கல்வெட்டுகள்

This entry is part 2 of 2 in the series கலிங்கம்

ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன் அசோகரின் கல்வெட்டை மறைத்திருந்த சிறு காடு இன்று ஒரு பூங்காவாக உருவெடுத்திருக்கிறது. இயற்கையிடமிருந்து பாதுகாக்க ஒரு மண்டபமும், மனிதனிடமிருந்து காக்க இரும்புக் கம்பி தடுப்புகளையும் தாங்கி நிற்கிறது இன்று. சுற்றிலும் அலங்காரப் புல் தரை. விளிம்பில் இருந்த புதர்களை செதுக்கிக் கொண்டிருந்தார் முண்டாசு கட்டியத் தோட்டக்காரர். ஒரு சிறு பாறையில் சாய்ந்து நின்ற அலைபேசியில் இருந்து ஹிந்தி பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.

ஜெய் ஜகந்நாத்!

This entry is part 1 of 2 in the series கலிங்கம்

மரக் கம்பங்களை நட்டு, அவற்றை தெய்வமாகப் பாவித்து, அந்தத் தெய்வங்களைச் சுற்றி ஒரு சிறு சந்நிதியை நிறுவி வழிபடுவது என்பது இந்தப் பிராந்தியத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தொல்குடிகளின் மரபு என்கின்றனர் சரித்திர ஆய்வாளர்கள். ஸ்தம்பேஷ்வரி (ஸ்தம்பம் – கம்பம்) காந்துணிதேவி என்று பல பெயர்கள் கொண்டுள்ள இந்த மூர்த்தங்கள் இன்றும் வழிபாட்டில் உள்ளன. இப்படி நெடுங்காலமாக திரண்டு வரும் நம்பிக்கையின் ஒரு வெளிப்பாடு தான் பூரி ஜகந்நாதரின் அமைப்பு என்பது ஆய்வாளர்களின் பார்வை

சாப விமோசனம்

சிவராமனின் மனம் காயத்ரி ஜபத்தில் லயிக்கவில்லை. குளத்தின் ஆழத்தில் உறங்கும் யக்ஷியைச் சுற்றி வந்தது. வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்தாலும் அந்த சிறு குளத்தில் விளையாடவோ குளிக்கவோ ஒரு நாளும் அனுமதி அவனுக்கு இல்லை. அவன் மட்டும் அல்ல அப்பா சாம்பசிவம் கூட கிணற்றில் தான் நீர்  மொண்டு குளிப்பார். வருடங்களுக்கு ஒரு முறை குளத்தை சுற்றி இருக்கும் கற் படிகள் சீரமைக்கப்பட்டு சுத்தமாக்கப்படும். ஆனால் குளத்தின் நீர் என்னவோ எப்போதுமே மாசு படாமல் இருந்தது. அதில் தண்ணீர் குறைந்ததும் இல்லை கூடியதும் இல்லை.

வாலில்லாக் குரங்குகளும், பட்டாம்பூச்சிகளும்

டார்ச்சின் வெளிச்சத்தில் மரத்தில் இருந்த அணிலின் இரு விழிகள் தான் ஒளிப் புள்ளிகள் என்று புரிந்தது. மெலிதான வெளிச்சத்திற்கு என் கண்கள் சற்று பழக அணிலின் மற்ற அங்கங்கள் உரு கொண்டன. புசு புசுவென்ற அதன் வால் காற்றில் ஆடுவது தெரிந்தது. உடல் முழுதும் சிவப்பு ரோமங்கள் டார்ச் ஒளியில் தாமிரம் போல ஜொலித்தது.

பகரம்

‘ஒருத்தொருத்தரும் அவங்க வழியில அதை எதிர் கொள்வாங்க. நீங்க ப்ராபப்லி உங்க வேலைல இன்னும் கொஞ்சம் மூழ்கிருக்கலாம்’. உண்மை தான் என்று நினைத்துக் கொண்டான் அஸ்வின். கடந்த சில மாதங்களாக எளிதாகத் தவிர்த்திருக்கக் கூடிய அலுவல் நிமித்தமான வெளியூர் பயணங்களை வேண்டுமென்றே தன் தலையில் இழுத்துப் போட்டுக் கொண்டான்

சாய்ந்தாடி

‘கடும் பஞ்சத்திலும், மைசூர் போரின் அவதிகளிலும் சிக்குண்ட இந்த மக்களை பிரித்தானிய அரசாங்கம் ஒரு போதும் கை விடாது’ என்றார் பெல்லி. நாராயண பிள்ளையின் உதட்டோரம் பூத்த புன்னகையின் அர்த்தத்தை வில்பர் அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. சிறு தோல் பையிலிருந்து ஒரு சிறு தாளை வெளியே எடுத்தான் வில்பர். ஏதோ பேங்க் ஆப் பெங்கால் அச்சடித்து விநியோகிக்கும் ஐநூறு சிக்கா ருபாய் தாளை முதன் முதலாகப் பார்ப்பது போல பெல்லியின் கண்கள் விரிந்தது.

கற் கோவில்கள், கொலைக் களங்கள்

மனித மனம் ஆக்கத்தின் உச்சத்தைத் தொட்ட இடம் அங்கோர் வாட் என்றால் அது கீழிறிங்கி தீவினை எனும் அதல பாதாளம் சேர்ந்த இடம் அங்கிருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பாட்டம்பாங் (Battambang) பகுதியில் ஒரு சிறு மலையில் உள்ள குகை தான் அது. அதன் உள்ளளவு சிறியது தான். ஆனால், அதன் கூரை நம் தலைக்கு ஏறக்குறைய 100 அடி மேலே குடை போல விரிந்திருக்கிறது. குகையின் விதானத்தின் நடுவில் ஒரு பெரும் துவாரம்.

தூண்டில்

விண்ணிலிருந்து வீழ்ந்த ட்ராகோவின் கலத்தில் நிறைந்திருந்த நீர்/திரவத்தின் உப்பு மற்றும் வளிகளின் செறிவை அடையாளம் கண்டு, அதை பன் மடங்காக உற்பத்தி செய்து பெரும் தொட்டியில் நிரப்பி, கலத்தினுள் நினைவிழந்திருந்த ட்ராகோவை அதற்குள் இட்டுச் சென்று, பல்வேறு வகையான திரவ புரதசத்து கலவைகளை ட்ராகோவின் உணவுக்காகப் பரிட்சித்து, ட்ராகோவின் ஓட்டில் எழும் வண்ணங்கள் பாஷை என்பதை அவதானித்து, அதை மொழியாக்கம் செய்ய செயற்கை நுண்ணறிவுச் செயலிகளைப் பழக்கி, இவற்றை எல்லாம் ஒருங்கிணைக்க ஒரு திறமையானக் குழுவை அடையாளம் கண்டு அமர்த்தி என்று செயல்கள் மூலமாகவே அவன் தன் துக்கத்தை மறந்தான். 

காமரூபம்

படகில் இருந்தவர்கள் பல கோணங்களில் தங்களை படம்பிடித்து கொண்டிருந்தார்கள். சியாமீஸ் இரட்டையர்கள் போல, தோள்கள் சேர்ந்து, தலைகள் ஒட்டி, மேல்தட்டின் தடுப்பு கம்பிகளின் மீது அமர்ந்து செல்ப்பீ எடுத்து கொண்டிருந்தது ஒரு வடக்கத்திய ஜோடி. நீரில் படிந்த அவர்களின் நிழல்களை கூட புகைப்பட சட்டத்திற்குள் கொண்டு வர சாய்ந்தும், நிமிர்ந்தும், நெளிந்தும் நடத்திய நடனம் வயிற்றில் புளியை கரைத்தது.

தெய்யம் — மனிதன் கடவுளாக மாறும் ஆட்டம்

முடி என்று அழைக்கப்படும் தலை அணி தலையின் மேல் ஆதிசேஷன் போல விரிந்திருக்க அதன் விளிம்பில் மணிகள் கோர்க்கப்பட்ட சிறு வெள்ளை குஞ்சரங்கள் மெதுவாக ஆடிக் கொண்டிருந்தன. கழுத்தை சுற்றி சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட அட்டிகை பாதி மார்பை மறைக்க, மணிக்கட்டிலிருந்து முழங்கை வரை வெள்ளி கங்கணங்கள் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கப்பட்டு இருந்தது.

சிவன்ன சமுத்திரம்

இந்தக் கோவிலில் இன்னொரு ஆச்சரியமும் உண்டு. இங்கே சிற்பிகளின் பெயர்களை சிற்பங்களின் அடியிலேயே பொறித்து கவுரவப் படுத்தியிருக்கிறார்கள். ஏறக்குறைய 800 வருடங்கள் கழித்து பெங்களூரிலிருந்தும், மைசூரிலிருந்தும் வந்தவர்கள் தங்களின் கருப்புக்கண்ணாடிகளை நெற்றியின் மேல் உயர்த்தி வைத்து, நகப்பூச்சு மின்னும் விரலால் கற்களில் பொறித்திருக்கும் கன்னட லிபியை வருடி, பாலேயா, சவுடேயா, நஞ்சைய்யா, என்ற இந்த சிற்பிகளின் பெயர்களை வாய் விட்டு உச்சரித்ததைப் பார்த்த பொழுது இது அந்த மகத்தான கலைஞர்களுக்கு நாம் செய்யும் சிறு மரியாதை என்று என் மனதில் பட்டது.

வானோர்கள்

ஆகாயத்தில் வெங்கடேஷ் சுட்டிக் காட்டிய திசையை நோக்கினேன். அப்பொழுதெல்லாம் மெட்ராஸில் கூட வானில் நட்சத்திரங்கள் துல்லியமாக தெரியும். நாங்கள் இருந்ததோ கும்மிடிபூண்டியை தாண்டி ஆந்திராவை தொட்டுக் கொண்டு.  ஆரம்பாக்கத்தில் அமைந்து இருந்த ஒரு இரும்புத் தொழிற்சாலையுடைய மேலாளார்களின் குடியிருப்பில் தான் நாங்கள் வசித்து வந்தோம். இரண்டு சிறு சாலைகளும் மிகக் குறைவான விடுகளுமே அங்கு  உண்டு. இரவு ஒன்பது மணிக்கு மேல் சில தெரு நாய்களும், இங்கொன்றும் அங்கொன்றுமாக பழுப்பு ஒளி உமிழ்ந்து கொண்டிருக்கும் சாலை விளக்குகளும், அதைச் சுற்றும் பூச்சிகளும் தான் கண்ணில் படும். 

பறக்கும்தட்டு – மீண்டும் ஒரு விவாதம்

கடந்த சில வருடங்களாக இந்தக் கருத்தோட்டத்தில் ஓர் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு வித்திட்டது 2017 ஆம் ஆண்டில் பிரபல நியூ யார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான ஒரு கட்டுரை. ஹெலன் கூப்பர், ரால்ப் ப்ளூமெந்தால் மற்றும் லெஸ்லி கீன் எழுதிய இந்தக் கட்டுரை அந்த ஆண்டு உலகம் முழுவதும் பலரால் வாசிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது. அதன் சாராம்சம் இது தான்.
கடந்த பல வருடங்களாக இந்த நிகழ்வுகளை கண்காணிக்க பென்டகனில் (அமெரிக்க ராணுவ தலைமையகம்) ஓர் அமைப்பு பல கோடி டாலர்கள் செலவில் பயனாற்றிக் கொண்டிருந்ததை இந்தக் கட்டுரை வெளிச்சம் போட்டுக் காண்பித்தது. மேலும் இந்த அமைப்பு சேகரித்து வைத்திருந்த பல காணொளிகளில் இரண்டை கட்டுரையாளர்கள் வெளியிட்டிருந்தனர். மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த இக் காணொளிகளில் அமெரிக்கப் போர் விமானங்கள் அடையாளம் தெரியாத விண்கலன்களை விமானியறையில் உள்ள அதி நவீன கதுவியிலும் (radar), அகச்சிவப்பு படமியிலும் (infra-red camera) பதிவு செய்யப்பட்ட காட்சிகள் உள்ளன.

சிதைந்த நகரமும் சிதையாத் தொன்மங்களும்

கிருஷ்ண தேவ ராயர் காலத்திலேயே ஏறக்குறைய இரண்டரை லட்சம் மக்கள் வாழ்ந்த தலைநகரம் சில நாட்களிலேயே இடுகாடானது; போர்துகீச யாத்ரி டாமிங்கோ பேஸ் விஜயநகரில் நாட்டியம் ஆடும் பெண்கள் கூட செல்வ செழிப்போடு இருந்தனர் என்று குறிப்பிட்ட அளவிட இயலாத செல்வம் சூறையாடப்பட்டது; சிற்பங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டதோ என்று ஐயப்படும் அளவிற்கு செதுக்கப்பட்ட பல கோவில்கள் இடித்து நொறுக்கப்பட்டன. இருநூற்று ஐம்பது வருட காலம் தென் இந்தியாவிற்கு ஒரு அரணாய் இருந்த சாம்ராஜ்யத்தை பேரிருள் கவ்வியது.