பெண்களின் படைப்புகளுக்கான ஆவணக்காப்பகம்- SPARROW Enters its Silver Jubilee Year

இது இந்தியப் பெண்களின் படைப்புகளைக் காக்கும் ஒரு அரிய கருவூலம். பல மாநிலத்தைச் சேர்ந்த அறிஞர்களும், படைப்பாளிகளும் தன்னார்வலர்களும், கலைஞர்களும் ஆதரித்து, தம் படைப்புகளை நன்கொடையாகக் கொடுத்து, உழைப்பையும் நல்கிக் கட்டமைத்த ஒரு ஆவணக் காப்பகம் இது. அம்பை அவர்களும் இந்த அரிய அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். இதன் 25 ஆண்டுகளிலும் அதன் கட்டமைப்புக்கும், பராமரிப்ப்புக்கும் மிக்க பாடுபட்டதோடு, தனது சலியா உழைப்பையும் இதற்கு நல்கியிருக்கிறார்.
இந்த ஆவணக்காப்பகத்தை நிலைநிறுத்தி அதன் தொடர்ந்த பராமரிப்புக்கும், தன் நடவடிக்கைகளை அது விஸ்திகரிக்கவும் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பது இந்தியாவின் வரலாற்றை எழுத முற்படுவோருக்கு வருங்காலத்திலாவது நியாயமான ஆழமான முறையில் அதை எழுத, மிகுந்த உதவியாக இருக்கும்.
படிப்பறிவு பெற்ற ஒவ்வொரு இந்தியரும் இத்தகைய முயற்சிகளைத் தம்மால் ஆன வகைகளில் ஆதரிப்பது இந்தியாவின் எதிர்காலம் வளமாக அமைய நாம் செய்யக் கூடிய எளிய ஆனால் உருப்படியான செயலாக இருக்கும்.

தளம் – இலக்கிய காலாண்டிதழ்

தீவிர இலக்கியத்தின் தாய்வீடு என்பது எப்போதுமே சிறுபத்திரிகைகளாகவே இருந்து வருகிறது. வணிகம் சார்ந்த இயக்கமாகவோ, வணிக உதவிகளை நம்ப வேண்டி இருக்கும்போதோ பெரும்பான்மையோரின் ரசனைக்கு தீனி போடவேண்டிய கட்டாயம் சஞ்சிகைகளுக்கு வந்துவிடுகிறது. வணிக நோக்கில் செயல் பட்டு வந்தாலும் ஓரளவிற்கு இலக்கியங்களையும் உடன் சேர்த்துக்கொள்ள முடியுமா என்ற தயக்கத்துடனே பத்திரிகைகள் இயங்கி வருகின்றன. கேள்விகள் கேட்பதும் உடைத்துப் பார்ப்பதும் ஆழமாக செல்வதும் இங்கே சாத்தியமில்லை. சிறுபத்திரிகைகளுக்கு அந்த சுதந்திரமும் பரப்பும் கிடைக்கிறது. தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையிலான பல சிற்றிதழ்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. தங்கள் குரலை எழுப்பி கொண்டே இருக்கின்றன. வெற்றுக் கற்பனைகள் அல்லது கேளிக்கைகளில் முயற்சிகளை செலவிடாமல் வாழ்வின் நிதரிசனங்களை முன்வைத்து நகருபவை சிற்றிதழ்கள். மூடி வைத்தபின் திறந்து கொள்ளும் கதவுகளை உடையவை அவை.

சொல்வனம் ஐந்தாவது ஆண்டில்..

சொல்வனத்தின் துவக்கத்திற்கும், இருப்பிற்கும், தொடர்ந்த வளர்ச்சிக்கும் உறுதுணையாய் இருக்கும் , புதிய வரத்துக் கால்வாய்களைச் சாத்தியமாக்கிக் கொண்டே இருக்கும் எழுத்தாளர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் குறிப்பாக – பல சமயங்களில் தாமதமான வெளியீடு, மேம்படுத்த வேண்டிய பிழை திருத்துதல் போன்ற களையப்பட வேண்டிய குறைகள் இருந்தும் – தொடர்ந்த ஆதரவு தரும் வாசகர்களுக்கு எங்கள் நன்றி.

இரு இலக்கிய விருதுகள் – 2012

மூத்த படைப்பாளிகளான நாஞ்சில் நாடன் அவர்களும், தேவதேவன் அவர்களும் முறையே கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2012-ஆம் ஆண்டுக்கான இயல் விருதும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருதும் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர். நாஞ்சில் நாடன், தேவதேவன் இருவருக்கும் சொல்வனம் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. மூத்த படைப்பாளிகளைத் தொடர்ந்து கெளரவித்து வரும் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம், விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் இரு அமைப்புகளுக்கும் சொல்வனத்தின் வாழ்த்துகள்.

விழி வழி மொழி, மொழி வழி விழி

திரு.அரவக்கோன் எழுதி சொல்வனத்தில் வெளியாகிய ‘20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்’ என்ற ஓவியத்தொடர் புத்தக வடிவம் பெறுகிறது. சதுரம் பதிப்பகம் வெளியீடாக விரைவில் வெளியாகவிருக்கும் இப்புத்தகத்துக்கு க்ருஷாங்கினி எழுதியிருக்கும் முன்னுரையை இங்கே வழங்குகிறோம். திரு.அரவக்கோன் அவர்களுக்கு சொல்வனத்தின் வாழ்த்துகள்.

க.நா.சு சிறப்பிதழ்

இலக்கியத்தின் எல்லா வடிவங்களிலும் (விமரிசனம் உட்பட) நவீனத்துவம் துரிதப்படத் துவங்கியதற்குக் கிரியா ஊக்கியாகவும், தாமே பலவற்றில் உதாரணமாக இருந்த ஒருவர் க.நா.சுப்ரமண்யம். அவருடைய தீவிர விமர்சகர்கள் கூட அவரது திறமை, கூர்மை, உழைப்பு ஆகியவற்றையும், தமிழிலக்கியத்துக்கு அவர் கொடுத்த பெரும் கொடைகள் பற்றியும் குறை சொல்வதில்லை.

கருத்தியல் சார்புகளோ, அரசியல் நிலைபாடுகளோ, சமுதாயப் பண்பாட்டு அணிவகுப்புகளில் சாரிகளோ இல்லாத ஒரு நபர் பல பத்தாண்டுகள் தமிழிலக்கியத்தில் தாக்குப் பிடித்து நின்று பல தரப்பினரின் மரியாதையைப் பெறுவதென்பது அத்தனை எளிதான விஷயம் இல்லை. க.நா. சுப்ரமண்யம் என்கிற ஒரு நபர் 20ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் வாழ்ந்து இதைச் சாதித்திருக்கிறார். இந்த ஆண்டு அவர் தோன்றி நூறாண்டு ஆகிற வருடம்.

சொல்வனத்தின் 75ஆம் இதழை, அவருடைய நூற்றாண்டு நினைவுச் சிறப்பிதழாகக் கொண்டு வரத் தீர்மானித்ததற்கு இந்தப் பொது நிலையை அவர் பெற்றிருப்பது குறித்து எங்களுக்கிருக்கும் வியப்பும் ஒன்று.

வீட்டுக் குருவிகளைக் காப்போம்!

வீட்டுக் குருவிகளைக் காக்கும் இந்த மக்கள் அறிவியல் திட்டத்தில் பங்கேற்க உங்களை அழைக்கிறோம்.. வீட்டுக் குருவிகள் நம் நாடெங்கும் எந்த நிலையில் உள்ளன, எந்தப் பகுதிகளில் பரவலாகவும் எங்கு குறைவாகவும் உள்ளன என்பது குறித்து நீங்கள் பகிரக்கூடிய தகவல்கள் முக்கியமானவை. http://www.citizensparrow.in என்ற தளத்தில் ஒரு ஐந்து நிமிட அளவில் நீங்கள் உங்கள் சுற்றுவட்டாரத்தில் குருவிகளின் இருப்பை ஆவணப்படுத்துவதன் மூலம் இந்தியாவெங்கும் உள்ள வீட்டுக் குருவி ஆர்வலர்களோடு நீங்களும் உங்களை இணைத்துக் கொள்கிறீர்கள்.

அன்புள்ள வாசகர்களுக்கு…

போக வேண்டிய தூரம் வெகு அதிகம் என்பதையும் நாம் அறிவோம். இப்பயணத்தில் தங்கள் உறுதுணையே எங்கள் பேராதரவு. சொல்வனம் தொழில் முறையில் இல்லாத, வியாபார நோக்கு அற்ற, மனிதரிடையே பிரிவினை செய்யும் எதையும் ஏற்காத, எளிமையும், உண்மைத் தேட்டமும் உள்ள, தங்களை முன்னிறுத்த முயலாத வெகு சிலரால் நடத்தப்பட்டு வருகிறது. சொல்வனத்தின் பல வேலைகளையும் இந்த சிலரே செய்கிறோம்.

2012 புத்தகக் கண்காட்சியில் சொல்வனம் வெளியீடுகள்

நண்பர்களுக்கு, இந்த வருடம் சென்னை புத்தகக் கண்காட்சி, ஜனவரி 5 முதல் 17 வரை சென்னை புத்தகக் கண்காட்சி, புனித ஜார்ஜ் பள்ளியில் நடைபெறுகிறது.  இந்தப் பள்ளி பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பச்சையப்பர் கல்லூரிக்கு எதிரில் உள்ளது. இக்கண்காட்சியில் சொல்வனம் வெளியீடாக வந்திருக்கும் புத்தகங்கள் கிடைக்கும். தாயார் சன்னதி – இரண்டாம் “2012 புத்தகக் கண்காட்சியில் சொல்வனம் வெளியீடுகள்”

‘மூங்கில் மூச்சு’ புத்தக வடிவில்

தமிழ்ச் சமூகத்தில் நடந்த பல்வேறு காலச்சார மாற்றங்களையும் போகிற போக்கில் சுகா பதிவு செய்து கொண்டு போகிறார். இது மூங்கில் விடும் மூச்சு மட்டுமே அல்ல….ஓர் இளைஞனின், காலத்தின், ஒரு தலைமுறையின் சுவாசம்!

‘தாயார் சன்னதி’ இரண்டாம் பதிப்பு – இப்போது விற்பனையில்

எழுத்தாளர் சுகா எழுதிய ‘தாயார் சன்னதி’ புத்தகத்தை சொல்வனம் இரண்டாம் பதிப்பாக வெளியிட்டுள்ளது. இப்புத்தகத்தை இணையம் மூலமாக வாங்க முடியும்.

’பனுவல் போற்றுதும்’ – புத்தக வடிவில்

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் சொல்வனம் இதழில் ‘பனுவல் போற்றுதும்’ என்ற தொடரில் அரிய புத்தகங்களை அறிமுகப்படுத்தி வந்தார். அந்தத் தொடர் இப்போது புத்தக வடிவில் ‘தமிழினி’ வெளியீடாக வெளிவருகிறது.

இதழ் குறித்து…

துவக்கத்திலிருந்து ’சொல்வனம்’ இலக்கியம் மட்டுமல்லாமல் பல்துறை சார்ந்த கட்டுரைகளையும், புனைவுகளையும் வெளியிட்டுவருகிறது. இவற்றுக்கு வாசகர்களிடமிருந்து கிடைக்கும் மறுவினைகள் எங்களுக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கின்றன. தொடர்ந்து சொல்வனம் இதே திசையில் செல்லும். சமீபத்தில் பூமணி, வண்ணதாசன், வண்ணநிலவன் ஆகியோருக்கு அவர்களின் பல பத்தாண்டு கால இலக்கிய இயக்கத்தைக் கௌரவிக்கும் வகையில் பொருத்தமான விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்பது வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும். அவர்களை எம் பங்குக்குக் கெளரவப்படுத்தும் விதமாக, இந்த இதழில் எப்போதும் போல் பல்துறை சார்ந்த கட்டுரைகளுடன், அவர்கள் சம்பந்தப் பட்ட சில படைப்புகளையும் வெளியிட்டுள்ளோம்.

SPARROW – ஒரு பெண்களின் நிறுவனம்

பெண்களின் சரித்திரம், அன்றாட வாழ்க்கை, போராட்டம் இவற்றை ஒலி மற்றும் காட்சி வடிவங்கள் மற்றும் வாய்வழி சரித்திரப் பதிவுகள் மூலம் ஆவணமாக்கி வரும் ஒரே ஆவணக் காப்பகம் ஸ்பாரோ(SPARROW). எழுத்தாளர் அம்பையின் பங்களிப்பை கொண்டிருக்கும் இந்த நிறுவனம் குறித்து ஒரு அறிவிப்பு.

இலக்கிய அங்கீகாரங்கள்

சமீபத்தில் இரு இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரண்டும் தகுதியான படைப்பாளிகளுக்கு அளிக்கப்படுகின்றன. 2011-ஆம் ஆண்டிற்கான ‘சாரல்’ விருதிற்கு எழுத்தாளர்கள் வண்ணநிலவனுக்கும், வண்ணதாசனுக்கும் அளிக்கப்படுகின்றன. 2011-ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் பூமணிக்கு அளிக்கப்படுகிறது. இந்தப் படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள். தகுதி வாய்ந்த படைப்பாளிகளைத் தொடர்ந்து கெளரவித்து வரும் சாரல் விருது அமைப்புக்கும், விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்துக்கும் வாழ்த்துகளையும், நன்றியையும் சொல்வனம் தெரிவித்துக் கொள்கிறது.

துருவநட்சத்திரம் – புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்

அன்புள்ள நண்பர்களுக்கு, லலிதா ராம் மிருதங்க மேதை பழநி சுப்ரமணிய பிள்ளை குறித்து எழுதியிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ என்ற இசை வரலாற்றுப் புத்தகம் டிசம்பர் மாதத்தில் சொல்வனம் வெளியீடாக வெளிவரவிருக்கிறது என மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். துருவ நட்சத்திரம் புத்தகத்தின் வெளியீட்டு விழா 11.12.2011 அன்று சென்னை ராகசுதா “துருவநட்சத்திரம் – புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்”

சொல்வனம் 2011 – புத்தக வெளியீடுகள்

லலிதா ராம் மிருதங்க மேதை பழநி சுப்ரமணிய பிள்ளை குறித்து எழுதியிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ என்ற இசை வரலாற்றுப் புத்தகமும், சுகா எழுதிய ‘தாயார் சன்னதி’ நூலின் இரண்டாம் பதிப்பும் டிசம்பர் மாதத்தில் சொல்வனம் வெளியீடுகளாக வெளிவரக்கின்றன என மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

SPARROW – ஒரு பெண்களின் நிறுவனம்

பெண்களின் சரித்திரம், அன்றாட வாழ்க்கை, போராட்டம் இவற்றை ஒலி மற்றும் காட்சி வடிவங்கள் மற்றும் வாய்வழி சரித்திரப் பதிவுகள் மூலம் ஆவணமாக்கி வரும் ஒரே ஆவணக் காப்பகம் ஸ்பாரோ(SPARROW). எழுத்தாளர் அம்பையின் பங்களிப்பை கொண்டிருக்கும் இந்த நிறுவனம் குறித்து ஒரு அறிவிப்பு.

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

இந்தியர்கள் அனைவருக்கும் ’சொல்வனம்’ தன் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறது. மொத்த உலக மானுடத்துக்கும் இந்தியாவின் வளர்ச்சியும் வெற்றியும் உதவிபுரியட்டும்.

தி.ஜானகிராமன் சிறப்பிதழ் குறித்து…

இது சொல்வனத்தின் ஐம்பதாவது இதழ். இந்த இதழை தமிழின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவரான தி.ஜானகிராமன் குறித்த சிறப்பிதழாகக் கொண்டு வர விரும்பினோம். ஜானகிராமன் வாழ்ந்த காலத்தில் பெரிய கவனத்தையும், மதிப்பையும் பெற்றவராயினும், அவர் மறைந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்களாகிவிட்ட நிலையில் அவரைக் குறித்து சில நினைவுகளையும், மதிப்பீடுகளையும் மீட்டெடுக்கவேண்டும் என்று தோன்றியது. இந்த இதழ் தயாரிப்பில் வெங்கட் சாமிநாதன் அவர்கள் காட்டிய அக்கறை மிகவும் நெகிழ வைத்த ஒன்று. இந்த இதழை அவருக்குச் சமர்ப்பிக்கிறோம். சொல்வனத்தைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி, விமர்சனம் செய்து, அக்கறை காட்டிவரும் அத்தனை நண்பர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் ஐம்பதாவது இதழைத் தொட்டிருக்கும் இத்தருணத்தில் எங்கள் நன்றிகள்.

“இலக்கியப் பணி என்று எதைச் சொல்வது?

என் ஆத்ம எதிரொலிப்பாக, நான் வாழும் வாழ்க்கையின் ரஸனையை எனக்கு எளிதாகக் கைவரும் எழுத்தின் மூலம் வெளிக்காட்டுகிறேன். இதில் சேவை என்பதோ, பணி என்பதோ இடமே பெறவில்லை. என்னுடைய இன்பங்களை, நான் துய்க்கும் சோக உணர்வுகளை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளவே நான் விரும்புகிறேன்.

சுற்றிலும் உலகம் சிறியதும் பெரியதுமாக சாதாரண அசைவுகளில் கூட வியப்புகள் நிறைந்து இயங்குகிறது. அதைப் பார்த்துக் கொண்டிருப்பதே ஆனந்தம்தான். அதைத்தான் நான் பகிர்ந்து கொள்கிறேன் – எழுத்து மூலம்.

– தி.ஜானகிராமன்”

வெங்கட் சாமிநாதன் – புத்தக வெளியீட்டு விழா

தமிழின் மூத்த கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் அவர்களைக் குறித்ததொரு திறனாய்வு நூல் வரும் 30-ஆம் தேதியன்று (30-04-2011) தேவனேயப் பாவாணர் நூலகத்தில் மாலை 5.30 மணியளவில் வெளியிடப்படவிருக்கிறது. எழுத்தாளர்கள் திலீப்குமார், பா.அகிலன், சத்தியமூர்த்தி ஆகியோர் இந்நூலைத் தொகுத்திருக்கிறார்கள். பல மூத்த படைப்பாளிகளும் இப்புத்தகத்தில் வெ.சா அவர்களின் “வெங்கட் சாமிநாதன் – புத்தக வெளியீட்டு விழா”

மறுபக்கத்தின் மறுபக்கம்

மண்டைக்காடு கலவரத்தை மையமாக வைத்தும், பொன்னீலன் எழுதிய மறுபக்கம் நூலுக்கு மறுபக்கமாகவும் வழக்கறிஞர் ஜோ.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘மறுபக்கத்தின் மறுபக்கம்’ நூல் வெளியீட்டு விழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். அன்புடன், எம்.எல்.மர்யம் ஆதாம் ஏவாள் பதிப்பகம் நாள்: 30 ஏப்ரல் 2011 சனிக்கிழமை நேரம்: மதியம் 2:30 – 5:30 “மறுபக்கத்தின் மறுபக்கம்”

வெங்கட் சாமிநாதன்

தமிழின் மூத்த கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் அவர்களைக் குறித்ததொரு திறனாய்வு நூல் வரும் 30-ஆம் தேதியன்று (30-04-2011) தேவனேயப் பாவாணர் நூலகத்தில் மாலை 5.30 மணியளவில் வெளியிடப்படவிருக்கிறது. பல மூத்த படைப்பாளிகளும் இப்புத்தகத்தில் வெ.சா அவர்களின் எழுத்துலகைக் குறித்து எழுதியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றவுமிருக்கிறார்கள். இத்தருணத்தில் வெ.சா அவர்களைக் குறித்து ச.திருமலைராஜன் எழுதியிருக்கும் சிறப்புக்கட்டுரையை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

ஜப்பானில் இயற்கை நடத்திய பேரழிவு

ஜப்பான் தேசம் அடுத்தடுத்து இயற்கை பேரழிவுகளை சந்தித்துள்ளது. மானுடத்தின் மிகப்பெரும் சோகங்களில் ஒன்றை உலகம் இந்த தருணத்தில் தரிசித்துள்ளது. தனது அனைத்து அடையாளங்களையும் துறந்து, மானுடம் இந்த பேரழிவில் இறந்த உயிர்களுக்காக மனம் இரங்குகிறது. இந்த துயர கணத்தில் மிகுந்த மனவேதனையுடன் ‘சொல்வனம்’ தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் “ஜப்பானில் இயற்கை நடத்திய பேரழிவு”

சொல்வனம் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்

சொல்வனம் வெளியீடுகளாக வந்த சுகாவின் ‘தாயார் சன்னதி’, ராமன்ராஜாவின் ‘சிலிக்கான் கடவுள்’ புத்தகங்களைக் கீழ்க்கண்ட புத்தகக்கடைகளில் வாங்கலாம். டிஸ்கவரி புக் பேலஸ் – சென்னை, இலக்கம் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம், முனுசாமி சாலை, வெஸ்ட் கே.கே நகர், சென்னை – 600078. தமிழ்நாடு. (பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை “சொல்வனம் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்”

இந்திய மீனவர்களைக் காப்போம்

இந்திய மீனவர்களின் உயிரைக் குடிக்கும் இலங்கை ராணுவத்தின் அடாவடிதனத்தையும், தனது குடிமக்களை காப்பாற்றத் தவறிய மத்திய அரசையும் சொல்வனம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஒருங்கிணைந்த இந்தியாவின் இறையாண்மையைக் காக்கவும், பிரிவினைவாதிகளின் கரம் வலுப்பெற்றுவிடாமல் இருக்கவும், இந்திய அரசு தனது குடிமக்களை காக்கும் முனைப்புடனும், உறுதியுடனும் செயல்பட வேண்டும். குறிப்பு : “இந்திய மீனவர்களைக் காப்போம்”

திருப்பூர் புத்தகக் கண்காட்சி, சுந்தர ராமசாமி விருது – அறிவிப்புகள்

தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது.

சொல்வனம் பிரசுரம் – சுகா, ராமன்ராஜா புத்தகங்கள்

ஏற்கனவே அறிவித்தபடி, இந்த புத்தகக் கண்காட்சியையொட்டி ‘சொல்வனம் பதிப்பகம்’ மூலம் இரண்டு புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். சென்ற சனிக்கிழமையன்று (08-01-2011) இவ்விரு புத்தகங்களும் ‘உடுமலை.காம்’ அரங்குக்கு வந்தன. ஞாயிற்றுக்கிழமை ஒரு நட்பார்ந்த புத்தகவெளியீடு நடந்தது. சொல்வனம் இதழிலும், வார்த்தை சிற்றிதழிலும் சுகா எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘தாயார் சன்னதி’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகியிருக்கிறது. சொல்வனம் இதழில் ராமன் ராஜா எழுதிய கட்டுரைகள் ‘சிலிக்கான் கடவுள்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகிருக்கிறது.

தாயார் சன்னதி, சிலிக்கான் கடவுள் – சொல்வனம் புத்தக வெளியீடுகள்

இந்த புத்தகக் கண்காட்சியையொட்டி ‘சொல்வனம் பதிப்பகம்’ மூலம் இரண்டு புத்தகங்கள் வெளியாகவிருக்கின்றன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். சொல்வனம் இதழிலும், வார்த்தை சிற்றிதழிலும் சுகா எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘தாயார் சன்னதி’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகிறது. சொல்வனம் இதழில் ராமன் ராஜா எழுதிய கட்டுரைகள் ‘சிலிக்கான் கடவுள்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகிறது. எங்களுடைய இந்தப் புதிய முயற்சிக்கும் உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்.

தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் – நூல் வெளியீட்டு விழா

நாள்: 07-01-2011 வெள்ளி
நேரம்: மாலை 6 மணி
இடம்: பாரதிய வித்யா பவன், மினி ஹால்,
கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர், சென்னை-4.

வரவேற்புரை: அ. கணேசன், நூலாசிரியர்
தலைமை & நூல் வெளியிடுபவர்: முனைவர் தியாக. சத்தியமூர்த்தி
முன்னாள் இயக்குநர், கேரள மாநில தொல்லியல் துறை

தமிழினி – புத்தகக் கண்காட்சியில் வெளியாகும் புத்தகங்கள்

தமிழின் பல முக்கியமான கலை, இலக்கியப் புத்தகங்களை வெளியிட்டு வரும் தமிழினி பதிப்பகம் 2011 புத்தகக் கண்காட்சியில் கீழ்க்கண்ட புத்தகங்களை வெளியிடுகிறது. இவற்றைக் கண்காட்சியில் அரங்க எண்: 354-55, 29 ஆகியவற்றில் வாங்கலாம்.

துயில், தோள்சீலைக்கலகம் – புத்தக வெளியீடுகள்

திரு.எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய துயில் நாவல், ஆய்வாளர்கள் எஸ்.இராமச்சந்திரன், அ.கணேசன் எழுதியுள்ள தோள்சீலைக்கலகம் என்ற வரலாற்றுநூல் இவற்றின் வெளியீடு குறித்த அறிவிப்புகள்.
மருத்துவத்தின் வரலாறு இன்று வரை நாம் முறையாக தொகுக்கப்படாதது. மதமும் மருத்துவமும் கொண்டுள்ள உறவும் அது சார்ந்த மனித நம்பிக்கைகளும் மிகப் புராதனமானவை, அவ்வகையில் நலமடைதல் என்ற அற்புதத்தின் மீதான விரிவான விசாரணையே இந்த நாவல்.

திலீப்குமார், ஆ.மாதவன் – சமகால அங்கீகாரங்கள்

தமிழின் தேர்ந்த இலக்கியவாதிகள் விருதுகள் மூலம் அங்கீகரிக்கப்படுவது தமிழ்ச்சூழலில் மிகவும் அரிதானதொரு விஷயமாகவே இருக்கிறது. இக்குறையை ஓரளவு நீக்கும் விதமாக இந்த வருடம் இரண்டு தேர்ந்த இலக்கியவாதிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. எழுத்தாளர் திலீப்குமார் ‘விளக்கு’ அமைப்பால் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எழுத்தாளர் ஆ.மாதவன் ‘விஷ்ணுபுரம்’ இலக்கியவட்டத்தால் இந்த வருடம் கெளரவிக்கப்படுகிறார். திலீப்குமார், ஆ.மாதவன் இருவருக்கும் சொல்வனம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

தனிமை- மேடை நாடகம் – அறிவிப்பு

கலிஃபோர்னியா சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதியில் அமைந்துள்ள க்ரியா நாடக் குழுவும், பாரதி தமிழ்ச் சங்கமும் இணைந்து வரும் நவம்பர் மாதம் 6ம் தேதி “தனிமை” மேடை நாடகத்தினை அளிக்க இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வாழும் வயதான பெற்றோர்களின் வாழ்க்கையையும் அமெரிக்காவில் புலம் பெயர்ந்து பிரிந்து வாழ நேரும் அவர்கள் பிள்ளைகளின் நிலைகளையும், தவிப்பினையும், குடும்பம், உறவு, பிரிவு ஆகிய நுட்பமான வாழ்க்கைக் கூறுகளையும் மிக அழகாகவும், நகைச்சுவை மிளிரவும் சித்தரிக்கின்ற ஒரு நாடகம் ‘தனிமை’.

இரண்டாம் ஆண்டில் சொல்வனம்

இந்த ஒருவருடத்தில் நாங்கள் கற்றுக் கொண்டவை ஏராளம். வலை வடிவமைப்புத் தொழில்நுட்பத்தையே கூட முதல் இதழுக்கு வடிவமைக்கும்போதுதான் கற்றுக் கொண்டோம். எந்த குழுப் பின்புலமும் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இதழைத் தமிழின் தேர்ந்த எழுத்தாளர்கள் ஆதரித்து உற்சாகப்படுத்தினார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக வாசகர்களின் தொடர்ந்த வருகையும், எதிர்வினைகளும் உற்சாகமூட்டுபவையாகவும், வழிநடத்துபவையாகவும் இருந்தன.