செந்தமிழ்க் காப்பியங்கள்

தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம். தமிழின் ஒரிஜினல் காப்பியம். ஒரிஜினல் என்று அழுத்திச் சொல்வதன் காரணம், மற்றெல்லாம் வடமொழியில் இருந்து பெயர்க்கப்பட்டவை, தழுவப்பட்டவை அல்லது மூலமாகக் கொண்டவை, பிற காப்பியங்கள். அரும்பத உரையாசிரியர், அடியார்க்கு நல்லார் எனத் தொடங்கி சுஜாதாவின் எளிய அறிமுகம் வரை வந்து சேர்ந்தது சிலப்பதிகாரம். சிலம்புச் செல்வர் என அறியப்பட்ட ம.பொ.சிவஞான கிராமணியாரால் சிலப்பதிகாரம் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டது. சிலப்பதிகாரத்துக்கு ம.பொ.சி. அற்புதமான விளக்கத் தெளிவுரை ஒன்று எழுதியுள்ளார். 2008-ல் முதற்பதிப்பு வெளிவந்தது. தமிழ்நாடு முழுக்க, சிலம்பைப் பரவலாக்கிய பெருமை ம.பொ.சி.க்கு உண்டு. 1942-ல் ஆகஸ்ட் போரில் ஈடுபட்டுச் சிறையில் கிடந்த போது சிலம்பைப் பயிலத் தொடங்கியதாக ம.பொ.சி. எழுதுகிறார் முன்னுரையில். ஆசிரியரின் உதவியின்றி, திரும்பத் திரும்பப் பயின்றிருக்கிறார். ம.பொ.சி.யின் சிலப்பதிகாரச் சொற்பொழிவு கேளாதார் செவியென்ன செவியே என்ற கேட்டவர் துணிந்து சொல்ல இயலும்.

பிராந்து

முப்பிடாரி அம்மன் கோயில் கொடைக்கு கும்பாட்டம் வேண்டாம் என்று சொல்லி, இசைத்தட்டு நடனம் நூலகத் திடலில் ஏற்பாடாகி இருந்தது. திடல் நிறைய இருசனக் கூட்டம். பாட்டும் ஆட்டமும் நெரிபிரியாகப் போய்க் கொண்டிருந்தது. கன்னித்தமிழ் போன்றவளே என்பது போல் ஒரு பாட்டு. தொடையை இறுக்கிய காலாடையும் முலைகளைத் துருத்திய மேலாடையும் அணிந்த ஒருத்தி விரகத்தில் நெளிந்தாள். கண்ணைத் துன்புறுத்தும் நிறங்களில் உடையணிந்து, தொப்பிவைத்து, இரவிலும் கறுப்புக் கண்ணாடி அணிந்த ஒருவன் இடுப்பை புணர்ச்சி விதிகளில் ஒன்றின்படி அசைத்துக் கொண்டிருந்தான்.

நினைவுகளின் சுவட்டில்

பரந்த வாசிப்பும், நம்பும் தீவிரமான இலக்கியக் கொள்கைக்கான அர்ப்பணிப்பும், அஞ்சாமையும், கூர்ந்த அவதானிப்பும், நேர்மையான அபிப்பிராயங்களும் வெ.சாவின் பலங்கள் என்பதை அவர் எழுதிய ஒரு நூலையேனும் வாசித்திருப்பவர் உணர இயலும். வெ.சாவுக்கு இந்த பலம் வந்த ஊற்றுக்கண், நாற்றங்கால், உரக்குண்டு எதுவென இந்த நூலை வாசிப்பவர் உணர இயலும். இலக்கிய விமர்சனமாக 12, நாடகம் சார்ந்த 3, ஓவியம் சிற்பம் பற்றி 3, சினிமா சார்ந்து 3, இன்ன பிற 3, என 24 நூல்கள். மொழி பெயர்ப்புகள் 3, தொகை நூல்கள் 4 என்பன தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறைக்கு அவர் கொடை. என் நினைவு சரியாக இருக்குமானால், எனது முதல் கட்டுரையை நான் 1982-ல் எழுதினேன். அது ஒரு மதிப்புரையாக இருந்தது. அதுவும் வெ.சா கேட்டதற்குப் பணிந்து- ஆ.மாதவனின் நாவல், ‘கிருஷ்ணப் பருந்து’ பற்றியது. மதிப்புரை அல்லது கட்டுரை எழுத எனக்கு வரும் என்றே தெரியாது அப்போது.

காப்பிய இமயம்

வழக்கமாக மேடைப் பொழிவாளர்கள் பலரும் தம் கைவசமிருக்கும் நூற்றுக்கும் குறைவான கம்பன் பாடல்களையே எல்லாப் பந்திகளிலும் திரும்பத் திரும்ப விளம்புகிறார்கள். அதாவது கம்பனில், மேடைகளில் புழங்கும் பாடல்கள் ஒரு சதமானத்துக்கும் கீழே. ஆனால் அவற்றை வைத்துக் கொண்டு ஒரு புருஷ ஆயுளையும் ஓட்டிவிடலாம். விளைவு திரும்பத் திரும்ப காதில் ஒலிக்கும் அதே நூற்றுக்கும் குறைவான பாடல்கள்.

நெடுஞ்சாலை

படைப்பாளி எதையும் எழுதப் புகுமுன் போருக்குப் போகிறவன் போல்தான். தனது களம், காலம், கரு சார்ந்து தனது உத்தியை அமைத்துக்கொள்கிறான். மொழியைத் தேர்ந்து கொள்கிறான். தற்செயலாக அமைவதும் திட்டமிட்டுக் கொள்வதும் உண்டு. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்றொரு கூற்றுண்டு வண்டமிழில். இயல்பாக ஒரு மெக்கானிக் சொல்வதில்லையா 24/26 ஸ்பேனர் எடு என அது போல.

குணங்குடியார் பாடற்கோவை

எல்லோரும் நாத்திகம் பேசும்போது ஒற்றைத் தனியாளாய் எதிர் நின்று வாதாடுபவர் இருளப்பப் பிள்ளை பெரியப்பா. சிலசமயம் திருவனந்தபுரம் வாசம். எனவே, ‘கேரளாக் கொம்பையா’ எனப்பட்டப்பெயரும் உண்டு. வெற்றிலை – பாக்கு – புகையிலைப் பழக்கமும், பீடிப்புகையும் உண்டு. அவர்தான் சித்தர் பாதை பயின்றவர். சீட்டுக்களி இல்லாதபோது, ஆள் சேராதபோது உற்சாகமான மனநிலையில், அவர் தொண்டை திறந்து கம்பீரமாகப் பாடுவது மஸ்தான் சாகிபு பாடல்கள்.

மீன்கள் அன்றும் இன்றும்

‘மீன்கள் அன்றும் இன்றும்,’ நூலை எழுதியது முனைவர் ச.பரிமளா. தமிழ்ப்பல்கலைக்கழகம் 1991-இல் வெளியிட்டது. சிலர் மணக்கோலத்தில் கூடக் கிழவன் போல் தோற்றம் தருவதுண்டு. அதுபோல, வாங்குபோதே பழம் புத்தகமாகத் தோன்றியது. விலை குறிப்பிட்டிருக்கவில்லை. 280 பக்கங்கள் கொண்ட டெமி அளவிலான நூலுக்கு, கழிவு போக, என்னிடம் ஐம்பத்தி நான்கு ரூபாய் வாங்கினார்கள்.

செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல் திரட்டு

அந்தண இளம்பெண், கைம்மை நோற்பவள், ஞானம் பெற்றாள், பாடல்கள் புனைந்தாள் எனில்- இருநூறோ, நானூறோ ஆண்டுகள் முந்திய சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? கடும் தண்டனையாக ஜாதிப் பிரஷ்டம்.. சற்று யோசித்துப் பாருங்கள், ஜாதிப் பிரஷ்டம் செய்யப்பட்ட கன்னி கூடக் கழிந்திராத இளம் விதவை எங்கு போவாள், எதை உண்பாள், காமக் கடூரக் கண்களிலிருந்து எவ்விதம் தப்புவாள், எங்ஙனம் உயிர் தரித்திருப்பாள்?

எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு

பிறந்து, வளர்ந்து, உண்டு, படித்து, வேலைபார்த்து, தாம்பத்யம் நடத்தி, சீரியல் – சினிமா பார்த்து கொடுங்கூற்றுக்கு இரையெனப்பின் மாயும் ஓர் அற்ப மானுட சீவனுக்கு – விபத்தில் மாண்டால் இரண்டு இலட்ச ரூபாய் நஷ்ட ஈட்டுக்குத் தகுதியானவருக்கு – பெயர் வைக்க, எய்ட்ஸுக்கு மருந்து காணும் முயற்சி போல் தம்பதியர் உழைக்கும்போது, பல நூறு ஆண்டுகள் சீவித்திருக்கப் போகிற – சீவித்திருக்குமா என்பதோர் உப கேள்வி – புத்தகத்துப் பெயரிட எத்தனை சிரமப்பட வேண்டும்?

தமிழரும், தாவரமும்

‘தமிழரும், தாவரமும்’ என்றொரு புத்தகம் வாசிக்கக் கிடைத்தது. கண்ணில் பட்ட இடம் பொது நூலகம், தற்செயலாக. நூலகர் என் வாசகர், உறவினர், நண்பர். எனவே அவர் பெயரில் பதிவு செய்து எடுத்துக்கொண்டு வந்தேன். அந்தப் படியின் முதல் வாசகன் நான். பெரும்பாலும் இதுபோன்ற நூல்கள், கிராம நூலகங்களில் ஒரு வாசகனால் கூட எடுத்துப் புரட்டிப் பார்க்கப்படும் யோகமற்ற சோகத்தில் வெறிதே உறங்கிக் கிடக்கின்றன. இன்னொரு வாசகரால் படிக்கப்படாமலே போய்விடும் சாத்தியமே அதிகம்.

பனுவல் போற்றுதும்: சங்க இலக்கியத் தாவரங்கள்

பெருஞ்சொல் அகராதி தொகுதி இரண்டும் நான்கும், சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் தொகுதிகள் ஒன்றும், இரண்டும், நான்கும் வாங்கினேன். விற்பனை செய்யும் ஊழியர் பெருந்தன்மையுடன் இருபத்தைந்து விழுக்காடு கழிவு செய்து பில் கொடுத்தார். மேலதிகம் தகவல் ஒன்றும் சொன்னார். பேரறிஞர், மாமேதை, இன்னாட்டு இங்கர்சால், தென்னாட்டு பெர்னாட் ஷா என்றெல்லாம் அறியப்பட்ட அண்ணாதுரை பிறந்த செப்டம்பர் மாதம் மட்டும் ஐம்பது சதமானம் தள்ளுபடி என்று. வேறு எந்தத் தமிழ்க் கொம்பன் பிறந்த மாதமானாலும் இருபத்தைந்து விழுக்காடுதான். வரும் செப்டம்பரில் வரவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.