- கொலம்பஸ்
- கடல் கடந்த முப்பத்தி மூன்று நாட்கள்
- பிழைகளும் கொலைமுயற்சியும்!
- டியரா டியரா!
- கன்னித்தீவு
- மாயமான நாட்குறிப்பு
- கொலம்பஸும் கொலம்பியாவும்!
- திரும்பும் பயணம்
- இரண்டாம் பயணம் – பயணத்திட்டமிடல்
- புதிய தீவுகளும் பெயரிடலும் படுகொலைகளும்
- புது நகர நிர்மாணமும் இரண்டாம் பயணத்தின் முடிவும்!
- கொலம்பஸின் வீழ்ச்சி!
- மூன்றாம் பயணமும் தலைகுனிவும்!
- கொலம்பஸ் கைதும் விசாரணையும்!
ஹிஸ்பேனியோலா தீவில் கொலம்பஸ் எதிர்பார்த்தே இருக்காத பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. கொலம்பஸ் அங்கில்லாத காலத்தில் அவரது சகோதரர்களின் (பார்த்தலோமியோ மற்றும் டீகோ) நிர்வாகம் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்து இருந்தது. * ஸ்பானியரான ஃபிரான்சிஸ்கோ ரொல்டன் (Francisco Roldán) என்பவரின் தலைமையில் ஸ்பானியக் குடியேறிகள் கொலம்பஸின் ஆட்சிக்கு எதிராகப் பகிரங்கக் கலகம் செய்திருந்தனர்.
தங்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்த ஸ்பானியர்கள் நோய்களினாலும் உள்ளூர் மக்களின் எதிர்ப்பினாலும் வாடினர். உணவுத் தட்டுப்பாடு தலைவிரித்தாடியது.
நெடும் பயணத்துக்குப்பிறகு புதிய கண்டத்தை கண்டுபிடித்த மகிழ்ச்சியுடன் அங்கே வந்த கொலம்பஸ் நிலைமையைச் சமாளிக்க முடியாமல் திணறினார். கலகக்காரர்களின் தலைவனான ரொல்டனுடன் சமரச ஒப்பந்தம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் வேறு வழியின்றித் தள்ளப்பட்டார். அவர்களுக்கு நிலங்களையும் உள்ளூர் இந்திய அடிமைகளையும் வழங்குவதாக ஒப்புக்கொண்டு பதிலுக்கு அமைதியை விலைக்கு வாங்கினார். இந்தச் சமரசம் ஸ்பெயின் அரசர்களிடம் கொலம்பஸின் மதிப்பை அடியோடு மங்கச் செய்தது.
ஹிஸ்பானியோலா தீவில் நடந்த இந்தத் தகவல்கள் அனைத்தும் ஸ்பெயினில் உள்ள மன்னர் ஃபெர்டினண்ட் மற்றும் அரசி இஸபெல்லா ஆகியோரை மிக விரைவாக எட்டின.

கொலம்பஸின் நிர்வாகத்தின் மீது கடும் கோபம் கொண்டிருந்த ஸ்பானியக் கலகக்காரர்கள் மற்றும் அதிருப்தியாளர்கள், கொலம்பஸ் தங்களை எப்படித் கொடுமைப்படுத்துகிறார், நிர்வாகம் எப்படிச் சீரழிந்துள்ளது என்பதை விவரித்து ஸ்பெயின் அரசருக்குத் தொடர்ந்து ரகசியக் கடிதங்களையும் புகார்களையும் அனுப்பிக் கொண்டிருந்தனர்.
ஹிஸ்பானியோலா தீவிலிருந்து ஸ்பெயினுக்குத் வணிகம் அல்லது அலுவல் நிமித்தமாகத் திரும்பிய கப்பல்களில் பயணம் செய்த மாலுமிகள் மற்றும் அதிகாரிகள், அங்கே கொலம்பஸின் ஆட்சி எப்படித் தோல்வியடைந்துள்ளது என்பதையும், ரொல்டன் போன்றவர்கள் எப்படி நாட்டைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்பதையும் அரசவையில் நேரில் போய் தெரிவித்தனர்.
ஹிஸ்பானியோலாவில் நிலைமை கைமீறிப் போனதால், ஸ்பெயின் அரசர்கள் நிலைமையை ஆராய * பிரான்சிஸ்கோ டி பொபாடில்லா (Francisco de Bobadilla) என்ற புதிய அதிகாரியை முழு அதிகாரங்களுடன் அந்தத் தீவிற்கு அனுப்பி வைத்தார்கள்.
சாண்டோ டொமிங்கோ நகருக்குப் புதிய அரச அதிகாரியாக வந்து இறங்கிய ஃபிரான்சிஸ்கோ, கொலம்பஸிடம் இருந்த அனைத்து ஆளுநர் அதிகாரங்களையும் அதிரடியாகப் பறித்தார். கொலம்பஸையும் அவரது சகோதரர்களையும் கைது செய்ய உத்தரவிட்டார். தன் சொந்தக் காலடிகளால் நடந்து சென்று படிப்படியாகக் கட்டமைத்த அந்த நகரத்திலேயே, கொலம்பஸ் ஒரு கைதியாக மாற்றப்பட்டிருந்தார்.

தன் வாழ்நாள் முழுவதும் அரசனுக்காகக் கடல்களை வென்றுகொடுத்த அந்த மாவீரர், இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு ஒரு கைதியைப் போலச் சிறைக் கப்பலில் ஸ்பெயினுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
கொலம்பஸுடன் அவரது தம்பிகளான பார்த்தலோமியோ கொலம்பஸ் மற்றும் தியோகோ கொலம்பஸ் ஆகியோரும் பொபாடில்லாவால் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டனர்.
பொபாடில்லா, ஸ்பெயின் அரசர்களின் முழு அதிகாரத்துடன் ஹிஸ்பானியோலா தீவின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டு அங்கே தங்கிவிட்டார். தீவின் நிர்வாகத்தைக் தன் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதுதான் அவரது முதன்மைப் பணியாக இருந்தது. பொபாடில்லா அங்கே தொடர்ந்து ஆட்சி செய்தார். (பிற்காலத்தில் அவரே ஒரு கோரமான கடல் புயலில் சிக்கி அந்தத் தீவிலேயே உயிரிழந்தார்)
கைது செய்யப்பட்ட கொலம்பஸைக் கப்பலில் மரியாதைக்குரிய அதிகாரியின் அறையில் அவர்கள் அடைக்கவில்லை. மாறாக, சாதாரணக் கைதிகளை அடைக்கும் ஒரு சிறிய, இருண்ட சிறைக் கப்பலின் பாதாள அறைக்குள்ளேயே கொலம்பஸ் பயணித்தார்.
சகோதர்கள் மூவரையும் ஒரே கப்பலின் வெவ்வேறு அறைகளில் இரும்புச் சங்கிலிகளால் பிணைத்துத்தான் ஸ்பெயினுக்கு அனுப்பி வைத்தார்கள்.
கொலம்பஸ் கைது செய்யப்பட்டு அனுப்பப்பட்டது அரசர்களால் பிரத்யேகமாக அனுப்பப்பட்ட ஒரு சாதாரண வணிகக் கப்பல் அல்லது பயணிகள் கப்பல் அல்ல; அது ‘லா கோர்தேரா’ எனப்பட்ட அன்றைய காலத்துச் ஸ்பானியக் கடற்படைக்குச் சொந்தமான ஒரு சரக்குக் கப்பல் (Cargo/Transport Ship) என்று வரலாற்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
அந்தச் சிறைக் கப்பலின் மாலுமியாகவும், கொலம்பஸைக் காத்து அழைத்துச் செல்லும் பொறுப்பாளராகவும் அலான்சோ வைலேஜோ என்ற ஸ்பானியக் கடற்படை அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார்.
கொலம்பஸும் அவரது சகோதரர்களும் இரும்புச் சங்கிலிகளுடன் ஏற்றப்பட்ட சிறைக் கப்பல், அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற காடிஸ் துறைமுகத்தில் 1500 அக்டோபர் மாதத்தின் பிற்பகுதியில் நங்கூரமிட்டது).
கப்பல் துறைமுகத்தை நெருங்கியதும், அது வழக்கமான வர்த்தகக் கப்பலைப் போல வரவில்லை, மாறாக ஒரு குற்றவாளியைச் சுமந்து வரும் சிறைக் கப்பல் என்ற செய்தி துறைமுகப் பகுதி முழுவதும் காட்டுத் தீ போலப் பரவியது.

துறைமுகத்தில் கூடி நின்றுகொண்டிருந்த மாலுமிகளும், சாதாரணக் குடிமக்களும், வணிகர்களும் “யார் அந்தக் கைதி?” என்று ஆவலோடும் அதிர்ச்சியோடும் அந்தக் கப்பலை உற்று நோக்கினர்.
கிட்டத்தட்ட பல வாரங்கள் நீடித்த அந்த நீண்ட கடல் பயணத்தில், கொலம்பஸின் கைகளில் அணிவிக்கப்பட்டிருந்த இரும்புச் சங்கிலிகள் ஒரு முறைகூட அகற்றப்படவில்லை. எனவே கொலம்பஸைக் காவலில் அழைத்து வந்த கப்பல் அதிகாரி அலான்சோ, கொலம்பஸின் மீதான பற்றால் மனம்கசிந்து போயிருந்தார்.
கொலம்பஸ் தன் கைகளில் இருக்கும் சங்கிலிகளோடேயே துறைமுகத்தில் இறங்க வேண்டியிருக்கும் என்று வெட்கப்பட்ட அந்த அதிகாரி, துறைமுகத்திற்கு வந்ததும் அவரது கைகளில் இருந்த இரும்புச் சங்கிலிகளை கழற்றிவிட முன்வந்தார்.
ஆனால், கொலம்பஸோ உறுதியான குரலில், “மன்னர் மற்றும் அரசியின் உத்தரவின்பேரில்தான் இந்தச் சங்கிலிகள் என் கைகளில் மாட்டப்பட்டன; அவர்களின் அதிகாரப்பூர்வ உத்தரவு இல்லாமல் இவற்றை நானாகக் கழற்ற மாட்டேன். அவர்கள் என்னை எந்தச் சங்கிலிகளுடன் முடக்கினார்களோ, அதே சங்கிலிகளுடன்தான் நான் அவர்களின் பார்வைக்குச் செல்வேன்” என்று கூறி அதனைத் தவிர்த்துவிட்டார்.
கொலம்பஸ் கப்பலிலிருந்து வெளியே வந்து துறைமுகக் கரையில் கால் பதித்தபோது, அவரது கைகளில் மாட்டப்பட்டிருந்த அந்த இரும்புச் சங்கிலிகளைக் கண்ட பொதுமக்களும் மாலுமிகளும் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.
ஒரு காலத்தில் ஸ்பெயினின் கொடியை உலகெங்கும் பறக்கவிட்டு, தங்கத்தையும் புகழையும் தேடித்தந்த அந்தப் பெருமைக்குரிய மாவீரன், இன்று ஒரு குற்றவாளியைப் போலச் சங்கிலிகளுடன் நிற்பதைக் கண்ட பொதுமக்களுக்குத் தங்களது கண்களையே நம்பமுடியவில்லை. அங்கே திரண்டிருந்த மக்கள் பலர் கதறி அழுதனர்.
“நமக்கு புத்துலகைக் காட்டிய மனிதனுக்கு ஸ்பெயின் வழங்கும் பரிசு இதுதானா? இவரைக் கைது செய்தவர்கள் நாசமாய் போவார்கள்!” என்று அரச குடும்பத்திற்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்தனர். அந்தத் துறைமுகமே ஒரு மிகப்பெரிய சோகக் களமாக மாறி ஆத்திரத்தில் கொந்தளித்தது.
காடிஸ் துறைமுகத்தில் மக்கள் கொந்தளித்தெழுந்த செய்தியும், கொலம்பஸ் சங்கிலிகளுடன் நிற்பதைப் பார்த்து மக்கள் அரசைச் சபிக்கத் தொடங்கிய செய்தியும் உடனடியாகத் தலைநகரில் இருந்த அரசி இஸசபெல்லாவுக்கும் மன்னருக்கும் சென்றன.
மக்கள் தங்களுக்கு எதிராகத் திரும்பிவிடுவார்கள் என்றும், கொலம்பஸின் மீது தேசமே மிகப்பெரிய அனுதாபம் கொண்டுவிட்டது என்றும் புரிந்துகொண்ட அரசி இஸபெல்லா பதறிப்போனார். உடனடியாகத் தன் காவலர்களை அனுப்பி, கொலம்பஸின் சங்கிலிகளை உடனே அகற்றிவிட்டு, அவரை மிக மரியாதையுடன் தனது அரசவைக்கு அழைத்து வருமாறு அவசரக் கட்டளையைப் பிறப்பித்தார்.
கை விலங்குகள் கழற்றப்பட்டபின்னர், கொலம்பஸ் ஸ்பெயினின் தலைநகருக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மன்னர் ஃபெர்டினண்ட் மற்றும் அரசி இஸபெல்லா முன்னிலையில் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.
தன் மீதும் தனது சகோதரர்கள் மீதும் சுமத்தப்பட்ட ஊழல், நிர்வாகத் திறமையின்மை மற்றும் கொடூர ஆட்சி போன்ற அனைத்துப் புகார்களின் பின்னணியையும் கொலம்பஸ் அவர்களிடம் விளக்கினார்.
ஹிஸ்பானியோலா தீவில் சூழ்நிலை எப்படித் கைமீறிப் போய்விட்டது என்பதையும், கலகக்காரர்களின் வன்முறையையும் அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
அரசர்களுக்கும், கொலம்பஸ் ஒரு ஊழல்வாதியோ அல்லது நாட்டைத் துரோகம் செய்தவரோ அல்ல, மாறாக, கட்டுக்கடங்காத புதிய குடியேற்றப் பகுதியில் நிர்வாகத்தைச் சமாளிக்கத் தெரியாமல் திணறிய ஒரு திறமையான கடலோடி என்பது நன்றாகவே புரிந்தது .
அதே நேரத்தில், கலகக்காரர்கள் மீது அவர் மேற்கொண்ட சமரசங்களும் கடுமையான நிர்வாகச் சிக்கல்களும் அரச குடும்பத்திற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருந்தன. ஆனாலும் கொலம்பஸ் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பளிக்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்.
குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டாலும், ஹிஸ்பானியோலா தீவின் ஆளுநர் பதவி கொலம்பஸுக்கு மீண்டும் வழங்கப்படவில்லை. அந்தப் பதவியிலிருந்து அவர் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
புதிய நிலங்களைக் கண்டுபிடிப்பதிலும் சமுத்திரங்களை ஆள்வதிலும் அவருக்கிருந்த திறமையை வீணடிக்க விரும்பாத அரசர்கள், அவருக்குத் தேவையான நிதியுதவியைத் தந்து அவரது நான்காவது மற்றும் இறுதிப் பயணத்திற்கு (1502-ல்) மீண்டும் அனுமதி வழங்கினார்கள்.
ஏன் மீண்டும் கொலம்பஸை நம்பி அடுத்த பயணத்துக்கு ஸ்பெயின் அரசு அனுமதி அளித்தது?
கொலம்பஸ் ஹிஸ்பானியோலா தீவில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி, ஸ்பெயின் அரசுக்கு நிர்வாக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பலத்த நஷ்டத்தை உண்டக்கியிருந்த போதிலும், மன்னர் ஃபெர்டினண்டும் அரசி இஸபெல்லாவும் அவருக்கு நான்காம் பயணத்திற்கு அனுமதி வழங்கியதற்குப் பின்னால் மிக வலுவான அரசியல், வணிக மற்றும் தனிப்பட்ட காரணங்கள் இருந்தன.
அந்தக் காலகட்டத்தில் கடல்வழிப் பயணங்களில் ஸ்பெயினின் பரம எதிரியாகப் போர்ச்சுகல் இருந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்புதான் போர்த்துக்கீசிய மாலுமி வாஸ்கோ ட காமா (Vasco da Gama) ஆப்பிரிக்காவைச் சுற்றி இந்தியாவுக்கான கடல் வழியைக் கண்டுபிடித்துத் திரும்பியிருந்தார். இது ஐரோப்பிய உலகத்தில் போர்ச்சுகலின் பலத்தையும் வணிகச் செல்வாக்கையும் பலமடங்கு உயர்த்தியது.
வாஸ்கோ ட காமா ஆப்பிரிக்காவைச் சுற்றி இந்தியாவுக்கான கடல் வழியைக் கண்டறிந்து தனது வெற்றிகரமான பயணத்தை முடித்து 1499-ல்தான் திரும்பியிருந்தார்.
எனவே ஸ்பெயின் அரசர்களோ, கிழக்கத்திய நாடுகளின் (இந்தியா, சீனா) மசாலாப் பொருட்கள் மற்றும் செல்வங்களைக் கைப்பற்றும் போட்டியில் போர்ச்சுகலிடம் பின்தங்கிவிடக் கூடாது என்று பதறினர்.
மேற்கே சென்றால் ஆசியாவை அடையலாம் என்ற கொலம்பஸின் கணக்குகள் முழுமையாக வெற்றியடையவில்லை என்றாலும்,ஒரு “மகா நிலப்பரப்பு” கண்டுபிடிக்கப்பட்டிருந்ததால், அங்கிருந்து இன்னும் மேற்கு நோக்கிச் சென்றால் நிச்சயமாக இந்தியாவுக்கான மாற்று வழியைக் கண்டுபிடிக்க முடியும் என்று கொலம்பஸ் அரசர்களிடம் தீவிரமாக வாதிட்டார். அரசின் போட்டி மனப்பான்மைதான் அவருக்கு மீண்டும் வாய்ப்புக் கிடைக்க முக்கியக் காரணமாக இருந்தது.
கொலம்பஸ் தனது மூன்றாம் பயணத்தின்போது வெனிசுலா பிரதான நிலப்பரப்பைக் கண்டறிந்து, அது ஒரு மிகப்பெரிய கண்டம் என்பதை உணர்ந்திருந்தாலும், ஆசியாவின் (இந்தியா அல்லது சீனா) செல்வங்களை இன்னும் தான் முழுமையாக நெருங்கவில்லை என்றும் நெருங்க முடியுமென்றும் நம்பினார்.
மத்திய அமெரிக்காவுக்கும் (இன்றைய பனாமா, நிகரகுவா பகுதி) தெற்கே உள்ள கடலுக்கும் இடையே ஆசியாவை இணைக்கும் ஏதேனும் ஒரு நீரிணை (Strait) இருக்க வேண்டும் என்று அவர் உறுதியாக நம்பினார்.
இந்தியாவுக்கான நேரடி வழியையும், ஆசியாவின் அபரிமிதமான தங்கம் மற்றும் முத்துக்களைத் தன் மூலமாகத்தான் ஸ்பெயின் அடைய முடியும் என்று அவர் அரசர்களை மீண்டும் நம்ப வைப்பதில் வெற்றி பெற்றார்.
அரசர்களுக்கு அவர் மீது தனிப்பட்ட முறையில் ஒருபுறம் கோபமும் மறுபுறம் அவர் செய்த சாதனைகள் குறித்த நன்றியும் கலந்த ஒரு நிலை இருந்தது.
மேலும், கொலம்பஸை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டால், அவர் தன்னிடம் உள்ள விலைமதிப்பற்ற கடல் வரைபடங்கள் மற்றும் அனுபவங்களை ஸ்பெயினின் எதிரியான போர்ச்சுகலுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ கொடுத்துவிடுவாரோ என்ற பயமும் ஸ்பெயின் அரசர்களுக்கு இருந்தது.
நான்காம் பயணத்திற்கு ஸ்பெயின் அரசு கொலம்பசுக்கு மிகக் குறைவான கப்பல்களையும் (நான்கு சிறிய கப்பல்கள்), குறைந்த அளவிலான நிதியையுமே ஒதுக்கியது. ஆனால், ஒருவேளை கொலம்பஸ் வெற்றியடைந்துவிட்டால் ஸ்பெயினுக்குக் கிடைக்கும் லாபம் கற்பனை செய்ய முடியாததாக இருக்கும் என்பதால், ஒரு சிறிய சூதாட்டம் போல அரசர்கள் இந்தப் பயணத்திற்குப் பச்சைக்கொடி காட்டினர்.
அவரது வாழ்நாளின் மிகக் கடினமான, சோதனைகள் நிறைந்த மற்றும் துயரமான கடல் பயணமாக அமைந்த கொலம்பஸின் நான்காவது மற்றும் இறுதிப் பயணத்தைத் தொடர்ந்து பார்க்கலாம்.
தொடரும்…….
*கொலம்பஸின் வாழ்க்கையில் பெரும் சோதனையையும், கடுமையான பிரச்சனைகளையும் ஏற்படுத்திய இரண்டு முக்கிய அதிகாரிகளின் பெயருமே ‘ஃபிரான்சிஸ்கோ’ (Francisco) தான்.
- ஃபிரான்சிஸ்கோ ரொல்டன் (Francisco Roldán):
இவர் ஹிஸ்பானியோலா தீவில் கொலம்பஸ் இல்லாத நேரத்தில் கலகத்தை (Rebellion) ஏற்படுத்திய கலகக்காரர்களின் தலைவர்.
கொலம்பஸின் நிர்வாகத்திற்கு எதிராக மக்களையும் மாலுமிகளையும் தூண்டிவிட்டுப் பெரும் குழப்பத்தை விளைவித்தவர் இவர்தான். நிலைமையைச் சமாளிக்க முடியாமல் கொலம்பஸ் இவரோடுதான் சமரசம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
- ஃபிரான்சிஸ்கோ டி பொபாடில்லா (Francisco de Bobadilla):
தீவில் நடக்கும் குழப்பங்களையும் புகார்களையும் விசாரிப்பதற்காக ஸ்பெயின் அரசர்களால் ஸ்பெயினிலிருந்து புதிய அரச அதிகாரியாக அனுப்பி வைக்கப்பட்டவர் இவர்.
சாண்டோ டொமிங்கோ வந்திறங்கிய இவர்தான், கொலம்பஸின் அதிகாரத்தைப் பறித்து, அவரைக் கைது செய்து, கைகளில் இரும்புச் சங்கிலிகளை மாட்டிச் சிறைக் கப்பலில் ஸ்பெயினுக்கு அனுப்பி வைத்தவர்.
Discover more from சொல்வனம் | இதழ் 379 | 22 நவ 2026
Subscribe to get the latest posts sent to your email.
