றும் உலகம் அனுபவித்துக்கொண்டு இருக்கிறது. இதனால் ஏற்பட்ட உலகப் பொருளாதாரச்சரிவால், குறைந்தபட்சம் 1.5 கோடி பேர் மீண்டும் வறுமைக்கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டுள்ளார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. பல கோடி மக்கள் உலகெங்கும் வேலை இழந்து தவிக்கிறார்கள். ஆனால் அதற்காக ஒரு நிதி நிறுவனத் தலைமை அதிகாரி கூட இன்றுவரை சிறை செல்லவில்லை. இதைக் குறித்து அழகாக விளக்குகிறது ‘Inside Job’ என்ற விவரணப்படம்.

விஞ்ஞானக் கணிணி – இறுதிப் பகுதி

1990 களில் விஞ்ஞானிகள் ஜினோம் வரிசைபடுத்தலில் சரித்திரத்தில் முதன் முறையாக ஈடுபட்டு தீவிரமாக உழைத்து வந்தார்கள். மிக அதிகமான கணினி திறன் இதற்கு தேவைப்பட்டது. 15 வருடங்களுக்கு அரசாங்கமும் தனியார் ஆராய்ச்சியாளர்களும் மரபணு வரிசைபடுத்த முக்கிய காரணம், யாரிடம் புத்திசாலித்தனமான மென்பொருள் வழிமுறைகள் (அல்கரிதம்), விசேஷ கணினிகள் மற்றும் சோதனை வசதிகள் உள்ளது என்பதே.

விஞ்ஞானக் கணினி

நியூட்டனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கக்கூடும் என்று கேட்டவுடன் மயான நிசப்தம் – ஆசிரியர்கள் மீண்டும் நன்றியோடு பார்த்தார்கள். ஒரு மாணவன் தைரியமாக ”நியூட்டனுக்கு கூகிள் தேடல் சேவை இல்லை” என்று ஜோக் அடித்தான். சரி, கூகிள் இருப்பதால் மனித குலத்தை நியூட்டனை விட இரு மடங்கு உன்னால் முன்னேறச் செய்ய முடியுமா என்று கேட்டதற்கு வழியத்தான் செய்தான்.

இணையத்துடன் போராடும் விளம்பரத்தாள்கள் – இறுதிப் பகுதி

செய்தித்தாள்களுக்குக் கிடைக்கும் விளம்பரங்களின் ஒரு குறிப்பிட்ட பகுதியும் இப்போது இணைய நிறுவனங்களுக்குச் செல்லத் தொடங்கியிருக்கிறது. 2008-இல் முதன்முறையாக வட அமெரிக்காவில் இணைய விளம்பர முதலீடு அச்சு விளம்பர முதலீட்டை விட அதிகரித்தது. இங்கிலாந்தில், கூகிள் இணையதள விளம்பர வருமானம் 2009-இல் அந்நாட்டில் உள்ள அத்தனை அச்சு செய்திதாள்களின் விளம்பர வருமானத்தைவிட அதிகரித்தது. சமீபத்தில், செல்பேசி விளம்பரங்களில் நூறு கோடி டாலர்கள் ஈட்டியுள்ளதாக கூகிள் அறிவித்துள்ளது!

இணையத்துடன் போராடும் விளம்பரத் தாள்கள்

செய்தித்தாள்களில் உள்ள ஒரு மிகப் பெரிய செளகரியம் அதன் parallel படிக்கும் முறைகள். அதாவது, அரசியல் படித்துவிட்டுத்தான் விளையாட்டைப்பற்றி படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அரசியல் படிக்கும் அப்பாவிடமிருந்து, கிரிக்கெட் பக்கத்தை மகன் உருவி படிக்கும் காட்சி நமக்கு மிகவும் பழக்கமானது. செய்தித்தாளின் முதல் போட்டி ரேடியோ. ஆனால், ரேடியோவில் மிகப் பெரிய குறை அதன் serial கேட்கும் முறைகள்.

நடனமாடும் நாவலுலகம்

புத்தகத்தில் இல்லாத இன்னொரு விஷயம் விடியோ மற்றும் ஒலித் துண்டுகளை வலைப்பூக்களில் எளிதில் இணைக்க முடியும். செயல் விளக்கம் மற்றும் இசை போன்ற விஷயங்களை விளக்குவதற்கு இது மிகச் சக்தி வாய்ந்த ஊடகம். கிண்டில் போன்ற புத்தகம் படிக்கும் கருவி சில சந்தா உடைய வலைப்பூக்களை படிக்க வழி செய்கிறது! இந்தப் புரட்சியால் நன்றாக எழுதும் பல எழுத்தாளர்கள் நேராக தங்களுக்கு வலைப்பூ அமைத்துக் கொண்டு செளகரியப்பட்ட பொழுது, பிடித்தவற்றை எழுதுகிறார்கள். சில வலைப்பூக்களுக்கு, பத்திரிகைகளைவிட, நாவல்களை விட அதிகம் படிப்போர்கள் உள்ளார்கள்.

வலையில் சிக்கித் தவிக்கும் அச்சுத்தொழில்

பல நூறு ஆண்டுகளாக ஆளுமை செய்து வந்த அச்சுத்தொழில் ‘இணைய புரட்சியால்’ கலக்கம் கண்டுள்ளது. இக்கட்டுரையை நீங்கள் படிப்பதே இத்துறையின் அதி வேக முன்னேற்றத்தால். அச்சு மீடியாவில் செய்தித்தாள்கள், பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் அடங்கும். இவர்கள் உணர்கிறார்களோ இல்லையோ, இவர்கள் சற்று தடுமாறும் நிலையில்தான் உள்ளார்கள். தொழில்நுட்பத்தை வியாபாரரீதியாகப் புரிந்து கொண்ட நிறுவனங்களே வெற்றி பெருகின்றன.

அனிமேஷன் திரைப்பயணம்: 05 – கல்வி வாய்ப்புகள் மற்றும் எதிர்காலம்

இளைஞர்களுக்கு ஒரு சின்ன யோசனை. வெறும் 3DS Max தெரியும், Maya தெரியும். ஆகவே தன்னை அனிமேஷன் வித்தகர் என்று நினைக்க வேண்டாம். பொதுவாக, நம் இளைஞர்கள், மேல் வாரியாக மேலைநாட்டுத் (அதனால் தான் மேல்வாரி என்ற சொல் வந்ததோ?) தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதிலேயே காலத்தை செலவழிக்கிறார்கள். மென்பொருள் உபயோகத்திறன் மிகவும் முக்கியம் – ஆனால் அதுவே குறிக்கோளாகக் கூடாது. மென்பொருள் அம்சங்களுக்கு (feature/function) பின்னால் உள்ள நுட்பத்தையும் முறையாகக் கற்க வேண்டும்.

அனிமேஷன் திரைப்பயணம்: 04 – தொழில்நுட்ப வரலாறு

மனித சினிமாக்களின் மிகப் பெரிய எதிரி ஹீரோ மற்றும் இமேஜ் சமாச்சாரங்கள். அப்படி, இப்படி இருந்தாலும் கூட ஷாருக்கான் மற்றும் ரஜனிக்காக படம் ஓடுவதைப் போல அனிமேஷனில் எதிர்பார்க்க முடியாது. அனிமேஷன் பாத்திரங்களுக்கு ஸ்டார் வால்யூ எல்லாம் கிடையாது. முதல் விஷயம் ’திரைக்கதை’. அனிமேஷன் திரைப்படங்களில் வழக்கமான திரைப்படங்களை விட மிகத் தெளிவாகக் கதை சொல்லப்பட வேண்டும்.

அனிமேஷன் திரைப்பயணம்: 03 – முப்பரிமாண உலகம்

புன்னகைக்கும், சோகத்துக்கும் உள்ள வாயசைவுகள் எப்படி என்று பலர் டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார்கள். மனித உணர்ச்சிகள் முகத்தில் உருவாக்குவது கிராபிக்ஸ் துறையின் நீண்டகால குறிக்கோள். எதிர்காலத்தில் ‘தென்பாண்டி சீமையிலே?’ என்று கமலைப் போல ஒரே உணர்ச்சி வசமாக கணினி நடிக்கத்தான் போகிறது. ஒரே பிரச்னைதான். செய்து முடிப்பதற்குள் தாத்தா கமல் போல அனிமேட்டர்களுக்கும் வயசாகிவிடும்!

அனிமேஷன் திரைப்பயணம்: 02 – இரு பரிமாண உலகம்

1980களில் நுண்ணிய கணினிகள் (microcomputers) வரத் தொடங்கின. கணினிகளின் சக்தியை ஆரம்பத்தில் வெறும் எழுத்து வடிவத்திற்கே பயன்படுத்தினாலும் கொஞ்ச கொஞ்சமாக படம் வரைய வைக்கத் தொடங்கினார்கள் கணினிப் பொறியாளர்கள். ஆரம்பத்தில் ‘o’ என்ற எழுத்தை வைத்து பச்சை கணினித் திரையில் பிள்ளையார் படம் வரைந்த இந்திய பொறியாளர்கள் முகத்தில் ஒரு எவரெஸ்ட் களைதான் போங்கள் – அந்நாளிலேயே ஓ போட்டவர்கள்!

அனிமேஷன் திரைப்பயணம்: ஒரு பருந்துப்பார்வை

திரைப்படங்களில் அனிமேஷன் தொழில்நுட்பத்தைப் பற்றிய விரிவான அறிமுகம் தரும் கட்டுரைத் தொடரை எழுதுகிறார் ரவி நடராஜன்: மைக்கேல் ஜாக்ஸன் ’Black or White’ என்ற 90-களின் இசை வீடியோவில் மார்ஃபிங் தொழில்நுட்பத்தை மிகவும் பிரபலப்படுத்தினார். தமிழ் சினிமாக்களில் இதை விடாமல் பாடல் காட்சிகளில் காட்டி மைக்கேல் ஜாக்ஸனை சிரத்தையாகப் பின்பற்றியுள்ளார்கள். ‘இந்தியன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘மாயா மச்சீந்திரா’ என்ற மிகவும் இலக்கியத்தரமுள்ள(?) பாடலில் மைக்கேல் அப்பட்டமாய்த் தெரிகிறார்!

விஞ்ஞானிகளும், நகைச்சுவையும்

விஞ்ஞானிகள் பொதுவாக மிகவும் சீரியஸானவர்கள் என்று நாம் நினைக்கிறோம். நம் புத்தகங்களில் கருப்பு வெள்ளையில் அவர்களை சோகமாக தாடியுடன் படம் போட்டு மேலும் இந்த எண்ணத்தை வளர்க்க நம் பாட நூல் வெளியீட்டாளர்கள் தூபம் போடுகிறார்கள். பாடப்புத்தகத்தில் ஏதாவது ஒரு விஞ்ஞானி தன் குழந்தைகளுடன் ஜாலியாக விளையாடுவதைப் போல எங்காவது யாரவது பார்த்து ‘சொல்வனத்திற்கு’ அனுப்பினால் ஹமாம் க்ருஹப்ரவேசம் வீடு கொடுப்பதாகக் கூட அறிவிக்கலாம். பல விஞ்ஞானிகள் மிகவும் தேர்ந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள்.

அரை செஞ்சுரி துல்லியம் – பகுதி 2

இக்கட்டுரையில் அதிகமாக உபயோகிக்கப்பட்டுள்ள சொல் ‘துல்லியம்’. லேசரென்றாலே துல்லியம்தான் முதலில் மனதுக்கு வருகிறது. லேசர் பல தரப்பட்ட மக்களுக்கும் பல உதவிகள் கடந்த 50 ஆண்டுகளாக செய்து வந்துள்ளது. 20ஆம் நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்பு லேசர். 21 ஆம் நூற்றாண்டின் லேசர் போட்டியாளர் எதுவோ? இன்று பல லேசர் உபயோகங்களை நாம் பார்க்கிறோம். ஆனால், இது இன்னும் பலவாறு அதிகரிப்பது மிக சாத்தியமான ஒன்று.

அரை செஞ்சுரி துல்லியம்

இது லேசர் தொழில்நுட்பத்தின் ஐம்பதாவது வருடம். அறிவியல் சமூகம் லேசர் தொழில்நுட்பத்தின் 50 வது பிறந்த நாளை மிகவும் விரிவாக இவ்வாண்டு முழுவதும் கொண்டாடுகின்றது.உலகெங்கிலும் லேசர் தொழில்நுட்பம் குறித்த ஆய்வுக் கருத்தரங்கங்களும், கண்காட்சிகளும் நடைபெறுகின்றன. இதை முன்னிட்டு லேசர் தொழில்நுட்பத்தையும், பயன்பாடுகளையும் விளக்கும் சிறப்புக் கட்டுரையை வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது.

இணையத்தின் திடீர் சாமியார்கள் – அந்தரங்கம் யாவுமே

விபூதி கொடுத்து உங்களுடைய பிரச்சினைகளை தீர்க்கிறோம் என்று கிடைத்ததை சுருட்டும் சாமியார்களை பற்றி அறிந்து இவர்களை தவிர்க்கக் கற்றுக் கொண்டுவிட்டோம். ஆனால், இணையத்தில் உங்கள் அந்தரங்க விஷயங்களைப் பெறத் துடிக்கும் மோசடிக் கூட்டம் பற்றி நாம் அதிகம் கவலைப்படுவதில்லை.

அந்தரங்கம் யாவுமே, எப்படி எப்படி…

பொதுவாக மின்னணு அந்தரங்க சமாச்சாரங்களை நாம் அலட்சியப்படுத்துகிறோம் அல்லது அறியாமலிருக்கிறோம். ‘அந்தரங்கமாவது மண்ணாங்கட்டியாவது’ என்று சன் கணினி நிறுவனத்தின் அந்நாளைய தலைவர் ஸ்காட் மெக்நீலி 15 வருடங்கள் முன் சொன்னதை யாரும் பொருட்படுத்தவில்லை. இன்று அதுவே வியாபாரம், சமூகம், தனியார் தொடர்பு, அரசியல் மற்றும் மருத்துவ துறையை ஆட்டிப்படைக்கத் தொடங்கிவிட்டது.

Up! – ஒரு படி மேலே!

பொதுவாக, அனிமேஷன் திரைப்படங்களில் வழக்கமான திரைப்படங்களை விட மிகத் தெளிவாகக் கதை சொல்லப்பட வேண்டும். மிக நேர்த்தியான திரைக்கதை அவசியம். குத்து மதிப்பான ஸ்க்ரிப்டை வைத்துக் கொண்டு ஸ்பாட்டில் பார்த்துக்கொள்ளலாம், நடிப்பை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்ற
பேச்சுக்கே இடம் கிடையாது. சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. அனிமேஷன் கூட்டு முயற்சியின் உச்சம். வழக்கமான சினிமாக்களில், படப்பிடிப்பு முடிந்தவுடன் காட்சிக்கேற்பப் பின்னணி இசை சேர்ப்பார்கள். அனிமேஷன் திரைப்படங்களில் இசையமைப்பாளர் தொடர்ந்து குழுவுடன் ஒத்துழைக்க வேண்டும். எவரேனும் சற்று சறுக்கினால் அதோகதிதான்.

ஆழ்கடலில் தேடிய முத்து

வேலை முடிந்து சோர்ந்து இரவு உணவு சாப்பிட அமர்ந்தால் வரும் பெருவாரியான தொலை பேசி அழைப்புகள் காப்புரிமை, தொலைபேசி, வீட்டு சேவைகள் சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் கால் செண்டர் தொல்லை. முக்கியமாக, இவர்கள் ஒரு சிந்தனையில்லாமல் உருவாக்கிய பட்டியலிலிருந்து அழைக்கும் பத்தாம் பசலிகள். பல்வேறு அசட்டு அழைப்புகளில், சில அழைப்புகள் எப்படி சரியாக இருக்கிறது? டேட்டா மைனிங்கின் இன்னொரு முகத்தை பார்ப்போம்.

ஒலி/ஒளி மயமான எதிர்காலம்

வளரும் நாடான இந்தியாவிற்கு பாட்காஸ்ட் ஒரு மிக முக்கியமான தொழில்நுட்பம். படிப்பறிவு என்ற சொல்லுக்கே சவால் விடுகிற தொழில்நுட்பம். படிக்காதவர்களை மாற்றுவதற்கு முன் அவர்கள் கேட்காதவர்களா என்று சற்று யோசிப்போம். பார்வையற்றவர்களும் இதனால் பயனடையலாம். என் பார்வையில் இந்திய வெளியீட்டளர்கள் இதைப் பற்றி அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. கைபேசி தொழில்நுட்பத்தை விலை குறையச் செய்த நிறுவனங்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும்.

டிஜிட்டல் இசைப் புரட்சியின் தாக்கம்

புதிய இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் ஒரு ஒலி பொறியாளராக இருந்ததை பெருமையாக சொல்லிக் கொண்டார். இன்று ஒலிச் சேர்க்கை மற்றும் மின்னணு ஒலி பற்றிய அறிவு, இசை அறிவுக்கேற்ற அளவு முக்கியமாகிவிட்டது. ஒரு இசையமைப்பாளர் இசை அறிவைப்பற்றி கவலைப்படும் முன் மின்னணு ஒலி அறிவுத் திறனாலேயே அளவிடப்படுகிறார். ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்கள் பாதி ஒலி பொறியாளர்களாகவும் பணி செய்யும் திறனே இதற்கு காரணம்.