தொலைநோக்கிகளின் அறிதிறன் வழியே எதிர்பாராத புதிய புவனங்களைக் நோக்குகிறோம். பொருட்களின் நுண்மையை நோக்கி நகர நகர அவற்றின் அபாரமான கட்டமைப்பினை அறிகிறோம். விண்மீன் மண்டலங்கள்(Galaxies) தோன்றிய, ஆயிரத்து நானூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பெருவெடிப்பு நிகழ்வு வரை கிட்டத்தட்ட நெருங்கினாலும், அதற்கு முன் உள்ள ஏதோ ஒன்றின் தீற்றலை அறிகிறோம். வெளி(Space) வளைவானது என தெரிந்திருந்தாலும் அது அதிரும் துளிமக் கூலங்களால் (Quantum Grains) நெய்யப்பட்டுள்ளது என்பதையும் முன்னறிகிறோம்.
Series: துளிம ஈர்ப்பியலை நோக்கிய பயணம்
வேர்கள்
இந்த உலகம் எவ்வாறு தோன்றியது, எதனால் செய்யப்பட்டது, எவ்வாறு ஒழுங்குபடுத்தப் படுகிறது மற்றும் இயற்கை நிகழ்வுகளின் காரணம் என்ன? – சிந்தனைக்கும் எட்டாத காலத்திலிருந்து, அல்லது குறைந்தபட்சம் மானுடம் தொல்பிரதிகளை விட்டுச்சென்ற காலத்தில் இருந்து மானுடம் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விகள் இவை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய விடைகளையே கொடுத்தனர்
வகுத்துச் செல்வதன் எல்லை ?
அரிஸ்டாட்டிலின்படி, பிரபஞ்சம் தொடர்ச்சியான ஒன்றல்ல – துளிகளாலானது. எனவே எல்லையற்ற சிறு புள்ளிகளை வைத்துக் கொண்டு ஒரு இணைப்பை ஏற்படுத்துதல் முற்றிலும் இயலாத ஒன்று என்பதே டெமாகிரீடஸின் வாதம். எனவே எல்லைக்குட்பட்ட எண்ணிக்கையும் அளவும் கொண்ட சிறு துண்டுகளே கம்பியின் ஒரு இணைப்பை உருவாக்க இயலும்.
பொருட்களின் இயற்கை
ஐரோப்பிய சமூகத்தின் ஒழுங்கடுக்கில் எதிரொலித்த பிரபஞ்சத்தின் ஒழுங்கடுக்கு தாந்தேவினால் மிக அற்புதமாக பாடப்பட்டது. பூமியை மையமாகக் கொண்ட உருண்டையான பிரபஞ்சம்; சுவனத்திற்கும் பூமிக்கும் இடையே மாற்றில்லாத பிரிவு; இயற்கை நிகழ்வுகள் குறித்து உருவத்துடன் கூடிய அறுதியான விளக்கங்கள்
நியூட்டனும் பிறையும் – 1
மண்ணுலகம் என்னும் தெளிவான பிரிவினை அவசியம். விண்ணுலகிலுள்ள அனைத்தும் படிகங்களானவை. மையமான கோள வடிவான புவியினை, பொதுவான மைய வட்டப்பாதையில் நிரந்தரமாக அவை சுற்றி வருகின்றன. இனி, மண்ணுலகில் சாதாரண மற்றும் தூண்டப்பட்ட இயக்கங்கள் என்னும் பிரிவினை அவசியம். ஏதேனும் ஒரு வகையான தள்ளுதலில் தொடங்கும் தூண்டப்பட்ட இயக்கம், அதனுடனேயே தானும் நின்றுவிடும். சாதாரண இயக்கம் மேலும் கீழுமாக செங்குத்தான திசையில் – பொருள் மற்றும் இடத்தைப் பொறுத்து இயங்கும்
நியூட்டனும் சிறுநிலவும் – 2
மத்தியகாலத்தில் கோலோச்சிய அரிஸ்டாடிலினுடைய கோட்பாட்டு கட்டமைப்பின் வீழ்ச்சியே இது. உதாரணத்திற்கு தாந்தேவின் பிரபஞ்சத்தினையே காணலாம்: அரிஸ்டாடிலின்படி பிரபஞ்சத்தின் மையமாக பூமிப்பந்தும் அதை சுற்றி வரும் விண்ணக கோள்களும் இருந்தன. இனி அவ்வாறல்ல. அடர்த்தியான, எல்லையற்ற, விண்மீன்கள் பொறிக்கப்பட்ட, மையமோ எல்லைகளோ இல்லாத ஒன்றே பிரபஞ்சம்.
மைக்கேல்: புலங்களும் ஒளியும்
கண்ணாடி இழைகள் காகிதங்களை இழுப்பது, காந்தங்கள் ஒன்றையொன்று விலக்குவது என மின்சாரம் குறித்தும் காந்தம் குறித்தும் பதினெட்டாம் நூற்றாண்டில் சில செப்பிடு வித்தைகளைத் தாண்டி எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. இவை குறித்த ஆய்வுகள் மெதுவாகத் துவங்கி பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குச் சென்றது. லண்டனில் ஆய்வகம் ஒன்றில் சிறு தையல் நூல்கண்டுகள், ஊசிகள், கத்திகள், இரும்புக் கூண்டுகளை வைத்து மின் மற்றும் காந்தப் பொருட்களின் ஈர்ப்பு – விலகலை ஆராய்ந்து கொண்டிருந்தார்.
புரட்சியின் தொடக்கம்
நியூட்டனுடையதும் மாக்ஸ்வெலுடையதுமான கொள்கைகள் ஓன்றுடன் ஒன்று மிக மிக நுட்பமாக முரண்படுவது போல தோன்றும். மாக்ஸ்வெலின் சமன்பாடு திசைவேகம் (velocity ) – குறிப்பாக ஒளியின் திசைவேகத்தினை கணிக்கிறது. நியூட்டனுடைய இயக்கவியலோ அடிப்படை திசைவேகம் என்னும் கோட்பாட்டிற்கே இயைந்து போகாதது. அதன் சமன்பாட்டில் திசைவேகமல்ல, வேக முடுக்கமே (Acceleration) முக்கியமானது. நியூட்டனின் இயற்பியலில், திசைவேகம் என்பது இன்னொன்றைப் பொறுத்த ஒன்றின் திசைவேகம் மட்டுமே
வதனமுறு பெரும் கொள்கை
காலம் தொடர்பான இந்நிகழ்வு பொருட்கள் ஏன் விழுகின்றன என்பதைக் குறித்து சுவாரஸ்யமான விளக்கம் ஒன்றை அளிக்கிறது. நியூயார்க்கிலிருந்து ரோம் நகருக்கான விமான பாதை நேரானதாக இல்லாமல் வடக்கு நோக்கி வளைந்து செல்வதை வரைபடத்தில் காணலாம். ஏன்? பூமி வளைந்துள்ளதால், நேராக செல்வதை விட வடக்குமுகமாக வளைந்து செல்வதே குறைவான தூரமாகும். இரு தீர்க்க ரேகைகளுக்கு இடையேயுள்ள தொலைவு வடக்கு நோக்கி செல்கையில் குறையும் – எனவே வடதிசை நோக்கிய பயணப்பாதையே குறைவான தூரம் உடையதாகும்.
கணிதமா இயற்பியலா?
கிட்டத்தட்ட இணையான சமன்பாடுகளை உருவாக்கிக் கொண்டிருந்த ஹில்பர்ட், ஐன்ஸ்டைனது வெற்றியை கேள்விக்குள்ளாக்காமல் மிகுந்த கண்ணியத்துடன் நடந்து கொண்டார். மேலாக, ஐன்ஸ்டைனுக்கு கணிதத்துடன் இருந்த ‘பிணக்கு’’ – பொதுவாக சொல்வதானால் இயற்பியலுக்கும் இருந்த பிணக்கினை மிக அழகாக பின்வருமாறு கூறினார்.
துளிமம்
உப்பு வெண்மையிலும், மிளகு கருப்பிலும், மிளகாய் செந்நிறத்திலும் இருக்கிறது. ஏன்? பொருட்களுக்கு தனித்த நிறங்கள் இருக்கின்றன என்பது அணுக்களின் ஒளி உமிழ்வை ஆராய்கையில் தெரிய வருகிறது. நிறம் என்பது ஒளியின் அதிர்வெண் என்பதால், பொருட்கள் குறிப்பிட்ட சில அதிர்வெண்களிலேயே ஒளியை உமிழ்கின்றன. ஒரு பொருளை அவ்வாறு வகைப்படுத்த உதவும் அந்த சில அதிர்வெண்கள் – அதிர்வெண்களின் தொகை அப்பொருளின் நிறமாலை (Spectrum) எனப்படுகிறது.
புலங்களும் துகள்களும் ஒன்றே
நுண் துளிம நிகழ்வுகளின் தொடர்ச்சியே இவ்வுலகம். இவை உதிரியான, தனித்த, நுண்ணிய நிகழ்வுகள்; பொருள்வய அமைப்புகளுக்கு இடையே நிகழும் தனித்த உள்வினைகள் அவை. எதிர்மின்மமோ, ஒரு புலத்தின் துளிமமோ, ஒளிமமோ வெட்டவெளியில் எந்தவொரு எறிபாதையையும் பின்பற்றுவதில்லை. மாறாக, வேறொன்றுடன் மோதுகையில் , குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் தோன்றுகிறது. அது எங்கு எப்போது தோன்றும் என்பதை உறுதியாக அறிவதற்கு வழியே இல்லை. உலகின் மையத்தில் ஒரு அடிப்படை அறுதியின்மையை துளிம இயற்பியல் அறிமுகப்படுத்தியுள்ளது
