சின்னச்சின்ன தாஜ்மஹல்கள்

ஏனோ தெரியவில்லை,  தாஜ்மஹால் அவனுக்கு என்றுமே அழகாகத் தோன்றியதில்லை. வெயிலில்,  அதன் வெண்பளிங்கு கற்களின் கண்களைக் கூசவைக்கும்  பிரகாசத்தில்,  அவன் எப்போதும் அதற்கு முதுகை காட்டியவாறுதான் அமர்வது வழக்கம். மீராவையும் தானே அந்த பிரகாசம் கண்களைக் கூச வைக்கக்கூடும்? ஒருவேளை அவளுக்கு தாஜ்மஹால் அழகாக இருப்பதாகவே தோன்றியிருக்கும்

இருள்

வந்ததும், வழக்கம் போல, பானோ என் நெற்றியின் மீது கை வைத்துப் பார்த்தாள். அவளுடைய கை சில்லென்று இருந்தால், இன்னும் காய்ச்சல் இறங்கவில்லை என்று எனக்கு தெரிந்து விடும்.ஆனால், கை வெதுவெதுப்பாக இருந்தால் காய்ச்சல் இல்லை என்று என் மனம் உற்சாகமடையும். கண்களைத் திறந்து ஆர்வத்துடன் கேட்பேன,” பானோ நான் குணமடைந்து வருகிறேன் இல்லையா?” ஏமாற்றம் நிறைந்த குரலில், “இப்போது கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஆனால், மாலைக்குள் மறுபடியும் அதிகமாகிவிடும்” என்பாள்.

டேய் தரங்கெட்டவனே!

‘பஞ்சாபிகளாகிய நாங்கள் கடுகுக் கீரை சப்ஜிக்காக ஏங்குவோம். இன்று கிடைத்தவுடன் திருப்தியாக சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என நினைத்தேன். உனக்கு எப்படி இருந்தது ?’
‘இதோ பாருங்க, நான் திரும்பிப் போகலாம்னு நினைக்கிறேன். உங்களுக்கு எப்ப விருப்பமோ வந்து சேருங்க.’
‘என்ன சொல்கிறாய் ஹெலன். உனக்கு இந்த மக்களை பிடிக்கவில்லையா?’

தபால் பெட்டி

மக்கள் தம்மைச் சுற்றி இருக்கும் பொருட்களை எப்படி கவனிக்கத் தவறுகிறார்கள் என்பது வினோதமான விஷயம்தான். இன்று காலை தான்,  பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர், என்னிடம் “நான் உங்களை  இதற்கு முன்பார்த்திருக்கிறேனா?” என்று கேட்டார். யோசித்துப் பாருங்கள்! நான் அவரது பக்கத்து வீட்டில் பல வருடங்களாக வசித்து வருகிறேன்!  ஒருவேளை நான் உருவமற்ற வனோ!  இந்த தபால் பெட்டியைப் போல.

ஸர்கம் கோலா

குளிர்காலத்தில், சூரியன் மிக விரைவாக அஸ்தமித்துவிடும். மிருதுவான கம்பளித் துணிகளைத் தழுவியபடி, உற்சாகம் தரும் காற்று, கலைக்கூடங் களையும், அரங்குகளையும் நிறைத்திருக்கும். அக்காற்றில் கலந்திருக்கும் மணம், ஆண்மையற்றவர்களை, ஆண்மை நிறைந்தவர்களாகவும், ஆண்மை மிகுந்தவர்களை ஆண்மை குறைந்தவர்களாகவும் மாற்றும் வல்லமை படைத்தது. மக்கள் கலைகளிலும் கலாச்சாரத்திலும் மூழ்கிக் கிடப்பார்கள். கலாச்சாரமும் கலைகளும் மக்களுக்குள் நிறைந்து ததும்பும்.

இறுதி சல்யூட்

தங்கள் கிராமத்தைப் பற்றியும், இருவரும் சேர்ந்து விளையாடிய குழந்தைப் பருவ விளையாட்டுக்கள் பற்றியும், பள்ளியில் பரிமாறிக் கொண்ட கதைகள் பற்றியும், 6/9 ஜாட் ரெஜிமெண்ட் பற்றி, அதன் தலைமை அதிகாரிகள் பற்றியும், விசித்திரமான பல நகரங்களில் அவர்கள் இருவரும் ஒன்றாகப் போய் உறவு கொள்ள நேர்ந்த விசித்திரமான பெண்கள் பற்றியும் பேசிக்கொண்டே இருந்தான். இடையில் கடுமையான வலியால் பேசுவதை நிறுத்தி உரக்கக் கதறினான்.

குவாரண்டீன்

உயரத்தில் தீச்சுவாலைகள் மாலை நேரத்தின் ஆரஞ்சு நிறம் கலந்த அடிவானத்துடன் கலக்கும் போது, இன்னும் அரைகுறை உயிருடன் இருந்த நோயாளிகள், ஏதோ உலகமே தீப்பற்றி எரிகிறதோ என்று நினைத்தார்கள். குவாரண்டீன் இப்படி மேலும் பல மரணங்களுக்குக் காரணமாக இருந்தது. ஏனென்றால் வலுக்கட்டாயமாக குவாரண்டீன் மையத்தில் அடைக்கப்படும் அச்சத்தினால் மக்கள்  தங்கள் நோயின் அறிகுறியை யாருக்கும் சொல்லாமல் மறைக்கத் தொடங்கினார்கள்.

ஒரு துண்டு வெயில்

நம்முடைய இறந்த காலத்தின் மடிப்புகளை வெங்காயத்தோல் போல ஒவ்வொன்றாக உரித்துப் போட. உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் – எல்லோரும் தத்தம் பங்கை வசூலித்துக்கொண்டு போக வருவார்கள். தாய்- தந்தை, கணவர், நண்பர்கள். எல்லா தோல்களும் அவர்களிடம். ஒரு உபயோகமும் இல்லாத, காய்ந்து போன கடைசி குச்சி உங்கள் கையில் மிஞ்சும். மரணத்திற்குப் பிறகு அதை எரிப்பார்கள் அல்லது மண்ணில் புதைப்பார்கள். மனிதன் தனியாகத்தான் இறக்கிறான் என்று எல்லாரும் சொல்கிறார்கள்.  நான் இதை ஏற்பதில்லை. அவனுக்குள்ளிருந்த, அவன் சண்டையிட்ட அல்லது அன்பு செலுத்திய அத்தனை பேரோடும் சேர்ந்து தான் அவன் இறக்கிறான்

ஒன்றரை அங்குலம் மேலே 

வெகு நாட்களாக காஸ்ட்டோபி போலீஸ் அவளை கண்காணித்து வந்ததாக பிறகு எனக்கு தெரியவந்தது. அவளிடம் சட்டத்துக்கு விரோதமான சில நோட்டீஸ்களும் துண்டு பிரசுரங்களும் இருந்ததாகத் தெரிய வந்தது. இவை அந்நாட்களில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மக்களிடையே விநியோகிக்கப்பட்டன. ஜெர்மனி அதிகாரிகளின் பார்வையில் இது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்பட்டது.

டெர்மினல்

ட்ராமின் ஜன்னல் கம்பிகளின் மீது கனத்த போர்வை போல தூசு படிந்திருந்ததில் நடைபாதையில் இருந்த மரம், விளக்குக் கம்பம் மற்றும் தெருவில் சென்று கொண்டிருந்த மனிதர்கள் எல்லாம் ஏதோ பழைய படத்தின் மீது படிந்திருக்கும் அழுக்கைப் போல வழுக்கியபடி மங்கலாகக் காட்சியளித்தார்கள். ஒவ்வொரு நிறுத்தத்திலும் சில பயணிகள் இறங்கினார்கள். நடத்துநர் மணி கட்டப்பட்டிருந்த கயிற்றை இழுக்கும்போதெல்லாம் ட்ராம் விக்கலுடன் முன்னால் சென்று நின்றது.

வான வேடிக்கை

இந்த செய்தியை கேட்டு காலிதின் தந்தை மிகவும் கலக்கமடைந்தார். சில நாட்களாக நிலவும் வழக்கத்துக்கு மாறான அச்சமூட்டும் அமைதி, தலைக்கு மேல் எந்நேரமும் வட்டமிட்டுக்கொண்டிருக்கும் விமானங்கள், கடைவீதிகளில் ஆயுதம் ஏந்திய போலீசாரின் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள், மக்களின் கவலை ததும்பும் முகங்கள், ரத்த வேட்கையுடன் காத்திருக்கும் புயல் மேகங்கள், இவையெல்லாம் நடக்க கூடாத ஏதோ ஒரு விபரீதத்திற்கான முன் அறிகுறிகள் என்று அவர் திடமாக நம்பினார். 

முஷ்ட்டி மாலிஷ்

ரத்தி பாய்க்கு வாக்குச்சாவடிக்கு போக வேண்டும். புதிய மந்திரி அவளுடைய ஜாதிக்காரன். இப்போது அவளுடைய கடன் வட்டியோடு அடைக்கப்பட்டுவிடும். கங்கா பாயும் சந்தோஷமாக அவருடைய கிராமத்தில் நெல் அறுவடை செய்து புடைத்துக் கொண்டிருப்பாள். தயவு செய்து மயக்கத்தாலான இந்த போர்வையை என் மேலிருந்து அகற்றி விடுங்கள்.

மார்ச், மா மற்றும் சகுரா: கீதாஞ்சலி ஸ்ரீ

 கொஞ்ச நாட்களிலேயே, கடலில் பேரலைகள் எழும்புவது போல சகுரா  நகரம் முழுவதும் மலர ஆரம்பித்திருந்தது. அம்மாவும் மற்ற டோக்கியோ நகர வாசிகளும் தலையை பின்புறம் சாய்த்து வானத்தை நோக்கி  பார்த்தவாறு நடக்க ஆரம்பித்தார்கள். ஆனால் வானத்துக்கு பதிலாக  வானம் முழுவதும்  கண்ணுக்கட்டிய தூரம் வரை முடிவற்ற வெள்ளை மலர்கள்  அலை போல துள்ளி ஆடிக்கொண்டிருந்தன.  நீண்டு விரிந்து கொண்டே இருந்தன.