அனிமேஷன் திரைப்பயணம்: 05 – கல்வி வாய்ப்புகள் மற்றும் எதிர்காலம்

இளைஞர்களுக்கு ஒரு சின்ன யோசனை. வெறும் 3DS Max தெரியும், Maya தெரியும். ஆகவே தன்னை அனிமேஷன் வித்தகர் என்று நினைக்க வேண்டாம். பொதுவாக, நம் இளைஞர்கள், மேல் வாரியாக மேலைநாட்டுத் (அதனால் தான் மேல்வாரி என்ற சொல் வந்ததோ?) தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதிலேயே காலத்தை செலவழிக்கிறார்கள். மென்பொருள் உபயோகத்திறன் மிகவும் முக்கியம் – ஆனால் அதுவே குறிக்கோளாகக் கூடாது. மென்பொருள் அம்சங்களுக்கு (feature/function) பின்னால் உள்ள நுட்பத்தையும் முறையாகக் கற்க வேண்டும்.

அனிமேஷன் திரைப்பயணம்: 04 – தொழில்நுட்ப வரலாறு

மனித சினிமாக்களின் மிகப் பெரிய எதிரி ஹீரோ மற்றும் இமேஜ் சமாச்சாரங்கள். அப்படி, இப்படி இருந்தாலும் கூட ஷாருக்கான் மற்றும் ரஜனிக்காக படம் ஓடுவதைப் போல அனிமேஷனில் எதிர்பார்க்க முடியாது. அனிமேஷன் பாத்திரங்களுக்கு ஸ்டார் வால்யூ எல்லாம் கிடையாது. முதல் விஷயம் ’திரைக்கதை’. அனிமேஷன் திரைப்படங்களில் வழக்கமான திரைப்படங்களை விட மிகத் தெளிவாகக் கதை சொல்லப்பட வேண்டும்.

அனிமேஷன் திரைப்பயணம்: 03 – முப்பரிமாண உலகம்

புன்னகைக்கும், சோகத்துக்கும் உள்ள வாயசைவுகள் எப்படி என்று பலர் டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார்கள். மனித உணர்ச்சிகள் முகத்தில் உருவாக்குவது கிராபிக்ஸ் துறையின் நீண்டகால குறிக்கோள். எதிர்காலத்தில் ‘தென்பாண்டி சீமையிலே?’ என்று கமலைப் போல ஒரே உணர்ச்சி வசமாக கணினி நடிக்கத்தான் போகிறது. ஒரே பிரச்னைதான். செய்து முடிப்பதற்குள் தாத்தா கமல் போல அனிமேட்டர்களுக்கும் வயசாகிவிடும்!

அனிமேஷன் திரைப்பயணம்: 02 – இரு பரிமாண உலகம்

1980களில் நுண்ணிய கணினிகள் (microcomputers) வரத் தொடங்கின. கணினிகளின் சக்தியை ஆரம்பத்தில் வெறும் எழுத்து வடிவத்திற்கே பயன்படுத்தினாலும் கொஞ்ச கொஞ்சமாக படம் வரைய வைக்கத் தொடங்கினார்கள் கணினிப் பொறியாளர்கள். ஆரம்பத்தில் ‘o’ என்ற எழுத்தை வைத்து பச்சை கணினித் திரையில் பிள்ளையார் படம் வரைந்த இந்திய பொறியாளர்கள் முகத்தில் ஒரு எவரெஸ்ட் களைதான் போங்கள் – அந்நாளிலேயே ஓ போட்டவர்கள்!

அனிமேஷன் திரைப்பயணம்: ஒரு பருந்துப்பார்வை

திரைப்படங்களில் அனிமேஷன் தொழில்நுட்பத்தைப் பற்றிய விரிவான அறிமுகம் தரும் கட்டுரைத் தொடரை எழுதுகிறார் ரவி நடராஜன்: மைக்கேல் ஜாக்ஸன் ’Black or White’ என்ற 90-களின் இசை வீடியோவில் மார்ஃபிங் தொழில்நுட்பத்தை மிகவும் பிரபலப்படுத்தினார். தமிழ் சினிமாக்களில் இதை விடாமல் பாடல் காட்சிகளில் காட்டி மைக்கேல் ஜாக்ஸனை சிரத்தையாகப் பின்பற்றியுள்ளார்கள். ‘இந்தியன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘மாயா மச்சீந்திரா’ என்ற மிகவும் இலக்கியத்தரமுள்ள(?) பாடலில் மைக்கேல் அப்பட்டமாய்த் தெரிகிறார்!

விஞ்ஞானிகளும், நகைச்சுவையும்

விஞ்ஞானிகள் பொதுவாக மிகவும் சீரியஸானவர்கள் என்று நாம் நினைக்கிறோம். நம் புத்தகங்களில் கருப்பு வெள்ளையில் அவர்களை சோகமாக தாடியுடன் படம் போட்டு மேலும் இந்த எண்ணத்தை வளர்க்க நம் பாட நூல் வெளியீட்டாளர்கள் தூபம் போடுகிறார்கள். பாடப்புத்தகத்தில் ஏதாவது ஒரு விஞ்ஞானி தன் குழந்தைகளுடன் ஜாலியாக விளையாடுவதைப் போல எங்காவது யாரவது பார்த்து ‘சொல்வனத்திற்கு’ அனுப்பினால் ஹமாம் க்ருஹப்ரவேசம் வீடு கொடுப்பதாகக் கூட அறிவிக்கலாம். பல விஞ்ஞானிகள் மிகவும் தேர்ந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள்.

அரை செஞ்சுரி துல்லியம் – பகுதி 2

இக்கட்டுரையில் அதிகமாக உபயோகிக்கப்பட்டுள்ள சொல் ‘துல்லியம்’. லேசரென்றாலே துல்லியம்தான் முதலில் மனதுக்கு வருகிறது. லேசர் பல தரப்பட்ட மக்களுக்கும் பல உதவிகள் கடந்த 50 ஆண்டுகளாக செய்து வந்துள்ளது. 20ஆம் நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்பு லேசர். 21 ஆம் நூற்றாண்டின் லேசர் போட்டியாளர் எதுவோ? இன்று பல லேசர் உபயோகங்களை நாம் பார்க்கிறோம். ஆனால், இது இன்னும் பலவாறு அதிகரிப்பது மிக சாத்தியமான ஒன்று.

அரை செஞ்சுரி துல்லியம்

இது லேசர் தொழில்நுட்பத்தின் ஐம்பதாவது வருடம். அறிவியல் சமூகம் லேசர் தொழில்நுட்பத்தின் 50 வது பிறந்த நாளை மிகவும் விரிவாக இவ்வாண்டு முழுவதும் கொண்டாடுகின்றது.உலகெங்கிலும் லேசர் தொழில்நுட்பம் குறித்த ஆய்வுக் கருத்தரங்கங்களும், கண்காட்சிகளும் நடைபெறுகின்றன. இதை முன்னிட்டு லேசர் தொழில்நுட்பத்தையும், பயன்பாடுகளையும் விளக்கும் சிறப்புக் கட்டுரையை வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது.

இணையத்தின் திடீர் சாமியார்கள் – அந்தரங்கம் யாவுமே

விபூதி கொடுத்து உங்களுடைய பிரச்சினைகளை தீர்க்கிறோம் என்று கிடைத்ததை சுருட்டும் சாமியார்களை பற்றி அறிந்து இவர்களை தவிர்க்கக் கற்றுக் கொண்டுவிட்டோம். ஆனால், இணையத்தில் உங்கள் அந்தரங்க விஷயங்களைப் பெறத் துடிக்கும் மோசடிக் கூட்டம் பற்றி நாம் அதிகம் கவலைப்படுவதில்லை.

அந்தரங்கம் யாவுமே, எப்படி எப்படி…

பொதுவாக மின்னணு அந்தரங்க சமாச்சாரங்களை நாம் அலட்சியப்படுத்துகிறோம் அல்லது அறியாமலிருக்கிறோம். ‘அந்தரங்கமாவது மண்ணாங்கட்டியாவது’ என்று சன் கணினி நிறுவனத்தின் அந்நாளைய தலைவர் ஸ்காட் மெக்நீலி 15 வருடங்கள் முன் சொன்னதை யாரும் பொருட்படுத்தவில்லை. இன்று அதுவே வியாபாரம், சமூகம், தனியார் தொடர்பு, அரசியல் மற்றும் மருத்துவ துறையை ஆட்டிப்படைக்கத் தொடங்கிவிட்டது.

Up! – ஒரு படி மேலே!

பொதுவாக, அனிமேஷன் திரைப்படங்களில் வழக்கமான திரைப்படங்களை விட மிகத் தெளிவாகக் கதை சொல்லப்பட வேண்டும். மிக நேர்த்தியான திரைக்கதை அவசியம். குத்து மதிப்பான ஸ்க்ரிப்டை வைத்துக் கொண்டு ஸ்பாட்டில் பார்த்துக்கொள்ளலாம், நடிப்பை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்ற
பேச்சுக்கே இடம் கிடையாது. சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. அனிமேஷன் கூட்டு முயற்சியின் உச்சம். வழக்கமான சினிமாக்களில், படப்பிடிப்பு முடிந்தவுடன் காட்சிக்கேற்பப் பின்னணி இசை சேர்ப்பார்கள். அனிமேஷன் திரைப்படங்களில் இசையமைப்பாளர் தொடர்ந்து குழுவுடன் ஒத்துழைக்க வேண்டும். எவரேனும் சற்று சறுக்கினால் அதோகதிதான்.

ஆழ்கடலில் தேடிய முத்து

வேலை முடிந்து சோர்ந்து இரவு உணவு சாப்பிட அமர்ந்தால் வரும் பெருவாரியான தொலை பேசி அழைப்புகள் காப்புரிமை, தொலைபேசி, வீட்டு சேவைகள் சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் கால் செண்டர் தொல்லை. முக்கியமாக, இவர்கள் ஒரு சிந்தனையில்லாமல் உருவாக்கிய பட்டியலிலிருந்து அழைக்கும் பத்தாம் பசலிகள். பல்வேறு அசட்டு அழைப்புகளில், சில அழைப்புகள் எப்படி சரியாக இருக்கிறது? டேட்டா மைனிங்கின் இன்னொரு முகத்தை பார்ப்போம்.

ஒலி/ஒளி மயமான எதிர்காலம்

வளரும் நாடான இந்தியாவிற்கு பாட்காஸ்ட் ஒரு மிக முக்கியமான தொழில்நுட்பம். படிப்பறிவு என்ற சொல்லுக்கே சவால் விடுகிற தொழில்நுட்பம். படிக்காதவர்களை மாற்றுவதற்கு முன் அவர்கள் கேட்காதவர்களா என்று சற்று யோசிப்போம். பார்வையற்றவர்களும் இதனால் பயனடையலாம். என் பார்வையில் இந்திய வெளியீட்டளர்கள் இதைப் பற்றி அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. கைபேசி தொழில்நுட்பத்தை விலை குறையச் செய்த நிறுவனங்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும்.

டிஜிட்டல் இசைப் புரட்சியின் தாக்கம்

புதிய இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் ஒரு ஒலி பொறியாளராக இருந்ததை பெருமையாக சொல்லிக் கொண்டார். இன்று ஒலிச் சேர்க்கை மற்றும் மின்னணு ஒலி பற்றிய அறிவு, இசை அறிவுக்கேற்ற அளவு முக்கியமாகிவிட்டது. ஒரு இசையமைப்பாளர் இசை அறிவைப்பற்றி கவலைப்படும் முன் மின்னணு ஒலி அறிவுத் திறனாலேயே அளவிடப்படுகிறார். ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்கள் பாதி ஒலி பொறியாளர்களாகவும் பணி செய்யும் திறனே இதற்கு காரணம்.