- றெக்கை – அத்தியாயம் 1
- றெக்கை – அத்தியாயம் 2
- றெக்கை – அத்தியாயம் மூன்று
- றெக்கை – அத்தியாயம் 4
- றெக்கை– அத்தியாயம் 5
- றெக்கை– அத்தியாயம் 6
- றெக்கை– அத்தியாயம் 7
- றெக்கை– அத்தியாயம் 8
- றெக்கை– அத்தியாயம் 9
- றெக்கை அத்தியாயம் பத்து
- றெக்கை– அத்தியாயம் 11
- நாவல் றெக்கை– அத்தியாயம் 12
- றெக்கை – அத்தியாயம் 13
- றெக்கை – அத்தியாயம் 15
- றெக்கை அத்தியாயம் 16
- றெக்கை அத்தியாயம் 14
- றெக்கை – அத்தியாயம் 17
- றெக்கை – அத்தியாயம் 18
வலநாடு சிறு நகருக்கு நிர்மலாவும் பிள்ளைகளும் வந்து சேர்ந்து பதினாலு நாள் சென்று டாக்டர் நிர்மலா கிளினிக் செயல்படத் தொடங்கியது. வாசல் கதவில் ஒரு சிறு மரப்பலகை டாக்டர் பெயரையும், அவர் படித்துத் தேர்வடைந்து மதறாஸ் யூனிவெர்சிட்டி வழங்கிய மாஸ்டர் ஆஃப் மெடிசன் பட்டத்தையும் அறிவித்தது. அது தவிர வேறே அறிவிப்பு பலகைகள் ஏதும் இல்லாததை பார்த்து ஆச்சரியப்படுவதாக நிர்மலாவிடம் சொன்னவர்கள் இந்த இரண்டு வாரத்தில் அவள் பரிசயப்பட்ட பலர்.
கங்கா, யமுனா, காவேரி தொடங்கியவர்கள். அவர்கள் நிர்மலாவின் க்ளினிக்கு நோயாளிகளை வருவிக்க திருப்தி இல்லையேல் கொடுத்த டாக்டர் ஃபீஸ் வாபஸ், இப்போது நடக்கும் இங்க்லீஷ் வருடத்துக்கு இணையான தமிழ் ஆண்டு சர்வதாரி, மாதம் ஆடிக்கான சிறப்பு தள்ளுபடி, ரெண்டு ரெண்டு நோயாளிகளாக வந்தால் ஒருத்தருக்கு ஃபீஸ் மற்றவருக்கு இலவச சிகிச்சை, தினம் தினம் இரவில் அன்றைக்கு வந்த நோயாளிகளுக்கான அதிர்ஷ்டக் குலுக்கல் முறையில் அன்றைய அதிர்ஷ்ட நோயாளியை தேர்ந்தெடுத்து ஒரு வாழைக்குலை பரிசளிப்பு, க்ளினிக் படியேறி வந்தவர்களுக்கு தேநீர் உபசாரம் இப்படி ஏகப்பட்ட நோயாளி வாடிக்கையாளர்களை உடனடியாகக் கவரும் திட்டங்களை மூன்று நதிப் பெண்களும் டாக்டர் நிர்மலாவிடம் சளைக்காமல் வருமானம் வரவழைக்க வழிமுறையாகச் சொன்ன வண்ணம் இருந்தார்கள். நிர்மலா ஒரு சிறு புன்னகையோடு அவையெல்லாவற்றையும் கடந்து போய்க் கொண்டிருந்தாலும் அந்த நதிப் பெண்களோடு அவளது நேசம் மேலும் ஆழமானபடி இருந்தது.
அடுத்த வீட்டு பெஞ்சியும் நிர்மலா கிளினிக் தொடங்க நிறைய ஒத்தாசை செய்தாள். வீட்டின் முன்பக்கம் நிர்மலா கிளினிக் செயல்பட, பின்பக்கம் குப்பை குவியத் தொடங்கியது. ஒரு மணி நேரத்தில் அதையெல்லாம் அகற்றிவிட்டாள் அவள். அதில் சுய தேவை நிறைவேற்றுவதும் காரணம்.. பின்வாசல் வழியே நுழைந்து நிர்மலா எதிர்பார்க்காத நேரத்தில் அவளை உதட்டில் முத்தமிட்டு ஓட எளிதாக இருந்தது.
கிளினிக் தொடங்கும் நாள் காலையில் நிர்மலா அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணனின் ரவிவர்மா பாணி ஓவியத்தை டாக்டர் மேசை மேல் சார்த்தி வைத்து வந்தித்து வணங்கி எழுந்தாள். நோயும் மருந்தும் மருத்துவமும் கிருஷ்ணார்ப்பணம்.
மூன்று நதிப்பெண்களும் நிறைகுடங்களோடு கிளினிக் வாசலில் நின்று குரவையாடி சற்றே குலவையிட்டு நல்லதெல்லாம் நடக்க யெரூபா தெய்வத்தை வணங்கி குடத்து நீர் சிந்த வீடு நெடுக நடந்து போனார்கள். கிளினிக் வெளியே ஏதோ பேச்சொலி. வரலாமா என்று கேட்டபடி பெஞ்சி நின்றிருந்தாள்.
நிர்மலா கண்டிப்பு இழையோடிய குரலில் சத்தம் தாழ்த்திச் சொன்னாள் – ’நான் பேஷண்டை பார்த்துக்கிட்டிருக்கேன்’
சரி, நிம்மியக்கா, உன் கிட்டே பேச வரலே. நான் ஜெசிக்கா கிட்டே ஒண்ணு அவசரமா சொல்ல வேண்டியிருக்கு.
பெஞ்சி பரபரவென்று ஜெசிக்கா அருகில் சென்றாள் கையில் துணியிட்டு மறைத்து வைத்திருந்த எதையோ ஜெசிக்காவிடம் நீட்டினாள்.
”ஜெசிக்கா ஸ்வீட் எடுத்துக்க. நீ தான் இந்த ஆஸ்பத்திரிக்கு முதல் பேஷண்ட். உன் வரவு இன்னும் நூறு பேரை கொண்டு வரட்டும். எங்க நிம்மியக்காவுக்கு வலநாடு ராசியான ஊராக இருக்கட்டும்.
நிர்மலா நெகிழ்ந்துதான் போனாள். எப்படியான அன்பு நிறைந்த எளிய மனிதர்கள். இவர்களிடையில் வாழ்வது இனிதாக இருக்குமோ என்னமோ, அன்பும், கரிசனமும், பரஸ்பர நேசமுமாக நடக்கும். ஒவ்வொரு நாளும் சிறப்பாக மலர்ந்து மகிழ்ச்சியை பொழியட்டும்.
பெஞ்சி ஒரு இனிப்பை ஜெசிக்காவுக்குக் கடிக்கக் கொடுத்து பாதி கடித்ததும் தான் எடுத்துச் சுவைக்கலானாள்.
பெஞ்சி சாக்லெட் எனக்கு கிடையாதா? டாக்டர் நிர்மலா ஒரு நிமிடம் நிர்மலாவாகி பெஞ்சியை அருகில் அழைத்தாள்.
சின்னதா இருக்கப்பட்ட ஸ்வீட் இருந்தா கொடுடி தடிச்சி.
பெஞ்சி அவள் சொன்னபடி கேட்டாள். நிமிர்ந்து நின்று வலதுகையை உயர்த்தி சல்யூட் அடித்து வேகமாக வெளியேறினாள்.
பெஞ்சி அறைக்கதவைத் திறக்க முற்படும்போது ஜெசிக்கா அவளை அழைத்துச் சொன்னாள் : பெஞ்சி, ஸ்கூல்லே பசங்களை விட்டுட்டு வரும்போது ஓநெல்லி பாட்டி கிட்டே சாஸேஜ் வாங்கிட்டு வர்றியா? காலையிலே இருந்து கொலைப்பட்டினி.
ஜெசி, நான் வாங்கிட்டு வருவேன். எங்கே உன்னை பார்த்து அதை கையிலே கொடுக்கறது? நியாயமான கேள்வியை எழுப்பினாள் பெஞ்சி
ஏன் எப்பவும் போல முனிசிபல் ஆபீஸ் தானே.
அங்கே போனா எப்பவும் எல்லோரும் உக்காந்தே உறங்கிக்கிட்டிருப்பாங்க. நீ இல்லே. மத்த கவுன்சிலர்கள். அது கிடக்கட்டும். நிம்மி டாக்டர் கிட்டே முடிச்சதும் என் வீட்டுக்கு வந்து பசியாறிட்டு போ.
ஜெசிக்கா தலைவலிக்காக கடந்த முப்பது வருடமா மருந்து தேடிக்கொண்டிருக்கிறாள். இப்போது வயது முப்பத்தைந்து. ஒற்றைத் தலைவலியோடு பிறந்தாள். நாட்டு வைத்தியம், வீட்டு வைத்தியம் எல்லாம் பார்த்தாச்சு.போன வருஷம் வைத்யரத்னா தங்கவேலு அய்யங்கார் கிட்டே கூட சர்வரோக சிகித்சை போயாச்சு
என்ன மாதிரி சிகிச்சை? நிர்மலா ஆர்வம் மேலிடக் கேட்டாள். ஜெசிக்கா ரகசியம் சொல்லும் குரலில் சொல்வாள் – ஏதோ எண்ணெயை சூடாக்கி காதிலே விடறது.
எதுக்கு எண்ணெயை காதிலே விடணும்? நிர்மலா புரியாமல் கேட்டாள்.
அதான் அதை வெளியே எடுத்துடறது இன்னொரு காது வழியாக
இந்த எண்ணெயை ஊத்தி வடிக்கறதுக்கு அப்புறம் உங்க ஒற்றைத் தலைவலி போயே போயாச்சா?
ஆறு மாசம் வரை தலைவலி இல்லே டாக்டர்.. காதுவலிதான் கஷ்டப்படுத்திடுச்சு
காதுவலி இப்போ இருக்கா?
லேசா இருக்கு டாக்டர்.
உங்க காதை கொஞ்சம் பார்க்கலாமா?

நிர்மலா எழுந்து ஜெசிக்காவின் தோளில் கைவைத்து முகத்தைத் தன்னை நோக்கி திருப்பினாள். விரல்கள் ரெண்டு பக்க செவிமடல்களையும் ஒவ்வொன்றாக சற்றே சரித்து உள்ளே நோக்க, ஜெசிக்கா முகத்தில் இனம் புரிந்த சந்தோஷம்.
நிர்மலா தன் இருக்கைக்கு திரும்பினாள். கையில் இட்டிருந்த உறையை கழற்றி அருகில் வைத்தாள்.
ஜெசிக்கா, காது முழுக்க அழுக்கு தான் இருக்கு. ராட்சச வைத்தியமாக இல்லாமல் மெதுவா ஜாக்கிரதையா அந்த அழுக்கை நீக்கணும். இப்போ எனக்கு நேரம் இல்லே. மத்த பேஷண்ட்ஸ் காத்திருப்பாங்க. வாரக் கடைசியிலே வாங்க. சுத்தமாக்கிடலாம்.
காதுவலி குணமாகி விடுமா?
அது நடக்கும்னு ப்ராமிஸ் பண்ண முடியாது ஜெசிக்கா
புரியுது டாக்
அடுத்து வர்ற சனிக்கிழமை வாங்க. மருந்து உள்ளே போய் வாங்கிக்குங்க
சொன்ன மாத்திரத்தில் ஜெசிக்கா எழுந்து வெளியே நடந்தாள். நிர்மலா அவள் பின்னால் நடந்தபடி, ஆளோடியில் வரிசையான போத்தல்களில் பாதி நிறைத்து வைத்திருந்த உடனடி உபயோகத்துக்கான மருந்துகளை பார்வையிட்டாள்.
இருமல் மருந்து, ஜலதோஷ மருந்து, காய்ச்சல் மருந்து, அலர்ஜி மருந்து, பேதி மருந்து,அஜீர்ண மருந்து, ஆஸ்பரின் மாத்திரை, வலி நிவாரணி..
ரேழியில் பாதி அடைத்துக்கொண்ட மர பெஞ்சிலும், அடுத்து நின்ற சுவரில் பதித்த இரண்டு தட்டு மர அலமாரியிலும் மருந்தும் மாத்திரையுமாக வீட்டுக்கு ஆஸ்பத்திரிக் களை வந்து மெல்லிய பினாயில் நெடியடித்தது.
ஜெசிக்கா தடதடவென்று வீட்டு உள்ளே படுக்கையறைக்குள் நுழைந்துவிட்டாள். காவேரி குளித்துவிட்டு உடுப்பு மாற்றிக் கொண்டிருந்ததை அதிசயமாக நோக்கினாள் ஜெசிக்கா.
இதெல்லாம் வேறே செய்வியா? ஜெசிக்காவின் குறும்புத்தனம் காவேரி முகம் சுருங்க வைத்தது.
சாவகாசமாக உடை மாற்றிக்கொண்டு பேசினாள். ‘தண்ணி இருந்தா தினமும் கூட குளிப்போம் அக்கா இன்னிக்கு இது ரெண்டாம் குளி. கம்பவுண்டரா இருந்துக்கிட்டு கம்புக்கூட்டிலே வியர்த்து வடிஞ்சா நல்லா இருக்குமா? நீங்க குளிச்சீங்களா?
நிர்மலா டாக்டர் எழுதியனுப்பிய பிரிஸ்க்ரிப்ஷன் வாசித்து அவுன்ஸ் கிளாஸில் பாதிக்கு எல்லாம் சரியாக இருக்கிறது என்று தைரியமளிக்கும் கார்பனேட் மிக்சரும், இன்னொரு கிளாஸில் பாதி ஆஸ்பரின் கலக்கிய கைகால் வலிக்கு நிவாரணியும் குடிக்கத் தந்தாள்.
மருந்து குடித்தால் வரும் பள்ளிக்கூட நினைவுகளோடு ஜெசிக்கா இடது கையை உயர்த்திக் காட்டியபடி வாசலுக்கு நடந்தாள்.
நிர்மலா மனதில் கணக்கு போட்டாள். இந்த மூன்று நதிகளையும் இலவச சேவை தரச்சொல்ல நல்லா இருக்காது. மூணு சம்பளம் கொடுக்கவும் வருமானம் வர ஆரம்பிக்கலே. மருந்து எடுத்துத் தர ஒருத்தி போதும். மற்ற ரெண்டு பேரும் அப்போ அப்போ வந்து போகட்டும். அதுக்கு தனியாக கொஞ்சம் கொடுத்திடலாம்.
நிர்மலா பிரச்சனை தீர்ந்த மகிழ்ச்சியோடு இதை எப்படி இந்த நதிப் பெண்களிடம் சொல்வது என்று அடுத்த சின்ன பிரச்சனைக்கு தீர்வு காண முற்பட்டபடி கிளினிக்குக்கு திரும்பினாள். அங்கே அவளது டாக்டர் இருக்கையில் ஓ நெல்லி பாட்டி உட்கார்ந்து இருந்தாள்.
maidin mhaith dochtúir அய்ரிஷ் மொழியில் காலை வணக்கம் சொல்லி சிரித்தபடி இருக்கையிலிருந்து எழ முயல, தலை குப்புற விழுந்தாள் -பள்ளிக்கூடம் ஹெட்மிஸ்ட்ரஸ் பிள்ளை மாதிரி. நிர்மலா பதறிப்போய் விரைந்து ஒநெல்லி பாட்டியம்மாளைத் தூக்கி நிறுத்தப் பார்த்தாள். கிழவி நல்ல கனமான உடம்பு கொண்டவள் என்பதால் அவள் தரைக்கு வழுக்கிக் கொண்டு போனாள். இதெல்லாம் அவளுக்கு வேடிக்கை காட்ட நடத்தப்படும் நிகழ்ச்சி என்று தோன்ற, நிறுத்தாமல் சிரிக்கத் தொடங்கினாள்.
மூன்று நதிப் பெண்களும் அத்தியாவசியம் இல்லாமல் க்ளினிக் உள்ளே வரக்கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லியிருந்தாள் நிர்மலா. அதனால் தான் உடனே வந்து ஓநெல்லி பாட்டியம்மாளை மீட்க முடியாமல் போனது என்று அவளுக்குத் தெரியும். இந்த மூவரும் நாளையில் இருந்து நான்கு நான்கு மணிநேரம் தனித்தனியாக வந்து போவார்கள். வீட்டில் வேலை குவிந்து கொண்டிருக்கிறதாம்.
நோயாளி உட்காரும் இருக்கையில் ஓநெல்லியை அமர்த்தி கார்பனேடட் குடிநீரைக் குடிக்கக் கொடுத்தார்கள். சோடா குடித்த சந்தோஷம் அவள் சிரிப்பை நீட்டியது.
அந்த சேர் ஹென்றி ரொம்ப வருஷம் முந்தி கரும்பு சக்கரை ஆலையிலே மேனேஜர் கேபின்லே போட்டு உக்கார்ந்தது போல இருந்தது -நிர்மலாவிடம் பழைய நினைவு பகிரும் குரலில் இங்க்லீஷில் கூறினாள். நிர்மலா நல்ல இங்க்லீஷில் மறுமொழி சொல்ல ஓநெல்லி மரியம் வாழ்த்தப்படட்டும் ஹெயில் மேரி என்று கூவி, நிர்மலாவும் நதிகளும் ஒரே குரலில் ஆமோதித்தனர். கிழவியம்மாள் தொடர்ந்தாள்.
உருளைக்கிழங்கு பஞ்சம் அயர்லாந்தை பிடிச்சு உலுக்கி பட்டினி போட்டு உயிரை எல்லாம் உறிஞ்சின காலம். மத்திய வயசுலே தான் நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அயர்லாந்திலே டப்ளின் மாநகரத்திலே அவனுக்கு ஹென்றிக்கு ஒரு நிரந்தர வேலையும் அமையலே. எப்படியோ ஸ்பெயின் வந்து அங்கே இருந்து மெல்லிஸி வழியாக வலநாடு. ஆச்சு இருபத்திரெண்டு வருஷம். ஹென்றி திடீர்னு மாரடைச்சு போய்ட்டான் டர்ட்டி பெல்லோ. சாப்பாடு வித்து ஜீவிச்சிட்டிருக்கேன். சாரி டாக்டர், உங்க நாற்காலியை பார்த்ததும் பழைய நினைவெல்லாம் வந்துடுச்சு
ஓநெல்லி பாட்டியம்மாள் கைப்பையிலிருந்து உருமாலை எடுத்து கண்ணைத் துடைத்துக் கொண்டாள். நதிகள் மெல்ல வெளியேற, ஓநெல்லியை நிர்மலா பரிவுடன் கேட்டாள் – உடம்புக்கு என்ன பண்ணுது அம்மா?
குழந்தே, என்ன பண்றதா? என்ன பண்ணலே? டப்ளின்லேருந்து பெல்பாஸ்ட் வரை வரிசையா நிறுத்தி வச்சாலும் வாதனைகளோட எண்ணிக்கை வளர்ந்துக்கிட்டுத்தான் போகுமே அன்றி குறையாது. ஆரம்பிக்கட்டா? ஒத்தத்தலைவலி, கண் சரியாக தெரியலே, காதுவலி, தீராத ஜலதோஷம், வாய்ல பல்லு கிட்டத்தட்ட எல்லாம் விழுந்தாச்சு அதுனாலே.எயிற்றுவலி, உதட்டுலே புண் தொண்டையிலே குத்திருமல்..
நிர்மலா நிறுத்தினாள். ப்ரிஸ்க்ரிப்ஷன் காகிதத்தில் எழுதினாள் –
நதி, ஒரு ஆஸ்பரின் மாத்திரையும் சோடாத் தண்ணீரும் மூதாட்டிக்கு கொடுக்கவும். ஃபீஸ் கேட்க வேண்டாம்.
தொடரும்
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
