தாபசாந்தி – எம் டி வாசுதேவன் நாயரின் வாராணசி

வாராணசி: முரணுரைகளின் நகரம்: எந்நேரமும் சிதையில் பிரேதங்கள் புகையும் நகரம், அமைதியை மனிதர் அறியும் நகரம்: மாண்ட மிருகங்கள் மிதந்து செல்லும் கங்கை நதி, அனைவரின் பாபங்களையும் கரைக்கும் கங்கா ஜலம்: காமமும் மரணமும் அருகிருக்கும் நகரம். நீண்ட காலத்துக்குப்பின் இந்த நகருக்குத் திரும்புகிறான் சுதாகரன். ஒரு காலத்தில் தன் நண்பனாகவும் ஆசானாகவும் இருந்த பேராசிரியர் ஸ்ரீனிவாசனின் அழைப்பை ஏற்று வாரணாசி வந்தடையும் சுதாகரனுக்கு இப்போது வயது 60.. இந்தப் பயணம் சுதாகரனின் கடந்த காலத்துக்குச் செல்லும் பயணம், அதன் தாக்கங்கள் அவனது நிகழ்காலத்தை பாதித்திருப்பதை உணரும் அறிவுப் பயணம்.