தொடர்பாடல் செயலிகளின் பரிணாம வளர்ச்சி – 3

மூன்று சேவைகளுக்கான இந்த குணாதிசயங்களை மேலும் போட்டு குழப்பிவிட பல்வேறு புதிய சேவைகளும் தேவைகளும் தினந்தோறும் வந்து கொண்டு இருக்கின்றன. உதாரணமாக நீங்கள் உங்கள் கணிணியில் யூட்யூப் தளத்தில் இருந்து ராஜராஜசோழன் படம் பார்க்க ஆரம்பித்தால், தொலைக்காட்சி சேவைக்கான தேவைககள் உங்கள் கணிணிக்கு பொருந்தும். கணிணியிலிருந்து ஸ்கைப் வழியாக ஊரில் இருக்கும் பாட்டியுடன் பேச ஆரம்பித்தால் தொலைபேசி சேவைக்கான தேவைகள் கணிணிக்கு பொருந்தும். மாறாக எக்ஸ்பாக்ஸ், நிண்டெண்டோ சாதனங்களை உபயோகித்து டி‌வி மற்றும் இணையம் வழியாக பூமிக்கு அந்தப்பக்கம் இருக்கும் பங்காளியுடன் ஊடாடும் வீடியோ கேம் விளையாடினீர்களானால், தொலைபேசியின் “என் பொட்டலங்கள் எங்கும் நிற்கக்கூடாது” என்ற அவசரம் தொலைக்காட்சிக்கு வந்து விடுகிறது!

தொடர்பாடல் செயலிகளின் பரிணாம வளர்ச்சி – 2

கணிணிகள் ஒன்றுக்கொன்று பேசிக்கொள்ளும் பொழுது தகவல் பரிவர்தனை சின்னச்சின்ன தகவல் பொட்டலங்களை (Packets) பரிமாறிக்கொள்வதன் மூலமே நிகழ்கிறது. இப்படி பரிமாறிக்கொள்ளப்படும் ஒவ்வொரு பொட்டலத்திலும் இருக்கும் தகவல் மிகவும் குறைவானதுதான். ஒரு பொட்டலத்தில் சாதாரணமாக ஒரு ஆயிரம் எழுத்துகள்தான் இருக்கும். 64 எழுத்துகள் மட்டுமே கொள்ளும் மிகச்சிறிய பொட்டலங்களில் இருந்து 64,000 எழுத்துகள் வரை கொள்ளும் ஜம்போ பொட்டலங்கள் வரை இணையத்தில் உலவுவது உண்டு என்றாலும், முக்கால்வாசி பொட்டலங்கள் ஆயிரம், ஆயிரத்து ஐநூறு எழுத்துகள் கொள்ளும் சைஸில்தான் இருக்கின்றன.

தொடர்பாடல் செயலிகளின் பரிணாம வளர்ச்சி

தொடர்பு செயலிகள் (Communication Processors) மற்றும் திசைவி (Router) சாதனங்களின் வளர்ச்சி என்பது ஒரு விரிவுரை வழங்கவோ அல்லது ஒரு வெண்பலகை விவாதம் நடத்தவோ ஏற்ற சுவையான தலைப்பு. அதற்கு பதிலாக ஒரு சொல்வனம் கட்டுரை தொடர் வடிவில் அதனை இங்கே அலசிப்பார்ப்போம். பக்கத்து படத்திலிருக்கும் ஒரு வயது கூட ஆகாத புத்தம் புதிய தொடர்பு செயலியைப்பற்றி எழுதுவதற்கு முன்னேற்பாடாக அதன் கொள்ளு, எள்ளு தாத்தா பாட்டிகளை எல்லாம் தாண்டிப்போய் ஒரு இருபத்தி ஐந்து தலைமுறைகளுக்கு முன்னால் வந்த சிலிக்கன் சில்லுகளைப்பற்றி முதலில் ஒரு மலரும் நினைவுகள் நடத்த வேண்டும்.

அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை – 2

ரம்ஸ்ப்ரிங்க (Rumspringa) என்பது ஒரு ஜெர்மன் சொல். அதை தோராயமாக ஊர்சுற்றல் என்று மொழிபெயர்க்கலாம். ஒரு பதினைந்து, பதினாறு வயதை எட்டிப்பிடித்த ஆமிஷ் இளைஞர்களும் இளம் பெண்களும் இந்த பருவத்தை அடைகிறார்கள். அடுத்த 2,3 வருடங்களில் அவர்கள் எப்படி நடந்துகொள்ளுகிறார்கள் என்பதை ஆமிஷ் சமூகம் கண்டுகொள்ளுவதில்லை. எனவே இந்த கால கட்டத்தில் விதம் விதமான சிகை அலங்காரமோ, வகை வகையான துணிகள் அணிவதோ , சினிமா பார்ப்பதோ , தினசரி /வாராந்திர குடும்ப பிரார்த்தனைகளில் பங்குகொள்ளாமல் ஊர் சுற்றுவதோ, பயணம் செய்வதோ ஆமிஷ் அல்லாத (English) நண்பர்களுடன் நாட்கணக்கில் சுற்றுவதோ, இங்கிலீஷ் ஆண்/பெண்ணை டேட் செய்வதோ எல்லாம் அனுமதிக்கப்படுகிறது.

அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை

அமெரிக்கா என்றால் பொதுவாக எல்லோருக்கும் நினைவுக்கு வருவது நியூயார்க்கும் லாஸ் ஏஞ்செலேசும்தான். அது போன்ற நகரங்களில் இருக்கும் அடுக்கு மாடி கட்டிடங்களும், மிகவும் விலை உயர்ந்த கார்களும், மால்களும் விமானங்களும் உலக பிரசித்தமானவை. அந்த இரு கரைகளுக்கு நடுவே பிரசித்தமில்லாத ஆனால் ஸ்வாரஸ்யமான பல விஷயங்கள் அமெரிக்காவில் உண்டு. அவற்றில் ஒன்று இந்தகட்டுரையில் நாம் சந்திக்கும் ஆமிஷ் குடியிருப்புகளும் அதில் வாழும் மக்களும்…

கடலை உருண்டையும் கஞ்சித் தொட்டியும்

தொடர்ந்து இழிவையும், நசிவையும், ஆபத்தையுமே படித்து, பார்த்து, கேட்டு வரும் மக்களுக்கு நாளாவட்டத்தில் மனமும், உணர்வுகளும் மரத்துப் போக வாய்ப்பு அதிகம் என்பதோடு, தம் சமூகம், நாகரீகம், அரசு, நாடு ஆகியன குறித்து நம்பிக்கையின்மை, அலட்சியம், இழிவுணர்வு ஆகியன அம்மக்களிடம் நிரம்ப வாய்ப்பு அதிகம். முன்னாள் காலனிய நாடுகளாயிருந்து, இன்னும் அந்த வியாதியின் பீடிப்பிலிருந்து விழிப்புணர்வோடு மீள முயற்சி செய்யாத இந்தியா போன்ற ஒரு நாட்டில் இத்தகைய விட்டேற்றியான மனோபாவம் பரவலாக இருக்கத்தான் செய்யும், அதையே இந்த ஊடகங்கள் மேன்மேலும் உறுதிப்படுத்தி, பெருக்கவும் செய்கின்றன.

ஒரு வேளை நம்மிடையே இருந்து போன பற்பல சாதனையாளர்கள் பற்றித் தொடர்ந்து எழுதினால் நம் நாகரீகமும் தன்னளவிலும், ஒப்பீட்டிலும் மேன்மைகள் கொண்டதே என்ற ஒரு எதார்த்தமான உணர்தல் நம்மிடம் பரவுமோ என்ற நப்பாசை எங்களுக்கு உள்ளது. இதை ஒட்டி இந்திய/ தமிழகச் சாதனையாளர்கள் என்று எங்களுக்குத் தெரிய வருபவர்கள் பற்றித் தொடர்ந்து கட்டுரைகளைப் பிரசுரிக்க இருக்கிறோம்.

ஆதாரமற்ற பொருளாதாரம் – 1

வங்கிகள் தன்னிடம் காசு இல்லாமலேயே பிறருக்கு கடன் வழங்கிக் கொண்டிருக்கின்றன. என்னிடம் நூறு ரூபாய் இருந்தால்தான் நான் உங்களுக்கு நூறு ரூபாய் கடனாக தர முடியும். ஆனால் கையிருப்பை விட அதிகமாக பிறருக்கு கடன் கொடுக்கும் உரிமை வங்கிகளுக்கு மட்டுமே உள்ளது. அதுவும் பல பல மடங்கு அதிகமாக கடன் கொடுப்பது வழக்கமாகி வெகு நாட்கள் ஆகிவிட்டது. இது எப்படி சாத்தியம் ஆகும்?

விஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி – 3

நம்முடைய இன்றைய பொது விஞ்ஞானப் புரிதலுக்கு 20-ஆம் நூற்றாண்டின் கடைசி 30 ஆண்டுகள் ஒரு காரணம். சந்திரனில் கால் வைத்த மனிதன், சிலிகான் சில்லு விந்தைகள், இழை ஒளியியல் (fibre optics), லேசர்கள், இணையம் மற்றும் கணினிகள் நம் வரலாற்றுப் பார்வையை மிகவும் மழுங்கடிக்கும் தொழில்நுட்பங்கள். இவை அனைத்திற்கும் பின்னுள்ள பெளதிகம், குவாண்டம் இயக்கவியல்தான். அது ஏற்கப்பட்ட அறிவாகி 60 ஆண்டுகள் கழித்துத்தான் மேற்படிப் பயன்பாடுகள், தொழில்நுட்பங்கள் எல்லாம் உருவாயின என்பதை மறந்துவிடக் கூடாது.

விஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2

இன்றும் ஒரு அமெரிக்கருக்கு எடிசனைத் (Thomas Alva Edison) தெரியும்; ஆனால் ஃபைன்மேனைத் (Richard Feynman) தெரியாது. எடிசன் எல்லோருக்கும் தேவையான மின்குமிழ் (electric bulb) மற்றும் மின் உற்பத்தி போன்ற விஷயங்களில் ஈடுபட்டவர். ஆனால், ஃபைன்மேன் அப்படி ஒன்றும் சாதாரண வாழ்க்கைக்கு உபயோகமான பொருளை உருவாக்கவில்லை. இன்றுவரை, விஞ்ஞானி (scientist), மற்றும் கண்டுபிடிப்பாளர் (inventor) என இருவேறாகப் பிரித்துப் பார்ப்பது பொது அறிவாக எழவில்லை. இது 19-ஆம் நூற்றாண்டின் தாக்கம் என்றே சொல்லலாம். இந்தியர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம் – சி.வி. ராமன் பெரிய விஞ்ஞானி என்பதோடு நின்று விடுவார்கள். பலருக்கு அப்துல் கலாமுக்கும் (Dr. A.P.J. Abdul Kalam) விண் இயற்பியலாளர் சந்திரசேகருக்கும் (Dr. S. Chandrashekar) உள்ள வித்தியாசம் என்னவென்று தெரியாது.

ஆயிரம் தெய்வங்கள் – கிரேக்க சோகக்கதை ஆடிப்பஸ்

தம் வளர்ப்புப் பெற்றோர்கள்தான் தன் தாய் தந்தையர் என்று நம்பி வளர்ந்து ஆளாகிறான் ஆடிப்பஸ். ஆனால் ஒரு குடும்பத் தகராறில் அவனது பிறப்பின் ரகசியம் வெளிப்பட்டு விடுகிறது. ஆடிப்பஸ் தன் பெற்றோரைத் தேடிச் செல்கிறான். கொரிந்த் நாட்டை விட்டு வெளியேறும் ஆடிப்பஸ் ஒரு நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டு பல கிராமங்கள் நகரங்கள் தேசங்கள் என்று தன் தேடலைத் தொடர்கிறான். தன் பயணங்களில் டெல்ஃபி என்ற ஊர் வந்து, அங்கு அருள்வாக்கு கேட்கும்போது “விரைவில் நீ உன் தந்தையைக் கொன்று தாயைத் தாரமாக்கிக் கொள்வாய்” என்று பதில் வந்தது.

பனுவல் போற்றுதும் – குறம்

திருவைகுண்டத்தில் வேளாளர் மரபில் சைவ சமயக் குடும்பத்தில் 350 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் குமரகுருபரர். பிறந்து ஐந்து வயது வரை வாய்பேசாது வளர்ந்தார். பெற்றோர் அவரையும் கூட்டிக் கொண்டு போய், திருச்செந்தூர் முருகன் மீது கசிந்துருகி வேண்டியபோது குழந்தை ‘அம்மா’ என்றழைத்து ‘கந்தர் கலிவெண்பா’ எனும் நூலைப் பாடினார் என்பர். மதுரையைத் திருமலை நாயக்கர் ஆண்ட காலத்து, அவர் முன்னிலையில், அங்கயற்கண்ணி சந்நிதியில் ‘மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ்’ பாடினார்.