“கடவுள் குறித்த ஆதாரம் காட்டுவதாகத்தான் அழைக்கப்பட்டோம். ஆனால், ஒரு பூஞ்சையைத்தான் பார்த்தோம். கடவுளையோ, அவரின் இருப்புக்கான ஆதாரமென்று எதையுமோ பார்க்கவில்லையே. பூஞ்சை தான் கடவுள் என்றெல்லாம் கதை விட மாட்டீர்கள் என்று இன்னமும் நம்புகிறேன் ” என்றாள் மட்டில்டா ஆர்வம் தாளாமல்.
Category: அறிவியல் அதி புனைவு
எல்லையற்ற நடனம்
“நாம் புதிய பிரபஞ்சங்களை உருவாக்கும்போது, வெறும் கால-வெளியை மட்டும் உருவாக்கவில்லை,” என்று டாக்டர் மார்கஸ் தனது கையை உயர்த்தி, மேலே உள்ள ஹோலோகிராபிக் காட்சியில் புதிதாக உருவாகும் பிரபஞ்சத்தை சுட்டிக்காட்டினார். “எளிய விஞ்ஞான செயல்முறை அல்ல. நாம் ஒரு கடவுளின் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறோம், பாருங்கள், இங்கே. பில்லியன் கணக்கான நட்சத்திரங்கள் – ஒவ்வொன்றும் ஒரு சூரியன், ஒவ்வொன்றும் புதிய உலகங்களுக்கான ஒளி. டிரில்லியன் கணக்கான கிரகங்கள் – ஒவ்வொன்றும் ஒரு வீடு, ஒரு தாய்மடி, புதிய வாழ்க்கை.
இன்மையால் வகுத்தல்
ஆறு ஆண்டு மண வாழ்க்கைக்கு பிறகு, அவள் மீதான காதல் நீர்த்துப் போனது. அந்த எண்ணத்தையே கார்ல் மறுத்தான். ஆனால் அவள் மாறிவிட்டாள் – இப்போது அவளை புரிந்துக்கொள்ளவோ அவளுக்காக தான் என்ன உணர்கிறான் என்று தெரியவில்லை. ரெனேவின் அறிவுலகமும் உணர்வுலகமும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத வகையில் பிணைய, அவனால் எட்ட முடியாத எல்லைகளுக்கு அப்பால் அவள் சென்றுவிட்டதாக உணர்ந்தான்.
15
“இது இன்னும் மோசம். பொநுதான் இதன் காரணமா?” என் இருபது ஆண்டு ஊடக வாழ்க்கையில் நான் கேட்ட, படித்த பல சதிக்கோட்பாடுகள் நினைவிற்கு வந்து என்னை அந்த உரையாடலில் ஆர்வமிழக்க செய்தன. இங்கே வந்ததற்கு பதிலாக முன்னரே திட்டமிட்டபடி என் துணையுடன் வெளியே போயிருக்கலாம். அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று சிந்திக்க தொடங்கினேன்.
கல்பகாலத்தில் ஒரு காதல்
அந்த நீளமான அறையைத் தாண்டி அலுவலகத்துக்குள் வந்ததும் இன்று விடுப்பு எடுத்திருக்கலாம் என்று தோன்றியது. என்னைத் தாண்டி ஒரு இளம் ஆய்வாளர்கள் கூட்டம் உள்ளே சென்றது. மதியம் ரெண்டு மணிக்கு இவ்வளவு பரபரப்பாக சென்னை டெலிமெட்ரி வளாகம் இருந்ததில்லை. துறைமுகத்தை ஒட்டி புதிதாகக் கட்டப்பட்ட அமைப்பில் ஊட்டி தொலைநோக்கியின் நேரடி கட்டுப்பாட்டு அறையும், தென் தமிழகத்தின் வானவியல் அமைப்பும் இயங்கி வந்தன. இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனின் தரைக்க்கட்டுப்பாடு கூடம் இருந்த கட்டடத்தில் மட்டுமே அத்தனை பரபரப்பு
நவீன சிறைச்சாலைத் தத்துவம்
எனக்கு, நான் எப்பேற்பட்ட சிக்கலில் சிக்கியிருக்கிறேன் என்பது புரிந்தபோது தரை நழுவுவது போல் இருந்தது. இது போன்ற கிரகங்களில் ஒத்திசையாத தகவல் தொடர்பே (Asynchronous Communication) சாத்தியப்படும். எதைச் சொல்ல வேண்டுமானாலும், அதனைப் பதிவு செய்து அனுப்பவேண்டும். அப்படி அனுப்பப்படுகையில் அது சிகப்பு அதிர்வெண்வரையில் நீட்டிக்கப்படும் (Red shifted). தகவலைப் பெறுபவர் தங்களது கிரகிப்பான்களை (receiver) அதற்கேற்றார்போல் தகவமைத்துக்கொள்ள வேண்டும்.
அடையாளத் தேர்வு
பாலச்சந்தரும், பார்வதியும் ஒருவர் மாற்றி ஒருவர் இரவெல்லாம் விழுத்திருந்து, வெழிலனுக்கு தேனீர் தந்து அவன் தேர்வுக்கு தயார் செய்ய உதவினார்கள். பாலச்சந்தர் தன் பங்கிற்கு மிக வினோதமான வழிமுறைகளைப் (algorithm) பயன்படுத்தி கேள்வித்தாள் தயார் செய்து தந்தார். அதிலிருந்து புதியதாக பன்னிரண்டு கேள்விகள் கிடைத்தது. அதற்கும் பதில்கள் தயார் செய்தான் வெழிலன்.
மனக்கணக்கு
“எனக்கா தொழில் நுட்பம் தெரியாது? பார்த்தாயா உன் கண் முன்னே வந்து நின்றுவிட்டேன். குவாண்டம் பிணைப்பு இணைப்பை (Quantum Entangled Connection) எனக்கும் பயன்படுத்தத் தெரியுமாக்கும். அதுமட்டுமல்ல, எனக்கும் அறிவியல் புரியும் கண்ணா. அதை நிரூபிக்கத்தான் இப்படி வந்தேன்.. ஹா ..ஹா” என்று இடித்துச் சிரித்தாள் புவனா.
பெருங்கரடி: கிரெக் பேர் பற்றிய நினைவுகள்
கிரெக் பேரை நான் முதன் முதலில் எப்போது சந்தித்தேன் என்று நினைவில்லை, ஆனால் எங்கள் ஆரம்பகால சந்திப்புகளில் ஒன்று இருபது ஆண்டுகளுக்கு முன், மெதினா நகரிலிருந்த ஒரு கோடீஸ்வரரின் அடக்கமான ஆனால் உச்ச நிலை தொழில் நுட்பம் கொண்டிருந்த வீட்டில் (இதற்கான பாராட்டுகள் அவர் மனைவிக்கே சேரும்) நேர்ந்தது. (அந்தக் கோடீஸ்வரரின் பெயர் இங்கு தேவையில்லை.) கிரெக்கும் நானும் புத்தகங்களைப் பற்றி உரையாடினோம்.
ஏழு கடல், ஏழு மலை தாண்டி
அதுமட்டுமல்லாமல், சாபோர் இனம் உருவாகும் முன், ஒரு இடைப்பட்ட நிலைப்பாட்டில் குகா என்றொரு இனம் இருந்தது என்றும் பதிந்திருக்கிறார். அந்தப்பதிவில், சாபோர் இனத்திற்கு முந்தைய இனமான குகாவின் மரபணுவில் அந்த வைரஸுக்கான எதிர்ப்பு சக்தி இருந்ததாகவும், குறித்திருக்கிறார். ஆனால், அந்த குகா இனத்தை அழித்ததே இப்போது வழக்கிலிருக்கும் சாபோர் இனம் தான் என்று சரித்திரம் சொல்கிறது. இந்தப் பின்னணியில், அந்த முந்தைய இனத்தை தற்போதைய சாபோர் இனமான நாம் அழித்திருக்கவே கூடாது
ஆவரேஜ்
கவனியுங்கள். ஸீரீஸ் ஐ காலனி ஆக்கவிடாமல் தடுப்பது அதன் மிக மெல்லிய ஈர்ப்பு விசை. ஆனால் போக்குவரத்துக்கு அதுதான் கச்சிதமான தேவை. ஸீரீஸ் பூமிக்கும் சனி கிரகத்துக்கும் இடையில் சென்று வருமானால், அதன் மீது மனிதர்களுக்கு நீள் உறக்கக் குடுவைகளைக் கட்டமைக்க முடிந்தால் போதுமானது. ஈர்ப்பு விசை இல்லாதிருப்பதால், எந்த ஒரு கலனையும் கொண்டு ஸீரீஸ் மீது இறக்கி ஏற்றலாம். செவ்வாயைப் போன்ற கிரகங்களில் இது சாத்தியமில்லை. செவ்வாய் கிரகத்தின் அதிக ஈர்ப்பு விசைக்கு தரையிறக்கி, ஏற்ற நாம் அதிகமான எரிபொருளைச் செலவிட வேண்டி வரும். ஸீரீஸ்ல் அந்தப் பிரச்சனை இல்லை.”
