“மனிதர்கள் ஒரு காலத்தில் ஒரே கிரகத்தில் வாழ்ந்தார்கள்,” என்று மார்கஸ் சென் சிரித்தார், அவரது உடலில் இருந்து நீல ஒளி வெளிப்பட்டது. ஒளி வேகத்தில் பயணிக்கும் விண்கலங்களை உருவாக்கி, பால்வெளிகளை எளிதாக கடந்து சென்ற மனித இனத்தின் கடைசி தலைமுறையை சேர்ந்தவர். குவாண்டம் ஜெனிசிஸ் என்ஜினை உற்று நோக்கிக்கொண்டிருந்த ஆயிஷா சில விநாடிகள் நிறுத்தி, “அது வெறும் புராணம்தான்,” என்று பதிலளித்தாள். அல்ஃபா சென்டாரி நான்கின் முதல் தலைமுறையை சேர்ந்த கணிதவியலாளர் ஆயிஷா.

எர்வின் ஷ்ரோடிங்கரின் நினைவில் பெயரிடப்பட்ட PDE2 ஆராய்ச்சி நிலையம் படிகப் பாறைகளில் மிதந்துக் கொண்டிருந்தது. நிலையத்தின் டைட்டானியம்-அலாய் குவிமாடங்கள் புதிய சூரியனின் கருஞ்சிவப்பு ஒளியில் மின்னிக்கொண்டிருந்தன. கிரகத்தின் இரட்டை நிலவுகள் கீழேயுள்ள பயோலுமினசென்ட் காடுகளின் மீது ஊதா நிற நிழல்களை விரித்தன. நிலையத்தின் வளிமண்டல செயலிகள் செயற்கை சுற்றுச்சூழல் அமைப்புடன் இணக்கமாக முழங்கின. மரம் போன்ற கட்டமைப்புகள் மின்காந்த ஆற்றலால் மெதுவாக அசைந்தன. பூமியை விட தடிமனான வளிமண்டலத்தில் மிதக்கும் வித்திகள் நுட்பமான ஒளிக் காட்சிகளை உருவாக்கின. நிலையத்தின் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தொகுதிகளில் செனோ-பயாலஜிஸ்டுகளும், குவாண்டம் இயற்பியலாளர்களும் பணிபுரிந்தனர். ஒவ்வொரு குழுவும் இப்பிரபஞ்சத்தின் தனித்துவமான பண்புகளின் வெவ்வேறு அம்சங்களில் நிபுணத்துவம் பெற்றிருந்தது. இந்த இடம் தற்செயலாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை – இயற்கையாக நிகழும் குவாண்டம் புலங்களின் ஒருங்கிணைப்பு பிரபஞ்சத்தை படைப்பதற்கான அடிப்படை சக்திகளைப் படிப்பதற்கு ஒரு சிறந்த தளமாக அமைந்தது.
வெல் நம்முடைய ஒரு மணி நேரம், அங்கே பில்லியன் ஆண்டுகள் என்று சிலாக்கத்தினார். ஆயிஷா “லுக் பல்வேறு பதில்கள்… முற்றிலும் எதிர்பாராதவை!” என்று டாக்டர் மார்கஸ் சென் வியப்பால் கண்கள் விரிய கூறினார், இருக்கையிலிருந்து குதித்து எழுந்து மேலும் கீழும் துள்ளிக் குதித்தார். அவரது விரல்கள் நுண்ணிய தரவுகளின் மீது துடிப்புடன் நடனமாடின. “
“விஞ்ஞான வரலாற்றின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளில் ஒன்று!” என்று அவர் மீண்டும் மகிழ்ச்சியுடன் குதித்தபடி கூறினார். “நாம் உருவாக்கியது வெறும் பிரபஞ்சமல்ல அணுக்களின் நுண்துகள்கள் முதல் பேரண்டத்தின் எல்லைகள் வரை பரவியுள்ள குவாண்டம் இணைப்புகளின் அற்புத வலைப்பின்னல்!”
அவர் ஆவேசமாக அறையைச்சுற்றி நடந்தபடி, கைகளை மேலே தூக்கி வீசி, “ஒவ்வொரு பிரபஞ்சமும் மற்றொன்றுடன் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட விதத்தில் பின்னிப் பிணைந்துள்ளது, நம் பழைய விஞ்ஞான கோட்பாடுகளை முற்றிலும் மாற்றியமைக்கப் போகிறது!, அவரது குரலில் சிறுவனின் பரவசம் தொனித்தது.
இந்த புதிய பிரபஞ்சத்தை உருவாக்கும் திட்டத்திற்கு “ஆதி புள்ளி” (பிரைமல் பாயிண்ட்) என்று பெயரிட்டார்கள். அவர்களின் குறிக்கோள் பிரபஞ்சத்தை உருவாக்குவது மட்டுமல்ல, அதன் இயற்பியல் விதிகளையும், கால ஓட்டத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய முழுமையான உலகத்தை படைப்பது.
டாக்டர் மார்கஸ் சென் பிரமிப்புடன் உற்றுநோக்கினார். ஹாலோகிராஃபிக் காட்சியில் அவர்களின் புதிய பிரபஞ்சம் அவர்களின் நிரலை துல்லியமாகப் பின்பற்றியது. செயற்கையான பெருவெடிப்பை பார்த்துக்கொண்டிருந்தனர். முதல் நானோ வினாடிகளில், கணக்கிட முடியாத ஆற்றல் அளவிட முடியாத வேகத்தில் வெடித்து விரிந்தது. துணை அணு துகள்கள் விரைந்து பரவி, அடிப்படை சக்திகளின் பண்புகளால் ஒன்றிணைந்து, முதல் அணுக்களை உருவாக்கின. மில்லியன் ஆண்டுகளின் பயணத்தில், அணுக்கள் மேகங்களாகத் திரண்டன. இந்த மேகங்களிலிருந்து முதல் விண்மீன்கள் பிறந்து, வெற்றிடத்தின் இருளில் ஒளியைப் பரப்பின. பில்லியன் ஆண்டுகள் உருண்டோட, விண்மீன் மண்டலங்கள் விரிந்தன, கிரகங்கள் தோன்றின. அணுக்களின் வேதியியல் ஒழுங்குகளும் இயற்பியல் நியதிகளும் கூடி, உயிரின் முதல் விதைகளை விதைத்தன. உயிரின் முதல் படிகள். மரபணுக்கள் தோன்றி, பரிணாம மாற்றங்களை வழிநடத்தின. ஒற்றை செல் உயிரினங்கள் பல செல் உயிரினங்களாக வளர்ச்சியடைந்தன. கடல்களில் உயிர் பெருகி, நிலத்தை நோக்கி நகர்ந்தது. படைப்பின் எல்லையற்ற நடனத்தில் ஒழுங்கு பிறந்தது; ஆற்றலின் கருவிலிருந்து வடிவம் தோன்றியது; வடிவத்திலிருந்து, உணர்வும் , விழிப்புநிலையும் அடைந்தது.
டாக்டர் மார்கஸும் ஆயிஷாவும் ஜெனிசிஸ் அறையில் நின்றனர். அவர்களின் கண்களில் வெற்றியின் மின்னல் தெரிந்தது. சுற்றிலும் இருந்த ஹோலோகிராஃபிக் திரைகளில் அவர்களின் புதிய பிரபஞ்சம் வளர்ந்து கொண்டிருந்தது அவர்களின் சொந்தப் படைப்பு.அந்த அறையில், கனவின் பெருமிதமும் அகந்தையின் வீழ்ச்சியும் ஒரே நேரத்தில் பிறந்தன.
“பார், ஆயிஷா,” மார்கஸ் பெருமிதத்துடன் கூறினார். நாம் கடவுளின் நிலையை அடைந்துவிட்டோம். இனி நமக்கு எந்த எல்லையும் இல்லை. நாம் விரும்பிய எதையும் படைக்க முடியும்!”
ஆயிஷா புன்னகைத்தாள். அவளது கண்களில் ஆணவம் மின்னியது. “ஆமாம், மார்கஸ். நமது அறிவியல் நம்மை கடவுளின் நிலைக்கு உயர்த்தியுள்ளது. நாம் இனி வெறும் மனிதர்கள் அல்ல.” அவர்கள் கட்டுப்பாட்டு அறைக்குள் நடந்தனர். சுவர்களில் பல திரைகள் பல்வேறு பிரபஞ்சங்களின் தரவுகளைக் காட்டின. மார்கஸ் ஒரு திரையை தொட்டு, அதை பெரிதாக்கினார்.
“இதோ பார், நமது அடுத்த திட்டம்,” அவர் ஆர்வத்துடன் விளக்கினார். “நாம் இப்போது பிரபஞ்சங்களை உருவாக்க மட்டுமல்ல, அவற்றை கட்டுப்படுத்தவும் முடியும். பரிணாம வளர்ச்சியின் திசையை மாற்றலாம். எந்த உயிரினம் உயிர்வாழ வேண்டும், எது அழிய வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்கலாம்.”
ஆயிஷாவின் கண்கள் விரிந்தன. “ஆம், நாம் இயற்கையின் விதிகளையே மாற்றியமைக்க முடியும். ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் நமக்கு விரும்பிய பௌதிக விதிகளை அமைக்கலாம்.”
“நமது அடுத்த பணி,” மார்கஸ் தொடர்ந்தார், “பல பிரபஞ்சங்களை ஒன்றிணைப்பது. நாம் அவற்றின் எல்லைகளை உடைத்து, ஒரு பேரண்டத்தை உருவாக்குவோம். அதற்கு நாமே ஆட்சியாளர்களாக இருப்போம்.” அவர்கள் மேலும் பல திரைகளை ஆய்வு செய்தனர். ஒவ்வொன்றிலும் வெவ்வேறு பிரபஞ்சங்கலுக்கான திட்ட வரைவு காட்சியளித்தது. சிலவற்றில் வித்தியாசமான பௌதிக விதிகள், வேறு சிலவற்றில் முற்றிலும் புதிய வகை உயிரினங்கள்.
“பார் இந்த பிரபஞ்சத்தில்,” ஆயிஷா ஒரு திரையைச் சுட்டிக்காட்டினாள். திரையில் குவாண்டம் அலைகளின் சிக்கலான வடிவங்கள் தெரிந்தன. “நாம் ஐந்து பரிமாணங்களை உருவாக்கியுள்ளோம். மூன்று வெளிப் பரிமாணங்களுடன், காலம் மற்றும் குவாண்டம் சிதறம் ஆகியவற்றை இணைத்துள்ளோம். இங்கே பார், அதிநவீன சமன்பாட்டின்படி, உயிரினங்கள் ஹைபர்-வெளியில் பயணிக்கின்றன.”
அவள் மற்றொரு திரையை தொட்டு விரித்தாள். “இந்த உயிரினங்கள் நம் பௌதிக விதிகளுக்கு அப்பாற்பட்டவை.. ஷ்ரோடிங்கர் சமன்பாட்டின் ஐந்து-பரிமாண விரிவாக்கத்தில் அவை இயங்குகின்றன. அவற்றின் மூலக்கூறுகள் கூட வித்தியாசமானவை – ஹைபர்-குவார்க்குகளால் ஆனவை.”
கணினித் திரையில் சிக்கலான கணித சமன்பாடுகள் தோன்றின. “இதோ பார், M-கோட்பாட்டின்படி, இந்த உயிரினங்கள் பல்வேறு பரிமாணங்களில் ஒரே நேரத்தில் இருக்க முடியும். நாம் அவற்றின் குறியீடுகளை கையாள முடிந்தால், அவற்றின் ஆற்றலை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.”
மார்ஸ் தலையாட்டினார். “மேலும், நாம் காலத்தையும் கட்டுப்படுத்த முடியும். ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் காலம் வெவ்வேறு வேகத்தில் நகர்கிறது – அது ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டின் விரிவாக்கம். நான் ஒரு புதிய சமன்பாட்டை உருவாக்கியுள்ளேன்.” அவர் தனது டேப்லெட்டில் எழுதினார். கண்களில் நம்பிக்கையும் பயமும் கலந்திருந்தன. இது ஒரு கதை போல. ஒவ்வொரு உலகமும் தனக்கென ஒரு கடிகாரத்தைக் கொண்டுள்ளது. சில கடிகாரங்கள் வேகமாக ஓடுகின்றன, சில மெதுவாக.” அவர் சிறிது நேரம் நிறுத்தி, சரியான வார்த்தைகளைத் தேடினார். “நாம் இந்த கடிகாரங்களை ஒன்றாக இணைக்க முடியும். அப்போது… காலத்தையே மாற்ற முடியும். இறந்த காலத்தையும், எதிர்காலத்தையும் ஒன்றாக கொண்டுவர முடியும்.”
அவர்கள் இருவரும் பெருமிதத்துடன் திரைகளை உற்றுநோக்கினர், அவர்களின் கண்களில் அதிகார வெறி மின்னியது. அடுத்த கட்ட திட்டங்களை வகுக்கத் தொடங்கினர். கணினித் திரையில் சிக்கலான வரைபடங்கள் தோன்றின பல பிரபஞ்சங்களை இணைக்கும் பாலங்கள், புதிய பௌதிக விதிகளின் சமன்பாடுகள், உயிரினங்களின் பரிணாம பாதைகளை மாற்றும் வழிமுறைகள்.
“நமது அறிவியல் படைப்புகள் மூலம்,” ஆயிஷா பெருமையுடன் கூறினாள், “நாம் மனித இனத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வோம். நம்மைப் போன்ற மேம்பட்ட மனிதர்களே எல்லா பிரபஞ்சங்களிலும் வாழ வேண்டும்.”
“ஆம்,” மார்கஸ் உறுதியுடன் கூறினார். “நாம் பரிணாம வளர்ச்சியின் அடுத்த படியை தொடங்கியுள்ளோம். நமது வழிகாட்டுதலில் புதிய தலைமுறை உருவாகும் அறிவாற்றலும் ஆற்றலும் கொண்ட தெய்வீக மனிதர்கள்.”
அவர்களின் கண்களில் வெற்றியின் ஒளி மின்னியது. ஆய்வகத்தின் சுவர்களில் அவர்களின் நிழல்கள் பெரிதாகத் தெரிந்தன. அவர்கள் தங்களை இப்போது கடவுள்களாகவே கருதினர் பிரபஞ்சங்களின் படைப்பாளர்கள், உயிர்களின் நியதி நிர்ணயிப்பவர்கள், காலத்தின் ஆட்சியாளர்கள்.
“மேலும் அவர் ஹோலோகிராஃபிக் திரையில் விரியும் அலைவடிவங்களைச் சுட்டிக்காட்டினார். “பார்க்கிறீர்களா? ஒரு பரிமாணத்தில் ஏற்படும் சிறிய மாற்றம் கூட மற்ற எல்லா பரிமாணங்களிலும் அலைகளை உருவாக்குகிறது. அவரது கண்களில் ஆர்வம் மின்னியது. நமக்கு முற்றிலும் புதிய வகையான அறிவியலுக்கான வாசலையும் திறந்துள்ளது. அங்கு காரண-காரிய உறவுகள் நாம் அறிந்ததிலிருந்து வேறுபட்டவை, பொருள் மற்றும் ஆற்றலின் விதிகள் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டவை.”
“அவரது கண்களில் ஆர்வம் மின்னியது. “இது வெறும் கணித விளக்கம் மட்டுமல்ல. நாம் பிரபஞ்சத்தின் காரணத்தை கண்டுபிடித்துள்ளோம், இந்த புரிதல் நம்மை முற்றிலும் புதிய பரிமாணங்களுக்கு அழைத்துச் செல்லும் நாம் ஒரு பிரபஞ்சத்தை மட்டும் உருவாக்கவில்லை, மாறாக உள்ளடக்கிய பரிமாண இணைப்புகளின் வலையமைப்பை நிறுவியுள்ளோம் என்று சொல்கிறீர்களா?”
திடீரென்று, எஞ்சினின் மையப்பகுதி முன்னெப்போதும் இல்லாத ஆற்றலுடன் எரிந்தது. அவர்களைச் சுற்றி வெளி-நேரம் ஏற்ற இறக்கமாக இருந்ததால் காற்றும் அலை அலையாகத் தோன்றியது. குவாண்டம் சிதைவின் மூலம், அவர்களால் நிழல் உருவங்களைக் காண முடிந்தது, இணையான பிரபஞ்சத்திலிருந்து வந்த அவர்களின் உருவங்கள், அனைத்தும் ஜெனிசிஸ் எஞ்சினின் சுற்றி தெளிவாகவே தெரிந்தன. குவாண்டம் சிதைவு காட்சிகளில், டாக்டர் மார்கஸ் திடுக்கிட்டார். ஆய்வகத்தின் குளிர்ந்த காற்று அவரது முகத்தில் மோதியது, ஆனால் அவரது நெற்றியில் வியர்வை துளிகள் உருண்டன. அவரது கைகள் கட்டுப்பாட்டு பலகையில் நடுங்கின, விரல்கள் அழுத்தும் பொத்தான்களை தவறவிட்டன. ஹோலோகிராஃபிக் மானிட்டரில் தெரிந்த அளவீடுகள் அவரது கண்களை உறைய வைத்தன.
திரையில் அலைவடிவங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சத்தை தொட்டன. திடீரென்று மார்கஸின் உடல் பனிக்கட்டி போல உறைந்தது. அவர் கண்ட காட்சி அவரது உயிரையே உலுக்கியது, மறு பிரபஞ்சத்தில் தன் பிரதிபலிப்பு, தன் சொந்த தாயை… கொடூரமாக…”நோ, திஸ் இஸ் அன்பிலிவபில்” அலறல் ஆய்வகத்தின் சுவர்களை அதிர வைத்தது. அவரது காலடி தரை நழுவியது, முழங்கால்கள் தரையில் மோதின.
இணையான பிரபஞ்சத்தில் தனது பிரதிபிம்பம் ஒரு கொடூரமான செயலில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு அவரது இதயமே உறைந்தது அவரது அன்னையின் உயிரை குடிக்கப்போகும் அந்த காட்சி! அவரது உள்ளத்தை பிய்த்தெடுத்தது அந்த கணம். பல ஆண்டுகளுக்கு முன் தாயின் இறப்பு கூட இத்தனை கொடூரமாக தாக்கவில்லை. “வேண்டாம்… இது நடக்கவே கூடாது!” என அவர் வேதனையுடன் அலறினார். அவரது உடல் முழுவதும் வெடித்து சிதறுவது போல நடுங்கியது, கண்களில் பொங்கி வழிந்த கண்ணீர் கன்னங்களை நனைத்தது. அவரது குரலில் அச்சம், அதிர்ச்சி, ஆற்றாமை, குற்ற உணர்வு என அனைத்தும் கலந்து வெளிப்பட்டன.
ஆயிஷா தன் ஆய்வக மேசையிலிருந்து வேகமாக எழுந்தாள். அவளது நீண்ட கருங்கூந்தல் காற்றில் அசைந்து முகத்தை மூடியது. அவள் கண்களில் அச்சமும் குழப்பமும் மின்னின.
“மார்கஸ்! இது என்ன? என்ன நடந்துவிட்டது?” அவளது குரல் நடுங்கியது
ஆய்வகத்தின் மையத்தில் இருந்த குவாண்டம் கணினி தொடர்ந்து புதிய தரவுகளை வெளியிட்டது. ஒவ்வொரு அளவீடும் ஒரு புதிய அதிர்ச்சியை வெளிப்படுத்தியது. பல வண்ண வரைபடங்கள் பிரபஞ்சங்களின் இணைப்புகளை காட்டின சிவப்பு கோடுகள் ஆபத்தை குறித்தன, பச்சை புள்ளிகள் நிலையான இணைப்புகளை காட்டின. மார்கஸின் கண்கள் திரையில் உறைந்தன, அவரது மூளை தரவுகளை புரிந்துகொள்ள போராடியது.
“நான்… நான் அந்த பிரபஞ்சத்தில் என்னை பார்க்கிறேன்,” அவர் தடுமாறினார். அவரது குரல் வெறும் விசும்பலாக வெளிவந்தது. “அங்கே நான்…” வார்த்தைகள் தொண்டையில் சிக்கின. அவர் தன் கண்களை மூடினார், ஆனால் அந்த காட்சி அவரது மனதில் தீயாக எரிந்தது. “நான் என் தாயை… நான் அங்கே போக வேண்டும். அதைத் தடுக்க வேண்டும்!”
ஆய்வகத்தின் மறுமுனையில், ஆயிஷா தனது குவாண்டம் ஸ்கேனரின் முன் குனிந்திருந்தாள். அவளது விரல்கள் துல்லியமாக உபகரணங்களை சரிசெய்தன. அவளது நீல நிற கண்களில் கவலையும் தீர்மானமும் மின்னின.
“மார்கஸ், நிதானமாக இருங்கள்,” அவள் தெளிவான குரலில் கூறினாள். அவளது குரலில் ஒரு தாயின் பரிவும், ஒரு விஞ்ஞானியின் உறுதியும் கலந்திருந்தன. “இது ஒரு பெரிய பிரச்சனை என்பது எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு செயல்பட முடியாது. நீங்கள் இங்கிருந்து புதிய பிரபஞ்சத்திற்கு போனால், நமது பிரபஞ்சப் படைப்பு முழுவதும் சிதைந்துவிடும். பின் அதுவே இணைபிரபஞ்சங்கள் மோதும் நிலையை உருவாகும், நீங்கள் இதன் முக்கிய அங்கம்.”
அவள் எழுந்து மார்கஸை நோக்கி நடந்தாள், அவளது ஆய்வக கோட்டின் கால்கள் தரையில் சரசரத்தன. அவளது கையில் நவீன தரவு டேப்லெட் இருந்தது, அதன் ஒளிரும் திரையில் சிக்கலான கணக்கீடுகள் தெரிந்தன. “பாருங்கள் இந்த அளவீடுகளை,” அவள் திரையைக் காட்டினாள், விரல்கள் புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டின. “உங்கள் குவாண்டம் குணகங்கள் நமது முழு அமைப்பிலும் பின்னிப் பிணைந்துள்ளன. இது ஒரு நுண்ணிய பரிமாண வலைப்பின்னல். நீங்கள் வெளியேறினால், அது டொமினோ விளைவை ஏற்படுத்தும். ஒவ்வொரு பிரபஞ்சமும் ஒன்றன்பின் ஒன்றாக வீழும்.”
குவாண்டம் எஞ்சினின் மேல்தளத்தில் முதலில் ஒரு மின்னல் கீற்று போல ஒளி வெடித்தது – அது பிரபஞ்சத்தின் திரையைக் கிழித்துக்கொண்டு வருவது போல! அந்த ஒளி வெள்ளம் படிப்படியாக பரவி, அறையின் முழு மேற்பகுதியையும் விழுங்கியது. திடீரென ஆய்வக உபகரணங்களின் மின்னணு ஒலிகள் மூச்சடங்கியது போல அமைதியானது. அந்த ஒளியிலிருந்து மூன்று அற்புத உயிரினங்கள் அவதரித்தன அவற்றின் உடல்கள் வானவில்லின் ஒவ்வொரு வண்ணமும் நடனமாடும் தூய ஒளியால் ஆனவை. அவற்றைச் சுற்றி நட்சத்திரங்கள் போல ஒளிக்கோளங்கள் வட்டமிட்டன. அவற்றின் கண்களில் கோடி ஆண்டுகளின் ஞானமும், எல்லையற்ற கருணையும் பிரகாசித்தன.
மார்கஸின் உலகமே தலைகீழாக புரண்டது. ‘நாமே பிரபஞ்சத்தின் முதன்மையான படைப்பாளிகள் என்று நினைத்தோமே… நாமும் வெறும் சிமுலேஷனில் வாழும் பாவைகளா?’ என்ற எண்ணம் அவரை உலுக்கியது. மார்கஸும் ஆயிஷாவும் பிரமிப்பில் உறைந்து நின்றனர், அவர்களின் இதயம் மார்பை உடைத்துக்கொண்டு வெளியே வரும் போல் துடித்தது. அவர்களின் முதல் உயர்-பரிமாண சந்திப்பு!
‘உங்கள் வேண்டுகோள் எங்கள் உலகங்களை எட்டியது,’ என்று முதல் உயிரினம் பேசியது. அதன் குரல் ஆயிரம் இசைக்கருவிகள் ஒன்றிணைந்து ஒலிப்பது போல எதிரொலித்தது. ‘உங்கள் ஆராய்ச்சி பிரபஞ்சத்தில் ஒரு பிளவை ஏற்படுத்தும் சூழலை உருவாகியுள்ளது. ஆனால் அஞ்ச வேண்டாம். இது போன்ற நெருக்கடிகளை நாங்கள் எண்ணற்ற முறை எதிர்கொண்டுள்ளோம்.’
இரண்டாவது உயிரினம் நிலவொளியில் மிதப்பது போல முன்னேறியது. அதைச் சுற்றியிருந்த ஒளிக்கோளங்கள் பிரபஞ்சத்தின் இரகசியங்களை வரையும் சிக்கலான வடிவங்களாக மாறின.
மார்கஸின் கண்களில் கண்ணீர் பொங்கியது, அவரது குரல் உடைந்தது. ‘என்… என் இணை-பிரபஞ்ச பிரதிபலிப்பு… என் தாயை…’ வார்த்தைகள் அவர் தொண்டையில் சிக்கிக்கொண்டன.
மூன்றாவது உயிரினம் காலத்தின் ஆழத்திலிருந்து எழும் கருணையுடன் புன்னகைத்தது. ‘ஆம், அவர் உங்கள் தாயின் உயிரை எடுக்க முனைகிறார். ஆனால் அது அவரது உண்மையான விருப்பமல்ல. அவரும் உங்களைப் போலவே ஆழ்ந்த வேதனையிலும் குழப்பத்திலும் சிக்கித் தவிக்கிறார்..
மூன்று உயிரினங்களும் ஒரு வட்டமாக நின்று, தங்கள் கைகளை உயர்த்தின. அவர்களின் உடல்களிலிருந்து வெளிப்பட்ட ஒளிக்கதிர்கள் மையத்தில் சந்தித்தன. அங்கே ஒரு சிக்கலான குவாண்டம் கணக்கீடு தோன்றியது – பல பரிமாணங்களில் நகரும் எண்கள், சமன்பாடுகள், குறியீடுகள்.
“இது ஒரு பாலம்,” என்று முதல் உயிரினம் விளக்கியது. “இதன் மூலம் நாம் உங்கள் தாயின் இணை-பிரபஞ்ச பிரதிபலிப்பை இங்கே கொண்டுவர முடியும்.
“ஆனால் நீங்கள் அதை மாற்ற முடியும், இல்லையா? நீங்கள் படைப்பாளி? எல்லா பிரபஞ்சங்களையும் கட்டுப்படுத்துபவர், எங்களை இயக்குபவரும் நீங்கள் தானே?” என்றார் மார்கஸ்
“இது அவ்வளவு எளிதானது அல்ல. ஆம், நாம் படைப்பாளி. ஆனால் நாம் படைத்த ஒவ்வொரு பிரபஞ்சமும் அதன் சொந்த விதிகளையும், நியதிகளையும் கொண்டுள்ளது. அவற்றை மீறி நான் தலையிட முடியாது.”
“ஏன்?” அவர் கேட்டார், குரலில் வேதனை தெரிந்தது.
“இது குவாண்டம் இயற்பியலின் அடிப்படை கோட்பாடுகளுடன் தொடர்புடையது,”ஒவ்வொரு பிரபஞ்சமும் அதன் நிலையில் உள்ளது. நாம் ஒரு பிரபஞ்சத்தில் தலையிட்டால், அது மற்ற அனைத்து பிரபஞ்சங்களிலும் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும்.”
“இணை-பிரபஞ்சங்களை இங்கிருந்து தொடர்பு கொள்ள முடியும் ஆனால் அவற்றை மாற்ற முடியாது. இது போன்ற ஒரு மாற்றம் பல பிரபஞ்சங்களில் பேரழிவை ஏற்படுத்தும்.”
மார்கஸ் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். “இது நியாயமற்றது,” என்று கூறினார்.
“நான் புரிந்துகொள்கிறேன்,”ஆனால் இந்த விதிகள் ஒரு நோக்கத்துடன் உள்ளன. ஒவ்வொரு பிரபஞ்சமும் அதன் சொந்த பாதையில் பரிணமிக்க வேண்டும். அதன் சொந்த கதையை எழுத வேண்டும்.”
“நாங்கள் படைப்பாளி, எங்களை நீங்கள் இயக்குகிறீர்கள். நீங்கள் விதிகளை மாற்ற முடியாதா?”
“படைப்பாளியாக இருப்பது என்பது அதிகாரம் மட்டுமல்ல, பொறுப்பும் கூட. நாம் படைத்த ஒவ்வொரு உயிரினமும் அதன் சொந்த தனித்துவத்தையும், சுதந்திரத்தையும் கொண்டிருக்க வேண்டும்.”
மார்கஸ் சிறிது நேரம் யோசித்தார். “நீங்கள் ஏன் இவ்வளவு பிரபஞ்சங்களை படைத்தீர்கள்?”
“பல்வேறு சாத்தியக்கூறுகளை ஆராய, ஒவ்வொரு பிரபஞ்சமும் வித்தியாசமான விதிகளையும், சூழ்நிலைகளையும் கொண்டுள்ளது. அவை அனைத்தும் வித்தியாசமான வழிகளில் பரிணமிக்கின்றன.”
மார்கஸ் பெருமூச்சு விட்டார். “இது கடினமாக இருக்கிறது.”
“எப்போது பார்க்கலாம்?” மார்கஸ் கேட்டார்.
“நீங்கள் தயாராக இருக்கும்போது,”.
“ஆனால் முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் இது உங்கள் தாயை உயிருடன் கொண்டுவராது. இது வேறொரு பிரபஞ்சத்தில் உள்ள அவரது பிரதிபலிப்பு மட்டுமே.”
“எனக்குத் தெரியும்,” அவர் மென்மையாக சொன்னார். “ஆனால் அவரைப் பார்ப்பது… அது ஏதோ ஒரு வகையில் உதவும்.”
அறையின் மையத்தில் ஒரு மெல்லிய ஒளிப்படலம் தோன்றியது. அது மெதுவாக உருவெடுத்தது – மார்கஸின் தாயின் உருவம். அவரது உடல் ஒரு கனவின் பிம்பம் போல் மங்கலாக இருந்தது.
பிரபஞ்சங்களுக்கிடையே பாலம் போன்ற ஒளிவட்டத்தின் நடுவே, மார்கஸும் அவரது தாயும் எதிரெதிரே நின்றனர். அவர்களுக்கிடையே உள்ள தூரம் வெறும் அடிகள் மட்டுமே, ஆனால் பல பிரபஞ்சங்களைக் கடந்தது.
“நீ உண்மையிலேயே?” மார்கஸ் மெதுவாகக் கேட்டார், அவரது குரல் சிறுவனின் குரல் போல ஒலித்தது.
“ஆம், மகனே. எல்லா பிரபஞ்சங்களிலும் நான் உன் தாய்தான்,” அவர் புன்னகைத்தார்.
“ஒரு பிரபஞ்சத்தில்… நான்…” மார்கஸால் சொற்களை முடிக்க முடியவில்லை.
“எனக்குத் தெரியும்,” அவர் இடைமறித்தார், அவரது குரலில் குற்றச்சாட்டு இல்லை. “ஒரு பிரபஞ்சத்தில் நீ என்னைக் கொன்றாய். மற்றொன்றில் நீ என்னைக் காப்பாற்றினாய். இன்னொன்றில் நான் உன்னை விட்டுப் பிரிந்தேன். எல்லாமே நடந்துள்ளன. அனைத்து சாத்தியங்களும் பிரபஞ்சங்களாக மலர்ந்துள்ளன.”
“எதற்காக என்னைச் சந்திக்க வந்தாய்?” மார்கஸ் கேட்டார், அவரது குரலில் குற்ற உணர்வும் ஆச்சரியமும் கலந்திருந்தன.
“உன் பணியின் முக்கியத்துவத்தை உணர்த்த,” அவர் சொன்னார். “நீ பிரபஞ்சங்களை உருவாக்கவில்லை, மார்கஸ். நீ அவற்றைக் கண்டறிந்தாய். அவை எப்போதும் இருந்தன.”
“அப்படியானால் நாங்கள் யார்?” மார்கஸ் கேட்டார்.
“நீங்கள் கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள்,” அவர் பதிலளித்தார். “இப்போது, உன் பணிக்குத் திரும்பு. பல பிரபஞ்சங்கள் காத்திருக்கின்றன. அவற்றைப் புரிந்துகொள். அதுதான் உன் உண்மையான பணி.”
தாயின் உருவம் மெதுவாக மங்கத் தொடங்கியது.
“நான் உன்னுடன் இருக்கிறேன்,” அவரது குரல் தூரத்திலிருந்து வந்தது. “எல்லா பிரபஞ்சங்களிலும், எல்லா வடிவங்களிலும், நான் எப்போதும் உன்னுடன் இருக்கிறேன்.”
“அம்மா!” மார்கஸின் குரல் உடைந்தது. அவர் முன்னோக்கி நகர்ந்தார், ஆனால் உயர்-பரிமாண உயிரினங்கள் அவரைத் தடுத்தன.
“பொறுங்கள்,” என்றன அவை.
“அவர் ஒரு பிரதிபலிப்பு. நீங்கள் அவரைத் தொட முயன்றால், அது இணைப்பை உடைத்துவிடும்.”
மார்கஸின் தாய் அன்புடன் புன்னகைத்தார். “என் அருமை மகனே,” அவர் மென்மையாகப் பேசினார். அவரது குரல் தூரத்திலிருந்து வருவது போல் ஒலித்தது. “நீ எவ்வளவு வளர்ந்துவிட்டாய். எவ்வளவு முக்கியமான வேலை செய்கிறாய். நான் உன்னை எவ்வளவு பெருமைப்படுகிறேன் என்று தெரியுமா?”
“என்னை நோக்கி குற்ற உணர்வு கொள்ளாதே. அது நீ இல்லை, மற்றொரு உலகின் நீ. இப்போது, நீ உன் வேலைக்குத் திரும்பு. உன் பணி முடிக்கப்பட வேண்டும். பிரபஞ்சங்கள் உன்னை எதிர்பார்க்கின்றன. உனக்காக மட்டுமல்ல, எல்லா உயிர்களுக்காகவும் இதை செய். நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன், ஒவ்வொரு பிரபஞ்சத்திலும்….”
விண்கலம் மெதுவாக உயரத் தொடங்கியது. மார்கஸின் கண்கள் அதைத் தொடர்ந்தன. புவியீர்ப்பு விசையை மீறி மெதுவாக உயர்ந்த அந்த பறக்கும் தட்டு, அவன் கண்களுக்கு முன்னால் ஒரு வெள்ளிப் புள்ளியாகச் சுருங்கிக் கொண்டிருந்தது. காற்றில் ஒரு விநோதமான அதிர்வு. வானத்தில் சிதறிய மேகங்களுக்கிடையே அந்த விண்கலம் மறைந்து கொண்டிருந்தது. மார்கஸ் தன் கையிலிருந்த அவர்கள் கொடுத்த பொருளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான். அவர்கள் சொன்ன வார்த்தைகள் இன்னும் அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன: “நீ தயாராக இருக்கும் போது, நாங்கள் திரும்பி வருவோம்.” வானத்தில் கடைசி வெள்ளிப் புள்ளியும் மறைந்த பிறகும், அவன் அப்படியே நின்று கொண்டிருந்தான், காற்றில் மிதந்த அந்த விநோத வாசனையை நுகர்ந்தபடி
நாட்கள் நகர்ந்தன அறிவியல் குழு மீண்டும் தங்கள் பணியில் கவனம் செலுத்தியது. ஆய்வக நூலகத்தில் ஆயிஷா ஐன்ஸ்டீனின் “குவாண்டம் இயங்குமுறை பற்றிய கோட்பாட்டு சிந்தனைகள்” புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார்.
“நமது அனுபவம் ஷ்ரோடிங்கரின் பூனை சோதனையை நினைவூட்டுகிறது ஒரே நேரத்தில் இரண்டு நிலைகளில் இருக்கும் பூனையைப் போல, மார்கஸின் தாய் இரு வெவ்வேறு பிரபஞ்சங்களில் வெவ்வேறு விதிகளைப் பின்பற்றினார்.”
கணினியிலிருந்து தலையை உயர்த்தினார். “ஆம், ஆனால் இது வெறும் அறிவியல் கோட்பாடு மட்டுமல்ல. இது தத்துவார்த்த கேள்விகளையும் எழுப்புகிறது. ஒரு மனிதனின் தார்மீக தேர்வுகள் மற்ற பிரபஞ்சங்களில் எவ்வாறு பிரதிபலிக்கின்றன?”
ஆயிஷா ஒரு பழைய தத்துவ நூலை மேற்கொள்காட்டினார். “‘ஒவ்வொரு செயலும் பிரபஞ்சத்தின் மற்ற பகுதிகளில் அலைகளை உருவாக்குகிறது.”
மார்கஸ் ஜன்னலருகே நின்று, இரவு வானத்தை வேதனையுடன் பார்த்தார். “நமது தேர்வுகளின் நெறிமுறை பற்றி யோசிக்கிறேன். ஒரு பிரபஞ்சத்தில் நல்லதாகத் தோன்றும் செயல் மற்றொரு பிரபஞ்சத்தில் தீமையாக மாறலாம். நாம் எப்படி சரியான முடிவெடுப்பது?”
“இம்மானுவேல் கான்ட்டின் ‘தூய அறிவு” இதற்கு ஒரு பதிலைத் தருகிறது,” என்றார் ஆயிஷா. “நமது நெறிமுறைகள் உலகளாவியதாக இருக்க வேண்டும் அனைத்து பிரபஞ்சங்களிலும் பொருந்தக்கூடியதாக.” திடீரென ஆய்வகத்தின் கணினிகள் புதிய தரவுகளைக் காட்டின. விரைந்து சென்று பார்த்தார். “இது சுவாரஸ்யமானது. நமது பிரபஞ்சப் படைப்பு முயற்சி மற்ற பிரபஞ்சங்களில் உள்ள அறிவு வளர்ச்சியை வேகப்படுத்துகிறது..”
கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு மார்கஸ் தொடர்ந்தார் “பார்மனைடிஸின் சொன்னபடி நாம் வெறும் இருப்பு நிலையில் இல்லை, மாறாக அனைத்து பிரபஞ்சங்களின் கூட்டு உணர்வோடு இயங்குகிறோம்.”
” ‘மெட்டாமார்போசிஸ்’ கவிதையை நினைவுபடுத்துகிறது,” என்றார் ஆயிஷா. “‘ஒவ்வொரு மாற்றமும் புதிய வடிவங்களை உருவாக்குகிறது, ஆனால் சாரம் மாறாமல் இருக்கிறது.’ நமது பிரபஞ்சப் படைப்பு அதே போல புதிய உலகங்களை உருவாக்குகிறது, ஆனால் அடிப்படை விதிகள் மாறாமல் இருக்கின்றன.”
மார்கஸ் தனது குறிப்பேட்டில்: “பிரபஞ்சங்கள் இடையேயான தொடர்பு என்று தலைபிட்டார்”
1.நமது செயல்கள் எல்லையற்ற விளைவுகளை ஏற்படுத்துகின்றன
2. அறிவும் நெறிமுறைகளும் பரிணாம வளர்ச்சி அடைகின்றன
3. உயர் பரிமாண உயிரினங்கள் நமக்கு வழிகாட்டுகின்றன.
4. நம் யோகம் என்பது படைப்பது மட்டுமே.
ஆயிஷா புன்னகைத்தார். “நமது ஆராய்ச்சி இப்போது வெறும் அறிவியல் கண்டுபிடிப்பு மட்டுமல்ல. இது ஒரு தத்துவ பயணம், ஒரு நெறிமுறை கற்றல், ஒரு ஆன்மீக அனுபவம்.”
ஆய்வகத்தின் மேல்தளத்தில், குவாண்டம் ஜெனிசிஸ் எஞ்சின் தொடர்ந்து ஒளிர்ந்தது. அதன் ஒளிக்கீற்றுகள் புதிய பிரபஞ்சங்களை உருவாக்கின. ஒவ்வொரு பிரபஞ்சமும் தனித்துவமானது, ஆனால் அனைத்தும் ஒரே பெரிய வலையமைப்பின் பகுதிகள். அறிவியல் குழு தொடர்ந்து கண்காணித்தது, கற்றுக்கொண்டது, வளர்ந்தது பிரபஞ்சங்களின் முடிவில்லா நடனத்தின் முக்கியமான பகுதியாக.
மார்கஸ் “நாம் ஒரு மேம்பட்ட நாகரிகத்தால் உருவாக்கப்பட்ட உருவகப்படுத்துதலில் இருந்தால் அதாவது நமது பிரபஞ்சமே ஒரு அதிநுட்ப கணினி உருவகப்படுத்துதல் என்றால் மற்றும் நாம் இப்போது நமது சொந்த பிரபஞ்சங்களை உருவாக்கும் திறனைப் பெற்றிருந்தால், நாம் யதார்த்தத்தின் அடிப்படை கட்டமைப்பையே விரிவுபடுத்துகிறோம்.”
ஆயிஷா முன்னோக்கி சாய்ந்தார், அவரது நீல கண்கள் ஆர்வத்துடன் மின்னின. மூன்று புதிய பரிமாண வரைபடங்களைத் திறந்தார். பாருங்கள், இங்கே. நாம் உருவாக்கிய ஒவ்வொரு புதிய பிரபஞ்சமும் அதன் சொந்த விதிகளைக் கொண்டுள்ளது. ஆனால் அவை வெறும் தனித்த அமைப்புகள் அல்ல. அவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன ”
“நாம் புதிய பிரபஞ்சங்களை உருவாக்கும்போது, வெறும் கால-வெளியை மட்டும் உருவாக்கவில்லை,” என்று டாக்டர் மார்கஸ் தனது கையை உயர்த்தி, மேலே உள்ள ஹோலோகிராபிக் காட்சியில் புதிதாக உருவாகும் பிரபஞ்சத்தை சுட்டிக்காட்டினார். “எளிய விஞ்ஞான செயல்முறை அல்ல. நாம் ஒரு கடவுளின் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறோம், பாருங்கள், இங்கே. பில்லியன் கணக்கான நட்சத்திரங்கள் – ஒவ்வொன்றும் ஒரு சூரியன், ஒவ்வொன்றும் புதிய உலகங்களுக்கான ஒளி. டிரில்லியன் கணக்கான கிரகங்கள் – ஒவ்வொன்றும் ஒரு வீடு, ஒரு தாய்மடி, புதிய வாழ்க்கை. நாம் கற்பனை கூட செய்ய முடியாத உயிரினங்கள். காற்றில் மிதக்கும் உயிரிகள், ஒளியை உணவாக உட்கொள்ளும் ஜீவன்கள், குவாண்டம் நிலைகளில் வாழும் நனவுகள்.”
ஆயிஷா தனது டேப்லெட்டில் வேகமாக குறிப்புகளை எடுத்தார். “இவை அனைத்திற்கும் நாம் பொறுப்பு. இது ஒரு தந்தையின் பொறுப்பு போல, ஆனால் பல கோடி மடங்கு பெரியது. ஒவ்வொரு உயிரினமும் உணரும் ஒவ்வொரு உணர்வுக்கும் அவர்களின் முதல் சிரிப்பு முதல் அவர்களின் கடைசி கண்ணீர் வரை…”
குவாண்டம் சமிக்ஞைகள் மேலும் தீவிரமடைந்தன. திரைகளில் புதிய தகவல்கள் வெள்ளமாய் பாய்ந்தன. “நமது பிரபஞ்சத்தை உருவாக்கிய அந்த மேம்பட்ட நாகரிகம், மார்கஸ் மெதுவாக பேசினார். “அவர்களும் இதே போன்ற நிலையத்தில் நின்றிருப்பார்கள். இதே போன்ற கேள்விகளை எதிர்கொண்டிருப்பார்கள். ஒரு முடிவில்லாத சுழற்சி,” . ஒவ்வொரு பிரபஞ்சமும் மற்றொரு பிரபஞ்சத்தை உருவாக்குகிறது. ஒவ்வொரு நாகரிகமும் புதிய நாகரிகங்களுக்கு வழிவகுக்கிறது.”
ஜெனிசிஸ் எஞ்சின் கடைசியாக ஒரு புதிய வகையான ஒளியுடன் ஒளிர்ந்தது , கண்களால் புரிந்துகொள்ள முடியாத ஒரு நிறம். அது பிரபஞ்சத்தின் அடிப்படை சக்தியின் நிறம், நனவின் நிறம். நிலையத்தின் படிக சுவர்களில், எண்ணற்ற புதிய பிரபஞ்சங்கள் பிறந்தன, ஒவ்வொன்றும் தனது சொந்த கதையுடன், தனது சொந்த சாத்தியக்கூறுகளுடன்.
“ஒருவேளை,” ஆயிஷா மெதுவாக பேசினார், “நம்மை உருவாக்கிய அந்த மேம்பட்ட நாகரிகம் இப்போது நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கலாம். நாம் அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகிறோமா என்று பார்க்கிறார்கள்.”
“அல்லது ஒருவேளை,” என்று மார்கஸ் சிந்தித்தார், “நாம் அவர்களின் எதிர்பார்ப்புகளை மீறி, புதிய வழிகளை கண்டுபிடிக்கிறோம். புதிய சாத்தியக்கூறுகளை திறக்கிறோம்.”
ஆயிஷாவின் உரையாடலை கேட்டபின், அவரது மனதில் புதிய சிந்தனைகள் உருவாகின.
“நாம் யார்?” என்ற கேள்வி அவர் மனதை உறுத்திக்கொண்டிருந்தது. “ஒரு பிரபஞ்சத்தின் படைப்பா? அல்லது படைப்பாளர்களா?”
“ஆம்,” அவர் மெதுவாக புன்னகைத்தார். “நாம் தனித்தனி தீவுகள் அல்ல. நாம் ஒரே பெருங்கடலின் அலைகள். ஒவ்வொரு அலையும் மற்றொரு அலையை உருவாக்குகிறது, முடிவில்லா நடனத்தில்.”
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, திரையில் புதிய மாற்றங்கள் தெரிந்தன. குவாண்டம் அலைகள் சிக்கலான வடிவங்களை உருவாக்கின கணித சமன்பாடுகளைப் போன்ற அமைப்புகள்.
“இவை… இவை நம்முடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறதா?” ஆயிஷா வியப்புடன் கேட்டாள்.
மார்கஸ் புன்னகைத்தார். “ஆம். நமது குழந்தைகள் வளர்ந்துவிட்டன. இப்போது அவை தங்கள் படைப்பாளர்களைப் பற்றி கேள்விகள் கேட்கத் தொடங்கியுள்ளன.”
அன்று இரவு, ஆய்வகத்தின் கணினிகள் புதிய வடிவங்களைக் காட்டின பழைய வடிவங்களைப் போலவே, ஆனால் சற்று வித்தியாசமாக. புதிய பிரபஞ்சங்கள் பிறக்கும் வடிவங்கள். மார்கஸ் புன்னகையுடன் அவற்றை கவனித்தார், ஏனெனில் இப்போது அவருக்குத் தெரியும் இது ஒரு முடிவல்ல, ஒரு துவக்கம்.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

இக்கதையில் தன் பேரறிவின் காரணமாக பிரபஞ்சத்தினையே உருவாக்க கூடிய அறிவினை உடையவர்களுடன் கதை துவங்குகின்றது. “மனிதர்கள் ஒரு காலத்தில் ஒரே கிரகத்தில் வாழ்ந்தார்கள்,” என்பதை “அது வெறும் புராணம்தான்,” பார்க்கக்கூடிய காலமொன்றில் கதை துவங்குகின்றது. அதுவரை உயிரினங்களில் நிகழாத பெரும் கண்டுபிடிப்பினை உருவாக்குவதால் தாங்கள் படைப்புக் கடவுள் என இறுமாப்புக் கொள்கின்றனர், அவர்கள் உருவாக்கும் கண்டு பிடிப்பினை தொடரும் சம்பவங்கள் அவர்கள் படைப்பூக்கம் எல்லை உடையது, அவர்கள் விரிந்து செல்லக் கூடிய சாத்தியங்கள் இறுமாப்பின் வழியே இல்லை, தேடலின் வழியே என தெளிவினை உருவாக்குகின்றது. “ஆம். நமது குழந்தைகள் வளர்ந்துவிட்டன. இப்போது அவை தங்கள் படைப்பாளர்களைப் பற்றி கேள்விகள் கேட்கத் தொடங்கியுள்ளன” என கதை முழுமையை நோக்கி செல்கின்றது.