ஈர்ப்பு அலைகள் – பகுதி 1

This entry is part 1 of 12 in the series ஈர்ப்பு அலைகள்

நாம் பார்க்கும் நட்சத்திரங்கள் மற்றும் மண்டலங்களின் தூரம் மனிதர்கள் சாதாரணமாய் கடக்கும் தூரத்தை விட, மிக மிகப் பெரியது. இந்தப் பிரபஞ்சத்தில் மிகவும் வேகமாக பயணிக்கும் விஷயம் ஒளி மற்றும் அதைப் போன்ற மின்காந்த கதிரியக்கம். அந்த வேகம் நொடிக்கு 300,000 கிலோ மீட்டர்கள். விண்வெளி பெளதிகத்தில் மிகவும் முக்கியமான தூர அளவீடு ஒளி வேகம்.

ஈர்ப்பு அலைகள் – பகுதி 2

This entry is part 2 of 12 in the series ஈர்ப்பு அலைகள்

1915 –ல் ஐன்ஸ்டீன் தன்னுடைய பொது ஒப்புமைக் கொள்கையுடன், ஈர்ப்பு சக்தி பற்றிய சமன்பாடுகளையும் முன் வைத்தார். அவருடைய நண்பர், Karl Schwarzchild அந்த சமன்பாடுகளை தீர்க்க முயற்சித்தார். இவருடைய தீர்வில், ஒரு ஆரத்திற்குள் ஈர்ப்பு சக்தி முடிவிலியாக மாறியது – இதை Schwarzchild radius என்று அழைக்கப்படுகிறது. ஒரு வானியல் பொருள் இந்த ஆரத்திற்குள் சுறுக்கப்பட்டால், அதிலிருந்து ஒளி கூட வெளிவராது. இதை முதலில் ஒரு கணக்கியல் தவறு என்று முடிவு கட்டினார்கள்.

ஈர்ப்பு அலைகள் – பகுதி 3

This entry is part 3 of 12 in the series ஈர்ப்பு அலைகள்

பூமியிலிருந்து அளக்கும் பட்சத்தில், ஒரு அணுவிற்குள்ளிருக்கும் ப்ரோட்டானை விடச் சிறியது (10^-18 meters). இதை, மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளுதல் அவசியம். உதாரணத்திற்கு, ரேடியோ அலைகளின் நீளம் (mm to km) அலைவீச்சு, தூரத்துடன் குறைந்தாலும், வெகு தொலைவுவரை (பல்லாயிரம் கிலோ மீட்டர் வரை) இவற்றை நம்மால் அளக்க முடியும். அடுத்தபடியாக, மைக்ரோவேவ் (microwave) அலைகளின் நீளம் (1 mm to 10 cm), சில கிலோமீட்டர் தூரம் வரை நம்மால் அளக்க முடியும். அடுத்து வருவது அகச்சிகப்பு (Infrared) அலைகளின் நீளம் (700 nm to 1 mm) சில மீட்டர்கள் வரை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்

“Mission impossible போல இருக்கிறதே. யார் சார் அந்த டாம் க்ரூஸ்?”

This entry is part 4 of 12 in the series ஈர்ப்பு அலைகள்

நம்முடைய பால்வெளி மண்டலத்தின் நடுவில் மிகப் பெரிய கருந்துளை, அதாவது 4 மில்லியன் (Sgr A*) சூரிய திண்மை ( 4 million solar masses) இருப்பது, பிற்காலத்தில் உறுதி செய்யப்பட்டது. ஆனால், அது நம்முடைய சீரான இயக்கத்தை உருவாக்க காரணமாக இருந்ததே தவிர, ஈர்ப்பு அலைகளை உருவாக்குவதில்லை. இதை மிகத் தெளிவாகப், புரிந்து கொள்ளுதல் அவசியம். ஒரு பெரிய கருந்துளை இருப்பதனால், எந்த வித தாற்காலிக ஈர்ப்பு அலையும் உருவாக்கப்படுவதில்லை.

பைனரி பல்ஸார் என்னது?

This entry is part 5 of 12 in the series ஈர்ப்பு அலைகள்

கடைசி காலத்தில், எப்படி ஒரு நட்சத்திரம் தன்னுடைய எரிபொருளை இழக்கும் பொழுது வெடித்து, சிதறுகையில் அதன் கரு, ஒரு நியூட்ரான் நட்சத்திரமாக மாறுகிறது என்று பார்த்தோம். இவ்வாறு, சில சமயம், அருகாமையில் இருக்கும் இரு நடசத்திரங்கள், ஒரே சமயத்தில், தங்களது எரிபொருளை இழந்து, விண்வெளியில் வெடித்து, சிதறி, பாக்கி இருக்கும் இரு கருக்கள், அதாவது, இரு நியூட்ரான் நட்சத்திரங்கள், ஒரு மையத்தில் சுற்ற ஆரம்பிக்கலாம். அவ்வாறு நேர்ந்தால், அதை பைனரி பல்ஸார் என்று அழைக்கப்படுகிறது”

ஈர்ப்பு அலைகள் – பகுதி 6

This entry is part 6 of 12 in the series ஈர்ப்பு அலைகள்

ஏறக்குறைய 80 -களின் கடைசி வரை பல வித முயற்சிகள், பலன் அளிக்காத பட்சத்தில், விஞ்ஞானிகள் ஒரு முடிவிற்கு வந்தார்கள். தங்களிடம் உள்ள லேசர் கதிர்களை உருவாக்கும் எந்திரங்கள், இவ்வித அளவீடுகளுக்குத் தகுந்த சக்தி வாய்ந்தவை அல்ல. இன்னும் சக்தி வாய்ந்த லேசர்கள் தேவை.

ஈர்ப்பு அலைகள் – பகுதி 7

This entry is part 7 of 12 in the series ஈர்ப்பு அலைகள்

லேசர்களின் தன்மை, வெப்ப நிலைக்கு ஏற்றார் போல, சற்று மாறுபடும். அணுவிலும் குறைந்த அளவு அளவீடல் என்று வந்துவிட்டால், இந்த வெப்ப மாற்றங்கள் பூதாகாரமாகத் தோன்றும் விஷயம். லைகோவில், அணு அளவு வெப்ப மாற்றங்களைக் கையாளும் முழு அமைப்பும் உள்ளது. இதை Thermal compensation system என்று அழைக்கப்படுகிறது. இது இரு கரங்களிலும் தனியாக இயங்கும் அமைப்பு.

ஈர்ப்பு அலைகள் – பகுதி 8

This entry is part 8 of 12 in the series ஈர்ப்பு அலைகள்

இரண்டு அமெரிக்க தளங்கள் இந்த நிகழ்வைப் பதிவு செய்திருந்தாலும், இரண்டுமே தவறாக பதிவு செய்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழ வாய்ப்பிருக்கிறது. அத்துடன், அமெரிக்க தளங்கள் இரண்டும், வட துருவத்தில் இருக்கிறது. தென் துருவத்தில் இதைப் போல வேறு எந்த அமைப்பும் இல்லை. ஜப்பானில் உள்ள KAGRA இன்னும் கட்டுமான அளவில் இருந்தது. இத்தகைய நிகழ்வை, பல்வேறு தளங்கள் பதிவு செய்தால் இரண்டு விஷயங்கள் தெரிய வரும்: 1) உண்மையில் இந்த ஈர்ப்பு அலை எந்த திசையிலிருந்து வந்தது – இது triangulation என்று சொல்லப்படுகிறது. 2) பல தளங்கள் பதிவு செய்வதில், சந்தேகமின்றி, இது ஈர்ப்பு அலை என்று தெளிவாகிறது

ஈர்ப்பு அலைகள் – பகுதி 9

This entry is part 9 of 12 in the series ஈர்ப்பு அலைகள்

சூரியனை விட, மிகப் பெரிய நட்சத்திரங்கள், மிகப் பெரிய கருந்துளைகள், சூப்பர் நோவா என்று பல்வேறு ரட்சச அமைப்புகளை, விண்வெளி ஆராய்ச்சியில் கண்டுபிடித்து விட்டார்கள். ஆனால், இவை யாவும், நம்மைச் சுற்றியுள்ள அமைப்புகளை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ஆக, மிகப் பெரிய விண்வெளி அமைப்புகள் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல, ஈர்ப்பு அலைகள். பிரபஞ்சத்தில், மிகப் பெரிய மோதல்கள் நிகழ்ந்தால் மட்டுமே, ஈர்ப்பு அலைகள் உருவாகின்றன

ஈர்ப்பு அலைகள் – பகுதி 10

This entry is part 10 of 12 in the series ஈர்ப்பு அலைகள்

எப்படி மின்காந்தத் தொலைநோக்கியில், Spectroscopy  ஒரு அருமையான நுட்பமாகியதோ, அதே போல, ஈர்ப்பு அலைகளின் அதிர்வெண், நீடிப்பு, polarization போன்ற அம்சங்கள் தூரத்துப் பொருட்களின் கையெழுத்துக்கள். அத்துடன், ஒரு கருந்துளையின் மோதல், மற்றும் நியூட்ரான் நட்சத்திரத்தின் சேர்க்கை போன்ற நிகழ்வுகள், அவற்றின் ring down waves என்று அழைக்கப்படும் கடைசி அலைகள் நமக்கு பல புதிய புரிதல்களை உருவாக்குகிறது.

ஈர்ப்பு அலைகள் – 11

This entry is part 11 of 12 in the series ஈர்ப்பு அலைகள்

முதலில் லிசா என்பது ஒன்றல்ல, 3 விண்வெளிக் கலங்கள். இவை முக்கோண அமைப்பில் பூமியைச் சுற்றி வலம் வரும். ஒரு கலத்திலிருந்து இன்னொன்றிற்கு உள்ள தூரம் 2.5 மில்லியன் கிலோமீட்டர்கள். அதாவது ஒளி, ஒரு கலத்திலிருந்து இன்னொன்றைச் சென்றடைய 8.3 நொடிகள் ஆகும்! இந்த தூரம் துல்லியமாக எப்பொழுதும் இருக்கும்படி, இந்தக் கலங்களில் மிகச் சிறிய மோட்டர்கள் இயங்கும்.

ஈர்ப்பு அலைகள் – பகுதி 12

This entry is part 12 of 12 in the series ஈர்ப்பு அலைகள்

விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதும் பொழுது, மிகவும் அதிக நேரம், ஆராய்ச்சிக்கு ஒதுக்க வேண்டும். இணையத்தில், பல அரை வேக்காடு விஞ்ஞானம் கொட்டிக் கிடக்கிறது. இவற்றை நீக்குவது மிகப் பெரிய சவால். இதிலிருந்து தப்ப செயற்கை நுண்ணறிவு எந்த உதவியும் செய்யப் போவதில்லை. ஆனால், அடுத்த படியாக, மிகவும் டெக்னிகலான விஷயங்களை, எளிமைப் படுத்த வேண்டும்