- றெக்கை – அத்தியாயம் 1
- றெக்கை – அத்தியாயம் 2
- றெக்கை – அத்தியாயம் மூன்று
- றெக்கை – அத்தியாயம் 4
- றெக்கை– அத்தியாயம் 5
- றெக்கை– அத்தியாயம் 6
- றெக்கை– அத்தியாயம் 7
- றெக்கை– அத்தியாயம் 8
- றெக்கை– அத்தியாயம் 9
- றெக்கை அத்தியாயம் பத்து
- றெக்கை– அத்தியாயம் 11
- நாவல் றெக்கை– அத்தியாயம் 12
- றெக்கை – அத்தியாயம் 13
- றெக்கை – அத்தியாயம் 15
- றெக்கை அத்தியாயம் 16
- றெக்கை அத்தியாயம் 14
- றெக்கை – அத்தியாயம் 17
ஊர்க்காவல் படையினர் குதிரையேறி காவல் குழல் ஒலித்து நான்கு தெரு சந்திப்பைக் கடந்து போகும் போது நடுராத்திரிப் பனி கவிந்தது.
மூடுபனிக்கு நடுவே முத்தச்சன் விரசாக நடந்து வந்தார். எதிர் நடைபாதையில் விசில் ஊதி பரியேறி வந்துகொண்டிருந்த காவலன் ஒரு வினாடி நின்று முத்தச்சனுக்கு வணக்கம் சொன்னான்.
போன வருடக் கடைசி வரை முத்தச்சனை எல்லோரும் கிழட்டு அடிமை என்று தான் கூப்பிடுவார்கள்.அது பரவாயில்லை என்று தோன்றும் முத்தச்சி – அதாவது முத்தச்சனின் அறுபது வயது தோராயமாக நிறைந்த கிழவியை அவர்கள் கிழட்டு தேவடியாள் என்று விளித்தது.
அவளை குழித்த வலது உள்ளங்கை உள்ளே இடது கட்டை விரலை வேகமாகச் செலுத்தும் கலவிச் சமிக்ஞையைச் செலுத்தவைத்து பெருஞ்சிரிப்போடு கடந்து போவார்கள்.
பத்து நடைக் காவலர்களுக்கு ஒரு குதிரையேறிய காவலன் சமம் என்று குதிரைக்காவலர் பற்றி ஊரே சொல்லும்
ராஜாங்க படையினர் போல் மிடுக்காக குதிரை நடத்தி பாரா என கம்பீரமாக ஒலித்து போகிறவர்களான குதிரை காலர்கள் முத்தச்சனும் முத்தச்சியாகவும் எதிர்ப்படும் அந்த மூத்த தம்பதிக்கு மரியாதை செலுத்துவது சமீப காலம் தொட்டுத்தான்.
லெவி எஜமானர் இவர்களை அடிமைத் தளையிலிருந்து விடுவித்த பின் தொடங்கியது அது.
ஆல்பி எஜமானரும் அவருடைய பேரழகு நிறைந்த மனைவி நிர்மலா எஜமானியும் ஆன டாக்டர் ஜோடி அவர்களுடைய மேட்ரிட் மருத்துவமனையில் போக்குவரத்து மற்றும் தூய்மை நிர்வாகமென்று எளிய உத்தியோகம் பார்க்க ஏற்பாடு செய்த பிறகுதான்.
லெவி எஜமானரும் ஆல்பி எஜமானரும் தரை மார்க்கமாக பயணம் செய்து மூன்றாம் நாள் சாயந்திரம் போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பனை அடைவார்கள்.
ஸ்பெயினும் போர்ச்சுகல்லும் ஒரே அரசரின் ஆட்சியில் இருப்பதால் ஒரு நாட்டில் இருந்து மற்றதற்குப் போய்வர கடவுச் சீட்டு தேவை இல்லை. எனினும் நோயாளர்களான பயணிகள் குவாரண்டைன் என்று இரண்டு வாரம் பட்டியில் அடைக்கப்பட்டு நோய் ஸ்வஸ்தாமான பிறகு மேற்கொண்டு பயணத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
வழியில் டெல் வேலி, மேயர், ராயல் மொனஸ்ட்ரி ஓஃப் சாந்த மரியா என்று உண்டு, பேசிக் களைத்து, தனியாகவோ அவசரமாக சேர்த்துக்கொண்ட இணையோடு சுகித்தோ உறங்கி போய்ச் சேருவது வாடிக்கை.
முன்னே பின்னே தெரியாது உடல் துணைக்கு பெண் தோடுவது அபாயமானது என்றால், சில சீமாட்டிகள் வழியில் தென்பட்ட ஆணை எல்லாம் உறவுக்கு தள்ளிப்போவதும் நடக்கக்கூடாதது தான்.
முத்தச்சன் செயலான திடகாத்திரமானவானாக இருந்தபோது அவரை அரையில் பற்றிப் பிடித்து பசி தீர்க்க சொல்லி தொந்தரவு செய்திருக்கிறாரக்ள்; முத்தச்சன் அவற்றில் ஒரு கோரிக்கையைக் கூட வேண்டாம் என்று மறுத்ததில்லை. முத்தச்சிக்கு தெரியாமல் வடிவான நல்ல கருப்பிகள் நூறு பேரையாவது கமனப்படுத்திய சேவகர் அவர். வெள்ளைகாரச்சிகள்? கணக்கே இல்லை.
முத்தச்சி?
முதல் தடவை அது அணைப்போடு தொடங்கி ஒரு நிமிடம் முத்தமிட்டு மூத்த லெவி எஜமானர் இது போல் ஒரு மழைக்கால ராத்திரியில் நிகழ்த்திய சம்பவம்.
முத்தச்சி பத்து நிமிடம் தாமதமாக ராத்திரி உணவு-அத்தாழம் எடுத்து வைத்ததற்காக முதுகில் நாலு தெருவுக்குக் கேட்க அடித்தபோது தற்செயலாக அவர் கை அவளது மாபெரும் கொங்கைகளை பின்னாலிருந்து பற்றியதில் சுபமுகூர்த்தம் குறிக்கப்பட்டது.
கருப்பு உடலில் சஞ்சரிக்க நேரம் போதாமல் அந்த ராத்திரி முழுக்க முத்தச்சி உடலில் விரல் பாம்புகள் வெள்ளமாக ஈரம் பர த்தின. முத்தச்சி ஜெயித்த யுத்தம் அது.
அடுத்த விடிகாலை ரொட்டித் துண்டுகளை உண்டு ஒப்பேற்றிக்கொண்டு முத்தச்சியைப் பார்த்து கண்ணடித்து இன்னொரு அணைப்போடு பிரிந்தார் மூத்த லெவி.
அப்புறம் அடுத்த மூன்று வாரம் நாள் தவறாது முத்தச்சனை கூப்பிட்டு விட்டு டேய் உன் தேவடிச்சியை குளிச்சு விட்டு கூட்டுட்டு வாடா என்று ஆணை பிறப்பிப்பார்.
துரைசானிகள் மிக அதிக நேரம் எடுத்து முத்தச்சனோடு சுகம் அனுசரிக்கும்போது அவர்களை எல்லா விதத்திலும் அடிமைப் படுத்தி அனுபவித்தார் அவர்,
அவர்கள் மூலம் மூலம் நோய்த் தொற்றோடு பாலியல் சீக்கின் பிடியில் முத்தச்சன் அகப்பட, அப்புறம் பத்து வருடம் கையைக் காலை, மற்றதை வைத்துக்கொண்டு சும்மா இருக்கச்சொல்லி முத்தச்சி கட்டளை இட, எல்லாம் முடிவுக்கு வந்தது.
இந்த அடிமை சண்டையில் புது அடிமைகள் வரும்போது தரம் பார்த்து மூத்த லெவி எஜமானுக்கு ராத்திரி உணவுக்கு அப்புறம் விருந்து ஆக அந்த நல்ல கருப்பியை தங்க வைத்து அந்த ராத்திரிக்கான கோட்டா நிறைவேற்றப்பட்டது
காரணம் சேவை அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட ஒரு கட்டணம் வீசி எறியப்பட்டு அந்தப் பெண்ணை சந்தோஷமாக போக வைத்த பெரும் பணி முத்தச்சனுடையது.
அடிமை சந்தையை இன்னும் ஒரு நிமிடத்தில் கடந்து விடுவார்.
முத்தச்சன். போன வாரம் இதே இடத்தில் விஸ்கி அதிகம் பருகிய போர்ச்சுகல் லிஸ்பன் அரசவை உறுப்பினர் ஒருவனும் அவன் சிநேகிதர்களும் வீடு திரும்பிக் கொண்டிருந்த முத்தச்சனை நிற்கச் சொன்னார்கள்.
எல்லோரும் எல்லோரையும் அறியும் லிஸ்பன்னில் பெண் விவஹாரம் நிஜமும், கற்பனையும் கலந்து சமுதாயவெளியில் பரமாறிக்கொள்வது சகஜம்.
முத்தச்சனை நிறுத்தி அவர்கள் கேட்டது டாக்டர் இந்தியாக்காரியை லெவியும் ஆல்பியும் சேர்ந்துதான் அனுபவிப்பதாக கேள்விப்பட்டோம். மேல் பகுதி யாருக்கு மற்ற பகுதி யாருக்கு?
முத்தச்சன் பதிலே சொல்லவில்லை. அரசவை உறுப்பினர் சொன்னாராம் – முழு தேகமும் நான் எடுத்துக்கறேன், எவ்வளவு தர வேணும்?
வலிந்து முகத்தில் வரைந்த புன்சிரிப்போடு முத்தச்சன் கடந்து போனார்.
அடிமை சந்தை உள்ளே இருந்து மங்கலான மெழுகுவர்த்தி ஒளியில் முத்தச்சன் கண்டது அவர் நம்ப சிரமப்படும் காட்சி.
நிறைசூலியான ஒரு பேரிளம்பெண் கம்புக்கூட்டுக்கு கீழே தூவெண் சிறகுகள் பறப்பித்து உந்தி எழ கடுமையான பிரயத்னம் செய்து கொண்டிருந்தாள். அவள் அருகே ஆறு வயது காணும் ஓரு சிறுமி இவள் பறக்க றெக்கை விரிக்க தன்னால் ஆன எல்லாம் செய்து கொண்டிருந்தாள்.

அம்மா, நான் உன்னை தூக்கிண்டு போய் பக்கத்துலே கைனகாலஜி வைத்தியர் யாரும் இருந்தால் டெலிவரி பார்க்க சொல்றேன்.
அவள் அம்மாவின் வயிற்றில் ஆடை விலக்கி தன் வெண்சிறகுகள் கொண்டு மெல்லென வருடிக் கொண்டிருந்தாள். தேவகுமாரி தன் அன்னைக்கு நோய் நீக்க ஆன எல்லா சிஷ்ருசையும் செய்து அவளையும் வெளியேகி சிறகு உயர்த்த எல்லாம் நடத்துவிக்க ஓஓஒ என சிறகொலி சூழல் நிரம்ப செய்தபடி இருந்தாள்.
நான் ஒரு டாக்டர் கிட்டே தான் வேலை பார்க்கறேன். ஆனாலும் பிரசவம் எதுவும் பார்த்ததா நினைவு இல்லே. எதுக்கும் கேட்டு பார்க்கறேன். பக்கத்துலே தான் வீடு. நீயும் அம்மாவும் கொஞ்சம் சந்தை மறைவிலே இருங்க என்று முத்தச்சன் சொல்லிவிட்டு போகும்போது அன் பெயரை முத்தச்சன் என்று பரவலாக தெரிந்த அளவு இங்லிஷில் சொன்னான்.
அவன் நாலடி முன்னால் போய்த் திரும்பி வந்தான்.றெக்கை எல்லாம் தங்கம் தானே. அப்போ பத்திரமா மடிச்சு மறைவா வச்சுக்குங்க. நான் இதோ வந்துடறேன்.
முத்தச்சன் இவர்கள் யாராக இருக்கக்கூடும் என்ற யோசனையில் நடந்தபோது உச்சந்தலையில் குதிரை வாசனை. பின்னால் இருந்து இன்னொரு குதிரை கனைத்தது. முத்தச்சன் இரண்டு கரங்களையும் சேர்த்து உயர்த்தினான்.
குதிரை போலீஸ்காரர்கள் ரெண்டு பேரும் பரியேறி அமர்ந்தபடிக்கே முத்தச்சனிடம் சொன்னான் –
அடிமை தானேடா தப்பிச்சிட்டியா யார் எஜமான்னு சொல்லு. என் பின்னாலே வா. எஜமானன் பிரஷ்டம் கழுவிக் குடி. எஜமானி இருந்தாலும் சரிதான். உன் அடிமை விடுதலைச் சீட்டு எடு. இருந்தா கழுவின தண்ணி ஒண்ணும் குடிக்க வேணாம்.
முத்தச்சன் சட்டையாகப் போட்டிருந்த லெவி எஜமானனின் பழைய ஓவர்கோட்டை திறந்து தனக்கு விடுதலை கொடுத்த அவருடைய சட்டை பையிலிருந்து காகித ரசீதை எடுத்து நீட்டினார்.
குதிரை தலையை கோணியாக அசைத்து விடுதலை சர்ட்டிபிகேட் எடுத்ததை அங்கீகரித்தது. முத்தச்சன் சுவர் மறைவில் இருந்த அம்மா மகள் இந்த காவலர்கள் கண்ணில் படாமல் இருக்க வேண்டுமே என்று வேண்டியபடி ஓட்டமும் நடையுமாக நகர்ந்தார்.
ராத்திரி வெகு நேரம் வரை லிஸ்பன் போன கணவன் தால்பி மற்றும் அவன் நண்பன் லெவி இருவரும் மேட்ரிடில் இருந்து அடுத்த சிறு நகரம் செண் மொனாஸ்ட்ரி போய்ச் சேர்ந்தது தகவலாக குதிரை தபாலில் அனுப்பியிருக்கலாம் என்று எதிர்பார்த்திருந்தாள். சென் மொனாஸ்டரி அவ்வளவாக தூரத்திலும் இல்லை, அருகிலும் இல்லை. என்றாலும் நிர்மலா தன் கணவன் அல்பே ஒவ்வொரு ஓய்வு தலத்திலும் நாலு வரி அவளுக்கு எழுதி அஞ்சல்காரர் வழி அனுப்ப வேணும் என்று எதிர்பார்த்திருக்கிறாள். வீட்டில் வந்து விழுந்து நல்ல சேதி வரும் வரை டாக்டர் நிர்மலாவால் காத்திருக்க முடியாது.
முத்தச்சனை வண்டித்தடத்தில் காத்திருந்து, லெவிப்பியோ ஆல்பியோ கடிதம் அனுப்பியதை நேரில் போய் வாங்கி வர அனுப்பி இருக்கிறாள் அவரை.
இன்றைக்கு வெறுங்கையோடு திரும்பியிருக்கிறீர் முத்தச்சன். போகிறது முத்தச்சியோடு கட்டி பிணைந்து உறங்கும் என்று சிரிப்போடு நிர்மலா சொல்ல முத்தச்சர் ஈயென்று ஆலப்பாட்டு வயசன் கணக்காக சிரித்து சொல்கிறார் =
நான் உறங்கும் முன் றெக்கை முளைத்து பறந்து வந்து அடிமைச் சந்தையின் ஏகாததயிலே உதவிட யாருமுண்டோ என்று காத்திருக்கிறாள்.ஒரு பெண்
நிர்மலா பிடித்த நல்வார்த்தை களஞ்சியம் நூலை மேஜையிலிருந்து எடுத்து ஏதோ ஒரு பக்கத்தை பிரிக்கிறாள் -க்ரியொலல் மொழியில் இல்லாமல் இங்க்லீஷில்= All Swans are White until a black swan is sighted.
சட்டென முத்தச்சர் நிர்மலா காலில் விழுந்து அவள் கையைப் பற்றியபடி சொல்கிறார் -எஜமானி தயவு செய்து அடிமைச் சந்தைக்கு ஒரு பத்து நிமிடம் வந்து போகணும். நான் கூட வரேன், உங்களுக்கு ஏதும் கேடு செய்ய யாரும் வந்தால் அரட்டி விரட்ட ,
நிர்மலா சிரிக்கிறாள் பேசாமல் அடிமை சந்தைக்குள் போகிறார்கள். வலது புறக் காம்பவுண்ட் சுவரை ஒட்டி நிற்கும் பேரிளம் பெண் மாநிறப் பேரழகி.அவளை அடுத்து தரையில் ரத்னக் கம்பளம் அருமையான வேலைப்பாடு உள்ளது விரித்து ஆறு வயசுக்காரி நித்திரை போயிருக்கிறாள்.
நிர்மலா அந்த இருவரையும் கூர்ந்து பார்க்க, அவர்கள் வெண்சிறகு அன்னங்களாக அந்த இரவில் தென்படுகிறார்கள்;நிர்மலாவுக்கு அவள் படுக்கையில் ஏறும்போது மனதில் வந்த வெண்சிறகு அன்னம் -கருப்பு அன்னம் தத்துவார்த்த மொழியாக்கத்தின் பின்னால் மறைந்து புன்சிரிக்கின்றன.
ஏதாவது பேச வேண்டும். சூழ்நிலை அபத்தமாகப் போயிருக்கிறது.
பாரீஸ்லே வாங்கினதாக இருக்கும்.
நிர்மலா ஒரு புன்சிரிப்போடு இறகுப் பெண்ணிடம் வினாவுகிறாள்.
எங்கேயும் வாங்கவில்லை. பிறந்ததே இதோடு தான்.
இறகை உடுத்துக் கொண்டு அது உடம்பில் கொங்கை பூரித்து நிற்பது மாதிரி வெண்சிறகை இவளும் இங்கே உறக்கம் போயிருக்கிற இவள் மகளுமுடுத்தி வந்தால் என்ன, உடம்பிலேயே முளைத்து வந்தால் என்ன, இப்போதைக்கு அன்னம் வெண்மையாக திளங்குபவை. அன்னம் வெண்மையாக இருக்கட்டுமே.
இறகு செழித்த பேரிளம்பெண் நிர்மலாவிடம் ஆமாம் என்ற தொனியில் சகஜ்மான குரலில் சொன்னாள்,
அடுத்த நிமிடம் அவளுக்கு பிரசவ வலி எடுக்கத் தொடங்கியது.
நிர்மலா முத்தச்சியிடம் நாம் நம்ம ஆஸ்பத்திரி க்ளினிக் போயிடுவோம் என்று சொல்லி கைகாட்டினாள்.
றெக்கை முளைத்த பெண் பொம்மை மாதிரி சுண்டிருக்க முத்தச்சி புஷ்பம்போல் அவளை காரில் பின் இருக்கவித்தாள். நிர்மலா காரை ஓட்ட தொடங்கினாள்.
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
